Tuesday, March 20, 2018

பாஜக ஆட்சியின் காரணிகள்

பாஜக கடந்த 2014 ல் ஆட்சிக்கு வர காரணம் பொருளாதார காரணங்களே தவிர ஊழல் குற்றச்சாட்டுகள் எல்லாம் இல்லை. ஏனெனில் ஊழல் குற்றச்சாட்டுக்களை எல்லாம் மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை (!). வேலை வாய்ப்பின்மை பொருளாதார சீர்கேடு ஆகிய காரணங்களால் தான் காங்கிரசை மக்கள் எதிர்த்தனர் என்றொரு திடீர் புத்திசாலித்தன பதிவுகள் வர தொடங்கி இருக்கிறது..

ஊழல் இந்திய தேர்தலில் மிக முக்கிய காரணி

உதாரணம் 2ஜி. அது ஊழலே அல்ல. ஆனால் பாஜக அதை ஊழல் என ஊதி பெரிதாக்கி காங்கிரஸ் மீது மிகப்பெரிய பழியை போட்டது. மக்கள் அதை முழுமையாக நம்பி வாக்களித்தனர். (இப்போது அது ஊழல் இல்லை என்பதும் வினோத் ராயை வைத்து பாஜக ஆடிய நாடகம் என்பதும் மக்களுக்கு தெளிவாக தெரிந்தாலும் கறை கறை தான்)

மாநில அளவிலும் கூட, 1996 தேர்தலில் ஜெ தோற்க ஊழல் குற்றச்சாட்டு தான் காரணம். 2011 தேர்தலில் திமுக தோற்கவும் ஊழல் குற்றச்சாட்டு தான் காரணம்..

கடந்த 2014 தேர்தலை பொறுத்தவரை பாஜக ஜெயித்ததற்கு முக்கிய காரணங்கள்:

1. பொய்யான ஊழல் குற்றச்சாட்டுக்களால் காங்கிரசை Character Assassination செய்ததோடு தாங்கள் வந்தால் ஊழலற்ற ஆட்சி தருவோம் என வாக்களித்தது (உண்மையில் காங்கிரசை விட அதிக ஊழல்களும் முறைகேடுகளும் இப்போதைய ஆட்சியில் நடப்பது நாம் அறிந்ததே. உம். ரஃபேல்)

2. பாஜகவின் அஜெண்டாக்களுக்கு (ராமர் கோவில், காமன் சிவில் கோடு போன்றவை) அதிக முக்கியத்துவம் கொடுத்து செய்த பிரச்சாரம். இவை வட இந்தியாவில் இனியும் நன்றாக எடுபடும். தென்னிந்தியா சட்டை செய்யாது

3. கருப்பு பணத்தை 100 நாளில் மீட்பேன், கார்ப்பரேட் ஊழல்வாதிகளை ஒடுக்குவேன் என மாநிலத்துக்கு மாநிலம் விதம் விதமாக கொடுத்த வாக்குறுதிகள் (கார்ப்பரேட்  ஊழல்களின் பொற்காலம் இது என்பதும் குற்றவாளிகள் அரசு ஆதரவோடே வெளிநாடு சென்று பாதுகாப்பாக இருப்பதும் நீங்கள் அறிந்ததே)

மற்றபடி வேலைவாய்ப்பை வைத்தெல்லாம் ஆட்சியை மக்கள் தீர்மானிப்பதில்லை. அப்படி பார்த்தால் சிறு குறு தொழில்கள் 23% இழுத்து மூடப்பட்டு இருக்கிறதே இந்த ஒரே ஆண்டில்? அதற்காக பாஜக தோற்கடிக்கப்படும் என்கிறீர்களா? பொருளாதாரம் அதலபாதாளத்துக்கு சென்றுள்ள இந்நிலையில் ஏற்றுமதி முடங்கிவிட்ட சூழலில் அதெல்லாம் பாஜகவை பாதிக்கும் என நம்புகிறீர்களா என்ன?

உண்மையில் பொருளாதார நிலையை பார்த்தால், 2005-2014 மிக பிரமாதமாக இருந்ததும் 2014 க்கு பின் அதள பாதாளத்தில் வீழ்ந்ததும் எல்லோருக்குமே தெரியும்

அதேபோல வேலைவாய்ப்பு தொழில்வளர்ச்சி ஏற்றுமதி ஆகியவையும் இப்போது பாஜக ஆட்சியில் தான் சரிந்தது என்பதும் எல்லோருக்கும் தெரியும். மூடப்பட்ட தொழில் நிறுவனங்களே அதற்கு சாட்சி

பாஜகவுக்கு தேவை 275 எம்.பிக்கள். அதை ராமர் கோவில், இந்துத்துவா, இஸ்லாமியர்கள் பாகிஸ்தான் போகட்டும், தலித்கள் ஒடுக்கப்படுவார்கள், காமன் சிவில் சட்டம் போன்ற வழக்கமான வாக்குறுதிகளை வைத்தே வட இந்தியாவிலேயே எடுத்துக்கொள்ள முடியும்.

தென்னிந்தியாவில் 6 மாநிலங்களில் ஒரு இடம் கூட கிடைக்காவிட்டாலும் கவலையில்லை.

அடுத்ததும் பாஜக ஆட்சி தான்

காரணம் பாஜகவை ஆதரிப்பவர்களின், அவர்களின் சிந்தனைத்திறனின் தரத்தின் டிசைன் அப்படி.

Saturday, March 17, 2018

திராவிடநாடு

திராவிட நாடெல்லாம் சாத்தியமே இல்லாத ஒன்று. திமுக 50 வருஷத்துக்கு முன்னேயே கைவிட்ட கொள்கை அது

ஆனால் மனதளவில் திராவிடநாடு (Virtual Dravidanadu) எப்போதும் நம் எல்லோருக்குள்ளும் இருக்கத்தான் செய்கிறது.

திமுக மட்டுமல்லாமல், அதிமுகவும் கூட (எம்.ஜி.ஆர் & ஜெ.. இருவரும்) பல சமயங்களில் மாநில நலன் கருதி மத்திய அரசை எதிர்த்தும், மத்திய அரசுக்கு ஒத்துழைக்காமலும் தமிழகத்தின் தனித்தன்மையை காத்து வந்திருக்கிறது. இதில் எம்.ஜி.ஆரை விட அதீத ஆரவம் காட்டி மாநில சுயாட்சியை தீவிரமாக நிலைநாட்டியவர் ஜெ. என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

எனவே திராவிட நாடு என்பது நமக்கு புதிதல்ல. நமது மாநிலத்துக்கு தீமை பயக்கும் எல்லாவற்றையும் மத்திய அரசு என்று கூட பாராமல் எதிர்ப்பது, நமக்கான நியாயத்தை நிலைநாட்டி கொள்வது, மாநில உரிமைகளை பாதுகாப்பது ஆகியவை நம் தனித்துவத்தில் அடங்கும்

காவிரி, முல்லைப்பெரியார், கடலோர காவல்படை, இட ஒதுக்கீடு, மின்சார பகிர்மான க்ரிட், நவோதையா, உணவு பாதுகாப்பு, சமூக நல மானியங்கள்... என பல பல விஷயங்களில் நாம் நமக்கான தனிக்கொள்கைகள் வைத்து செயல்பட்டு வருகிறோம்.. தேவைப்பட்டால் இந்திய அரசுடன் எதிர்த்தும் வருகிறோம். அது பாராளுமன்றம் ஆனாலும் சரி உச்சநீதிமன்றம் ஆனாலும் சரி. எங்கும் போய் ஒரு கைபார்த்துவிட்டு வருவதே வழக்கம்.

இப்போது இத்தகைய செயல்பாடுகளை மெல்ல மெல்ல நம் அண்டை மாநில முதல்வர்களும் கைகொள்ள தொடங்கி இருப்பது மகிழ்ச்சி

அவரவர் மாநில தலைமை பதவியில் இருப்பவர்கள் அவரவர் மாநில நலன் கருதி மத்திய அரசுக்கு எதிராக தங்களுக்கென்று ஒரு தனிக்கொள்கையுடன் இயங்குவது என்பது தான் மாநில சுயாட்சியின் அடிப்படை.

அதை நோக்கி எல்லோரும் பயணிக்க தொடங்குகையில் மனதளவில் இருக்கும் 'திராவிடநாடு' இயல்பாகவே செயல்பாட்டுக்கு வந்துவிடும்.

மற்ற மானிலங்கள் எல்லாம் இப்படி ஒத்துவந்தால் (மத்திய அரசை எதிர்த்து மாநில நலன் காக்கும் நடவடிக்கைகள் எடுத்தால்) தமிழகமும் அதை ஆதரிக்கலாம். தவறில்லை. ஏனெனில் நாமும் அதைத்தான் காலகாலமாக செய்து வருகிறோம்

மற்றபடி, இங்கே சில திடீர் புத்திசாலிகள் பேசுவது போல தனி நாடெல்லாம் வாய்ப்பே இல்லை

Tuesday, March 6, 2018

பெரியார் சிலை ஏன் அவசியம்?

பெரியார் தான் உருவ வழிபாட்டுக்கு எதிரானவராச்சே? அப்புறம் அவருக்கு மட்டும் எதற்கு சிலை? என்றொரு கிண்டலான கேள்விகள் திடீரென முளைத்திருக்கிறது.

மகிழ்ச்சி


பெரியார் உருவ வழிபாட்டுக்கு எதிரானவர் தான். தனிநபர் வழிபாடு கூடாது என்றவர்தான். சிலைகள் வைக்கப்படக்கூடாது என வாதிட்டவர் தான்.

உருவ வழிபாடு என்பது வேறு.. தலைவர்களின் உருவத்தை பெரும் சிலையாக நிறுவி எதிர்வரும் சந்ததியினருக்கு பாடமாக படிப்பினையாக எடுத்துக்காட்டாக வைத்து மரியாதை செய்வது என்பது வேறு

ரஷ்யா அமெரிக்கா இங்கிலாந்து நாடுகளில் பல தலைவர்கள் மன்னர்களின் சிலைகள் அவ்வாறானவையே.

சென்னையில் கூட ஆங்கிலேயர் காலத்தில் அப்படி நிறுவப்பட்ட மன்றோ, ஜார்ஜ் மன்னர் போன்றோரின் சிலைகள் இப்போதும் இருக்கின்றன. அவற்றை பார்க்கும் இளம் தலைமுறையினர் அவர்களை பற்றி அறிய ஆவல் கொண்டு தேடி படிக்க துவங்குகின்றனர்.

எனவே உருவ வழிபாடு தான் தவறே தவிர தலைவர்களுக்கு உருவச்சிலை அமைத்து மரியாதை செய்வதில் தவறில்லை

இது போன்ற தர்க்கங்களை எல்லாம் கலைஞர் அவர்கள் எடுத்து வைத்து பெரியாரையே சம்மதிக்க வைத்து அவரும் மகிழ்ச்சியாக தன் சிலை திறப்புவிழாவிலே கலந்து கொண்டார் என்பது வரலாறு.

எனவே சிலைகளுக்கு எதிரானவர் பெரியார் என்பது தவறான வாதம். சிலைகளை வழிபடுவதற்கு மட்டுமே எதிரானவர் என்பதை புரிந்துகொள்வது நலம்.

நிற்க!

அது வெறும் சிலை தானே? அதை ஏன் நீக்கவேண்டும்? அதை நீக்குவதற்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு?

இரண்டுக்குமான பதில் ஒன்று தான்.

பெரியார் சிலையை பார்ப்பவர்கள் அவரைப்பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுவார்கள். அவரது வாழ்க்கை, அவரது சிந்தனை, அவரது போராட்டம், அவர் அப்படி போராட நேர்ந்த சூழல், அப்போதைய காலகட்டத்தின் அடக்குமுறை, சமூக ஏற்ற தாழ்வுகள், அவரது கொள்கைகள், அவரது கருத்து வீச்சுக்கள் என பலவற்றை படித்து புரிந்து கொள்ள முயல்வார்கள்

அதற்காக தான் எல்லா தாலூகாவிலும் அவருக்கு சிலை வைக்கப்பட்டது.

அதனால் தான் அந்த சிலைகளை அகற்றவேண்டும் என சமூகத்தில் பிரிவினையை உருவாக்கி அதன் மூலம் குளிர்காய நினைப்பவர்கள் துடிக்கிறார்கள்

அதன் காரணமாகவே அப்படியான சிலை தகர்ப்புக்கு எதிராக சமூக ஆர்வலர்கள் ஒன்று திரள்கிறார்கள்

இதை படிக்கும் நீங்கள் சமூக ஏற்ற தாழ்வுகளை எதிர்ப்பவர் எனில், எல்லா மனிதனும் சமம் என எண்ணுவோர் எனில், சக மனிதனுக்கான மரியாதை ஒவ்வொருவருக்கும் அவசியம் என நினைப்பவர் எனில், சுயமாக சிந்திக்கும் திறன் உள்ளவர் எனில், நாகரீக மனித சமுதாயத்தில் வாழ விரும்புபவர் எனில், நீங்களும் அந்த சிலை தகர்ப்பை எதிர்த்து இந்நேரம் குரல் கொடுத்து இருப்பீர்கள்.

மாறாக, சமூக ஏற்றத்தாழ்வு படிநிலைகளில் மனிதத்தை வகைப்படுத்தி வைப்பவர் எனில் சிலை தகர்ப்பை நியாயப்படுத்துவீர்கள்

நீங்கள் யார் என்பதை நீங்களே சுயபரிசோதனை செய்துகொள்ளலாம்

நன்றி!

Friday, February 9, 2018

Renuka's Laughing theraphy

Saw the full video of PM speech in parli.

Though it is about the Budgets and schemes, the speech is fully focussing on hatred sentences against opposition, particularly Congress.

OK. What else can our PM speak in support of this hollow budget? For example, the Modi care scheme was announced grandly but sufficient fund allocation was not done. This created a agitation in their party itself questioning why such stands are being taken spoiling party name.. Similar cases to many announcements where impracticality is openly known to all and understood its just another jumla series.

But our PM is clever enough to take diversion from Budget points to attacking opposition. There is no other option when there is nothing to defend the budget

The fear and nervousness is evident throughout the speech



Renuka Chaudary's laughing came at a right time when PM putting forward to the house a bunch of blatant lies. She, instead of arguing, simply laughed and that laugh did its work well.

Though a PM, common leader for entire nation, and saviour of women empowerment, exposed himself that he could not digest that laugh and openly compared a member of honourable parliament with a negative character of an imaginary story.

A Prime Minister of a democratic country should not have gone to such low level, that too on the Parliament itself.

When such incidents happened in the past, normally they ask for the reason for that sarcastic laughing and put the facts on the table before the speaker.

If our PM has given the factsheet for whatever he spoke on Aadhaar, and presented it before the speaker, then the laughing will gets a condemnation from all the corners. But unfortunately PM failed to justify his points and since he was already nervoused got furious and came to lowest of the lower level.

Secondly the Social Media burst out last night asking, 'is a women laughing loudly is a sin?' 'will you compare your Criticisers to a negative character?' and all.. Renuka simply did the attack just by laughing and all the I'll attitude of PM came out within seconds. Yes its an attitude problem. Nothing else

Rahul can be proud for this moment, in this 4 years now BJP gets a fear against Cong, and while speaking in Parliament also thinking that fear and speaking against congress, thus turning the respectable Parliament into a political campaigning meeting hall.
One more good day in Parliament for understanding the attitude of our honble Prime Minister

Thank you Parliament

Monday, January 15, 2018

தமிழை ஆண்டாள் - புரிதல்

வைரமுத்துவின் 'தமிழை ஆண்டாள்' கட்டுரையை தினமணி நீக்கி இருக்கிறது.

இன்று மதியம் கூட அதை படித்தேன்

அதை நீக்க வேண்டிய அளவுக்கு அதில் எந்த பிழையும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை

அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகம், சுபாஷ் சந்திர மாலிக்கை ஆசிரியராகக் கொண்டு வெளியிட்ட நூலில் உள்ள பகுதியை தான் அங்கே எடுத்து சொன்னார். அந்த நூலின் கருத்தை பக்தர்கள் ஒப்புக்கொள்ளமாட்டார்கள் என்றும் சொல்லி இருக்கிறார். (பார்க்க: படம்)

இந்த ஒரு இடத்தை தவிர்த்து பார்த்தால் அது ஒரு தெள்ளிய நீரோடை போன்றதொரு அருமையான ஆய்வுரை



பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளான கோதை, அவரது வாழ்வியல், அப்போதைய கால கட்டத்தின் கட்டுப்பாடுகள், அவற்றை உடைத்து பெண்விடுதலை பேசும் கோதையின் பாடல்கள், அந்த பாடல்களில் இளமையும் செழுமையும் இனிமையுமாக ததும்பி தெறிக்கும் அந்த தமிழ், அதன் நளினம், அதன் நயனம் என பலவற்றைப்பற்றி விரிவாக பேசியிருந்தது அக்கட்டுரை

அதே காலகட்டத்தில் பிற பெண்களின் நிலை, பிறரது பாடல்கள், அவற்றின் தொனிக்கும் கோதையின் தொனிக்குமான வேறுபாடு, திருவரங்கத்தில் மாயோனிடம் ஐக்கியமானதாக சொல்லப்படுவதன் நம்பகத்தன்மை, பெரியாழ்வாரின் நிலை என விசாலமான அலசல் அந்த கட்டுரையில் இருந்தது

தினமணி அதனை மொத்தமாக நீக்கி இருக்க வேண்டாம் என தோன்றுகிறது. அமெரிக்க நூலின் மேற்கோளை மட்டும் நீக்கி இருந்தால் மட்டுமே போதுமானதாக இருந்திருக்கும்.

தலைப்பே 'தமிழை ஆண்டாள்' அதாவது தமிழை ஆண்டவள் என்பது

ஆண்டாளின் தமிழை விவரித்த வைரமுத்து அது எதனால் தனிச்சிறப்பு பெறுகிறது என்பதையும் விவரிக்கிறார்

அதாவது.. ஆண்டாள் வாழ்ந்த காலமான 7ம் நூற்றாண்டில், பெண்களுக்கான கட்டுப்பாடுகள் அதிகம். அந்த சூழலிலும் ஆண்டாள் முற்போக்காக எழுதி இருக்கிறார். அவர் திருமணமாகாத இளம் பிராயத்தினர். எனவே குறுகிய காலத்தில் தமிழையும் கண்ணனையும் புராணங்களையும் தெள்ளென கற்று இத்தகைய தமிழ் பாசுரங்களை இயற்றி இருக்கிறார் என்கிற தனிச்சிறப்பு தான் கட்டுரையின் நோக்கம்

அதில் அந்த சிறப்பை மேலும் வலுப்படுத்த ஒரே ஒரு இடத்தில் அவரது குலம் குறித்தும் சொல்லப்படுவதை மேற்கோள் காட்டுகிறார். அது அப்போது உயரிய மரியாதைக்கு உரிய குலம். எனினும் அது இறைவனுக்கு தங்களை அர்ப்பணித்துக்கொண்ட குலம். பக்தி மயமானவர்கள். அப்படி ஒரு குலத்திலிருந்து வந்ததாக சொல்லப்படும் ஆண்டாள் தமிழையும் ஐந்திரிபற பயின்று யாரும் சொல்ல தயங்கும் விஷயங்களை எல்லாம் துணிச்சலாகவும் அழகாகவும் சொல்லி இருக்கும் அந்த சொல்லாட்சி... தமிழை ஆண்ட பாங்கு... அது தான் 'தமிழை ஆண்டாள்' கட்டுரையின் கரு

தமிழை முழுமையாக புரிந்துகொள்ளாத சிலரால், அந்த குலத்தின் வரலாறும் மாண்பும் பின்னர் அது எவரால் சிறுமைப்படுத்தப்பட்டது என்கிற நிகழ்வுகளும் அறியப்பெறாத சிலரால்.. வெற்று பரபரப்புக்காக பெரிதாக்கப்பட்ட பிரச்சனை தான் இப்போது நாம் கண்டதெல்லாம்.

உண்மையில் தமிழ் அறிந்தோர் இக்கட்டுரையை கண்டு படித்து புரிந்து கொண்டிருந்தால் இவ்வளவு பெருமையாக ஆண்டாளை எழுதியமைக்காக வைரமுத்துவை கொண்டாடி இருப்பார்கள்.

சிறுமதியாளர்கள் மட்டுமே விளம்பர நோக்கில் எதிர்ப்பார்கள். எதிர்ப்பவர்களை கண்டு பரிதாபப்படுவதை வேறொன்றும் சொல்வதற்கில்லை!

இந்தியா ஒரு சுதந்திர நாடு என்பதை யாரேனும் எனக்கு அவ்வப்போது நியாபகப்படுத்திக்கொண்டிருந்தால் தேவலாம்!

ஞாநி - நாம் இழந்த நடுநிலையாளர்

ஞாநி....

காலையிலேயே பேரதிர்ச்சி தந்திருக்கிறது இவ்விடியல்

****
அருமை நண்பர் திரு காளிபிரசாத் அவர்கள் தான் ஞாநி அவர்களை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர்.



ஞாநியின் கட்டுரைகள் அரசியல் விமர்சனங்கள் ஆகியவை எனக்கு அதற்கு முன்பே பரிச்சயமானவை. மிக விருப்பமானவையும் கூட. ஓ பக்கங்கள் மட்டுமல்ல அவரது பேச்சுக்களையும் நான் தேடி தேடி போய் ரசித்ததுண்டு

அஷோக் நகர் வீட்டில் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் ஞாயிறு 'கேணி கூட்டம்' நடக்கும். ஒவ்வொரு கூட்டத்திலும் ஒவ்வொரு விஷயங்கள் பற்றி பேசுவார். எல்லோருடனும் இயல்பாக பழகுவார். ஒரு நெருங்கிய நண்பர் வீட்டில் இருப்பதைப்போல அவரது வீட்டில் வளைய வரலாம். நிறைய புத்தகங்களை அங்கே தான் பார்த்து குறிப்பெடுத்துக்கொண்டேன்.

கேணிக்கூட்டத்தின்போது எல்லோருக்கும் அங்கே தேநீர் தயாராகும். Black Tea & Lemon Tea எனக்கு அறிமுகமானதும் முதன்முதலில் பருகியதும் அவரது வீட்டில் தான்.

***

தமிழக அரசியல் வெளியில் அவர் ஒரு பார்வையாளர்.. தீவிர ரசிகரும் கூட

இன்னார் என்றில்லாமல் எல்லோரையும் விமர்சிக்கும் உண்மையான நடுநிலை கொண்டவர். ஒரு சாதாரணனின் பார்வையிலிருந்து அரசியலை பார்ப்பவர். அந்த விஷயத்தில் அவர் தான் எனது ஆதர்சமும் கூட.

எங்கு தவறு நடந்தாலும் விமர்சிப்பார். ஆனால் அந்த விமர்சினத்தில் ஒரு நாகரீகம் இருக்கும். வரம்பு மீறாத வார்த்தைகளால் பிரம்பு நெய்து விளாசும் வாத்தியார் அவர்.

***

தமிழக அரசியல் களத்தில் இது போன்ற நடுநிலை விமரிசிகர்கள் மிகமிக அரிதாகி வருகின்றனர். இப்போது ஞாநியின் இழப்பு மற்றுமொரு பேரிழப்பு தான்.

அவர் ஆத்மா அமைதியில் துயில் கொள்ளட்டும்

Wednesday, December 20, 2017

டிடிவிதி எனும் ராஜதந்திரி

எல்லாம் நல்லபடியாகத் தான் இருந்தது...

தேர்தல் நெருக்கத்தில் பிரீத்தி ரெட்டி கொடுத்த பேட்டி வெளி வரும்வரை..

அது டிடிவி மீது மறைமுகமாக பல களங்கங்களை விதைக்க வழிசெய்தது.

மருத்துவமனைக்கு வரும்போதே சுவாசம் இல்லை என்கிற அந்த பேட்டி, சசி & கோ மீது சந்தேகங்களை வளர்த்துக்கொள்ள போதுமானதாக இருந்தது.

அதன் பின் சிகிச்சை அதன் முன்னேற்றம் பற்றியெல்லாம் பிரதாப் ரெட்டி கருத்து சொல்ல 'மறுத்தது' மேலும் பல புதிய சந்தேகங்களை கிளப்ப வழி செய்தது.

இவை டிடிவிக்கு எதிரான ஒரு மனநிலையை மக்களிடம் ஏற்படுத்தியதில் வியப்பில்லை.

ஆனாலும் இந்த பேட்டிகள் தேர்தல் விதிமுறைகள் பட்டியலில் வரவில்லை என்பது வேறு விஷயம்.

தங்கள் மீதான அத்தனை களங்கங்களையும் துடைக்க வேண்டுமானால் மக்கள் சந்தேகப்படுவது போல ஜெ. மருத்துவமனையில் சுயநினைவு இல்லாமல் இருந்தார் என்பதை தகர்க்க வேண்டும்.

டிடிவிக்கு வீடியோவை வெளியிடுவதைத் தவிர வேறு வழிகள் இருப்பதாக தெரியவில்லை.

இந்த ஒற்றை வீடியோ டிடிவி மீதான களங்கத்தை துடைத்துப்போட்டதும் அல்லாமல், ஜெ நல்லபடியாக தான் இருந்தார் என்பதையும் நவம்பர் இறுதிகளில் தான் பாதிப்பு அதிகமானதையும் தெளிவு படுத்துகிறது.

ஜெ. வின் சிகிச்சை மர்மமாக இருக்கும் வரையில் தான் அதிமுக & பாஜகவுக்கு நல்லது என்கிற நிலையில் இப்போது வீடியோ வெளியானது தான் அவர்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

நல்லது தான்.

இப்போது சந்தேகத்தின் நிழல் திசை மாறி படிகிறது.

பாதுகாப்பு படை ஏன் விலக்கப்பட்டது? யார் அதற்கான முடிவை எடுத்தது? தமிழக அரசு ஏன் மருத்துவ குழு அமைக்கவில்லை? தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்த தினசரி செய்தியறிக்கை ஏன் வெளியிடப்படவில்லை? நிர்வாகம் ஏன் நிழல்வெளியில் நடத்தப்பட்டது? ஜெ. எதிர்த்த திட்டங்கள் ஏன் அவசர கதியில் அனுமதிக்கப்பட்டது? போன்ற பல பல கேள்விகள் முளைக்கத் தொடங்கிவிட்டன.

மக்களுக்கும் தெளிவு பிறந்திருக்கிறது.

அரசு அவசரம் அவசரமாக வழக்கு பதிந்திருப்பதும் அதைத்தான் உறுதி செய்கிறது.

டிடிவியின் காய் நகர்த்தல் அவர் விரும்பிய பலனை கொடுக்க தொடங்கி இருக்கிறது. அவரே எதிர்பாராத பலன்களையும் அது கொடுக்கக்கூடும்

வாழ்த்துக்கள் டிடிவி

Printfriendly