சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு. சந்துரு அவர்கள் பல பல பரபரப்பான தீர்ப்புக்களை தீர்க்கமாய் கொடுத்து வருபவர். இப்போது என்றில்லை, அவர் வழக்கரின்ஞராக அதே நீதிமன்றத்தில் பணி புரிந்தபோழுதும் சமூக அக்கறை மிளிரும் பல பல வழக்குகளை வெற்றிகரமாக நடத்தி காட்டியவர். சமுதாய மறுமலர்ச்சிக்கான பல தீர்ப்புக்களை பெற்று கொடுத்தவர்.
நீதிபதியாக உயர்ந்த பின் - தீர்ப்புக்களை வழங்குகின்ற நிலைக்கு வந்தபின் - வழக்குகளை சமூக கண்கொண்டு கண்டு பல முற்போக்கான தீர்ப்புக்களை அளித்தவர். முக்கிய வழக்குகளில், எதை பற்றியும் கவலை படாமல் நேர்கொண்ட நெஞ்சோடு தீர்ப்புக்களை எழுதியவர்.
நேற்று இன்னுமொரு முக்கியமான தீர்ப்பை தந்திருக்கிறார்.
விஷயம் இது தான் - சுருக்கமாக.
தமிழருவி மணியன் அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் சென்னை கீழ்பாக்கத்தில் வீடு குத்தகைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த பத்தொன்பது மாதங்களாக அந்த குத்தகை புதுப்பிக்கப்படாமலேயே அவர் அங்கே குடியிருந்து வருகிறார். அதனால் அவரை காலி செய்ய சொல்லி இருக்கிறது வீட்டு வசதி வாரியம்.
தன்னை போலவே பலரும் குத்தகை புதுப்பிக்காமல் அங்கே குடியிருந்து வரும் நிலையில் தன்னை மட்டும் காலி செய்ய சொல்வது பகையுறவை பாராட்டி பாரபட்சமாக அரசு நடந்துகொள்வதை காட்டுகிறது என்று கூறி அவர் வழக்கு போட்டார்.
அந்த வழக்கில் தான் தீர்ப்பு கொடுத்து இருக்கிறார் திரு.சந்துரு.
தமிழ் வாழ்க என்று மூச்சுக்கு முன்னூறு முறை முழங்கும் தமிழக அரசுக்கு சவுக்கடி கொடுக்கும் நோக்கத்துடன், "தலைமை செயலகத்தின் மீது தமிழ் வாழ்க என்று நியான் விளக்கு ஒளிர விட்டால் மட்டும் போதாது.. தமிழறிஞர்களை பாதுகாக்கவும் வேண்டும் அரசு. அப்போது தான் தமிழ் வாழும்" என்று தனது கருத்தை சுளீறேன்று சொல்லி இருக்கிறார்.
இதை வேறு விதமாக பார்க்க விரும்புகிறேன்.
சட்டத்தின் கண்கொண்டு நியாயமான தீர்ப்பாக அவர் சொல்லி இருக்கவேண்டியது என்ன என்று எல்லோருமே அறிவர். பிறர் குத்தகை புதுப்பிக்காமல் இருப்பதை காரணம் காட்டி திரு. தமிழருவி மணியன் அவர்களும் அப்படி இருக்க உரிமை கோர முடியாது. நியாயமாக சட்டத்தை நீதியை நிலை நாட்டி இருக்கவேண்டிய நீதிமன்றம், தமிழருவி மணியனை குத்தகை புதுப்பிக்க சொல்லி இருக்க வேண்டும் அல்லது அவரை காலி செய்ய சொல்லி இருக்க வேண்டும். குத்தகை புதுப்பிக்காமல் குடியிருந்து வரும் மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி வீட்டு வசதி வாரியத்துக்கு உத்தரவு இட்டிருக்க வேண்டும். (அதாவது குத்தகை புதுப்பித்தல் அல்லது காலி செய்தல்)
ஆனால் அப்படி இல்லாமல் சம்மந்தமே இல்லாமல் அரசின் மீது பாய்வது தவிர்க்கப்பட்டு இருக்கவேண்டும்.
அரசு தமிழ் ஆர்வலர்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்கிற விஷயத்தை, குத்தகை புதுப்பிக்காமல் குடியிருக்க தமிழருவி மணியனை அனுமதிக்கவில்லை என்பதுடன் சம்மந்தப்படுத்தி, அதனையே வாய்ப்பாக கொண்டு தமிழக அரசின் மீது பாய்ந்து இருப்பது, சந்துரு மீதான மதிப்பை கொஞ்சம் இறக்கிவைக்க தான் செய்கிறது.
எனினும், அவர் கொடுத்திருக்கும் சவுக்கடி - தவறான இடத்தில், தவறான சந்தர்ப்பத்தில் கொடுக்கப்பட்டு இருந்தாலும் - அரசுக்கு தேவையான சவுக்கடி தான் என்பதில் சந்தேகம் இல்லை.
சொல்லளவில் இருக்கும் தமிழுணர்வு செயல்வடிவம் பெற சந்துருவின் இந்த தீர்ப்பு அரசுக்கு உத்வேகம் தருமேயானால், அது தமிழ் பெற்ற பயனாகும்.
Tuesday, June 29, 2010
Monday, June 28, 2010
தமிழ் படித்தால் வேலையில் முன்னுரிமை!
கொங்கு மண்டல கோவை மாநகரில் ஆரபாட்டமாய் நடந்து முடிந்து இருக்கிறது உலகத்தமிழ் செம்மொழி மாநாடு.
இது உலக தமிழ் ஆராய்ச்சி மையத்தின் அங்கீகரிக்க பட்ட மாநாடு அல்ல எனினும், தமிழ் சார்ந்த நல்ல விஷயங்கள் பல அரங்கேறின அங்கே.
தேர்தலை முன்னிட்டு நடத்தப்பட்ட மாநாடு என்பதை, தமிழுக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத "கோவை காந்திபுறம் பகுதியில் நூறு கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் அமைக்கப்படும்" போன்ற அறிவிப்புக்கள் தெளிவு படுத்தினாலும், நாம் தமிழ் சார்ந்த விஷயங்களுக்கே வருவோம்.
முக்கியமான ஒரு அறிவிப்பு - "தமிழ் வழி கல்வி கற்றவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதற்கான சட்டம் கொண்டு வரப்படும்" என்பது.
தமிழகத்தில் உள்ள அரசு பணிகளுக்கான வேலை நியமன தேர்வுகளில் பெரும்பாலும் நன்கு படித்தவர்களே தேறி வருகிறார்கள் எனினும் வட்டார வழக்கு மொழி அறியாமையால் பல நேரங்களில் அரசு பணிகளில் சுணக்கம் ஏற்படுகிறது. கட்டாயமாக தமிழ் கற்றிருக்க வேண்டும் என்றொரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டும், அரசு அதிகாரிகள் தமிழிலே கையெழுத்து இடவேண்டும் என்று ஒரு அரசானை பிறப்பிக்கப்பட்டும், அது எதிர்பார்த்த பயனை தரவில்லை.
ஒரு கிராமத்தில் உள்ள பிரச்னையை தீர்க்கவேண்டிய ஒரு அதிகாரிக்கு தமிழ் தெரியாவிட்டால் எத்தனை கஷ்டம் என்பதை நான் நேரடியாக பார்த்து உணர்ந்திருக்கிறேன். அவர் நன்கு படித்தவர் தான்.. சிறந்த நிர்வாகி தான்.. எனினும் மிகவும் அன்னியப்பட்டு போனது போல ஒரு உணர்வு.. அவருக்கு தமிழ் புலமை இல்லாததால் ஏற்பட்டு விடுகிறது.
எனவே தமிழ் படித்தவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை என்கிற இந்த அறிவிப்பு இரண்டு விதங்களில் நன்மை பயக்கும்.
ஒன்று:
இன்றைய காலகட்டத்தில் தமிழ் வழி கல்விக்கு குறைந்த எண்ணிக்கையிலான மாணவர் சேர்க்கையே நடைபெறுகிறது. ஆங்கில வழி கல்வி கற்று, தமிழை ஒரு பாடமாக படித்து வருவதே பெரும்பான்மையாக நடைபெறுகிறது. இது தமிழ் ஆர்வத்தை ஒரு பாடம் என்கிற அளவிலே கட்டுப்படுத்தி விடுவதால், ஆழ்ந்த தமிழ் அறிவு மாணவர்களுக்கு ஏற்படுவதில்லை.
எனவே அரசு பணிகளில் தமிழ் வழி கல்வி கற்றோருக்கு முன்னுரிமை என்கிற அறிவிப்பு மிகுந்த எண்ணிக்கையில் தமிழ் வழி கல்வி கற்க மாணவர்களை தூண்டும் / பெற்றோரை ஊக்குவிக்கும் என்பதும், அதனை சார்ந்த தமிழாசிரியர் பணியிடங்களின் தேவை அதிகரித்தல் மற்றும் தமிழ் வழி களை சொற்கள் மிகுதி பாடல் என தமிழ் செழித்து ஓங்கி வளர ஒரு வாய்ப்பாக அமையும்.
இரண்டு:
தமிழை பயிற்று மொழியாக கற்று அரசு பதவிகளில் அமர்கின்றவர்களால் தமிழகத்தின் மக்கள் தேவைகளை எளிதாகவும் உணர்வுப்பூர்வமாகவும் உணர்ந்து கொள்ள இயலும். அது சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்கவும் ஏதுவாகும்.
தமிழ் வழி உரையாடல் என்பது அரசு அதிகாரிகளுக்கும் சாமானிய பொதுமக்களுக்கும் இடையில் இப்போது இருக்கும் இடைவெளியை முற்றிலுமாக ஒழிக்கும் என்றும் நம்பலாம்.
மாநாட்டில் எத்தனையோ அறிவிப்புக்கள் வெளியானாலும், இந்த ஒரு அறிவிப்பாவது செயல்வடிவம் பெறவேண்டும் என்பது எனது ஆவல்...
ஆசைக்கு அளவில்லை தானே?

Saturday, June 26, 2010
ராஜ்யசபா கனவுகள்!
ராஜ்ய சபா உறுப்பினர்களின் பதவி காலம் முடிவுக்கு வந்ததை அடுத்து, தமிழகத்தில் இருந்து புதிதாக ஆறு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, அது தமிழக அரசியலில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று யாருமே நினைத்து இருக்க மாட்டார்கள்.
உறுப்பினர்கள் கணக்கு படி, அதிமுகவுக்கு இரண்டு உறுப்பினர்களும், திமுகவுக்கு நான்கு உறுப்பினர்களும் கிடைக்கக்கூடும்.. இதில் திமுக தனது ஒரு இடத்தை காங்கிரசுக்கு கொடுக்கும் என்பது ஊரறிந்த பரம ரகசியம்.
தமிழகத்தில் தங்களை புறக்கணித்து விட்டு யாரும் அரசியல் நடத்த முடியாது என்று கொக்கரித்த பாமக, சில சந்தர்ப்ப சூழ்நிலைகளாலும், தங்கள் இயக்கத்தின் செல்வாக்கு மீதிருந்த அதீத நம்பிக்கையாலும், ஜாதி ஓட்டுக்களை வைத்தே பெரும் சக்தியாக விளங்க முடியும் என்கிற நப்பாசையினாலும், பென்னாகரம் இடைத்தேர்தலில் திமுக, அதிமுக இரு கட்சிகளிடம் இருந்தும் சம தூரத்தை பராமரித்தது. பென்னாகரம் தேர்தலில் தனித்து வெற்றி பெற்றால் அது பின்னாட்களில் வரும் தேர்தல்களில் தங்களை முன்னிலை படுத்திக்கொள்ளவும், அதிகப்படியான இடங்களில் போட்டியிடக்கூடிய அளவிலே இடங்களை பெற்றுக்கொள்ளவும் உதவும் என்பதால், தங்கள் இன ஓட்டுக்கள் அதிகம் இருக்கும் நம்பிக்கையால் பெரும் துணிவோடு தேர்தலை சந்தித்தது.
தோல்வி தான் எனினும், கவுரவமான தோல்வி என்று சொல்ல தக்க அளவிலே நாற்பதாயிரம் ஓட்டுக்களை பெற்று தனி சக்தியாக தாங்கள் அங்கே இன்னமும் விளங்கி கொண்டு இருப்பதை கம்பீரமாகவே பறை சாற்றி இருந்தனர். இன்னும் சொல்லப்போனால் பிரதான எதிர்கட்சியான அதிமுகவை பின்னுக்கு தள்ளிவிட்டு இரண்டாம் இடத்தை பெற்று இருப்பதன் மூலம் தங்களை பென்னாகரத்தில் நிலைப்படுத்தி கொண்டனர். எனினும் மாநில அளவில்?
தன குடும்பத்தில் இருந்து யாரேனும் பதவிகளுக்கு வந்தால் அவர்களை சவுக்கால் அடிப்பேன் என்று அறைகூவிய இயக்கம் அன்புமணியை ராஜ்யசபா மூலம் பாராளுமன்றத்துக்கு அனுப்பி அமைச்சர் பதவியையும் அனுபவித்தது. மீண்டும் அப்படி நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்கிற அதீத ஆவல் அகத்துள் இருந்தும், தனது இயக்கத்துக்கு தமிழகத்தில் இருக்கும் 'அதீத' செல்வாக்கையும், உறுப்பினர் எண்ணிக்கையும் கணக்கிட்டு பார்க்கையில், தேர்தலை சந்திக்காமல் மக்கள் மன்றத்துக்கு வராமல் மேலவை உறுப்பினர் ஆவதே பாதுகாப்பானது என்கிற முடிவுக்கு இயக்கம் வந்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஆனால் யார் மூலமாக வருவது?
திமுகவையும் அதிமுகவையும் சம தூரத்தில் வைப்பதாக பாவித்து இருவரையும் சகட்டு மேனிக்கு திட்டி தீர்த்தாயிற்று. மீண்டும் சில சமாதான தூதுகள் அனுப்பி ஒரு பிரயோஜனமும் இல்லை. அதிமுக அவசரமாக தனது இரண்டு உறுப்பினர்களையும் அறிவித்ததால், திமுகவை கேஞ்சிக்கொண்டிருன்தது பாமக. திமுகவும் காங்கிரசும் தத்தம் வேட்பாளர்களை அறிவித்துவிட நட்டாற்றில் நிற்கிறது பாமக.
ராஜ்ய சபா கனவில் இருந்த தமிழகத்தின் அசைக்க முடியாத சக்தி (!) குழப்பத்தின் உச்சியில் இயலாமையுடன் இருந்து கொண்டிருக்கிறது.
இரு இயக்கங்களும் இத்தகைய ஒரு போன் தருனத்துக்காகவே காத்திருந்ததுன் போல, பாமகவை தனிமை படுத்தியதன் மூலமாக ஜாதி இயக்கங்களை பெரிதாக முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை என்பதை தெளிவாக உணர்த்தி இருக்கின்றனர். மேலும் சொந்த செல்வாக்கு என்று எதுவும் இல்லாமல், பிறர் முதுகை மட்டுமே நம்பி சவாரி செய்வது எவ்வளவு ஆபத்தானது என்பதையும் பாமகவுக்கு உணர்த்தி இருக்கின்றனர். ராஜ்ய சபா கனவு என்பது தனியே காண வேண்டியது அல்ல என்பதை இப்போது பாமக உணர்ந்திருக்கும்.
இதன் பிற விளைவுகள் சுவாரசியமானவை!
பாமகவின் ஆர்பாட்டம் முன்பு போல எடுபடாது
சொந்தமாக தங்களுக்கென சுய செல்வாக்கு இல்லாத\ஒரு இயக்கம் என்பது தெளிவாகி விட்டதால் கொஞ்சம் அடக்கியே வாசிப்பார்கள்
திமுக பரந்த மனப்பான்மை உள்ள கட்சி என்பதால் மீண்டும் தங்கள் அணியில் பாமகவை சேர்த்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது, எனினும், இட ஒதுக்கீட்டு பேரன்களில் திமுகவின் நிலைப்பாடே இறுதியாக இருக்க கூடும். பேரம் பேசும் உரிமை இப்போது பாமவுக்கு இல்லாததாலும், அவர்களின் சுய செல்வாக்கு பட்டவர்த்தனம் ஆகி இருப்பதாலும், குறைந்த அளவிலே தான் இடங்கள் கிடைக்கும்.. அது தமிழகத்துக்கு பல வகையிலும் நல்லது.
ஒருவேளை, இந்த ராஜ்ய சபா கனவு மட்டும் பாமகவுக்கு வராமல் இருந்திருந்தால், அமைதியாக அரசியல் விளையாட்டுக்களை வேடிக்கை பார்த்திருந்தால், பென்னாகரம் ஒட்டு எண்ணிக்கையை வைத்து திமுக, பாமகவுக்கு ஒருவேளை கொஞ்சம் மரியாதை கொடுத்து இருக்க கூடும். சட்டமன்ற தேர்தல் வரை பாமக அடக்கி வாசித்து இருந்தால், அவர்கள் மீதான மரியாதை கூடி இருக்கும். செல்வாக்கு பற்றிய சந்தேகம் மெல்ல மெல்ல தணிந்து இருக்கும். ஆனால் ராஜ்யசபா ஆசை அவசரமாக இரு இயக்கங்களிடமும் தூது அனுப்பி கெஞ்ச வைத்து, தங்கள் பலவீனத்தை வெளிப்படுத்தி, இறுதியில் எந்த பலனும் இல்லாமல் தனித்து விடப்பட்ட சூழலுக்கு பாமகவை தள்ளி இருக்கிறது.
பாமக தனித்து விடபடுவது தமிழகத்துக்கு நல்லது எனினும் அப்படியான ஒரு நிலைப்பாட்டுக்கு தங்களை தாங்களே உட்படுத்தி கொண்டிருப்பது வித்தியாசமான விஷயம். ஆசை யாரை விட்டது?

Monday, February 22, 2010
தலை போல வருமா?
இன்னைக்கு தேதிக்கு அரசியல் துறையிலாகட்டும், சினிமா துறையில் ஆகட்டும் ரொம்ப பரபரப்பான விஷயம் முதல்வர் விழாவில் அஜித்தின் பேச்சு தான்!
அது சரியா தவறா என்கிற விவாதம் ஒருபுறம்... அது சரியாகவே இருந்தாலும் அவர் பதிலளிக்க தேர்ந்தெடுத்த களம் சரியா என்பது இன்னொரு புறம் என்று விவாதங்கள் பட்டையை கிளப்புகின்றன.
அரசியல் நோக்கத்திற்காக நடத்தப்படும் சினிமா விழாக்களுக்கு சினிமா பிரபலங்களை கட்டாயப்படுத்தி கலந்துகொள்ள வைக்க கூடாது என்பது அஜீத்தின் வேண்டுகோள். அதனை அத்தனை பட்டவர்த்தனமாக அந்த மேடையிலேயே போட்டு உடைப்பார் என்று யாருமே நினைத்து கூட பார்த்து இருக்கமாட்டார்கள்.
சினிமா துறைக்கு முதல்வர் சலுகைகள் கொடுப்பது, அதை காரணம் காட்டி அவருக்கு பாராட்டு விழா எடுப்பது, அந்த விழாவில் இன்னும் சில கோரிக்கைகள் வைப்பது, அதை முதல்வர் நிறைவேற்றுவது, மீண்டும் அதற்கு இன்னொரு பாராட்டு விழா எடுப்பது என்பது இப்போது ஒரு தொடர் வழக்கமாக ஆகிவிட்டது!
இன்னும் சொல்லப்போனால், ஏதேனும் கோரிக்கையை அரசிடம் வைக்கவேண்டும் என்றால் பாராட்டு விழா எடுக்கவேண்டும் என்கிற நிலை வந்துவிட்டதாக தோன்றுகிறது! அரசு ஊழியர் சம்மேளனம் கூட சில காலம் முன்பு அவருக்கு பாராட்டு விழா எடுத்து தான் தங்கள் கோரிக்கையை வைத்தார்கள்! வணிகர் சங்க பேரவையும் அப்படியே.
ஆனால் தொடர்ச்சியாக பாராட்டு விழாக்கள் வைத்து கோரிக்கைகளை நிறைவேற்றி கொள்ளுவது சினிமா துறை தான்.
அப்படியான நிகழ்வுகளுக்கு சினிமா பிரபலங்கள் கட்டாயமாக வருகை தரவேண்டும் என்று வற்புறுத்துவது, அப்படி வராதவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது, தடை விதிப்பது போன்ற மிரட்டல்களால் ஆடி தான் போயிருக்கிறார்கள் எல்லோரும். ஆனாலும் என்ன செய்ய? அப்படி வற்புருத்துவோர்கள் அரசியல் பின்புலம் கொண்டவர்களாகவோ அரசுக்கு வேண்டப்பட்டவர்களாகவோ இருந்து தொலைப்பதால் பகைத்துகொள்ளவும் முடியாமல், சகித்துக்கொள்ளவும் முடியாமல் விழாக்களில் கலந்துகொள்ள வேண்டி இருக்கிறது!
இப்படியான நிலையில் தான் வந்து விழுந்திருக்கிறது வெந்த வார்த்தைகள் அஜீத்தின் உள்ளத்தில் இருந்து.
அவரது கருத்து ஆயிரம் சதம் அங்கீகரிக்கப்படவேண்டியது என்பது எனது கருத்து!
யாரையும் வற்புறுத்தி ஒரு விழாவில் கலந்துகொள்ள செய்வதோ, ஒருவரை பாராட்ட சொல்லுவதோ, அப்படி செய்யாவிட்டால் நடவடிக்கை எடுப்பதோ கண்டிப்புக்குறியது. அவரவர் தொழிலை அவரவர் பார்க்கையில், அனாவசியமான வற்புறுத்தல்கள் இருக்கக்கூடாது.
மேலும், அரசிடம் ஒரு கோரிக்கை வைத்து அது நிறைவேறும் பட்சத்தில் அதற்கு கட்டாயமாக விழா எடுக்கவேண்டும் என்பதே கேலிக்கூத்து. தேவைகளை நிறைவேற்றுவது அரசின் கடமை என்பதை கூட உணரமுடியாமல், அரசின் செயல்களுக்கு அரசியல் சாயம் பூசி பார்க்கும் கொடுமை தமிழகத்தில் மட்டுமே சாத்தியம். காரணம் இங்கே தான் அரசியலும் சினிமாவும் ஈருடல் ஓருயிராக இணைந்து இருக்கின்றன.
சினிமாவில் கால்வைத்தாலே சிலருக்கு அரசியல் ஆசை வந்து விடுகிறது. அவர்கள் அரசியலை தங்கள் சுய நலத்துக்காக வளைக்கும்பொழுது, அரசியல் வாதிகளும் அவர்களை தங்கள் சுய நலத்துக்காக வாளைக்கிரார்கள்.. இதிலென்ன தவறு? என்று கேட்போரும் உண்டு!
அஜீத், இந்த உள்ள குமுறலை பத்திரிகை பேட்டி வாயிலாகவோ, அல்லது முதல்வரை நேரடியாக சந்தித்தோ சொல்லி இருந்திருக்கலாம், விழாவை புறக்கணித்து இருக்கலாம், அதை விடுத்து இப்படி மேடையில் கொட்டி இருக்க தேவையில்லை என்றும் சில கருத்துக்கள் உண்டு!
அஜீத் பேசியது அஜீத்துக்காக மட்டும் அல்ல. யாராலும் சொல்ல முடியாத அவஸ்த்தையை தான் அஜீத் அங்கே இறக்கி வைத்து இருக்கிறார்! அதனால் தான் அவர் அதை கொட்டி தீர்த்தபோது கரகோஷம் விண்ணை பிளந்தது!
மேலும், பேட்டி, முதல்வர் சந்திப்பு போன்றவற்றில் அதை சொல்லி இருந்தால் அது மற்றும் ஒரு நிகழ்வாகவே மறைந்து போயிருக்கும். இப்போது இந்த விஷயத்துக்கு கிடைத்த முக்கியத்துவம் அப்போது கிடைத்து இருக்குமா என்பதும் சந்தேகமே!
எனவே, சரியான இடத்தில், சரியான வேளையில், சரியான விஷயத்தை தான் அஜீத் செய்து இருக்கிறார்!
பொதுவாகவே அஜீத் துணிச்சலானவர் என்றும் மனதில் பட்டதை பட்டதுபோலவே பேசுபவர் என்றும் கேள்விப்பட்டு இருக்கிறேன்! அதை இந்த பேச்சின் பொது ஆணித்தரமாக உறுதி படுத்தி இருக்கிறார்! யாருக்கும் எதற்கும் அஞ்சாமல் தனது கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்!
அரசியல் காரணங்களுக்காக வழிந்து குழைந்து பேசி பாராட்டி பேர் வாங்கும் பல புரட்சியாளர்கள், சிகரங்கள் எல்லாம் இருக்கையில் எந்த வித அனுகூலமும் எதிர்பார்க்கமால், பொது நோக்கத்துக்காக குரல் கொடுத்த அஜீத், என் மனதில் எங்கேயோ உயரத்தில் போய்விட்டார்.
இனியாவது அரசியல் காரணங்களுக்காக சினிமா பிரபலங்களை வற்புறுத்துவது, போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ள கட்டாயப்படுத்துவது, போன்றவை குறையவேண்டும்.. அதைவிட இந்த விழா எடுக்கும் வழக்கம் குறையவேண்டும்.
ஆனால், மாறாக சினிமா பிரபலங்களை அரசியல் பின்புலம் கொண்டோர் மிரட்டுவது, பகிரங்கமாக ஏசுவது போன்றவை தான் இப்போது நடந்து வருகிறது. இதை எல்லாம் கண்டித்து தடுக்க வேண்டிய முதல்வர், சும்மா இருப்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது!

Saturday, February 20, 2010
தோழரை காணோம்!
W.R வரதராஜன்... மார்க்சிஸ்ட் கம்மியூனிஸ்ட் கட்சியின் மிக மிக முக்கியமான தலைவர்.. தமிழகத்தில் மார்க்சிச்டின் முகம்.. கட்சியின் மத்திய குழுவின் பிரதான உறுப்பினர்.. தொழிற்சங்கமான CITU வின் தலைவர்...
அவரை ஒருவாரமாக காணோம்!
எங்கே போனார்.. என்ன ஆனார் எந்த தகவலும் இதுவரை இல்லை! இரண்டு கடிதங்கள் எழுதிவைத்து இருக்கிறார் வீட்டில்... ஒன்றில் கம்மியூநிச்ட்டு சாகமாட்டான் என்று எழுதி இருக்கிறார்... மற்றொன்றில் சாவு எல்லாவற்றையும் விட மேல் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.... இரண்டு கடிதங்களுக்குமான இடைவெளி ஐந்து நாட்கள்.
தமிழக காவல்துறை அவரை தேடிக்கொண்டு இருக்கிறது..
இப்படியான தலைமறைவுக்கு என்ன காரணம்... அவரே அவரது கடிதத்தில் எழுதி இருப்பதை போல, "கட்சியிலும் அரசியலிலும் எத்தனையோ பிரச்சனைகளை வெற்றிகரமாக சமாளித்து இருக்கிறேன்.. ஆனால் வீட்டில் இருக்கும் பிரச்னையை என்னால் சமாளிக்க முடியவில்லை!"
அப்படி என்ன வீட்டில் பிரச்சனி? அவரது மனைவி சரஸ்வதி, மார்க்சிஸ்ட் கட்சிக்கு கொடுத்து இருக்கும் ஒரு புகாரில் வரதாராஜனுக்கு இன்னொரு பெண்ணோடு தொடர்பு இருக்கிறது (கவனிக்க: அவருக்கு 64 வயது.. ஊரறிந்த தலைவர் வேறு!) என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
கல்கத்தாவில் கடந்த வாரம் நடைபெற்ற கட்சியின் கூட்டத்தில் இது தொடர்பாக, ஒழுக்கமீறல் என்று காரணம் கூறி வரதராஜன் மீது நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது... அதில் நொந்து போயி கடந்த 11 ஆம் தேதி சென்னை வந்த வரதராஜன் எங்கே என்று யாருக்கும் தெரியவில்லை... செல் போனை வீட்டிலேயே விட்டு சென்று இருக்கிறார்...
நேற்றைய தினம், வரதராசனை கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் நிலையில் இருந்தும் கட்சி நீக்கி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. அவமானத்தை விட மரணம் மேலானது என்கிற குறளை தனது இரண்டாவது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும் வரதராஜனின் மனோ நிலையை என்னால் உணர முடிகிறது.
குடும்பங்கள் சிதைந்து போவதற்கு அடிப்படை காரணமே சந்தேக நிழல் தான் என்பது காலம் காலமாக தெரிந்த விஷயம் தான்... சாதாரணனின் வாழ்க்கையிலும் அப்படியே... பெரும் தலைவர்களின் வாழ்விலும் அப்படியே!
ஆனால், தமிழகத்தின் மிக மிக முக்கியமான அரசியல் தலைவர்களுள் ஒருவரான வரதராஜன் இது போன்ற விஷயங்களுக்காக தலை மறைவு ஆகிறார் என்பது உண்மையில் வருத்தம் தரக்கூடிய விஷயம்... இதை எளிதாக அவரே கையாண்டு இருக்கலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து... அரசியல், சட்டம், காவல் போன்ற அனைத்து துறைகளிலும் அவரை மதிக்கும் எத்தனையோ அதிகாரிகள் இருக்க, நல்லபடியாகவே விஷயத்தை முடித்திருக்க முடியும் என்று தோன்றுகிறது...
அப்படி இருந்தும், அவர் தலை மறைவாக சென்று இருக்கிறார் என்றால் அவருக்கு எத்தகைய மன உளைச்சல், மன நெருக்கடி இருந்திருக்கவேண்டும் என்பதை சிந்தித்து பார்க்கவே முடியவில்லை.
குடும்பத்தில் அமைதி நிலவ செய்யும் கடமையில் இருந்து பலரும் விலகி செல்வதன் விளைவுகள் விபரீதமானவை என்பதை வரதராஜன் தலைமறைவு தெளிவாக காட்டுகிறது...
வரதராஜன் எங்கே இருந்தாலும் நலமுடன் இருக்கவேண்டும், தமிழக அரசியல் அரங்கம் அச்சப்படுவது மாதிரி, அவர் தவறான எந்த முடிவும் எடுத்திருக்கக்கூடாது என்று வேண்டுகிறேன்.

Friday, February 19, 2010
சிபில் அட்டகாசம்!
சிபில்....இந்த வார்த்தை தான் இப்போதைக்கு மிக மிக பயங்கரமாக காட்சி தருகிறது ஒவ்வொரு சராசரி நடுத்தர இந்தியனுக்கும்!வரவு எட்டணா, செலவு பத்தணா என்கிற வாழ்க்கை சூழலில் எல்லோருமே கடன் வாங்கியோ, கடன் அட்டை தேய்த்தோ தான் காலத்தை ஒட்டி தொலைக்க வேண்டி இருக்கிறது.... கலங்கி தவித்ததெல்லாம் இலங்கை வேந்தன் காலத்தோடு முடிந்துவிட்டது... இன்றைய தேதியில் கடன் இல்லாத கொடீஸ்வரனே இல்லாதபோது.. சராசரி இந்தியன் எம்மாத்திரம்!
இப்படியாக ஒரு வங்கியில் தனிநபர் கடன் வாங்கியவன் பாடு என்னவெல்லாம் ஆகிறது என்பதை சமீபத்தில் கண்கூடாக கண்டேன்.
கடன் வாங்குவதற்கு முன்பே கடன் பத்திரத்தில் (படித்து பார்க்காமல் / படித்து பார்க்க முடியாமல்) கையெழுத்துக்களை வாரி வாரி இறைக்கவேண்டும். (இதில் இன்னொரு சுவாரசியமான கூத்தும் இருக்கிறது... நீங்கள் இங்கிலீஷில் கையெழுத்து போடாவிட்டால் 'வெர்நாக்குளர் படிவம்' என்ற ஒன்றை நிரப்பி தரவேண்டும். அதாவது... எனக்கு எழுத படிக்க தெரியாது... இந்த விண்ணப்பத்தில் இருக்கும் விவரங்களை வங்கி அலுவலர் படித்து காண்பித்தார்.. நான் புரிந்து கொண்டேன் என்கிற மாதிரி... நீங்கள் இங்கிலீஷில் மிக பெரும் புலமை கொண்டிருந்தாலும், கையெழுத்தை தாய்மொழியில் போட்டால் நீங்கள் படிக்காதவர் என்பது வங்கிகளின் விதி... இதில் அரசு வங்கிகளும் அடக்கம்)
அதோடு எட்டு அல்லது பத்து செக் கையெழுத்து இட்டு மொட்டையாக கொடுக்கவேண்டும். அப்போது தான் நமது அப்பிளிகேஷனையே லாக் ஆன் செய்வார்கள்! (ஒருவேளை லோன் அப்ரூவ் ஆகவில்லை என்றால் அந்த செக்குகள் திரும்ப தரப்படாது.. வங்கியே அவற்றை கிழித்து போட்டுவிடும் என்று சொல்கிறார்கள்... ஆனால் அப்படி கிழிக்கிறார்களா என்பது தெரியாது யாருக்கும்... இதற்கிடையில் செக்குகள் வங்கிக்கு வராமல் போவதால் நாம் கணக்கு வைத்து இருக்கும் வங்கி நமக்கு மேற்கொண்டு செக் தர யோசிக்கும் ஆபத்தும் உண்டு)
ஒரு வழியாக கடன் அப்ரூவ் ஆகிவிட்டால், அதற்கான பிராசசிங் பீஸ் அது இது என்று ஆரம்பத்திலேயே கணிசமான தொகை பிடித்தம் செய்து தான் நமக்கு தருவார்கள். அதே போல ஒப்பந்தப்படியான வட்டி விகிதத்தை மூன்றாக பிரித்து, முதல் ஒன்பது மாதங்களில் பெரும்பாலான வட்டியை முழுமையாக பிடித்தம் செய்து விடுவார்கள். பிற்காலங்களில் குறைந்த வட்டி. இந்த ரீதியில் போகும்போது முதல் ஒன்பது மாதங்களில் நாம் கட்டிய தொகையில் மூன்றில் ஒரு பங்கு கூட பிரின்சிபல் தொகையில் கழியாது! எல்லாமே வட்டிக்கு என்று எடுத்து விடுவார்கள்...
ஆறு மாதம் கழித்து ஒரு ஆரணங்கு அன்பாக (?) போன் செய்து சார் உங்கள் லோனுக்கு டாப் அப் லோன் தர்றேன் எடுத்துக்கறீங்களா என்று எதோ தன்னையே தருவது போல குழைந்து குழைந்து கேட்பாள். அங்கே விழுந்தால், 'பிரீ குளோசிங்' சார்ஜ் என்று மீண்டும் ஒரு கணிசமான தொகையை வெட்ட வேண்டி இருக்கும்.. அதுபோக புதிய கடனில் பிராசசிங் பீஸ், மீண்டும் முதலில் இருந்து மூன்றில் இரு பங்கு வட்டி என்று நம் சம்பாத்தியம் எல்லாமே வங்கிக்கு தான்.
இதில் ஏதேனும் ஒரு மாதம் நீங்கள் தவணை செலுத்த தவறினால், போன் மிரட்டல், ஆட்களை வீட்டுக்கனுப்பி மிரட்டுதல் போன்ற 'இயல்பான' விஷயங்கள் தவிர்த்து இப்போது புதிதாக வங்கிக்கு கிடைத்து இருக்கும் அதி அற்புத ஆயுதம் தான் சிபில்.
இந்த சிபில் (CIBIL - Credit Information Beureu of India Limited) என்பது வங்கிகளால் ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு. எந்த வங்கியில் நீங்கள் கடன் வாங்கி இருந்தாலும், அது பற்றிய விவரங்களை, உங்களின் திருப்பி செலுத்தும் வரலாறை எல்லாம் சேகரித்து பட்டியல் இட்டு வைப்பது இவர்கள் வேலை. நீங்கள் சந்தர்ப்பவசத்தால் ஏதேனும் ஒரு வங்கியின் கடனில் ஒரே ஒரு தவணை பாக்கி வைத்தாலும் உங்கள் பெயர் சிபிலின் பட்டியலில் ஏறி உட்கார்ந்து கொள்ளும்.
இதன் விளைவுகள்??? நீங்கள் மேற்கொண்டு வேறு ஒரு வங்கியில் கடன் வாங்க சென்றாலோ, கடன் அட்டை கேட்டாலோ, இந்த 'முன்கதை சுருக்கத்தின்' பேரில் கடன் நிராகரிக்கின்ற வாய்ப்பு உண்டு!
அதாவது அவசர தேவைக்காக ஐம்பதாயிரம் தனிநபர் கடன் வாங்குகிறீர்கள்... மாதம் இரண்டாயிரத்து சொச்சம் தவணையை ஒன்றரை ஆண்டுகாலம் ஒழுங்காக கட்டி வருகிறீர்கள்... திடீரென்று ஒரு மாதம் உங்களால் கட்ட முடியவில்லை என்றாலும் உங்களுக்கு சிபில் லிஸ்டில் ஈசியாக அட்மிஷன் கிடைத்துவிடும். அதற்கு அப்புறம் நீங்கள் அந்த தவணைகளை ஒழுங்காக செலுத்தி இருந்தாலும், முறையான(!) கோரிக்கை / விண்ணப்பம் / கட்டணம் இல்ல்லாமல் உங்கள் பெயர் சிபில் பட்டியலில் இருந்து இறங்காது! இது தெரியாமல் நீங்கள் உங்கள் மகள் கல்யாணத்துக்கு என்று இன்னொரு பெரிய தொகை லோன் வாங்க சென்றால் இந்த சப்பை காரணத்தை கூறி உங்களுக்கு ஒரு பெரிய நோ சொல்வார்கள். சொல்வது மட்டும் அல்ல, நம்மை எதோ மோசடி மன்னன் ஹர்ஷத் மேத்தாவை பார்க்கிற மாதிரி பார்ப்பார்கள்.. அது தான் கொடுமை!
சரி, வங்கிக்கு என்று வங்கிகளின் நன்மைக்கு என்று இப்படி ஒரு அமைப்பு இருக்கிறதே, நமக்கு என்று, நுகர்வோருக்கு என்று இப்படி ஒரு அமைப்பு இருக்கிறதா என்றால் இல்லை. வங்கி என்ன சொல்கிறதோ அதற்கு நாம் கட்டுப்படவேண்டும். அவர்கள் கூடுதல் வட்டியை பிடித்தாலும் நாம் எதிர்த்து கேள்வி கேட்க கூடாது. வரி மற்றும் பிராசசிங் பீஸில் தவறு செய்த வங்கிக்கு நாம் கேள்விகள் கேட்டாலோ, வழக்கு தாக்கல் செய்தாலோ நமக்கு சிபிலில் கரும்புள்ளி குத்தி வைத்து விடுவார்கள்... ஜென்மத்துக்கும் அவசர தேவைக்கு கடன் கிடைக்காமல் அல்லாடி கொண்டு தான் இருக்கவேண்டும்.. ஒரு வங்கியும் நமக்கு லோன் தராது.
கிட்டத்தட்ட, வங்கிகளின் கூட்டமைப்புக்கு அடிமையாக இருந்தால், எதிர்த்து எந்த கேள்வியும் கேட்காமல் இருந்தால் தான் நாம் நிம்மதியாக இருக்க முடியும்.
இந்திய அரசில் நிதி துறை என்று ஒன்று இருக்கிறது... அந்த அமைச்சரவை இதை பற்றி எல்லாம் எந்த கவலையும் கொள்வதில்லை... இப்படி கடன் வாங்கியோரை வங்கிகள் படுத்தும் பாடு பற்றி கிஞ்சிற்றும் பதர்றப்படுவதில்லை... மாறாக, புது புது விதிகளை உருவாக்கி சாமானியர்கள் கடன் வாங்குவதை கடினமாக்குவதும், வங்கிகளின் வருவாயை அதிகப்படுத்துவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்துவதுமாக மக்கள் விரோத போக்கை கடைபிடிக்கிறது!
(கடன் அட்டை கதை இன்னும் சுவாரசியமான கதை... அதை அடுத்த பதிவில் சொல்கிறேன்)
ஜனநாயகம் என்பது சகிப்புத்தன்மை கொண்டவர்களின் ராஜ்ஜியம் என்பதை வைத்து பார்த்தால் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு.. வாழ்க ஜனநாயகம்!
Thursday, February 18, 2010
டீ கடை சிந்தனைகள்!
இன்னைக்கு காலையில் டீ குடிக்க வழக்கமான டீ கடைக்கு போனேன்.. அங்கே தான் அரசியல் பொருளாதாரம்ன்னு அத்தனை விவாதங்களும் நடக்கும்... நாலு ரூபாய் டீக்கு நாற்ப்பது விஷயங்கள் தெரிஞ்சுக்கலாம். எனக்கு தெரிஞ்சு டீ மாஸ்டர்களை விட பெட்டரான அரசியல் விமரிசகர்களே கிடையாது. அத்தனை பார்டி பத்தியும் மக்களோட மன ஓட்டத்தை பத்தியும் ஜஸ்ட் லைக் தட் தெரிஞ்சு வெச்சிருக்காங்க!
ஆனா இங்கே மேட்டர் அரசியல் கிடையாது!
எந்த ஊருக்கு போனாலும் ஒரு மலையாளி டீ கடை கண்டிப்பா இருக்கும்னு சொல்லுவாங்க... டென்சிங் இமையமலை போனப்ப கூட அங்கே ஒரு மலையாளி டீ வித்துட்டு போன மாதிரி கார்டூன் கூட பிரபலம்.
ஆனா மலையாளிகளை விட இஸ்லாம் சகோதரர்களின் டீ கடைகள் தான் நான் அதிகமா பாக்கிறேன்... அவங்க டீக்கு ஒரு தனி டேஸ்ட் இருக்கு. குடிச்சு பாருங்க தெரியும்.
தமிழ் நாட்டை பொறுத்தவரைக்கும் இந்த ரெண்டு பேர் தவிர அதிகமா டீக்கடை நடத்தறவங்க பத்தி தான் இப்போ யோசனை.
சிவன்கங்கை, புதுக்கோட்டை, விருதுநகர் காரங்க தான் சென்னையில் அதிகமா டீ கடை வெச்சிருக்காங்க... என்ன காரணம்னு பார்த்தா... அந்த மாவட்டங்கள் எல்லாமே தொழில் துறையில் ரொம்ப பின் தங்கி இருக்கு.. அந்த மாவட்டத்தை சேர்ந்தவங்க பெரும்பாலும், வேலை தேடி மும்பை போறது, கோயம்பத்தூர், சென்னைன்னு போறது, அப்புறம் ஒன் ஸ்டெப் பார்வார்டா மலேசியா துபாயன்னு போறதுன்னு சம்பாத்தியத்துக்கு வழி தேடிட்டு இருக்காங்க. அப்படி எல்லாம் போக முடியாதவங்க.. அல்லது அப்படி போயி நொடிஞ்சு போனவங்க, ஆல்டைம் ஹிட்டான டீக்கடை நடத்துறாங்க.
சென்னையில் நிறைய கடைகள் அவங்க தான் நடத்தறாங்க... இது பெருமை படவேண்டிய விஷயமா... இல்லே, சில குறிப்பிட்ட மாவட்டங்களை மட்டும் நாம தொடர்ந்து புறக்கணிச்சிட்டு வர்றோமேன்னு ஆதங்கப்படவேண்டிய விஷயமான்னு நீங்களே முடிவு செஞ்சிக்கலாம்.
டீ கடை நடத்தறதோட, கம்பைண்டா டிபன் கடையும் சேர்த்து நடத்துறது அவங்க ஸ்பெஷாலிட்டி. கோயம்பத்தூர் ஏரியாவில் பார்த்தீங்கன்னா டீ கடையோடு சேர்ந்து பேக்கரி ஸ்நாக்ஸ் ஐட்டம் மட்டும் தான் இருக்கும்... ஆனா சென்னையில் டீ கடையிலேயே காலையிலும் சாயந்தரமும் இட்லி வடை பூரி கிடைக்கும்... சென்னையில் பெரும்பாலும் வேலைக்கு போற பேச்சிலர்ஸ் தான் இருக்காங்கங்கறதால், அவங்களுக்கு சீப் அண்ட் பெஸ்ட் டிபன் இந்த மாதிரி டீ கடையில் தான் கிடைக்குது.
எப்படி மளிகை கடை நடத்தறவங்க பெரும்பாலும், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தை செர்ந்தவன்களோ அந்த மாதிரி டீ கடை நடத்தரவங்களும் குறிப்பிட்ட மாவட்டத்து காரங்கன்னு ஆயிபோச்சு சென்னையில்.
கொஞ்சம் பேரு, (திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டத்து காரங்க) சலூன் கடையும் வெச்சிருக்காங்க.... எதையாவது செஞ்சு பொழப்பை பாத்துக்கனுமேன்னு இல்லாம, அதையும் பெர்பெக்டா செஞ்சு பிரபலமா இருக்காங்க அவங்கவங்க ஏரியாவில்.
இதில் இன்னொரு விஷயம்... கடை வாடகை கொடுத்து கட்டுபடியாகாதுன்னு நினைக்கிற நிறைய பேரு, வீட்டிலேயே டீ ரெடி பண்ணி, சைக்கிளில் கேன் கட்டி, அம்பத்தூர், கிண்டி மாதிரியான தொழில்பெட்டையில் இருக்கிற கம்பனிகளுக்கு டீ சப்பிளை பண்றாங்க.
அது, நிரந்தர வருவாய், கேரண்டீயான கஸ்டமர்கள், மாசமாசம் காசுன்னு சிக்கல் இல்லாம போயிட்டு இருக்கு! காலையில் ஒரு நடை மதியம் ஒரு நடை அவ்வளவு தான் மேட்டர் ஓவர். ஆனா அது அவ்வளவு சுளுவான காரியம் இல்லை. அத்தனை கம்பெனியிலும் ஒரே டைமை தான் டீ டைம்னு ஒதுக்கி தொலைச்சிருப்பாங்க... அந்த குறிப்பிட்ட நேரத்துக்குள்ளே அத்தனை கம்பெனியிலும் அத்தனை பேருக்கும் டீ சப்பிளை பண்றது லேசு பட்ட காரியம் இல்லை. ஸ்பீடு வேணும். அதை விட கொடுமை, ஒவ்வொரு கம்பெனியில் ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு விதம்... டீ, காபி, சுகர் இல்லாம, பால் மட்டும்னு ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மெனு கார்டு வெச்சிருப்பாங்க... அதையும் ஒவ்வொரு நாளும் கேட்டுட்டு இருக்க முடியாது... டென்சன் ஆயிடுவாங்க.... அதை எல்லாம் ஞாபகம் வெச்சு யாருக்கு என்னன்னு கரெக்டா கொடுக்கணும்.
இத்தனை போட்டியிலும், இசுலாமியர்களின் டீக்கடைக்கு மட்டும் ஒரு தனி ஈர்ப்பு இருக்குன்னா அவங்க கொடுக்கற எக்ஸ்டிரா ஸ்பெஷல் டீ வகைகள்... இஞ்சி டீ, மசாலா டீ மாதிரி... தனி தனி டேஸ்டில் எல்லோருக்குமான டீயை ரெடி பண்ணி அசத்துறாங்க.
டீ ரேட்டு ஏறிட்டு இருக்கிற ஸ்பீடை பார்த்தா வேலையை ரிசைன் பண்ணிட்டு அந்த தொழிலில் இறங்கிறலாமான்னு யாருக்கு வேணும்னாலும் தோணும். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ரெண்டு ரூபாய்க்கும் குறைவா இருந்த டீ விலை, இப்போ அஞ்சு ரூபா கொடுத்தா தான் ஆச்சுன்னு நிக்குது. பஜ்ஜி கூட நாலு ரூபா ஆயிடிச்சு.. பால் விலை, சக்கரை விலை, சம்பளம்னு அவங்களுக்கு ஆயிரம் காரணம் இருக்க தான் செய்யுது.
ஆனா சமீபத்தில் என்னை பிரமிக்க வெச்ச விஷயம் ஒன்னு கோயம்பத்தூரில் ஒளிஞ்சு இருந்தது...
டவுன் ஹால் மணிக்கூண்டு கிட்டக்க கோணியம்மன் கோவில் பக்கத்தில் ஒரு காம்பிளக்ஸ். அதுக்குள்ளார கடைசியில் ஒரு சின்ன டீ கடை, பேரு, லக்ஷ்மி டீ ஸ்டால். சாயந்தரம் ஆனா கூட்டம் கும்மி அடிக்குது. என்னை சமீபத்தில் தான் முதல் முதலா ஒரு நண்பர் அங்கே கூட்டிட்டு போனாரு, வந்து பாரு இந்த ஆச்சரியத்தைன்னு.
டீ விலை ரெண்டே ரூபாய், வடை பஜ்ஜி எல்லாம் ரெண்டு ரூபாய் தான். டீ ஒரு வேளை கொஞ்சமா கொடுப்பாங்களோன்னு பார்த்தா சராசரியை விட ஜாஸ்த்தியா தான் இருந்தது... அதை விட ஆச்சரியம் டீயோட டேஸ்ட்டு. இதில் மூணு பேருக்கு சம்பளம் வேற... டீ டோக்கன் கொடுக்க ஒரு ஆளு, மாஸ்டர் ஒருத்தரு, டீ சப்பிளையர் ஒருத்தரு.... அடுத்த ஆச்சரியம் விலை பட்டியல் போர்டில் இருந்தது... அந்த விலை எல்லாம் 2006 ஆம் வருஷத்தில் இருந்து எந்த மாற்றமும் இல்லாம இருக்குது... ஆடி போயிட்டேன்...
இந்த விலையில் இவ்வளவு அருமையான டீ இவங்களால் தர முடியுதுன்னா... அஞ்சு ரூபா வாங்கிட்டு டீன்னு சொல்லி டீ மாதிரி தர்றவங்களை நினைச்சா ஆத்திரம் ஆத்திரமா வந்துச்சு.
ஆத்திரம் வந்து என்ன பண்ண... வாங்க ஒரு டீ சாப்பிட்டு ரிலாக்ஸ் பண்ணிக்கலாம்!

Subscribe to:
Posts (Atom)