பாபர் மசூதி இடிப்பு, ராமர் கோவில் கட்டுமானம், போன்ற பரபரப்புக்களால் கலவர வன்முறை களமான அயோத்தி வன்முறைகள் குறித்தான வழக்கின் தீர்ப்பு வரும் 24ம் தேதி வரவிருக்கிறது.
கடந்த வாரம் இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி ஒரு அறிக்கை வெளியிட்டது. அதன் படி, தீர்ப்பு யாருக்கு சாதகமாக வந்தாலும் பொது மக்கள் அமைதி காக்க வேண்டும் எனவும், காங்கிரஸ் தொண்டர்கள் அச்சமயம் வெளியூர் செல்லாமல் அவரவர் ஊர்களிலேயே இருக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறது. மேலும், மாயாவதி அவர்கள் வன்முறை நிகழாமல் தடுப்பதற்கான சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருவதாகவும், அவ்வேற்பாடுகள் திருப்திகரமாக இருப்பதாகவும் அந்த அறிக்கை சொல்லி இருப்பதுடன், காங்கிரசார் அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுத்து அமைதி நிலவ செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
கடந்த 16.09.2010 அன்று, மத்திய அமைச்சரவை கூடி எடுத்த மற்றொரு தீர்மானமும் கிட்டத்தட்ட இதே கருத்துக்களையே வலியுறுத்தி இருக்கின்றது. அத்தீர்மானம் அரசின் சார்பில் விளம்பரமாகவும் அனைத்து பத்திரிக்கைகளிலும் வெளியாகி இருக்கிறது.
இந்த இரண்டு அறிக்கைகளின் நோக்கம் என்ன? இவ்வளவு அவசரமாக எதற்காக இப்படியான அறிக்கைகள் வெளியாகின்றன? அரசு ஏதேனும் மிக பெரிய வன்முறையை எதிர்நோக்குகிறதா? அல்லது அவ்வாறான ஒரு வன்முறை வேண்டும் என்று விரும்புகிறதா?
ஒண்ணுமே புரியலை!
No comments:
Post a Comment