Showing posts with label DMK. Show all posts
Showing posts with label DMK. Show all posts

Sunday, May 29, 2016

தமிழக தேர்தல் – 2016

ரு வழியா தமிழக தேர்தல் திருவிழா பரபரப்பா நடந்து முடிஞ்சிருச்சு. எதிர்பார்த்தமாதிரியே அதிமுக மீண்டும் ஆட்சி கட்டிலை பிடிச்சிருச்சு. அதென்ன எதிர்பார்த்த மாதிரியே?? எல்லா மீடியாவும் திமுக தான் ஆட்சியை பிடிக்கும்னு அடிச்சு சொல்லிச்சே? நேரு இண்டோர் ஸ்டேடியத்தை கூட பதவி ஏற்பு விழாவுக்கு ரெடிபண்ணினாங்களேன்னு எல்லாம் அடுக்கடுக்கா கேள்வி கேட்கப்படாது.  சுருக்கமா ஒரு ரிவைண்ட் பார்த்திரலாம்.

Thanks: www.india.com

மீடியா சொன்னதெல்லாம் சரிதான். திமுக தான் ஆட்சியை பிடிக்கும்ன்ற நிலைமை. ஆனா அதே சமயத்தில் வேறொரு ஆங்கிள்ல சில கணக்குகளையும் சிலர் சொன்னாங்க. பொதுவா தமிழக மக்கள் திமுக அதிமுக ரெண்டு கட்சியையுமே வெறுத்திட்டாங்க. ஒரு மாற்றம் வரணும்னு நினைக்கிறாங்க. அதனால் மூணாவது அணிக்கு(!) கணிசமான வாக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கு. ஒருவேளை அந்த கணிசம்’, போதுமான அளவுக்கான கணிசமா இல்லைனா கணிசமான வாக்குகள் அதிமுகவுக்கு எதிரா விழுந்தாலும் அது ரெண்டா பிரிஞ்சு திமுக, மூணாவது அணின்னு ஸ்பிலிட் ஆகி அதிமுகவே ஜெயிச்சிரும்னு வித்தியாசமா சிந்திக்கிற சில புத்திசாலிகள் சொன்னாங்க. அதிலும் இன்னும் ஒரு படி மேலே போய், புதிய வாக்காளர்கள் இந்த முறை அதிகம். அவங்களுக்கு திமுக அதிமுகவை விட மூணாவது அணிக்கு தான் ஆதரவு கொடுக்கணும்னு நினைக்கிறாங்க. சொல்றதுக்கில்லை. விஜயகாந்தே கூட முதலமைச்சரா ஆனாலும் ஆயிடுவாருன்னு கூட நம்பிக்கையா சொன்னாங்க.

ஆனா மே 14 ஆம் தேதி காட்சி மாறிடிச்சு. 14 – சனி, 15 – ஞாயிறு, 16 – திங்கள் (ஓட்டு பதிவு லீவு) இப்படி தொடர்ந்து மூணு நாள் லீவு கிடைச்சதும், தமிழகத்தை நல்லாக்குற இணைய போராட்டத்தையெல்லாம் தற்காலிகமா மூட்டை கட்டிட்டு கர்நாடகா நோக்கி சாரி சாரியா டூர் கிளம்பிட்டாங்க, தட் சோ கால்டு புதிய வாக்காளர்கள் அலையாஸ் தமிழகத்தை மாற்றத்துக்கு இட்டு செல்லும் புரட்சியாளர்கள்.

சீன் இப்ப கிளியர்.

www.facebook.com/satheeshkumarm
சிட்டி பேஸ்டு புதிய வாக்காளர்கள் இல்லாததால் மூணாவது அணிக்கான வாய்ப்பு பணால். ரூரல் வாக்காளர்கள் திமுக (அ) அதிமுகவுக்கு தான் ஓட்டு போடுவாங்க. மேற்கு தெற்கு தமிழகம் அதிமுகவின் சொத்து. என்னதான் அட்டகாசமான தேர்தல் அறிக்கை கொடுத்து இருந்தாலும் திமுகவுக்கு ஓட்டு போடணுமா வேண்டாமான்றதை தேர்தல் அன்னைக்கு ஓட்டு பெட்டி முன்னாடி நின்னு யோசிக்கும்போது என்ன தோணுமோ அதை தான் மக்கள் செய்வாங்கன்றது தமிழகத்தின் பண்பாடு. அதிமுக கட்சிக்காரங்க உசுரே போனாலும் அதிமுகவுக்கு மட்டும் தான் ஓட்டு போடுவாங்க. மத்த கட்சிங்க (திமுக உட்பட) எந்த கட்சிக்கு வேணும்னாலும் ஓட்டு போடுவாங்க. தமிழகத்தில் அதிக உறுப்பினர் உள்ள கட்சி அதிமுக. என்னதான் அதிருப்தி இருந்தாலும் ஜெ. நம்ம மக்களை பொருத்தவரைக்கும் கொஞ்சம் பாசம் ஜாஸ்த்தி. எப்படி கூட்டி கழிச்சு பார்த்தாலும் லைட்டா லீடிங்க்ல அதிமுக தான் மீண்டும் வரும் அதுக்கு காரணமா முன் திட்டமிட்ட தேர்தல் தேதியான மே-16 ன்ற மந்திர நாள் அமையும்னு எல்லோருக்கும் தெளிவாயிருச்சு.

தேர்தல் முடிவு வந்தப்புரம் தான் தமிழகத்தில் பரபரப்பு.

திமுகவுடன் இணைஞ்சு பணியாற்ற விரும்புவதா ஜெ. சொல்வதும், அவர் எனது மூத்த சகோதரின்னு ஸ்டாலின் சொல்றதும் பொது இடங்களில் ஒருத்தொருக்கொருத்தர் வணக்கம் சொல்லிக்கறதும்.. அப்பப்பா.. ஜெ. மாறிட்டாங்களான்னு உலகமே உச்சு கொட்டி ஆச்சரியமா பாத்துது. ஆனா இதெல்லாம் வழக்கமானது தான்றதும், ஏற்கனவே திமுகவை அப்பப்போ அவமானப்படுத்திட்டு அசால்டா அசராம அறிக்கைவிட்டு சமாளிக்கறதும் மாண்புமிகு அம்மாவின் வழக்கம்ன்றது தமிழக அரசியலை தெரிஞ்சவங்க புரிஞ்சுருப்பாங்க.  ஆனா இந்த திடீர் பாசத்துக்கு இன்னொரு காரணமும் இருக்கு.

ஜூன் 11 ஆம் தேதி ராஜ்யசபா எலக்சன். தமிழகத்துல 6 சீட் காலியாவுது. நியாயமா பார்த்தா இப்போதைய எம்.எல்.ஏ கவுண்ட் பிரகாரம் அதிமுகவுக்கு 3 சீட், திமுகவுக்கு 2 சீட் எந்த சிக்கலும் இல்லாம கிடைச்சிரும். பாக்கி ஒரு சீட்டுக்கு அதிமுகக்கிட்டே சில எம்.எல்.ஏக்களும் திமுகக்கிட்டே சில எம்.எல்.ஏக்களும் மிச்சம் இருக்காங்க. இவங்க ஒண்ணா சேந்து ஓட்டளிச்சா தான் ஒரு எம்.பி கிடைக்கும். மிச்சம் இருக்கும் எம்.எல்.ஏக்களில் அதிமுகவை விட திமுகவுக்கு தான் அதிகம். சோ, லாஜிக்கா பார்த்தா திமுக 3 வதா ஒரு வேட்பாளரை அறிவிக்கணும் அதிமுக அதை ஆதரிக்கணும். ஆக அதிமுக 3, திமுக 3 எம்பிக்களை தேர்ந்தெடுத்து டெல்லிக்கு அனுப்பும். ஆனா அதிமுக 4 பேரையும் திமுக 2 பேரையும் வேட்பாளரா அறிவிச்சிருக்காங்க. அதான் ஆச்சரியம்.!!

அதிமுக 4 வது வேட்பாளரை அறிவிச்சது வழக்கமான வீம்புக்காகன்னு  தான் நினைச்சேன். ஆனா திமுக 3 வேட்பாளரை அறிவிக்கிறதுக்கு பதிலா 2 வேட்பாளரை அறிவிச்சப்ப தான் அந்த பாசமழைக்கான அர்த்தம் லைட்டா புரிய ஆரம்பிச்சது. ஒருமித்த மனதோடு அதிமுக வேட்பாளருக்கு திமுக ஆதரவு தெரிவிச்சிருப்பதும், அது ட்டா மாறி அதிமுகவின் 4 வது வேட்பாளர் எம்.பி ஆகி டெல்லி போயி பதவி ஏத்துக்க வரைக்கும் திமுகவை தாஜா பண்ணியே ஆகவேண்டிய இக்கட்டில் அதிமுக இருப்பதும்..... ஆனானப்பட்ட ஜெ.வையே இறங்கி வரவெச்சிருக்கு.

இன்னொரு பிரச்சனை தமிழக அசம்பிளி.

மூனுல ரெண்டு பங்கு பலம் இருந்தா தான் ஜெ. தான் விரும்புன படி அசெம்பிளியை நடத்த முடியும். எதிர்கட்சி எல்லாரையும் பத்தி விட்டுட்டு, அதிமுக எம்.எல்.ஏக்களை எல்லாம் வெச்சுக்கிட்டு விதி 110 இன் கீழ்  எதை வேணும்னாலும் வாசிச்சிட்டு போகலாம். யாரும் எதுவும் கேக்க முடியாது. போன தடவை 151 எம்.எல்.ஏ தான் அதிமுகவுக்கு இருந்துச்சு. மூனுல ரெண்டு பங்குன்னா.. (234/3 x 2) 156 எம்.எல்.ஏ வேணும். அதனால் தேமுதிகவை உடைச்சு எட்டு பேரை இழுத்து அந்த மெஜாரிட்டியை செயற்கையா ஏற்படுத்திக்கிட்டாங்க. ஆனா இப்ப சிச்சுவேஷனே வேறே.

அதிமுக 132 தான். அதாவது பெரும்பான்மைக்கான 118 சீட்டை விட ஜஸ்ட் 14 எம்.எல்.ஏ தான் அதிகம். அதே சமயம் திமுக 89 + காங் 8. அதனால் முன்ன மாதிரி எல்லாம் இஷ்டத்துக்கு சபையை நடத்த முடியாது. எந்த ஒரு பில் பாஸ் ஆகணும்னாலும் போராடவேண்டி இருக்கும். அது மட்டும் இல்லாம தன்னுடைய எம்.எல்.ஏக்களை தக்கவெச்சுக்கவும் வேணும்.  இப்படி மல்டி பாயிண்டில் ஜெ.வுக்கு சங்கடங்களும் சிக்கல்களுமா அமைஞ்சிருக்கு தேர்தல் முடிவு.

ஒரு நண்பர் பேஸ்புக்குல சொன்னமாதிரி, இப்போதைக்கு ஆட்சி ஜெயலலிதாவினுடையது தான். ஆனால் அதை நடத்தப்போவது ஸ்டாலின் தான். அவரது அனுமதி இன்றி இனி எதுவும் தமிழகத்தில் அசையாது. எஜ்ஜாட்லி அது தான் சூழ்நிலை இப்போ.

இனியாவது சட்டசபை சத்தசபையா இல்லாம, மேஜை தட்டல்கள் இல்லாம, கவுரவமா ஆக்கப்பூர்வமா மாநில வளர்ச்சிக்கு உரியதா இருக்கும்னு எதிர்பார்க்கலாம்.

எந்த கட்சி உடைஞ்சாலும் திமுக தான் உடைச்சுது திமுகதான் உடைச்சுதுன்னு சில கத்துக்குட்டிகள் கதறும்போது சிரிப்பா வரும். ஆனா அது உண்மையா இருந்திருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்னு இப்ப எனக்கு தோணுது. அப்படி ஒரு பழக்கம் திமுகவுக்கு இருந்திருந்தா.. ஆகப்பெரும் நடவடிக்கையா அதிமுகவிலிருந்து 25 பேரை இழுக்கறது தான் முதல் வேலையா இருந்திருக்கும். ஆட்சியே கவிழ்ந்து திமுக அரியணை ஏறவும் சான்ஸ் இருக்கு. நல்லவேளையா கட்சியை உடைக்கறது, பதவிக்கு அலையறதுனு எல்லாம் இன்னும் திமுக இறங்கலை. அப்படி உடைக்கறதுன்னு இறங்கினா பைசா பெறாத கட்சிகளை உடைக்கமாட்டாங்க, இது மாதிரி ஆதாயம் தர்ற மாதிரியான உடைப்புல தான் லாஜிக்கலா ஈடுபடுவாங்கன்ற அடிப்படை சிந்தனை கூட இல்லாம பலரும் விவாதிக்கறதை பார்க்கும் பொது தான், நம்முடைய கல்வி தரம் எந்த அளவுக்கு சிந்திக்கும் திறனை மழுங்கடிச்சிருக்குன்றதே புரியுது.

இந்த தேர்தல் நமக்கு கொடுத்திருக்கும் பாடங்களில் முக்கியமானதுன்னா இவை தான்.

தமிழகம், திமுக & அதிமுக தவிர வேறு கட்சிகளுக்கானது அல்ல.

காங்கிரசுக்குன்னு எந்த செல்வாக்கும் இல்லை. ஜெயிக்கக்கூடிய வாய்புள்ள கூட்டணியில் இருந்தும்கூட காங்கிரஸ் மட்டும் செமையா தோத்திருக்கு.

சென்னை மக்கள் வெள்ள பாதிப்பை மறக்கலை. அதிமுகவுக்கு சென்னைல பலத்த அடி விழுந்திருக்கு.

மதிமுக, பாமக, பாஜக, நாம் தமிழர், தேமுதிக, கம்யூனிஸ்டுகள் என யாரையும் தனியாக தமிழக மக்கள் ஆதரிக்க தயாரா இல்லை. அவர்களுக்கான ஆதரவு என்பது அவர்கள் திமுக / அதிமுக யார் கூட இணைஞ்சு இருக்காங்கன்றதை பொறுத்ததுனு புரிய வெச்சிருக்காங்க.

தமிழகம் தழைக்குமா? மீண்டும் ஜெ. தன் சுய ரூபத்தை காட்டுவாரா? மக்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? என்பதெல்லாம் ஒரு ஆறு மாசம் கழிஞ்சப்பறம் தான் தெரியும்.




Wednesday, April 13, 2016

திமுக தேர்தல் அறிக்கை – 2016

தேர்தல் களம் மெல்ல மெல்ல சூடு பிடிக்க தொடங்கி இருக்கு. பாரம்பரியமான தேர்தல் முஸ்தீபுகள்னா, கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை, பிரச்சாரம்.. இப்படி தான் வரிசை. ஆனா இந்த தேர்தலில் பல கட்சிகள் இந்த மரபிலிருந்து மாறிடிச்சு. அதிமுக, நாம் தமிழர், மநகூ எல்லாம் பிரச்சாரத்தை தொடங்கியாச்சு. ஆனா அவங்க தேர்தல் அறிக்கை என்ன? என்னவெல்லாம் திட்டத்தை முன்னிறுத்தி இந்த தேர்தலை சந்திக்க போறாங்கன்னு எல்லாம் அந்தந்த கட்சி காரங்களுக்கே இன்னும் தெரியாது. தேர்தல் அறிக்கை வெளிவந்தால் தான் எதையும் சொல்ல முடியும். ஆனா அதுக்கு முன்னாடியே பிரச்சாரம் தொடங்கிட்டாங்க. காமெடியா இருக்குல்ல?

தேர்தல் மரபை மறக்காம அதே வரிசைக்கிரமமா இப்போதைக்கு செயல்பட்டுட்டு இருக்கிற கட்சின்னா அது திமுக தான். கூட்டணி முடிவு செஞ்சப்பறம், முக்கிய கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செஞ்சப்பறம், தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டாச்சு. இனி ஏப்ரல் 23 முதல் பிரச்சாரம்.



இன்னைய தேதியில் திமுகவின் தேர்தல் அறிக்கை தான் ஹாட் டாபிக். அவ்வளவு சிறப்பான அறிக்கை அது. திமுகவின் தேர்தல் அறிக்கை என்பது பொதுவாகவே மாநில வளர்ச்சி திட்டங்கள், சமுதாய நலன், அனைத்து துறைகளிலுமுள்ள இடர்பாடுகள் களைதல் மாதிரியான விஷயங்களை முன்வைத்து தான் எப்போதுமே வெளிவரும். அதனால் தான் அதிமுக எந்த தேர்தலிலும் முன்னதாக தேர்தல் அறிக்கை வெளியிடாமல் திமுகவின் தேர்தல் அறிக்கை வந்தபின் அதன் அடிப்படையில் அதில் சிறு சிறு மாற்றங்கள் செய்து தனது தேர்தல் அறிக்கையாக அதிமுக வெளியிடும்.

அதிமுக முன்னதாக தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருந்தால், அம்மா உணவகத்தில் இந்த ஆண்டு முதல் ருமாலி ரொட்டியும் வழங்கப்படும்னு அறிவிச்சிருப்பாங்க. அந்த லெவல்ல தான் அவங்களால யோசிக்கமுடியும்.

தமிழகத்துக்கும் தமிழக மக்களுக்கும் என்ன வேணும்ன்றத அதிமுகவால சுயமா யோசிச்சு முடிவெடுத்து அறிவிக்க முடியாது. அந்த அளவுக்கு சிந்திக்கக்கூடிய ஆட்கள் எல்லோரும் எம்.ஜி.ஆர் காலத்தோடவே போயாச்சு. அதுக்கு அப்புறம் வந்தவங்களும் அப்படி ஒரு திறமை இருந்தாலும் கூட அதை வெளிப்படுத்த பயந்துகிட்டு கார் டயரையும் ஹெலிகாப்டர் பாட்டத்தையும் கும்பிட்டு கன்னத்தில் போட்டுக்கிட்டு போயிக்கிட்டே இருக்காங்க. சர்வைவல்னு வந்துட்டா நம்ம தெறமைகளை பெரிசா காட்டிக்கக்கூடாதுன்னு எல்லா அதிமுக தொண்டனுக்கும் தெரிஞ்சிருக்கு.

இதுவரைக்கும் ஜெ. அறிவித்த செயல்படுத்திய திட்டங்கள் பெரும்பாலானவை, மற்ற கட்சிகள் சொல்லியது, கோரிக்கையா வெச்சது, மற்ற கட்சிகளின் செயல்திட்டங்கள் / தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டதுன்னு தான் இருக்கே தவிர, தானே சுயமா யோசிச்சு முடிவு செஞ்சு அறிவிச்ச திட்டம்னு அதிகமா கிடையாது.

ஆனா அதேசமயம் மற்ற கட்சிகளை ஒப்பிட்டா திமுகவின் செயல்திட்டங்களும் தேர்தல் அறிக்கைகளும் மக்கள் மீதான நிஜமான அக்கறைகளால் செயல்படுத்தப்பட்டதுன்னு புரியும்.

உதாரணத்துக்கு சொல்லனும்னா, கண்பார்வை அற்றவர்களுக்கு இலவச கண்ணொளி வழங்கும் திட்டம் கலைஞருக்கு விபத்தில் கண்ணில் அடிபட்டபோது அதன் வலியும் பார்வையற்ற நிலையின் அவஸ்தையும் தானே உணர்ந்து அதன் அடிப்படையில் அறிவிச்சது. கைரிக்ஷா ஒழிப்பு, எழும்பூர் வந்திறங்கியபோது தன்னை வைத்து இன்னொரு மனிதன் இழுப்பதன் கஷ்டம் உணர்ந்து அறிவிச்சது. ஏரி குளங்கள் தூர்வாரல் வெள்ளபெருக்கினால் மக்கள் பாதிக்கப்பட்டபோது அறிவிக்கப்பட்டது. மேம்பாலங்கள் சாலை மேம்பாட்டு திட்டங்கள் வெளிநாட்டு பயணம் சென்று கண்டு வந்ததும் நம்ம ஊர்லயும் அது மாதிரி எல்லாம் வேணும்னு தீர்மானிச்சு அறிவிச்சு செயல்படுத்தினது. இலவச திருமண உதவி திட்டம், கல்யாண செலவுக்கு காசு இல்லாததால் தற்கொலை செய்துகொண்ட ஒரு பெண்ணின் செய்தி படிச்சு அதன் கவலையில் அறிவிச்சது. இப்படி அது ஒரு நீ......ளமான லிஸ்டு. இதெல்லாம் யாரும் திட்டமிட்டு கொடுக்காமல், கோரிக்கை வைக்காமல், போராடாமல் தாமாகவே உணர்ந்து செயல்படுத்திய திட்டங்கள்.

சமத்துவபுரம், விவசாய கடன் தள்ளுபடி, கரும்பு நெல் ஆகியவற்றுக்கான ஆதார விலை நிர்ணயம், சென்னை மெட்ரோ, பெண்ணுக்கு சொத்துரிமை, கலப்பு திருமானத்துக்கான அங்கீகாரம் போன்ற முன் காலங்களில் செயல்படுத்தப்பட்ட திமுகவின் பல பல திட்டங்கள் அவர்களது தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டவை தான். 

அதனால் திமுகவின் தேர்தல் அறிக்கை என்பது கிட்டத்தட்ட ஆக்ஷன் பிளான் தான். ஒன்றிரண்டு செயல்படுத்தப்படாமல் போகலாம். ஆனால் பெரும்பாலான திட்டங்கள் சாத்தியமுள்ளவையா என ஆராய்ந்து விவாதித்து அதன் பிறகு தான் தேர்தல் அறிக்கையில் இடம் பெறுகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் ஒரு திட்டம் வந்தால் அது நிச்சயம் செயல்பாட்டுக்கு வரும் என்கிற ஒரு நம்பிக்கை தமிழக மக்களிடம் காலம் காலமாக உள்ளது. அதனால் தான் திமுகவின் தேர்தல் அறிக்கைக்கு இவ்வளவு மரியாதை.

இப்போது வெளியிடப்பட்டிருக்கும் தேர்தல் அறிக்கை மிக பிரமாதம் என திமுகவை விமர்சிக்கும் பத்திரிக்கைகள் கூட பாராட்டுகின்றன. மக்களை பொறுத்தவரை மிக சிறந்த தேர்தல் அறிக்கை என பெரும்பாலானவர்கள் ஏன் பாராட்டுகிறார்கள் என்பது அறிக்கையை வாசித்த அனைவருக்கும் சொல்லாமலே புரியும். அந்த அளவுக்கு நலத்திட்டங்களும் வளர்ச்சி பணிகளும் நிறைந்து கிடக்கிறது.

சமீபத்தில் திமுக பொருளாளர் திரு ஸ்டாலின் அவர்கள் தமிழகம் முழுவது நடத்திய நமக்கு நாமே பயண திட்டத்தில் சந்தித்த மக்களின் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டு அவற்றில் சாத்தியமானவற்றை எல்லாம் முடிந்த அளவுக்கு இந்த தேர்தல் அறிக்கையிலே இணைத்திருக்கிறார்கள். மேலும் முதல் முறையாக மாவட்ட வாரியான செயல் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.  75 பக்கங்கள் உடைய இந்த தேர்தல் அறிக்கையை எல்லோரும் படித்திருப்பீர்கள். அதனால் விரிவாக செல்லாமல் முக்கியமான விஷயங்களை மட்டும் சொல்ல ஆசைப்படுகிறேன்.

இந்த தேர்தல் அறிக்கையில் எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயங்கள்ன்னா...

1.   விவசாயக்கடன் கல்விக்கடன் ஆகியவை ரத்து
2.   விசைத்தறிகளுக்கு முதல் 750 யூனிட் மின்சாரம் இலவசம்
3.   மூத்த குடிமக்களுக்கு பேருந்துகளில் தமிழகம் முழுவதும் இலவசப்பயணம்
4.   விவசாயத்துக்கு தனி பட்ஜெட்
5.   சென்னையை போலவே, கோவை மதுரை திருச்சிக்கும் மெட்ரோ ரயில்.
6.   காலியான அரசு பணிகள் உடனடியாக நிரப்புதல்
7.   சென்னை-ஹோசூர்; மதுரை-தூத்துக்குடி சாலைகளில் இண்டஸ்ட்ரியல் காரிடார்
8.   நீர் பாசனத்துறைக்கு தனி அமைச்சகம்
9.   நீர் மேலாண்மை மேம்பாடு, 200 புதிய தடுப்பணைகள்
10. தோட்டக்கலைக்கு தனி பல்கலைக்கழகம்
11. மின்சாரக்கட்டணம் மாதாமாதம் கட்ட அனுமதி

இதை பத்தி தனித்தனியா ஏன் பிடிக்குதுன்னு விவரிக்கறதா இருந்தா ஒவ்வொரு திட்டத்தின் பின்னணி, அதன் இப்போதைய நிலை, இந்த திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்தால் அதில் கிடைக்கக்கூடிய பலன்கள்னு அது ஒரு பெரிய கட்டுரையா மாறிடும்.

அதே சமயத்தில் இந்த தேர்தல் அறிக்கையில் இலவசங்களே இல்லைன்னு சிலர் புளகாங்கிதப்பட்டு சொல்லி இருக்காங்க. அது தவறு. இலவச பொருட்கள் குறித்த அறிவிப்புக்கள் இல்லையே தவிர மானியங்கள், சலுகைகள், இலவசங்கள், கடன் ரத்துக்கள், உதவி தொகைகள்னு எக்கச்சக்க சலுகைகள் இருக்கு. என்ன எல்லா சலுகைகளும் வளர்ச்சி நோக்கிய சலுகைகள் என்பது தான் மிக பெரிய ஆறுதல்.

செலவுகள் குறித்து நிறைய பேசி இருக்கும் இந்த தேர்தல் அறிக்கையில் வருவாய்க்கான திட்டங்கள் எதுவும் சொல்லப்படலை என்பது எனது தனிப்பட்ட ஆதங்கம். ஏற்கனவே ரூ. 4 லட்சம் கோடியாக இருக்கும் தமிழக அரசின் கடன் இப்படியான சலுகைகளால் மேலும் கூடும் என்கிற அச்சம் வந்து போகிறது. ஆனால் நிதி நிர்வாகத்தில் இதுவரையும் அமைந்த தமிழக அரசுகளில் திமுக அரசு மட்டுமே சிறப்பா செயல்பட்டது என்பதால், நிச்சயமாக நிதி மேலாண்மையை அதே சிறப்போடு செயல்படுத்துவார்கள் என நம்பலாம்.

கச்சத்தீவு மீட்பு, கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகள் ரத்து, மீனவர்கள் பழங்குடியினர் பட்டியலில் இணைப்பு ஆகிய அட்ராக்டிவ் அறிவிப்புக்களும் இருக்கு. எனக்கு இது போன்ற அறிவிப்புக்களில் உடன்பாடு கிடையாது என்றாலும் தமிழக அரசியல் களத்தில் வெறும் வளர்ச்சி திட்டங்களை மட்டுமே முன்வைத்து தேர்தலை சந்தித்து விட முடியாது. கொஞ்சம் கவர்ச்சி அறிவிப்புக்கள் தேவையாக தான் இருக்கு. என்ன செய்ய?

அதேசமயம் 2011 ஆம் ஆண்டு அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 14% திட்டங்கள் மட்டுமே செயல்படுத்தப்பட்டு இருக்கின்றன. மற்றவைகளின் கதி என்ன என இதுவரை தகவலில்லை.

உதாரணமா, 10 ஆடை அலங்கார பூங்காக்கள் அமைப்பது, அனைத்து காவல்நிலையங்களையும் மின் ஆளுமையில் இணைப்பது, திருப்பூர் சாயக்கழிவுக்கு விஞ்ஞான முறையிலான சுத்திகரிப்பு நிலையம், தென் தமிழகத்தில் ஏரோ பார்க் என பல பல அறிவிப்புக்கள் இன்னமும் முதல் கட்ட நடவடிக்கை கூட எடுக்கப்படாமல் அப்படியே முடங்கி கிடக்கிறது.

மேலும் நூற்றுக்கணக்கான அறிவிப்புக்களை விதி 110 இன் கீழ் அறிவித்த ஜெ. அதில் 20% கூட செயல்படுத்தவில்லை என்பதையும் கவனித்தால், திமுக தேர்தல் அறிக்கைக்கான எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் எளிதில் புரியும்.


திமுக தேர்தல் அறிக்கை வந்தபிறகு, அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடாத நிலையில் விருத்தாசலம் பிரச்சாரத்தில் பேசிய ஜெ. நான் மக்களுக்கு தேவையான திட்டங்களை அறிவேன். அவற்றை செயல்படுத்துவேன். சொல்லாததையும் செய்வேன் என ஒரு பொதுப்படையான அறிவிப்பை வெளியிட்டாரே தவிர, இன்னின்ன திட்டங்கள், இன்னின்ன வழிமுறைகளில் செய்ய போகிறேன் என தீர்க்கமான ஒரு கருத்தாக்கம் அவரிடம் இன்று வரை இல்லை என்பதை கவனிக்கலாம்.

சென்னை பிரச்சாரத்தில் பேசிய ஜெ. தனது சாதனை என சொன்னது, மெட்ரோ ரயில் துவக்கியது, மின் விநியோகம் சீராக்கியது, வெள்ள நிவாரண பணிகள் ஆகியவற்றை தான் முக்கியமான சாதனை என சொல்லி இருக்கிறார்.

சென்னைக்கு மெட்ரோ ரயில் வேண்டாம், மோனோ ரயில் தான் வேண்டும் என அடம் பிடிச்சு, திமுக தொடங்கி வைத்த திட்டம் என்பதாலேயே மெட்ரோ திட்டத்துக்கு நிதி ஒதுக்காமல் முடக்கிவைத்து, கடைசியில் ஹைகோர்ட் போய் நீதிபதிகள் கண்டிச்சு உத்தரவு போட்டப்பரம் தான் மெட்ரோ பணிகள் தொடர்ந்து நடந்துச்சுன்றது சென்னையில் உள்ள எல்லாருக்குமே தெரியும். ஆனா அதை தன்னுடைய சாதனையா சொல்லி இருக்கும் ஜெ. நம்மை எந்தளவுக்கு முட்டாள் என முடிவு செய்திருக்கிறார் என்பதை தெரிஞ்சுக்கலாம்.

மின் விநியோகம் பற்றி கேட்கவே வேண்டாம். மின் விநியோகம் சீரானது, மின் மிகை எல்லாம் சொன்னாலும் நிஜ கதை என்னன்னு உங்களுக்கு தெரியாதா என்ன?

வெள்ள நிவாரண பணிகள் பற்றி நான் சொல்வதை விட இணையத்தில் உள்ள பலரும் கட்டுரை கட்டுரையாக எழுதி இருக்கிறார்கள். பலரும் நிவாரண பணிகளில் தங்களை அர்ப்பணித்து கொண்டவர்கள். அதிமுகவும் தமிழக அரசும் எப்படி எல்லாம் நிவாரண பணிகளை முடக்கி வைத்தார்கள் என்பதை நன்கு அறிந்தவர்கள். அவர்களிடம் நான் விவரிப்பது சரியல்ல. அவர்களே எல்லோரிடத்திலும் ஜெ. சொன்ன பொய்யின் பிரம்மாண்டத்தை புரியவைத்து விடுவார்கள் என நம்பலாம்.

ஆகமொத்தம், ஜெ. தன்னுடைய ஆட்சியின் சாதனைன்னு சொல்லிய எதுவுமே உண்மையில் சாதனையே அல்ல.

அப்படியாக, தமிழக தேர்தல் களத்தில் திமுகவின் தேர்தல் அறிக்கை கொடுத்த பிரமாண்டமான உத்வேகம், கள நிலைமையை மொத்தமாக புரட்டிப்போட்டு, இது வரை அதிமுகவுக்கு சாதகமாக இருந்த தேர்தல் காற்றை திமுகவுக்கு சாதகமாக திருப்பி விட்டிருக்கிறது. இந்த அறிக்கையின் அடிப்படையில் வெளிவரக்கூடிய அதிமுக தேர்தல் அறிக்கை இனி எதை முன்வைத்தாலும் அது பெரிய அளவில் பேசப்படாது என்பது உறுதி. ஏனெனில் நடைபெற்ற இரண்டு பிரச்சார கூட்டங்களிலும் எந்த திட்டத்தையும் சொல்லாத ஜெ. தேர்தல் அறிக்கையில் அறிவிப்புக்களை அழகாக அச்சடித்து கொடுத்தால் அது திமுக அறிக்கையின் நகல் / பாதிப்பு என தான் எடுத்துக்கொள்ளப்படுமே தவிர சொந்த முயற்சியாக எடுத்துக்கொள்ள முடியாது. மேலும் அதிமுக தேர்தல் அறிக்கைகளில் சொல்லப்பட்ட பலவும் செயல்பாட்டுக்கு வரலைன்ற உண்மையும் மக்களுக்கு தெரியும்.

2006 தேர்தல் போலவே இந்த தேர்தலிலும் நிஜமான ஹீரோ திமுகவின் தேர்தல் அறிக்கை தான்.


Saturday, April 9, 2016

ஜெ. வழக்கு – இப்போதைய ஆப்ஷன்ஸ் – பாகம் 4

சுப்ரீம் கோர்ட் மேல்முறையீட்டு வழக்கில் கிட்டத்தட்ட முக்கிய வாதங்கள் எல்லாம் முடிஞ்சுபோச்சு. இனி தீர்ப்பு தான் பாக்கி. இப்போதைய நிலைமையில் யூகிக்க எம்புட்டு விஷயம் இருக்கும்?? ஒண்ணொண்ணா பாக்கலாமா?

முதலில் முக்கியமான ரெண்டு விஷயத்தை சொல்லிடுறேன். அப்பாலிகா ஜாலியானா ஜிம்கானானு யூக கற்பனைகள் செய்யலாம்.

விஷயம் நெம்பர் 1.

ஜெ.வை சிறையிலிருந்து வெளிக்கொண்டு வர அவசரம் அவசரமா களம் இறக்கப்பட்டு வெற்றிகரமா அவரை வெளியேவும் கொண்டுவந்த புகழ் பெற்ற வழக்கறிஞர் திரு ஃபாலி நாரிமன் அவர்கள், இந்த மேல் முறையீட்டு மனு விசாரணையில் ஜெ. சார்பாக வாதாடுவார்னு எல்லோரும் எதிர்பார்த்திருக்க, அவர் இதில் ஜெ. சார்பா வாதாடாமல் ஒதுங்கி நின்னதே சுப்ரீம் கோர்ட் வட்டாரத்தில் பல விவாதங்களை கிளப்பி விட்டிருக்கு.

நாரிமனின் இந்த நிலைப்பாடே இந்த வழக்கின் தன்மைக்கான ஆக பெரும் சான்றுன்னு எல்லாரும் சொல்றாங்க. அப்படி நாரிமன் தன் நடவடிக்கையால் மறைமுகமா முடிவு செஞ்ச இந்த வழக்கில் ஜெ. சார்பா வாதாட வேறு யாரும் முன் வராததாலயோ என்னவோ நாகேஸ்வரராவ் வாதாடிட்டு இருக்கார்.

இன்னொரு பக்கம், நீதி நிலைநாட்டப்படனும், தவறான தீர்ப்பு திருத்தப்படணும்னு பல வக்கீல்களும் கருத்து சொல்லிட்டு இருக்க, மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே கர்நாடகம் சார்பாகவும், அந்தி அர்ஜுனா திமுக சார்பாகவும் வாதாடுறாங்க.

இந்த விஷயமே இந்த வழக்கு குறித்த நிபுணர்களின் பார்வையை தெள்ள தெளிவா புரிய வெச்சிருக்கு.

விஷயம் நெம்பர் 2.

திமுக இந்த வழக்கில் தன்னை வாதாட அனுமதிக்கணும்னு கேட்டதுக்கு, அதெல்லாம் ஒண்ணும் வேணாம். சும்மா டைம் வேஸ்டு. வேணும்னா நீங்க சொல்ல வேண்டியதை மனுவா எழுதி கொடுத்துருங்க. நாங்க படிச்சிக்கறோனு நீதிபதிகள் சொன்னது, திமுகவுக்கு டோட்டல் டேமேஜ்.

ஒரு வகையில் இது நியாயமே கிடையாது. வழக்கை இவ்வளவு தீவிரமா நடத்துனதும், ஒரு கட்டத்தில் நீர்த்து போன வழக்கை உயிர்க்கொடுத்து இழுத்துட்டு வந்ததும் திமுக தான். ஆனா அவங்களுக்கு வாதாட வாய்ப்பு மறுக்க படுவது எதை எதையெல்லாமோ நினைக்க வைக்குது. அப்படி என்ன தான் அவசரம் நீதிமன்றத்துக்குனு தெரியலை.

டைம் வேஸ்டு தான் காரணம்னா எல்லாரையும் மனுவாவே எழுதி கொடுக்க சொல்லி இருக்கலாமே? வாதாடவே வேண்டாமே? மத்தவங்க எல்லாம் வாதாடலாம், பாயிண்ட்ஸ் சொல்லலாம், ஆனா திமுக சொல்ல கூடாதுன்னு சொல்றது சம் கைண்ட் ஆஃப் டிஸ்கிரிமினேஷன் யூ நோ?

திமுகவின் வாத உரிமையை மறுத்தது பல சந்தேகங்களை பலமா கெளப்புது.



இனி வாதங்கள் முடிவடஞ்ச இப்போதைய நிலையில் இந்த வழக்கு என்ன ஆகும்?

சுப்ரமணியம் சுவாமியின் ஒரே ஒரு நாள் வாதத்தில் வந்த விஷயங்களிலேயே வாயடைச்சு போன நீதிபதிகள், குற்ற தன்மையை உணர்ந்து குன்காவின் தீர்ப்பை உறுதி செய்யலாம்

துஷ்யந்த் தவே விவரிச்ச விஷயங்களில் குன்ஃகா விட்டுப்போன குற்றங்களையும் சேர்த்து வெச்சு கூடுதல் தண்டனையை கொடுக்கலாம்

நாகேஸ்வரராவ் சொன்ன மாதிரி வருமான வரி கட்டப்பட்ட தொகை எல்லாம் நியாயமானவைதான்னு முடிவு செஞ்சு குமாரசாமி தீர்ப்பை உறுதி செஞ்சு ஜெ. விடுதலையை நியாயப்படுத்தலாம்.

பல பல விஷயங்கள் இன்னும் தெளிவடையாம இருப்பதால் மீண்டும் முதலில் இருந்தே வழக்கை விசாரிக்க உத்தரவிடலாம்.

சுப்பிரமணியம் சுவாமி வாதாடுகையில் 1991-96 கால கட்டம் மட்டும் அல்லாம 2001-06, 2011-16 ஆகிய பீரியடுகளிலும் ஜெ.வின் சொத்து மதிப்பு அபரிமிதமா உயர்ந்ததை சுட்டி காட்டியதால் அதையும் சேர்த்து விசாரிக்க சொல்லலாம்.

திமுகவை ஒதுக்கி வெச்சதை வெச்சு பார்த்தா தேர்தலுக்கு முன் ஜெ.வை சட்டப்படியா விடுதலை செய்து எந்த பிரச்சனையும் இல்லாம தேர்தலை சந்திக்க நீதிமன்றம் உதவலாம்.

இப்படி பல பல பல யூகங்கள்.

ஆனா, எனக்கு புரியாத ஒரே விஷயம். இந்தியா முழுக்க ஒரே சட்டம்னா, கீழ் கோர்ட், High கோர்ட், சுப்ரீம் கோர்ட்ல எல்லாம் ஒரே வழக்கு ஒரே ஆதாரம் ஒரே வாதங்களுக்கு எப்படிய்யா டிசைன் டிசைனா மாறி மாறி தீர்ப்புகள் வருது?

கேட்டா.. இது இந்தியா.. இங்கே எல்லாமே சாத்தியம் தான்பீங்க.


எல்லா தீர்ப்புகளும் நீதியை பொறுத்தது அல்ல, நீதிபதிகளை பொறுத்ததே! (நோட் பண்ணிக்குங்கப்பா.. இது என் சொந்த தத்துவம் தான்!)

இந்த வழக்கையும் அந்த லிஸ்ட்ல தான் பார்க்க வேண்டி இருக்கு. அதனால் என்ன வேணும்னாலும் (அடிக்கோடிட்டு இன்னொரு தபா வாசிச்சுக்காங்க) என்ன வேணும்னாலும் நடக்கலாம். எதையும் யூகிக்கவே முடியலை.

அதனால இப்படி விதம் விதமா யூகிக்கதை விட்டுட்டு போய் புள்ள குட்டிய பொழக்க வெக்கலாம்.


சம்மர் வெகேஷன் முடிஞ்சு எலக்சன் முடிஞ்சு தீர்ப்பு வரும் வரைக்கும் வெயிட் பண்ணுவோம். வாங்க.


*************


தொடர்புடைய பதிவுகள்:

1. ஜெ விடுதலை தீர்ப்பு - அலசல்

Saturday, March 26, 2016

தமிழக தேர்தல் களம் – 2016

ரு வழியா இப்போதைக்கு ஓரளவு தேர்தல் களம் தயாராயிருச்சு. இன்றைய தேதியில் இது தான் காட்சி

அதிமுக – கூட்டணியில் யாருமில்லை. தனித்து நிற்கிறது (சமக & 132 சிறு இயக்கங்களின் ஆதரவு உண்டு)

திமுக – காங்; மமகவுடன் கூட்டணி (58 சிறு இயக்கங்களின் ஆதரவு உண்டு)

தேமுதிக – மநகூ (விசி, மதிமுக, சிபிஎம், சிபிஐ) உடன் கூட்டு

பாமக – தனித்து போட்டி

பாஜக – தனித்து போட்டி

நாம் தமிழர் – தனித்து போட்டி

சிபிஐ (எம்.எல்) – தனித்து போட்டி

தமாகா – கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்கிறது. முடிவு தெரியவில்லை

கூட்டி கழிச்சு பார்த்தா அதிமுக ஈஸியா ஜெயிச்சிருவாங்க போல தான் தெரியுது. ஆனா அதில் சில ‘ifs and buts’ இருக்கு.

திமுக காங் ஓரளவு பிராண்டடான நம்பகமான கூட்டணியா இருந்தாலும் அவங்களுக்கு எதுக்காக ஓட்டு போடணும்னு ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டா அதுக்கான தெளிவான பதில் இப்போதைக்கு இல்லை. ஆட்சி மாற்றம் என்கிற ஒற்றை விஷயத்தை தான் திரும்ப திரும்ப சொல்றாங்களே தவிர வேற ஒண்ணும் புதுசா இல்லை. ஆட்சி மாற்றம்னு வெச்சுக்கிட்டாலும் ஏன் திமுக காங் அணிக்கு போடணும்? ஏன் தேமுதிக அணிக்கு போடக்கூடாதுன்னு கேட்டா அதை அவங்களால் ஜஸ்டிபை பண்ண முடியலை. கேட்டா மநகூ கேலிக்கூத்தான கூட்டணினு காமெடி தான் பண்ணிட்டு இருக்காங்க. மத்தபடி “இதுதான் தமிழகத்தின் முக்கிய பிரச்சனை. அதனால் அதிமுக வேண்டாம். மிச்சம் இருப்பவர்களில் இன்னின்ன கட்சிகளிடம் இதெல்லாம் குறை. அதனால் திமுக காங் கூட்டணிக்கு வாக்கு அளியுங்கன்னு” இதுவரைக்கும் யாரும் உருப்படியா சொல்லலை. தேர்தல் அறிக்கை, அதை தொடர்ந்து அவங்க செய்யும் பிரச்சாரம் எல்லாம் எதை முன்னிறுத்தி அமையுதுன்றதுல தான் திமுக காங் அணிக்கான ஆதரவு இருக்கு. இத்தனை காலத்தை ஏன் இப்படி வீணடிச்சு தேமேன்னு இருந்தாங்கன்னு இன்னமும் எனக்கு தெரியலை. இத்தனைக்கும் மிகப்பெரிய இயக்கங்கள். தேர்தலில் நெளிவு சுளிவு அறிஞ்சவங்க வேறே.


தேமுதிகவை தேடி போய் மநகூவை அடகு வைக்குற கடைசி நிமிஷம் வரைக்கும் தமிழகத்தின் புதிய நம்பிக்கையா இருந்த கூட்டணி அது தான். பாலபாரதி எம்.எல்.ஏ சொல்லாமல் சொன்னமாதிரி மிக மிக அருமையான ஒரு வீணையை செஞ்சிட்டு அதை வாசிக்க தெரியாம, பயன்படுத்த துப்பில்லாம குப்பைல தூக்கி போட்ட மாதிரி இருக்கு இப்போதைய நிலைமை. தேமுதிகவை பொறுத்தவரைக்கும் முதல் அமைச்சர் ஆகணும்ன்ற ஒரே குறிக்கோள்தான் டார்கெட்டு. அதை யார் தந்தாலும் அங்கிட்டு சாஞ்சிருப்பாரு. பாமக சொல்லிருந்தா கூட அங்கே போயிருப்பாரு. மத்தபடி முதல்வர் ஆகுற அளவுக்கு என்ன வகையான செல்வாக்கு வளர்த்திருக்கோம். என்ன செயல்திட்டம் வெச்சிருக்கோம்னெல்லாம் அவங்களால சொல்லவே முடியலை. மநகூ எதுக்காக அம்புட்டு அவசரமா கேப்டனை தேடி போய் காலில் விழுந்தாங்கன்றது தேமுதிகவுக்கே தெரியாத புதிர். கிட்டத்தட்ட ஒரு மாற்று அரசியல் அணியா முகிழ்த்து நடுநிலை மக்களிடம் ஓரளவு செல்வாக்கும் வளர்த்துகிட்ட மநகூ திடீர்னு இப்படி சரண்டர் ஆகியிருக்க தேவையே இல்லை.


திருமா, தா.பா, வைகோ, ரங்கராஜன், நல்லகண்ணு, மல்லை சத்யான்னு ஒரு மிகப்பெரிய பிரச்சார பெரும் குழுவே உள்ள ஒரே அணி மநகூ. நான் கூட இவங்க ஒவ்வொரு திசையிலும் பின்னி பெடலெடுத்து பிரச்சாரம் பண்ணினா தனிப்பெரும் தகுதியோட ஆட்சிக்கு வர வாய்ப்பு இருக்குனு நினைச்சிருக்கேன். மேலும் இந்த அணி தலைவர்கள் மேல எந்த குற்றச்சாட்டும் பெரிசா இல்லை. எந்த அதிருப்தியும் இல்லை. சில சின்ன சின்ன முரண்பாடுகள் இருந்தாலும் அதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. அதனால் மிக பெரிய நம்பிக்கை இந்த அணி மேல எல்லோருக்கும் இருந்துச்சு.

ஆனா, திடீர்னு கேப்டன் காலில் விழுந்து அவருக்காக எல்லா கொள்கை முடிவுகளையும் மறு பரிசீலனை செஞ்சு பல முடிவுகளை மாத்தி அவருக்கு தகுந்த மாதிரி நெளிஞ்சு வளைஞ்சு குனிஞ்சு நிக்கிறது பார்க்க கஷ்டமா தான் இருக்கு. தமிழ்நாட்டோட அதிர்ஷ்டம் அம்புட்டு தான்னு நினைச்சுக்க வேண்டியது தான்.


தேமுதிகவை பொறுத்த வரைக்கும் மநகூவை சேர்த்துக்கிட்டாலும் மிக பெரிய பிரச்சனை என்னன்னா அது தனியா 124 தொகுதிகளிலும் ஜெயிச்சாகனும். அப்ப தான்  மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க முடியும். அதிமுக, திமுக பண / படை பலத்தை எதிர்த்து நின்னு போராட வேண்டி இருக்கும். மிக சிறப்பான பிரச்சார படை இருந்தாலும் கேப்டன் ஒருத்தரின் ஏடாகூடமான ஒரே ஒரு பிரச்சாரம் மொத்த இமேஜையும் கெடுத்திரும். அதனால தான் இப்பவே கேப்டன் பிரச்சாரம் செய்ய மாட்டார்னு தெளிவா சொல்லி இருக்காங்க. பிரச்சாரம் மட்டும் தான் இந்த அணியின் பலம். நம்பகத்தன்மை போனவாரமே போயிருச்சு. வைகோ தன் சுய நலத்துக்காக கூட்டணியை அடமானம் வெச்சது ஏற்கனவே தோழர்களை கடுப்பாக்கி இருக்கு. சிறுத்தைகளின் மௌன உறுமல்கள் இன்னொரு பக்கம். இந்த சூழல்ல சிந்தாம சிதறாம கூட்டணியை கட்டி காக்கவேண்டிய பெரிய பொறுப்பு வைகோவுக்கு இருக்கு. ரெண்டு நாளா பிரேமலதா வேறே வைகோவுக்கு மறைமுகமா கடுப்பை கொடுத்துட்டு வர்றதையும் கவனிக்கணும். ஒரு கட்டத்தில் அதை சகிக்க முடியாம போனா உணர்ச்சி வசப்பட்டு சட்டுனு கூட்டணியை விட்டு வெளிநடப்பு செய்ய கூட வைகோ தயங்க மாட்டாரு. அது மட்டும் நடந்தா வைகோ அதிமுக அணிக்கும் திருமா திமுக அணிக்கும் போய்விட கூட சான்ஸ் இருக்கு.


தமாகா ஓரளவு சில தொகுதிகளில் வாக்கு வங்கி வெச்சிருக்குன்னாலும் தனியா நின்னு ஒரு தொகுதியை வெற்றி கொள்ளும் அளவுக்கு எந்த தொகுதியிலும் பெரும்பான்மை வாக்குகள் அதுக்கு இல்லை. அதனால் கூட்டணி தான் பெஸ்டுன்னு புரிஞ்சு வெச்சிருக்காரு வாசன். அந்த மட்டும் சந்தோஷம். ஆனா கட்சியின் செல்வாக்கு லெவல் என்னன்னு தெரியாம 60 வேணும் 80 வேணும்னு கேக்குறது எல்லாம் சரியா படலை. அதிமுக ஓரளவுக்கு தாராளமா 25 தொகுதி வரை தர்றேன்னு சொல்றதே பெரிய விஷயம். ஆனா அதை வேண்டாம்னு முறுக்கிட்டு திமுக பக்கம் வந்தாலோ தேமுதிகவுடன் சேர்ந்தாலோ வாசனுக்கு நஷ்டம் தான்.

பாமக வடக்கு வடகிழக்கு மாவட்டங்களில் ஓட்டை பிரிக்கும். பாஜக 3 தொகுதிகளில் செல்வாக்கு உள்ள தேசிய கட்சி. அங்கே அவங்களும் ஓட்டை பிரிப்பாங்க. ஏற்கனவே அதிமுக எதிர்ப்பு ஓட்டுக்கள் மூணா பிரிஞ்சு நிக்குது. அதனால் அதிமுகவுக்கு தான் லாபம்.

மார்ச் 29 ஆம் தேதி சுப்ரீம் கோர்ட்டுல தொடர்ந்து நடக்கப்போகும் விசாரணை அதன் தீர்ப்பு தேதி அந்த தீர்ப்பின் தாக்கம் ஒரு பக்கம், உட்கட்சி குழப்பங்களை எந்த அளவுக்கு அம்மாவால திறமையா கட்டுப்படுத்தி அடக்க முடியுதுன்றது இன்னொருபக்கம். இந்த ரெண்டில் ஏதாவது ஒண்ணு பாதகமா போனாலும் ஓட்டு ஸ்விங் ஆகி தேமுதிக பக்கம் சாயும். நடுநிலை வாக்காளர்களும் புதிய வாக்காளர்களும் தான் இந்த தேர்தலின் வெற்றியை தீர்மானிப்பவர்கள் என்பதால், பிரிந்து நிற்கும் ஓட்டுக்களும் சிதறிக்கிடக்கும் செல்வாக்குகளும் டீபால்ட்டா அதிமுகவை வெற்றி அடைய செய்யும். ஆனா நம்பகத்தன்மை போயிருச்சுன்னா நடுநிலை வாக்காளர்கள் அதிமுகவுக்கு மாற்றா தேமுதிகவை தான் முன்னிலைப்படுத்துவாங்காண்ணு நினைக்கிறேன்.

விஜயகாந்துக்கு அதிர்ஷ்டம் இருக்குனு தான் நினைக்கிறேன்.

அடுத்த பத்து நாளில் நடக்கப்போகிற நிகழ்வுகள் தான் தமிழக வரலாறை தீர்மானிக்க போகுது. பத்து நாள் கழிச்சு மீண்டும் பேசுவோம்.

Thursday, February 11, 2016

ஸ்டாலின் குறித்த ஜெ. பேச்சு – அருஞ்சொற்பொருள்

நேத்து சென்னையில் அதிமுக நிர்வாகிகள் இல்ல திருமண விழாவை ஜெ. நடத்தி வெச்சு பேசிருக்கார்.. (அட நேர்ல தாங்க.. இதையெல்லாமா வீடியோ கான்பரன்ஸ்ல செய்வாங்க?)

அந்த பேச்சு தான் பல டிவிஸ்டுகளை சுமந்துட்டு இருக்கு.

ஒரு PhD ஆய்வு கட்டுரை எழுதுற அளவுக்கு அந்த பேச்சு இருக்கு. பேச்சை எழுதி கொடுத்த பிரகஸ்பதி நிறைய மறைமுக குத்துக்களை வெச்சு எழுதிருக்கார். (அவருக்கு யார் மேல என்ன கோபமோ?) அந்த பேச்சில் ரெண்டு குட்டி கதைகள் இருக்கு. அதில் ஒன்று தான் அப்பா மகன் பத்தின கதை. அது தமிழக அரசியலை லைட்டா ஷேக் பண்ற அளவுக்கு சக்தி வாய்ந்ததுன்னு நினைக்கிறேன்.

கதை இங்கே இந்த லிங்க்கில் இருக்கு.. படிச்சிட்டு வாங்க... தொடர்ந்து பேசுவோம்.



"நீங்கள் யாரையாவது கற்பனை செய்து கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல" என ஜெ. கடைசியில் சொல்லி இருந்தாலும், இந்த கதை டைரக்டா திமுகவையும் கலைஞர், ஸ்டாலின், நெஞ்சுக்கு நீதி புத்தகத்தையும் தான் குறிக்குதுன்னு உங்களுக்கு புரிஞ்சிருக்குமே.

இப்போ அந்த கதையில் உள்ள சில முக்கியமான விஷயங்களை கவனிக்கலாமா?

1.   இந்த கதையின் மிக முக்கிய வரியாக நான் நினைப்பது “அரசியல் பணி என்பது ஆபத்தானது. இதில் தந்தை, தனையன் என்றெல்லாம் உறவுகளுக்கு இடமில்லை. வலிமை உள்ளவரே வெல்ல முடியும். எனவே உனது அரசியல் பாடத்தை நீயேதான் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்” தான்.

சொந்த மகனே ஆனாலும் தன் முயற்சியில் தானே தான் வளரணும்னு தான் அந்த அப்பா நினைச்சிருக்கார். தன்னுடைய மகன்றதுக்காக எந்த சலுகையும் காட்டலை, உதவியும் செயலை என்பதை தெள்ள தெளிவா புரிய வெச்சிருக்காங்க ஜெ.

இதன் மூலம் திமுகவில் குடும்ப அரசியல்னு பேசிட்டு இருக்கிறவங்க மூக்கையெல்லாம் பலமா உடைச்சதொட, திமுக ஒரு சிறந்த ஜனநாயக கட்சி என்பதையும் எல்லோருக்கும் உறைக்கிற மாதிரி உணர்த்தி இருக்கார் ஜெ.

2.   ஸ்டாலின் போதிய அளவுக்கு பதவி உயர்வு அடையலையே என்கிற ஆதங்கம் ஜெ.வுக்கு இவ்வளவு ஆழமா இருந்திருக்கும்னு ஸ்டாலினே கூட நினைச்சு பார்த்திருக்கமாட்டார்னு  தோணுது.

3.   அதிமுகவில் அடுத்த தலைமைக்கு டி.டி.வி தினகரனை முன்னிலைப்படுத்த முயற்சி நடப்பதா செய்தி வரும்போது ஜெ.வின் இந்த பேச்சு இன்னும் முக்கியத்துவம் அடையுது. அந்த கட்சியை பார்.. சொந்த மகனுக்கே சலுகை காட்டலை.. புரிஞ்சு நடந்துக்கிடுங்கன்னு இண்டைரக்டா சுட்டி காட்டி இருப்பதா நாம நினைக்கலாம்.

4.   நெஞ்சை திறந்து எழுதிய புத்தகமான நெஞ்சுக்கு நீதியை எல்லோரும் படிச்சு புரிஞ்சுக்கணும்னு ஜெ. சொல்வது புரிகிறது. ஆனால் அப்படி எல்லோரும் அதை படிச்சால் அதிமுகவுக்கு தான் சிக்கல். அந்த புத்தகத்தின் ஐந்து பாகங்களையும் முழுசா படிச்ச எந்த தமிழனும் தான் இருக்கிற கட்சியில் இருந்து விலகி திமுகவில இணைஞ்சிரலாமான்னு தான் முதலில் யோசிப்பான். அந்த அளவுக்கு தமிழகத்தின் வரலாறு, அரசியல், சமூக அமைப்பு, அந்த தளைகளில் இருந்து மக்களை எப்படி மீட்டெடுத்தோம், என்னென்ன திட்டங்கள் என்னென்ன காரணங்கங்களுக்காக தொடங்கப்பட்டன, அப்போதைய தமிழக மக்களின் நிலை என்ன, அதை இப்போதிருக்கும் நிலைக்கு எப்படி படிப்படியாக முன்னேற்றினோம் என்பதை எல்லாம் விரிவாக எழுதி இருக்கிறார். அந்த சமையத்தில் ஏற்பட்ட பல அரசியல் சதுரங்க நிகழ்வுகளையும் அதன் பின்னணிகளையும் சுவையாகவும் சுவாரசியமாகவும் சொல்லி இருக்கிறார்.

புத்தகத்தில் ஜெ. சொன்ன மாதிரி கலைஞரின் தில்லுமுல்லுக்களை தேடினா ஏமாற்றம் தான் மிஞ்சும். (தன் தவறுகளை தானே எப்படி எழுதுவார்?)

எப்படியோ நெஞ்சுக்கு நீதி இன்னொரு ரெண்டு எடிசன் பதிப்பிக்கப்பட்டு இந்த வருஷம் சென்னை புத்தக கண்காட்சியிலேயே சக்க போடு போடும் என்பதும் அதை வாங்கும் பெரும்பாலானோர் அதிமுகவினர் என்பதும், அவர்கள் முகவின் தில்லுமுல்லுகளை தேடி தேடி கடைசியில் முகவின் அபிமானியாகவே மாற வாய்ப்பு இருக்கிறது என்பதும் எனது இதர அவதானிப்புக்கள்.

5.   மக்கள் நல கூட்டணி, தேமுதிக, பாமக என பலரும் அதிமுகவை கடுமையாக எதிர்ப்பதாக காட்டிக்கொண்டாலும், ஜெ. அவர்களை எல்லாம் சீரியஸா எடுத்துக்கவில்லை என்பது புரிகிறது.  தமிழக மக்களால் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டு ஒதுங்கி கிடக்கும் ஒரு கட்சியான, அதிலும் அதிகார பூர்வ எதிர்கட்சி கூட அல்லாமல் ஜஸ்ட் ஒரு மூன்றாம் இடத்தில் இருக்கும் ஒரு சாதாரண அரசியல் கட்சியான திமுகவை கண்டு தான் அவர் ஆடி போயிருக்கிறார் என்பது பட்டவர்த்தனமாக புரிகிறது.

“எனக்கு நண்பனா இருக்க எந்த தகுதியும் தேவை இல்லை. ஆனா எதிரியா இருக்க தகுதி வேணும்” என்கிற சினிமா வசனத்தை தான் ஜெ. இதர கட்சிகளுக்கு மறைமுக செய்தியா சொல்லி இருக்கிறார்னு நான் நினைக்கிறேன்.

6.   தமிழகம் முழுவதும் நடந்த “நமக்கு நாமே” பயணம் திமுகவில் மாற்றத்தை கொண்டு வந்திருக்கோ இல்லையோ, தமிழக மக்கள் மனநிலையில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்திருக்கு என்பதை ஜெ. நல்லாவே புரிஞ்சு வெச்சிருக்கார். அதனால் தான் “ஐயோ பாவம் அந்த ஆடு இப்படி நனையுதே”ன்னு பரிதாபப்பட்டு பேசி இருக்கார். இப்போதைக்கு மகன் தந்தைக்காற்றும் உதவி என்பது, ஜெ. விரித்த வலையில் வீழாமல் கட்சியின் கட்டுப்பாட்டை காப்பது மட்டும் தான் என்பது ஸ்டாலினுக்கு தெரியாததா என்ன?

இனி இதை திமுக எப்படி கையாள போகுது என்பதில் இருக்கிறது, தமிழக அரசியலின் அடுத்த கட்டம்.

இந்த தேர்தல் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே என்பதை நேற்றைய பேச்சின் மூலம் தெளிவாக சொல்லி விட்டார். அதிலும், கலைஞர் அல்லாமல் ஸ்டாலின் தலைமையில் இந்த தேர்தல் இருக்கவேண்டும் என்பதையும் மறைமுகமாக சொல்லி விட்டார். அவர் அவருக்கு வசதியான வியூகத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அதை புரிந்து கொள்ளும் திறன் திமுகவுக்கு உள்ளது. தக்கன தக்கபடி தக்கசமையத்தில் திமுக கைக்கொள்ளும் என்பது புரிந்தாலும், அது என்ன மாதிரியான நடவடிக்கை என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரிக்குது.



Saturday, January 23, 2016

ஜெ. வழக்கு – இப்போதைய ஆப்ஷன்ஸ் – பாகம் 3

டந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் நாள் கர்நாடக உயர்நீதிமன்றம் ஜெ.வை விடுதலை செய்து தீர்ப்பு அளித்தபின் பல பல சம்பவங்கள் நடந்தேறி விட்டன.

கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. உச்சநீதிமன்றம் இரு நீதிபதிகளை கொண்ட பெஞ்சை நியமித்தது. நவம்பர் 23 ஆம் தேதி நடந்த விசாரணையில் ஜெ. விடுதலைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. மேலும் விசாரணையை மீண்டும் விரிவாக நடத்த முடிவு செய்து வழக்கை ஜனவரி 8 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது. டிசம்பர் 2 ஆம் தேதி தலைமை நீதிபதி தாத்து ஓய்வு பெற்று புதிய தலைமை நீதிபதியாக திரு தாக்கூர் பதவி ஏற்று கொண்டிருக்கிறார். விசாரணை நடக்க இருந்த ஜனவரி 8 ஆம் தேதிக்கு முந்தைய நாள் அதாவது ஜனவரி 7 ஆம் தேதி, என்ன காரணத்தாலோ ஜெ. வழக்கு விசாரணை நீதிபதிகளில் ஒருவரை அதிரடியாக மாற்றம் செய்தது.

ஜனவரி 8 ஆம் தேதி விசாரணை நடக்குமா நடக்காதா என்கிற சந்தேகம் கடைசி நிமிடம் வரை நீடித்தாலும், குறிப்பிட்டபடி கோர்ட் ஹால் 11 இல் விசாரணை நடந்தது. அதில் வழக்கை பிப்ரவரி 2 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்ததுடன், அன்றிலிருந்து தொடர்ந்து தினசரி விசாரணை நடைபெறும் என்றும், அதற்குள்ளாக அனைத்து தரப்பினரும் பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில் கர்நாடக அரசு, ஜெயலலிதா, திமுக என அனைவரும் ஆஃபிடவிட் தாக்கல் செய்துவிட்டனர். 

விடுதலை தீர்ப்பு பிழையானது என கர்நாடக அரசும், தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை என ஜெயலலிதாவும், தீர்ப்பில் முக்கியமான 25 அம்சங்களை கருத்தில் கொள்ளவில்லை என திமுகவும் பதில் மனுவில் சொல்லி இருக்கிறார்கள்.



இனி நாம ஜாலியாக யூகிக்கலாமா?

ஜெயலலிதா தாக்கல் செய்திருக்கும் பதிலில் தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை என்பதை சொல்லி இருப்பதோடு இன்னொரு முக்கியமான விஷயத்தையும் சொல்லி இருக்கிறார். அதாவது கர்நாடக அரசுக்கோ, திமுகவுக்கோ இந்த வழக்கில் அப்பீல் செய்ய எந்த அதிகாரமும் இல்லை என்பது தான் அது. ஒரு வகையில் இது தான் உண்மையும் கூட.

ஜெயலலிதா மீது புகார் கொடுத்தவர் சுப்ரமணியம் சுவாமி. அதன் அடிப்படையில் வழக்கு தொடுத்தது தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார். வழக்கு நேர்மையாக நடக்காததால், உச்சநீதிமன்றம் தலையிட்டு வழக்கை கர்நாடகத்துக்கு மாற்றியது. கர்நாடகம் பெங்களூரு நீதிமன்றத்தில் வழக்கை நடத்தியது. கர்நாடகம் வழக்கை நடத்தினாலும் அது தமிழக லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் தான் நடத்தியது என்பதை கவனிக்கவும்.

கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியவுடன் இந்த வழக்கு முடிஞ்சு போச்சு. அந்த தீர்ப்பை ஏற்று கொள்வதா எதிர்த்து அப்பீல் செய்யணுமா என்பதை முடிவு செய்யவேண்டியது தமிழக லஞ்ச ஒழிப்பு துறை தான். அவர்கள் அப்பீல் செய்ய எந்த முடிவும் எடுக்காத நிலையில், கர்நாடக அரசு தானாக முன்வந்து அப்பீல் செய்திருக்கிறது. இது தான் இங்கே பிரச்சனை.

உதாரணமாக நீங்கள் ஒரு வழக்கை தொடுக்கிறீர்கள் என வைத்து கொள்வோம். நீங்கள் தொடுத்த வழக்கில் நீங்கள் தோற்றுவிட்டீர்கள். மேற்கொண்டு அதை வளர்க்க நீங்கள் விரும்பவில்லை. ஆனால் உங்கள் வக்கீல் உங்களை கேட்காமல் வழக்கை நடத்த தொடங்கினால் நீங்கள் என்ன செய்வீர்கள்?

இது தான் இப்போதைய நிலை.

ஜெயலலிதா சொல்ல வருவது என்னவென்றால், அப்பீல் செய்யவேண்டியது தமிழக லஞ்ச ஒழிப்பு துறை தான். அவர்களை தவிர வேறு யார் அப்பீல் செய்தாலும் அதை ஏற்று கொள்ள கூடாது என்பது தான். உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததுடன் கர்நாடகத்தின் பணி முடிஞ்சிருச்சு. புகார் கொடுத்த சுவாமியின் புகாரை விசாரித்து தமிழக போலீஸ் வழக்கு நடத்த ஆரம்பித்தவுடன் சுவாமியின் அப்பீல் அதிகாரமும் முடிஞ்சுபோச்சு. திமுக ஜஸ்ட் துணை புகார்தாரர் தான். அதனால் அவர்களுக்கு எந்த வித தார்மீக அதிகாரமும் இல்லை. இப்போதைக்கு ஜெயலலிதா விடுதலையால் பாதிக்கப்பட்டது யார் என பார்த்தால் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸ் மட்டும் தான். ஏனென்றால் அவர்களால் நடத்தப்பட்ட வழக்கு தான் தோற்று போயிருக்கு. அதை அப்படியே ஏற்று கொள்வதா அல்லது எதிர்த்து போராடுவதா என்பதை தமிழக போலீஸ் மட்டும் தான் முடிவு செய்ய முடியும். எனவே ஜெயலலிதா சொல்லி இருக்கும் இந்த பாயிண்ட் கொஞ்சம் சக்தி வாய்ந்ததாக நான் தனிப்பட்ட முறையில் கருதுகிறேன்.

ஒருவேளை பிப்ரவரி 2 ஆம் தேதி தொடங்கும் விசாரணையின் அடிநாதமாக இந்த பிரச்சனை இருக்குமானால், உச்ச நீதிமன்றம், அப்பீல் செய்ய தகுதி உடையவர்கள் யார் என விசாரிப்பதிலும், கர்நாடக அரசுக்கு அப்பீல் செய்ய தகுதி உள்ளதா என ஆராய்வதிலுமே காலத்தை கடத்தி கொண்டிருக்கும். சொத்து குவித்த விவரம், ஆவணங்கள், குன்ஃகா & குமாரசாமி ஆகியோரின் தீர்புகள் குறித்த ஆய்வுகள் எல்லாம் இரண்டாம் பட்சம் தான். அப்படி ஒரு சூழலை நோக்கி விசாரணை நகருமானால் இந்த அப்பீல் நிற்காது.  ஜஸ்ட் லைக் தட் “அப்பீல் விசாரணைக்கு உகந்ததல்ல” என சொல்லி தள்ளுபடி ஆகிவிடக்கூடும்.  தமிழக போலீஸ் தான் அடுத்து அப்பீல் செய்ய முடியும். அப்படி அப்பீல் செய்ய முதல்வர் என்கிற முறையில் ஜெயலலிதாவின் ஒப்புதல் வேண்டும். ஜெயலலிதாவை சிறைக்கு தள்ள ஜெயலலிதாவே எப்படி ஒப்புதல் கொடுப்பார்?

இன்னொரு ஆங்கிள் இருக்கு.

தாக்கூர் மிக நேர்மையானவர் என சொல்லப்படுபவர். சமீபத்தில் கூட அவர் ஊழலை மிக கடுமையாக விமர்சித்து பேசி இருக்கிறார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி கடுமையாக தண்டனை கொடுக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லி இருக்கிறார். இந்த ஜெ.சொத்து குவிப்பு வழக்கில் கூட நீதிபதி ஒருவரை அதிரடியாக மாற்றி இருக்கிறார். மாற்றப்பட்ட அகர்வால் தான் நவ 23 ஆம் தேதி விசாரணையில், ஜெ.வுக்கு ஆதரவாக கருத்து சொல்லி விடுதலைக்கு தடை விதிக்க மறுத்தவர். அவரை நீக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில், அப்பீலுக்கான தகுதி என்பதை கருத்தில் கொள்ளாமல் வழக்கின் தன்மை என்பதை கவனித்து பார்க்குமேயானால் என்ன நடக்கும்?

வழக்கை நடத்த நியமிக்கப்படும் அமைப்பு அந்த வழக்கின் இறுதி முடிவு வரை தொடரலாம்னு ஒரு தீர்ப்பு இருக்கிறது. அதன் அடிப்படையில் கர்நாடக அரசு ஜெ. சொத்து குவிப்பு வழக்கின் இறுதி தீர்ப்பு வரை தொடர்ந்து வாதாடலாம்னு உச்ச நீதிமன்றம் முடிவு செய்யக்கூடும். அந்த அடிப்படையில் கர்நாடகத்தின் அப்பீலை ஏற்று விசாரிக்கலாம்.

குமாரசாமி கொடுத்திருக்கும் தீர்ப்பு அப்பட்டமான பிழை என்பதால், நேரடியாக அதை ரத்து செய்யலாம். அப்படி அந்த தீர்ப்பு ரத்தானால் ரத்தான நொடியில் இருந்து ஜெ. முதல்வராக தொடர முடியாது. மீண்டும் சிறை. (ஆனால் ஒரு வசதி. கர்நாடக சிறையில் இருக்க வேண்டியதில்லை. தமிழக போலீஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழக சிறைகளில் இருக்கலாம்.)

ஜெ.வின் குற்றம் உறுதி செய்யப்பட்டால் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படலாம். குன்ஃகா விதித்த அபராத தொகை 100 கோடியும் செலுத்தவேண்டும்.

ஒருவேளை தற்போதைய சந்தர்ப்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஜெ. மீது மென்மையான நடவடிக்கை எடுத்தால் போதுமென உச்ச நீதிமன்றம் முடிவெடுத்தால், அதே நேரம் சட்டத்தின் மீது மக்களுக்கு அவநம்பிக்கையும் ஏற்பட கூடாது என உச்ச நீதிமன்றம் முடிவெடுத்தால்...

தினசரி விசாரணையை உச்ச நீதிமன்றமே நடத்தி தீர்ப்பு வழங்கலாம் அல்லது மீண்டும், கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கே வழக்கை திருப்பி அனுப்பி ஒரு தனி பெஞ்ச் அமைத்து விசாரிக்க சொல்லலாம்.

உச்சநீதிமன்றமே விரிவாக விசாரித்து குறைந்த பட்ச தண்டனை விதிக்கலாம். (இரண்டு வருஷத்துக்கு கூடுதலாக தண்டனை கிடைத்தால் தான் தேர்தலில் நிற்க முடியாது. 18 மாத தண்டனை கொடுத்தால் போதும். ஜெ.வுக்கும் பிரச்சனை இல்லை. உச்சநீதிமன்றம் சட்டப்படி செயல்பட்டதாகவும் சொல்லி கொள்ளலாம். இரண்டு வருசத்துக்கு குறைவான தண்டனை என்றால் சிறைக்கும் செல்ல வேண்டியதில்லை. ஜாமீனிலேயே காலம் கழிக்கலாம். முதல்வராகவும் தொடரலாம்)

கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கு மீண்டும் வழக்கு மாற்றப்பட்டால், மீண்டும் முதலிலிருந்து விசாரணை தொடங்கும். அந்த வழக்கு முடிய ஒரு வருடத்துக்கு மேல் ஆக கூடும். அப்படியானாலும் வரும் மே மாத தேர்தலில் ஜெ. போட்டியிடவோ முதல்வராக தொடராவோ எந்த தடையும் இல்லை.


இப்போதைக்கு உச்ச நீதிமன்றம் என்ன முடிவெடுக்கும் என்பது அண்ணன் ஓ.பி.எஸ்ஸின் ஜாதகத்தை பொறுத்து இருக்கிறது.

*************

தொடர்புடைய பதிவுகள்:

Printfriendly