Thursday, December 27, 2012

ஜெ.வெளிநடப்பு சரியா?


ன்றைய முக்கிய செய்தியே டெல்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சி குழு கூட்டத்தில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளிநடப்பு செய்தது தான். இது சரி என ஒரு சாராரும், தவறான முன்னுதாரணம் என மற்றும் பலர் சொல்லி இருக்கிறார்கள். என்ன தான் நடந்தது?

இன்று டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் தலைமையில் அனைத்து மாநில முதல்வர்கள் கலந்துகொண்ட தேசிய வளர்ச்சி குழும கூட்டம் நடைபெற்றது.

இது ஒவ்வொரு வருடமும் வழக்கமாக நடப்பது தான்.

இந்த கூட்டத்தில் கடந்த ஆண்டில் மாநிலங்கள் எட்டிய வளர்ச்சி, எதிர்கால திட்டங்கள், அடுத்த ஐந்தாண்டுக்கான திட்டங்கள், மாநிலங்களின் பிரச்சனைகள், தேவைகள் எல்லாம் விவாதித்து, அதற்குரிய திட்ட ஒதுக்கீடுகளை வழங்குவார்கள்.

அப்படியான கூட்டத்தில் நமது தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் தனது உரையை தொடங்கிய பத்தாவது நிமிடம், நேரமாகிவிட்டதை குறிக்கும் மணி அடிக்கப்பட்டது. இதில் கவனம் சிதறிய ஜெயலலிதா, தனது உரையை முழுமையாக படிக்க போதுமான நேரம் வழங்கப்படாததையும், தனது மாநில பிரச்சனைகள்/தேவைகள் குறித்து பேசுவதற்கு வெறும் பத்து நிமிடங்கள் தான் ஒதுக்கீடு என்பதை கண்டித்தும், ஒரு மாநில முதல்வர் பேசிக்கொண்டிருக்கையில் மணி அடித்து அமர சொல்லிய அவமானத்தை கண்டிக்கும் வகையிலும் அந்த கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்திருக்கிறார்.

என்னை பொறுத்தவரையில் இது மிக மிக சரியான நடவடிக்கை தான்! தமிழகம் மட்டுமல்லாமல் எல்லா மாநில முதல்வர்களுக்கும் இதே நிலை தான், எனினும் யாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

இந்த சம்பவம் குறித்து கருத்து சொன்ன திமுக தலைவர் கலைஞர் அவர்களும் கூட, “இப்படி மணி அடிப்பது வழக்கம் தான். ஆனால் அதற்காக பேச்சை நிறுத்தவேண்டியதில்லை. கூடுதலாக இன்னும் ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் பேசலாம். இந்த நடைமுறை காலம் காலமாக இருந்து வருவது தான். எனினும் தமிழக முதல்வரை மத்திய அரசு அவமானப்படுத்தியிருந்தால் அது கண்டிக்கத்தக்கது” என பட்டும் படாமலும் கருத்து சொல்லியிருக்கிறார்.

மாநில உரிமைகளுக்காக இந்தியாவில் எழுந்த முதல் குரலுக்கு சொந்தக்காரர் கலைஞர். மாநில முதல்வர்களுக்கான மரியாதையை அதிகாரமாக கேட்டு பெற்றவர் அவர். அந்த பெருமை இந்திய வரலாற்றில் எப்போதுமே பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டு இருக்கும். ஆனால், இன்றைய நிகழ்வில் அவர் சொல்லியிருக்கும் கருத்து ரசிக்கத்தக்கது அல்ல.

அடுத்த ஐந்தாண்டு திட்டங்களுக்கான தேவைகள் பற்றி விவாதிப்பதற்கான தேசிய வளர்ச்சி குழு கூட்டத்தில் ஒரு மாநிலத்துக்கு வெறும் பத்து நிமிடம் தான் ஒதுக்கப்படும் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. முழு உரையையும் அச்சிட்டு கொடுத்து விட்டதால் பேச தேவையில்லை என சொல்வோர்கள், அந்த உரையை அனுப்பி வைத்திருந்தாலே போதுமே, எதற்காக முதல்வர் நேரடியாக கலந்துகொள்ளவேண்டும்? என்கிற கேள்விக்கு விடை சொல்வதில்லை.

ஒரு மாநிலத்தின் தேவைகளை விரிவாக உரையாக அச்சிட்டு கொடுத்தாலும் கூட, அதன் முக்கிய சாரம்சங்களை சுருக்கமாக எடுத்து உரைப்பது தான் வழக்கம். அப்படியான உரைக்கு இதுவரையும் முப்பது நிமிடங்கள் வரை அனுமதி இருந்தது. அதன் அடிப்படையிலேயே தமிழக முதல்வர் தனது உரையை தயார் செய்து இருந்தார்.

ஆனால், எந்த முன்னறிவிப்புமின்றி பத்தாவது நிமிடத்திலேயே மணி அடிக்கப்பட்டது ஆச்சரியமான அதிர்ச்சி மட்டுமல்ல, தனது உரையை முழுமையாக படிக்கவிடாமல் செய்யப்படும் நிகழ்வு என்பதை நொடியில் அவர் புரிந்துகொண்டுவிட்டார். அதனால் தான் தான் அவமானப்படுத்தப்பட்டதாக சொல்லி, கூட்டத்திலிருந்து வெளியேறி இருக்கிறார்.

என்னை பொறுத்தவரை, 30 சொச்சம் மாநிலங்கள் கலந்துகொள்ளும் ஒரு கூட்டத்தில், ஐந்து மணிநேரம் தான் பேச அனுமதி என்பதே வஞ்சனை தான். ஒவ்வொரு மாநிலத்துக்கும் எடுத்து சொல்வதற்கான முறையான நியாயமான நேர ஒதுக்கீட்டினை மத்திய அரசு வழங்கி இருக்க வேண்டும். இதற்காக தான் எல்லா மாநில முதல்வர்களும் நேரடியாக டெல்லி சென்று இந்த விழாவில் கலந்து கொள்கிறார்கள். வெறும் பத்து நிமிடம் தான் பேச முடியும் மற்றவை அச்சிட்டு கொடுத்து விடுங்கள் என்பது சரியல்ல. ஒரு மாநில முதல்வரின் ஒரு நாள் என்பது எத்தனை முக்கியத்துவமானது என்பதை யாரும் அறியாமலில்லை. அதையெல்லாம் விட்டுவிட்டு இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதே, எங்கள் மாநில மக்களின் நன்மைக்காக இந்த திட்டங்களை தாருங்கள் என நேரில் விளக்கமாக எடுத்து சொல்வதற்காக தான். ஆனால், அப்படி கேட்பதற்கே வாய்ப்பு மறுக்கப்படுவது என்பது, இந்த மாநில முதல்வரை அவமானப்படுத்துவதாக அல்லாமல், அந்த மாநில மக்களின் தேவைகளை செவிகொடுத்து கேட்க தயாராக மத்திய அரசு இல்லை என்பதை காட்டுவதாகவே நான் உணர்ந்துகொள்கிறேன்.

ஐந்து ஆண்டுகளுக்கு 30 சொச்சம் மாநிலங்களின் திட்டங்கள் பற்றி விவாதிப்பதற்கான கூட்டம் எனில் குறைந்தது மூன்று நாட்களேனும் நடத்தப்பட்டிருக்கவேண்டும். அது தான் மாநில மக்களுக்கு செய்யப்படும் மரியாதை. அவர்களின் தேவைகளை நிறைவேற்றுகிறார்களோ இல்லையோ, அவர்களின் தேவைகள் என்ன என்பதை எடுத்து சொல்வதற்காகவேனும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கவேண்டும் என்றே நான் கருதுகிறேன்.



கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தபின் நிருபர்களுக்கு பேட்டியளித்த ஜெயலலிதாவின் குரல், தமிழகத்தின் குரலாக மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய மாநில முதல்வர்களின் குரலாக காண்கிறேன். மாநில சுயாட்சி, மாநில உரிமைகள் பற்றி முழங்கிய கலைஞர் அவர்கள் அதை விமர்சிப்பதை ஏனோ என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இது ஜெயலலிதாவுக்கான அவமானமாக மட்டுமல்ல. ஏழரை கோடி தமிழ்மக்களின் தேவைகளை எடுத்து சொல்ல சென்ற தூதர் அவர். அவரை அவமானப்படுத்தியதை நாம் நம் மக்களை அவமானப்படுத்தியதாகவே காண்கிறேன்.

மத்திய அரசு தனது முடிவுகளையும், ஆராய்ச்சி கட்டுரைகளையும், எதிர்கால திட்ட ஒதுக்கீட்டில் தாங்கள் எடுத்திருக்கும் முடிவுகளை மாநிலங்களுக்கு அறிவிக்கும் அறிக்கையையும் சொல்வதற்கான ஒரு கூட்டமாக மட்டுமே தேசிய வளர்ச்சி குழு கூட்டத்தை பயன்படுத்திக்கொள்கிறதோ என்கிற ஐயம் எனக்கு நெடு நாட்களாகவே உண்டு!

இனி வரும் காலங்களிலேனும், மத்திய அரசு மாநிலங்களுக்கு உரிய முக்கியத்துவத்தையும் மரியாதையையும் தருவதற்கு, தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் இன்றைய வெளிநடப்பு ஒரு தூண்டுகோலாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன்!

Wednesday, November 28, 2012

2G - விலகும் திரை


ந்திய வரலாற்றின் இரண்டாவது மிகப்பெரிய ஊழல் என வர்ணிக்கப்பட்ட 2G ஊழல் இப்போது இந்திய வரலாற்றின் மிகப்பெரிய பொய் என மெல்ல மாறிவந்துகொண்டிருக்கும் சூழலில் இந்த பதிவு எழுதப்படுகிறது.
ஏற்கனவே 2G வழக்கு தொடர்பாக 2 பதிவுகள் ( விவரங்கள் கீழே ) இதே வலைப்பூவில் எழுதப்பட்டிருப்பதால் முன்கதை பின்கதை கிளைக்கதைகளை எல்லாம் விட்டுவிட்டு நேரடியாக சொல்லவந்த விஷயத்துக்கு வந்துவிடுகிறேன்.
கடந்த அக்டோபர் 31ம் தேதி மத்திய தணிக்கை துறையின் அதிகாரியாக இருந்த ஆர்.பி.சிங் அவர்கள் ஓய்வு பெற்றார். அவர் தான் 2G விவகாரத்தை தணிக்கை செய்து அறிக்கை சமர்ப்பித்தவர்.
அரசு ஊழியராக இருந்தவரை அமைதியாக இருந்தவர், ஓய்வு பெற்றபின் சுதந்திரமாக தனது தரப்பு வாதத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அதன் சாரம்சம் இது தான்:
“2G ஏலமுறையில் இழப்பீடு ஏற்பட்டதாக நான் சொல்லவேயில்லை. எனது உயர் அதிகாரிகள் தான் அப்படி எழுதி என்னை கையெழுத்திட கட்டாயப்படுத்தினார்கள். வரைவு அறிக்கையில் 1,76,000 கோடி இழப்பு என்று இருந்ததை நான் நீக்கினேன். காரணம், அதற்கு உரிய நியாயமான காரணங்களோ, ஆதாரங்களோ இல்லை என்பது தான். ஆனால், மீண்டும் அதே தொகையோடு அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு அதில் நான் கையெழுத்திட வற்புறுத்தப்பட்டேன்.”
இதில் இன்னுமொரு அதிர்ச்சி தகவல் என்னவென்றால், “இந்த முறைகேட்டுக்கு திட்டமிட்டு கொடுத்து CAG அலுவலகத்துக்கே வந்து, அறிக்கை தயாரிக்க முழுமையாக துணை நின்றது பா.ஜ.கவின் முரளி மனோகர் ஜோஷி தான்” என்றும் அவர் சொல்லியிருந்தார். பின்னர் சில நாட்களிலேயே நான் அப்படி எதுவும் சொல்லவில்லை என மறுத்து விட்டார்.
இந்த விவரங்களின் அடிப்படையில் மீண்டும் 2G வழக்கு விவகாரத்தை விவாதிக்கவேண்டும் என திமுக பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்திருக்கிறது.
இதில் இருந்து நாம் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயங்கள் மிக சில உள்ளன.
பா.ஜ.க காங்கிரஸ் மீது ஒரு மிகப்பெரிய குற்றச்சாட்டை முன்வைத்து அதன் மதிப்பை குலைக்க முயற்சிக்கிறது. வேறு எதை பற்றி சொன்னாலும் பிரச்சனை என்பதால் ஸ்பெக்டிரத்தை கையில் எடுத்திருக்கிறது. காரணம், இந்த நிமிடம் வரை இந்தியாவில் ஸ்பெக்டிரத்துக்கான மதிப்பு என்ன என்பது யாருக்குமே தெரியாது. யூகமான விலை தான் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. எனவே CAG யின் அதிகாரிகள் துணையுடன், மேலும் யூகமான மதிப்பீட்டுப்படியான குற்றச்சாட்டை முன்வைத்தால், அந்த குற்றச்சாட்டு சரியா தவறா என்றெல்லாம் யாரும் சிந்திக்க முன்வரமாட்டார்கள். CAG சொல்வதால், அதை அப்படியே ஏற்றுக்கொண்டு விடுவார்கள். மேலும், ஸ்பெக்டிரத்தின் மதிப்பு நிர்ணயம் செய்யப்படாததால், அரசுக்கு நஷ்டம் என சொன்னால் அதை யாராலும் மறுத்து பேச முடியாது. மீடியா மூலம் இது பெரும் பரபரப்புக்குள்ளானால் மொத்த தேசமும் காங்கிரஸ் மீதான மதிப்பை மறுபரிசீலனை செய்யும். அது பா.ஜ.கவுக்கு சாதகமாக அமையும் என்கிற மிக மிக வலுவான, தெளிவான, சிறப்ப்பான திட்டமிடல் மூலம் இந்த 2G ஊழல் என்கிற குற்றச்சாட்டு கட்டமைக்கப்பட்டிருப்பதாக எல்லோராலும் எளிதாக யூகிக்க முடிகிறது.
உண்மையில், இந்த திட்டம் எதிர்பார்த்ததை விட மிகப்பெரும் வெற்றி பெற்றிருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆர்.பி.சிங் மட்டும் உண்மையை சொல்லியிருக்காவிட்டால், இந்த நிமிடம் கூட 2G யால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக சொல்லப்படும் கதையை எல்லோரும் தொடர்ந்து நம்பிக்கொண்டு தான் இருந்திருப்பார்கள்.
சமீபத்தில் நீதிமன்றத்தில் சி.பி.ஐ தரப்பில் தரப்பட்ட விவரத்தின் படி, 2G விவகாரத்தில் அரசுக்கு இழப்பு ஏற்பட்டு இருக்கிறதா என்பதோ, அப்படி ஏற்பட்டிருந்தால் அதன் மதிப்பு என்ன என்பதோ அது குறித்த விவரமோ ஆதாரப்பூர்வமாக இல்லை என தெளிவாக ஒப்புக்கொள்ளப்பட்டு இருக்கிறது.
அப்படியெனில் 2G வழக்கு மற்றும் 2G ஒதுக்கீடு தொடர்பான பரவலான குற்றச்சாட்டுக்களுக்கு என்ன பதில்? அவையெல்லாமே தவறான குற்றச்சாட்டுக்களா? இது தான் இப்போது மக்கள் முன் உள்ள மிக முக்கியமான கேள்வி.
அவற்றில் மிக சில குற்றச்சாட்டுக்கள் என்னவென்று அலசலாமா?
2G விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியை மாற்றி முன்னுக்கு கொண்டுவந்தது ஏன்? அதனால் பல நிறுவனங்கள் விண்ணப்பிக்க முடியாமல் போய்விட்டது. இது சில நிறுவனங்களுக்கு ஆதரவான முடிவு அல்லவா?
2G ஒதுக்கீட்டை பொறுத்தவரை, இது முதலில் வருவோருக்கு முதலில் ஒதுக்கீடு முறையில் ஒதுக்கப்படுவது. இப்படியான ஒதுக்கீட்டு முறையை பா.ஜ.க ஆட்சியில் இருந்தபோது தான் முடிவெடுத்து அமல்படுத்தியது. 2G ஸ்பெக்டிரத்தை பல முறை இதே முறையில் தான் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்போது கடைசியாக கொஞ்சமாக அரசிடம் மிச்சமிருக்கும் 2G ஸ்பெக்டிரத்தை கிட்டத்தட்ட கிளியரஸ் சேல் ரீதியில் ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள். காரணம் 3G மற்றும் 4G தொழில்நுட்பங்கள் இந்தியாவுக்கு வந்துவிட்டபடியால் 2G தொழில்நுட்பம் பழையதாகிவிட்டது. அதனால் 2G ஸ்பெக்டிரத்தில் மிச்சமிருக்கும் கொஞ்சம் நஞ்சத்தையும் விற்றுவிட்டால் 2G முழுமையாக பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்பது தான் அரசின் முடிவு.
இப்படி முதலில் வருவோர்க்கு முதலில் ஒதுக்கிய வகையில் முதல் இரண்டு நாட்களிலேயே அரசிடம் மிச்சமிருந்த மொத்த 2G ஸ்பெக்டிரமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டன. இந்த நிலையில் கடைசி தேதி என்பதற்கு எந்த மதிப்பும் இல்லை. கடைசி தேதி எதுவாக இருந்தாலும், எத்தனை பேர் விண்ணப்பித்தாலும் அவர்களுக்கு 2G ஸ்பெக்டிரம் ஒதுக்க முடியாது. காரணம் முதல் இரு நாட்களிலேயே முடிந்துவிட்டது. எனவே கடைசி நாளை மாற்றியதால் எந்த முறைகேடும் இல்லை என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதே.
2G லைசன்ஸ் வாங்கிய நிறுவனங்கள் லைசன்ஸ் விலையை விட மிக அதிகமான தொகைக்கு தங்கள் நிறுவன பங்குகளை விற்றிருக்கின்றனவே. அப்படியென்றால் 2G லைசன்ஸின் விலை அதிகம் தானே?
முதலில் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். நிறுவனங்கள் லைசன்ஸை விற்கவில்லை. அதை விற்கவும் முடியாது. அவர்கள் விற்றது அவர்களது நிறுவனத்தின் பங்குகளை தான். இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது.
2G லைசன்ஸ் வாங்கிய நிறுவனம், 2G வசதியை செயல்படுத்துவதற்கான கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக அதிக அளவில் முதலீடு செய்யவேண்டி இருக்கிறது. அதாவது எல்லா இடங்களிலும் டவர்கள், டிரான்ஸ்மிஷன் செண்டர்கள் என பல கட்டமைப்புக்களை உருவாக்கவேண்டி இருக்கிறது. அதற்கான நிதியை பல வகைகளில் திரட்டுகிறார்கள். அதில் ஒரு வழிமுறை தான் தங்கள் நிறுவனத்தின் பங்கு விற்பனை என்பதும். 2G லைசன்ஸ் வாங்கினாலும் வாங்காவிட்டாலும் அந்த நிறுவனத்தின் பங்குகளுக்கென்று ஒரு மதிப்பு விலை இருக்கிறது. அப்படியான தங்கள் நிறுவன பங்குகளை விற்று முதலீட்டுக்கான நிதியை திரட்டுகிறார்கள்.
2G லைசன்ஸ் மதிப்பு என்பது மிக சிறிய தொகை. ஆனால் அதை செயல்படுத்துவதற்கான உள்கட்டமைபு வசதிகள், அதற்கான நிதி ஆதாரங்களின் தேவை என்பதெல்லாம் மிக மிக அதிகமானது. எனவே அதை தங்களின் பங்குகள் மூலம் (நிறுவனத்தை மறைமுக அடகு வைப்பதன் மூலம்) நிதி திரட்டுகிறார்கள். இதை 2G யின் விலை என கருதுவது தவறு.
இவைபோன்ற பல கேள்விகள் மிக மிக சிறுபிள்ளைத்தனமானதும், இயல்பற்றதாகவுமே இருக்கிறது.
இப்போது மெல்ல விலக தொடங்கி இருக்கும் திரை, முழுமையாக விலகி, உண்மையில் 2G விஷயத்தில் யார் என்ன செய்தார்கள் என்பதெல்லாம் வெளிவரும் நாள் தொலைவில் இல்லை என்பது மட்டும் இப்போது புரிகிறது.
 
தொடர்புடைய பதிவுகள்

Tuesday, November 27, 2012

தமிழக சூரிய மின்சக்தி கொள்கை - அலசல்



மிழ்நாடு அரசு சமீபத்தில் தனது சூரிய மின்சக்தி கொள்கையை வெளியிட்டிருக்கிறது. இப்போது அந்த கொள்கையின் சிறப்புகள் பற்றியும், பெருமைகள் பற்றியும் மிக பிரபலமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. எங்கே யாரை சந்தித்தாலும், வீட்டுக்கு சோலார் போட்டாச்சா என்கிற ஒரு கேள்வியும், அதன் அடி நாதமாக சோலார் போடலைன்னா உன் வாழ்க்கையே இருண்டு விடும் டைப் விசாரிப்புகளும் கேட்க தொடங்கிவிட்டன.
தமிழகத்தில் இப்போது நிலவி வரும் மிக மோசமான மின் வெட்டு பிரச்சனையை முதல்வரை தவிர தமிழகத்தின் அனைத்து குடிமக்களும் நன்கு அறிவீர்கள். எனவே அதை பற்றி மீண்டும் மீண்டும் விரிவாக விளக்கத்தேவையில்லை என கருதுகிறேன். இது பற்றி முழுமையாக விவரமாக அறிந்திராதவர்கள் (பணி நிமித்தமாகவோ வேறு காரணங்களாலோ பிற மாநிலங்கள் / நாடுகளில் வாழும் தமிழர்கள்) “இருண்ட தமிழகம்” எனும் எனது பதிவை படித்தால் ஓரளவு விஷயங்களை உள்வாங்கிக்கொள்ள முடியும்.
தமிழகத்தில் இப்போதைய மின் நிலைமை – தேவையும் உற்பத்தியும்:
தமிழக அரசு வெளியிட்டிருக்கும் கொள்கை குறிப்பின் படி, தமிழகத்தின்  மின் நிலையை மிக சுருக்கமாக சொல்லவேண்டுமானால்:
இது வரை தமிழகத்தில் ஒரு நாளில் பதிவான அதிக பட்ச மின் உபயோகம் என்பது கடந்த 19.07.2011 ல் 10859 மெ.வா தான். (மின் கொள்கை – பக்கம் 10) இதர நாட்களில் இதை விட குறைவு என்பது தானாகவே நாம் புரிந்துகொள்ளக்கூடியது தான்.
தமிழக அரசுக்கு சொந்தமான மின் நிலையங்கள், மற்றும் இதர வழிகள் மூலம் நீர், அனல், கரி, வாயு மூலமான மின்சார உற்பத்தி வழியாக (மரபு வழி மின் உற்பத்தி) ஒரு நாளைக்கு உற்பத்தி செய்யக்கூடிய மின் சக்தி – 10364.5 மெ.வா. (மின் கொள்கை – பக்கம் 13). அதாவது, எல்லா மின் நிலையங்களும் முறையாக இயங்கினால் நமக்குள்ள மின் தட்டுப்பாடு என்பது வெறும் 500 மெ.வா தான்.
இது தவிர மரபு சாரா எரிசக்தி மூலமான மின்சார உற்பத்தி, அதாவது காற்று, சூரிய ஒளி, சாண எரிவாயு, சிறிய நீர் மின் நிலையங்கள், கழிவுகளிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் மின் நிலையங்கள் ஆகியவற்றின் மூலம் தமிழக அரசால் உற்பத்தி செய்யக்கூடிய மின்சாரத்தின் அளவு – 7,572.06 மெ.வா (மின் கொள்கை – பக்கம் 13)
ஆகமொத்தம் தமிழகத்தால் கிட்டத்தட்ட 17936.56 மெ.வா மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். அதற்கான கட்டமைப்புக்கள் இருக்கின்றன. இதுவரையும் அப்படி தான் அவை செயல்பட்டும் வந்திருக்கின்றன.
இதில் உறுதியாக உற்பத்தி ஆகக்கூடிய (மரபு வழி மின்சார உற்பத்தி) 10,364.5 மெ.வா என்பதே தமிழகத்தின் மின் தேவைக்கு போதுமானது.
இதனால் தான் கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் வரையிலும் அப்போதைய தமிழக அரசு சென்னையில் 2 மணிநேரமும் சென்னை தவிர்த்த பிற மாவட்டங்களில் 4 மணிநேரமும் மின் வெட்டை அமல் செய்து சீரான மின்சாரத்தை எல்லோருக்கும் வழங்கியது. அதிலும் குறிப்பிடவேண்டிய விஷயம் என்னவென்றால், எப்போதெல்லாம் மின் வெட்டு என்பது முறையாக அறிக்கையாக வெளியிடப்பட்டு அதன் படி முறையாக மின் வெட்டு அமல்செய்யப்பட்டது. இது மின் வெட்டு நேரத்தை கணக்கிட்டு நமது பணிகளை திட்டமிட்டுக்கொள்ள பெரும் உதவியாக இருந்தது.
ஏன் இந்த அளவுக்கு மின் வெட்டு?
நாம் முன்பே பார்த்ததை போல, இப்போதைய மின் தேவை என்பது கிட்டத்தட்ட 11000 மெ.வா என்கிற நிலையில் இருக்கிறது. அரசின் உற்பத்தி திறன் 10364 மெ. வா என்கிற அளவில் இருக்கிறது. ஆனால் உற்பத்தி ஆவதென்னவோ 7000 மெ.வா அளவு தான். இதன் காரணமாக 3000-4000 மெ.வா மின் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது. இதை சரிக்கட்ட தான் மின் வெட்டு அமலில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த 3000-4000 மெ வா மின் தட்டுப்பாடை சமன் செய்ய சென்னையில் 2 மணிநேரமும் பிற மாவட்டங்களில் 4 மணிநேரமும் மின் வெட்டு செய்வது; உயர் அழுத்த மின் விநியோகத்தில் 40% குறைப்பு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. (மின் கொள்கை – பக்கம் 27) ஆனால் நிஜத்தில் நிலைமை இன்னமும் மோசம்.
இப்போதைய நிலைமை என்னவென்றால், தென் தமிழகத்தில் 16 மணிநேரம் வரையும், பிற மாவட்டங்களில் 12 மணிநேரம் வரையும், சென்னையில் 3 மணிநேரம் வரையும் மின்வெட்டு உள்ளது. மேலும் எந்த நேரத்தில் மின் தடை, எந்த நேரத்தில் மின் வசதி என்பதெல்லாம் தெளிவாக வரையறை செய்யப்படாமல், நினைத்த நேரத்தில் மின் வெட்டு அமலாகி மக்களின் வாழ்க்கையே மெல்ல மெல்ல நாசமாகி வருகிறது.
கடந்த ஆட்சியில் எந்த காரணம் கொண்டும் இரவில் மின் தடை இல்லாமல் பார்த்துக்கொள்ளப்பட்ட நிலை மாறி, இப்போது இரவில் ஒரு மணிநேரத்துக்கு ஒருமுறை மின்வெட்டு அமலில் இருக்கிறது. இதனால் ஏற்பட்ட தூக்கமின்மை மற்றும் அதன் பாதிப்புகளான வாகன விபத்துக்கள், சமூக கட்டமைப்பு சீர்குலைவு என்பவை எல்லாம் பலரும் அனுபவிப்பதே!
மேலும் தட்டுப்பாட்டை போக்க தனியார் நிறுவனங்களிடமிருந்து மின்சாரத்தை விலைக்கு வாங்கும் நடவடிக்கையிலும் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
அதெல்லாம் சரி, 10364 மெ.வா மின் உற்பத்தி செய்யும் திறன் உடைய தமிழக அரசு ஏன் 7000 சொச்சம் மெ.வா மட்டுமே உற்பத்தி செய்கிறது? ஏன் அது முழுமையான உற்பத்தி அளவை எட்டவில்லை? கடந்த ஆண்டு வரை முழு மின் உற்பத்தி ஆகி வந்த நிலையில் இப்போது ஏன் இந்த திடீர் உற்பத்தி குறைவு?
பல மின் நிலையங்கள் பழுதடைந்து கிடக்கின்றன. அவற்றை அரசு செப்பனிடாமல் காலம் தாழ்த்தி வருகிறது என மின்வாரிய நண்பர்கள் சொல்கிறார்கள்.
கடந்த ஆட்சி, எதிர்கால மின் தேவையை கருத்தில் கொண்டு 4000 மெ.வா மின் உற்பத்திக்கான புதிய மின் திட்டங்களை அமைத்து வந்தது.
இன்றைய சூழலில், தமிழக மின் உற்பத்தி நிலையங்களை சீரமைத்து, புதிய மின் திட்டங்களை விரைவுபடுத்தினாலே, 14000 மெ.வா மின் உற்பத்தி கிடைகும் (மரபு சாரா மின் உற்பத்தியான 7000 மெ.வா தனி. அது இதில் சேர்க்கப்படவில்லை!)
ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு இப்போது அரசு புதிதாக அறிவித்திருப்பது தான் தமிழக சூரிய மின் சக்தி கொள்கை 2012.
சூரிய மின் சக்தி கொள்கை என்ன சொல்கிறது?


சுருக்கமாக சொல்வதானால், வரும் 2015ம் ஆண்டுக்குள்ளாக 3000 மெ.வா மின்சாரத்தை சூரிய ஒளி மின் உற்பத்தி மூலம் எட்டுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. அதை எட்டும் வகையில் தொழிற்சாலைகள், வீடுகள் உட்பட அனைத்து மின் உபயோகிப்பாளர்களும் 6% க்கு குறையாத மின் உற்பத்தியை தாங்களே ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். 2013 ம் ஆண்டு டிசம்பர் வரை இது 3% என்கிற அளவிலும் அதன் பின் ஜனவரி 2014 முதல் 6% என்கிற அளவிலும் இந்த குறைந்த பட்ச உற்பத்தி அளவு நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது (தமிழக சூரிய ஒளி கொள்கை – பக்கம் 8 & 9)
இதை நிறுவுவதற்கான செலவில் 30% சதவிகிதம் வரை அரசு மானியம் கிடைக்கும் என்றும், இந்த திட்டத்தை நிறுவி கொடுப்பதற்கான முகவர்கள் எல்லா மாவட்டங்களுக்கும் அமர்த்தப்படுவார்கள் எனவும், அவர்களிடம் அரசு மானியத்தை கழித்து விட்டு மீதி தொகையை செலுத்தினால் போதும் எனவும் அரசு சொல்கிறது.
தமிழகத்தை பொறுத்தவரை ஆண்டுக்கு 300 நாட்களுக்கு குறையாமல் சூரிய ஒளி வசதி கிடைப்பதால், ஆண்டு முழுமைக்குமான மின் தேவையை அவரவர்களே அவரவர் இல்லங்களில் ஏற்படுத்திக்கொள்ளலாம். அரசை இனி எதிர்பார்க்க தேவையில்லை. எனவே இது ஒரு நல்ல அற்புதமான திட்டம் என பல தரப்பினரும் மகிழ்ச்சி தெரிவித்து இருக்கிறார்கள்.
ஒரு சாதாரண குடும்பத்தினரின் வீட்டுக்கு 1 கி.வா மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான சூரிய மின் உற்பத்தி அமைப்பு என்பது கிட்டத்தட்ட 2 லட்சம் ரூபாய் ஆகிறது. இதில் 30% மானியம் போக மீதமுள்ள தொகைக்கு வங்கி கடனும் கிடைக்க வழி இருக்கிறது. எனவே எல்லோரும் அவரவர் வீடுகளுக்கு சூரிய மின் சக்தியை அமைப்பதில் ஆர்வம் காட்டுவதில் ஆச்சரியமில்லை.
இந்த மானியத்தை மாநில அரசு வழங்குகிறதா, மத்திய அரசு வழங்குகிறதா என்பது பற்றி இன்னமும் தெளிவு இல்லை. மத்திய அரசு ‘ஜவஹர்லால் நேரு தேசிய சூரிய ஒளி திட்டம்’ (JNNSM-Jawaharlal Nehru National Solar Mission) மூலம் நாடு முழுவதும் ஏற்கனவே இப்படி ஒரு திட்டத்தை பல ஆண்டுகளாக அமல் செய்து வருகிறது. அதில் 30% சதவீத மானியத்தை அவர்கள் தருகிறார்கள்.
அந்த திட்டத்தை தான் தமிழக அரசு தனது திட்டம் போல அறிவித்து, மத்திய அரசிடமிருந்து மானியத்தை வாங்கி கொடுத்து தனது திட்டம் போல அறிவிக்கிறதா என்பது பற்றியும் தெளிவான விவரங்கள் இல்லை. தமிழ்க அரசு தனது கையில் இருந்து இந்த மானியத்தை வழங்க இருக்கிறதா என்பதும் புரியவில்லை. ஏனெனில் சமீபத்தில் தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட திருத்த நிதி நிலை அறிக்கையில் இந்த மானியத்துக்கான ஒதுக்கீடு என எதுவும் இருப்பதாக தெரியவில்லை.
மத்திய அரசு நேரடியாக மக்களுக்கு வழங்கி வரும் மானியத்தை இடையில் நுழைந்து தமிழ்க அரசு வாங்கி மக்களுக்கு தன் பெயரில் தர இருப்பதாக சொல்லப்படும் செய்திகளில் எந்த அளவு உண்மை இருக்கிறது எனவும் தெரியவில்லை.
எனது பார்வை:
மக்களின் வரிப்பணத்தைக்கொண்டு மிகப்பெரும் மின் நிலையங்களை தமிழக அரசு அமைத்துள்ளது. அங்கே பணியாற்றுவோருக்கெல்லாம் மக்களின் வரிப்பணத்திலிருந்து தான் ஊதியம் வழங்கப்படுகிறது. மேலும் சமீபத்தில் மின் கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டு இருக்கிறது. பழுதடைந்திருக்கும் மின் நிலையங்களை சீராக்கி முழு மின் உற்பத்தியை எட்டினாலே தமிழ்கத்துக்கு தேவையான மின் வசதி கிடைத்து விடும்.
இதையெல்லாம் விட்டுவிட்டு சூரிய மின் சக்தியை வீடுகளில் அமைப்பதை கட்டாயப்படுத்துவது சரியல்ல.
நாம் வரியும் கட்டி, அதில் மின் நிலையமும் அமைத்து அதில் உற்பத்தியாகும் மின்சாரத்தையெல்லாம் பெரும் தொழிற்சாலைகளுக்கு கொடுத்துவிட்டு, மின்வெட்டால் அவஸ்தைப்பட்டுக்கொண்டிருப்பதும், நமக்கு மின்சாரம் தேவையென்றால் நாமே செலவு செய்து வீட்டுக்கு மின் வசதி செய்துகொள்ளவேண்டும் என்பதும், சரியான அரசு நிர்வாகமாகவோ, சிறந்த முடிவாகவோ எனக்கு தோன்றவில்லை.
இத்தனை மின் நிலையங்கள் ஊழியர்கள் கருவிகள் எல்லாம் மக்கள் பணத்தில் அமைந்திருப்பதே அந்த மக்களுக்கு முறையான மின் வசதியை செய்து கொடுப்பதற்கு தானே? தொழிற்சாலைகளுக்கு அரசு மின்சாரம் தரும், மக்களுக்கு அவர்களே மின்சாரம் உற்பத்தி செய்துகொள்ளவேண்டும் என்கிற முடிவு நியாயமானதாக படவில்லை.


சூரிய ஒளி மின் உற்பத்தி செய்ய விரும்புபவர்கள் தாமாக அதை செய்து கொள்வதில் மாற்றுக்கருத்து இல்லை. 2 லட்சம் ரூபாய் செலவு செய்து சூரிய மின் உற்பத்தி வசதியை அமைத்து, அதை 5 ஆண்டுக்கொருமுறை மின்கலம் மாற்றி பராமரிக்கும் திறனுள்ளவர்கள் அதை அமைத்துக்கொள்வதில் எந்த ஆட்சேபணையும் இல்லை.
ஆனால் அரசு, தனது மின் உற்பத்தியை மேம்படுத்த முயற்சிக்காமல், மக்கள் மின் உற்பத்தியை செய்யவேண்டும் என கட்டாயப்படுத்துவது நியாயமானதாகவும் தோன்றவில்லை.
நல்லவேளையாக தமிழகத்தில் மக்கள் நலன் கருதும் கட்சிகள் இல்லாததால், நாம் அரசின் முடிவுக்கு கட்டுப்படவேண்டியதாகிறது.
வாருங்கள். வீட்டுக்கூரையில் சோலார் பேனல்கள் அமைத்து நமக்கு நாமே மின் உற்பத்தி செய்து கொள்வோம். கூடுதல் இணைப்பாக சாலையோர சூரிய பேனல்களின் வெயில் கூச்சொளி மூலம் வாகன ஓட்டிகளை விபத்துக்குள்ளாக்கவும் செய்யலாம்!
 
ஆவணங்கள்:

Wednesday, October 3, 2012

A journey with KeSRTC



I was looking searching for options to travel from Thrissur to Mangalore in an emergency after receiving a shocking news from my relative. The news came by 11:00 am and I planned for my journey at the earliest.
My first option is to check train services. I know I can’t get any reservation even Tatkal will be closed the previous day itself. My looking is for the timings and the train’s destination so that I could guess about the crowd in the Unreserved Coach.

The upcoming trains via Mangalore are bound to Bikaner, Mumbai, Hazrat Nizammudin etc., and I know there won’t be any space to place my foot.

My next option goes to search of Buses. KaSRTC has only one service from Ernakulam to Mangalore which is an Airavat Club Class. For my unlucky, the bus is full. I then headed to the KeSRTC bus Stand at Thrissur.

I went to this bus stand so many times, and wonder, how an important city like Thrissur have  a shabby and nasty Bus Stand like this. I approached the Reservation counter and enquired about the bus to Mangalore. The reply was partially happy and partially shocking. Happy one is there is a bus at 20:30 hrs which is a direct bus to Mangalore. Shocking are two things. 1. It is an ordinary Super Fast Bus 2. The fare will be charged from Ernakulam. First I explain why they are shocking.

 KeSRTC's RNE623 (taken at the time of its induction)

The bus is an Ordinary Super Fast Bus. It has Standard 51 Seats like Town Service, Cloth binded Windows, Noisy & Vibrated Engine, Hard Suspension. Wonder, how the KeSRTC operates such bus to the length of 420 Kms. So the travel in the worst of the worsts bumpy highway to Mangalore will be really a nightmare. I really imagined and proud of TNSTC / SETC for their care on passengers. Pushback seat, Glass window, Anti vibrating insulation, Air Suspension, Closed room for Passengers to avoid Engine Noise, Stereo (some have even video). This kind of basic amenities will be taken care in Tamilnadu, even for a journey of 200 kms.

The second shocking thing is the fare. The service is from Ernakulam to Mangalore and I have to board at Thrissur. But the reservation officer says, the fare will be charged from Ernakulam only. I thanked myself for not opting for Trivandrum-Mangalore Bus (which is also an ordinary bus runs for 637 kms in a single stretch). If I opted this one, I would have paid Rs.453 for ticket. Since I am taking Ernakulam Bus, the charge is Rs 290. Considering the actual cost for Thrissur to Mangalore is 180, both are day robbery by KeSRTC. Surprise, even they are collecting this much of fare without any justice, they didn’t maintain a good bus for long service.

The reservation officer hesitated to make any reservation for the bus, as it takes long time for logging in and he advised not to reserve and directly board the bus at the time of departure. It will be economically too. I asked for the seat availability, he says many travel by standing to Mangalore. Surprised again!

I know I can’t travel almost 10 hrs by standing in an ordinary bus that too during night time, sacrificing my sleep. I have already searched for the availability of seats in that particular bus through my mobile and found 47 (out of 51) seats are available. Unlike KaSRTC (which accepts mobile message as ticket) KeSRTC insists for printed tickets for journey and hence I must take a print out of the ticket. So I went out of the Bus Station and looked for any Internet Café. Found one near Aliyans Hotel and booked my ticket for the journey. Selected Seat No 21. It is a left side window seat and in the middle of the Bus. This logic for booking seat in the middle of the bus is for reducing bumpy and left side is for safety.

The scheduled time of departure of my bus is 20:30 at Thrissur. So I started from Mannuthy at 19:40 by auto. It took 30 mins to reach KeSRTC bus stand from Mannuthy and paid Rs.80 as fare. Not bad! Normally Kerala Auto charges descent and reasonable fare. Wondered few times, they don’t even take any tips, as it downgrades their prestige. Comparing with our Chennai Autos they are far ahead on customer service.

Auto dropped me in the main gate of the bus stand at 20:10. I straightly went to the enquiry counter to ensure the arrival time of my bus. I was told, the bus will come not later than 20:40. Many buses bound to Trivandrum and Bangalore are in the platform. The turnaround time of each bus in the platform is 10 mins average. A descent and well planned timing is being maintained by the KeSRTC crew at the Bus Station. An announcement was being made for each and every bus when it is arrived and departs.

My bus (RNE 623 of Ernakulam depot) came into the bus station by 20:50 (exactly 20 mins late from the scheduled time). I saw my seat 21 was already occupied by the passengers coming from Ernakulam. I have to wait for Conductor to come, for getting my seat, as my requests and arguments failed to get my ‘reserved’ seat.

Conductor (after a due course of argument with the occupants) got my seat to me. It was a narrow seat with lesser leg space, similar to our MTC Town bus. I asked the conductor innocently, is there any stopping for dining enroute, and he throws his look on me, like seeing an alien. Bus will stops in Bus Station for 5 minutes. You can do whatever you like was his reply afterwards.

My bus - RNE 623 - SF - Ernakulam to Mangalore - Built at Edappal

The bus started at 21:10 (nearly 40 minutes late) from Thrissur and took the route to Calicut. It was 00:15 when the bus reached Calicut Bus Station. That is 185 minutes for 120 kms. Not bad considering the condition of the road. The bus will be there for only 5 minutes and hence I have no option for taking my dinner. I just finished it with a cup of tea and continued my sleep on the narrow seat and the chilled weather.

A bumpy road and the heavy vibration makes me awake when the time is around 03:30. Lifted the cloth covered window to find out where I am. The dark environment and cool breeze didn’t gave any clue other than it is near by sea. My phone’s GPS says its near Melparamba and the scene through the wind shield shows it is a narrow bumpy road inside a dense forest along a backwater sea. Even it looks so beautiful in night. Wondered and impressed with the speed of the bus for this stretch. Crossed 176 kms in 180 minutes with stoppages at Thalassery, Badagara, Kannur & Kanhangad.

The bus entered Kasaragod KSRTC Bus Stand at 03:50. Bus Station was fully packed with buses parked inch by inch. It seems there is no separate depot in Kasaragod and all the buses will be parked in the Bus Station itself during the night. It was a brief halt at Kasaragod and resumed its journey by 04:15 hrs.
The road to Mangalore from Kasaragod is one of the best one and our bus reached Mangalore by 05:25 which is 70 minutes for 55 kms run.

Throughout the journey I was wondering why KeSRTC is running a shabby nasty bus for this kind of long routes and why they are charging too much from the commuters. Kerala’s Chief Minister Oommen Chandy is looking for rapid development and modernization of the state but I think, he still didn’t realized that the Roads and Road Transport are the basic element of Development of the state. Whenever I drive through NH 47 (particularly between Thrissur – Vadakkanchery) I never accept it is a National Highway and the nerve line for Kerala. The condition of the road is the worst and unfit for self driving, I feel.

Also KeSRTC buses conditions and their care on commuters are very nasty. Charging for untraveled portion is a government aided robbery. I do agree, that KeSRTC owns very classy Volvo Buses and Air Conditioned Air Suspension fitted buses for its Bangalore Services. But neglecting all other routes and giving passengers an unfair justice for travelling is really shocking.

I am always proud of TNSTC which takes care of its passengers, whether they travel long or short. KeSRTC should learn from us.


Thursday, September 27, 2012

சீராகுமா இந்திய பொருளாதாரம்?

ந்தியாவின் GDP வளர்ச்சியை S & P நிறுவனம் 5.5% னு குறைச்சு மதிப்பிட்டதில் தொடங்கியது என்னுடைய இன்றைய காலை பரபரப்பு!


இந்த வருட பட்ஜெட் படி நாம் எதிர்பார்த்திருந்த வளர்ச்சி விகிதம் 7.6% . வளர்ச்சி விகிதம் குறையுதுன்னு வெச்சுகிட்டா கூட ஒரு 6.8% லிருந்து 7.2% வரைக்குமாவது இருக்கும்னு எதிர்பார்த்திட்டு இருந்த எனக்கு 5.5% ங்கறது 1000 வோல்ட் அதிர்ச்சி தான். இது சைனாவின் 7.5% வளர்ச்சியை விட ரொம்ப கம்மி. ஆனா நாம எப்போதுமே உதாரணம் காட்டும் ஜப்பானின் வளர்ச்சி விகிதமான 2% ஐ விட மிக மிக அதிகம்.

என்ன ஏதோ புரியாத பாஷையில் பேசிட்டு இருக்கிற மாதிரி இருக்கா? சரி.. ரொம்ப ரத்தின சுருக்கமா சொல்ல முயற்சிக்கிறேன்!

GDP ங்கறது மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு. அதாவது ஒரு நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பு. வாகனம், விவசாயம், விஞ்ஞானம், தானியம், இயந்திரம் ன்னு என்னென்னல்லாம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுதோ, அந்த பொருட்களின் இன்றைய சந்தை மதிப்பு தொகை. இதை கணக்கெடுக்க மூணு விதமான மெத்தடு இருக்கு.உற்பத்திய வெச்சு கணக்கெடுக்கறது (Production Method), வருமானத்தை வெச்சு கணக்கெடுக்கிறது (Income Method), செலவை வெச்சு கணக்கெடுக்கறது (Expenditure Method). இந்த மூணு வகையில் கணக்கிட்டாலும் விடை கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் வரும். பொதுவா நாம உற்பத்தியை வெச்சு தான் கணக்கிடுறோம்.

இந்த GDP வளர்ச்சி விகித அடிப்படையில் தான் உலக பொருளாதார நிலைமை கணக்கிடப்படுது. அப்படின்னா. நாம உலகின் முக்கியமான பொருளாதார சக்தியா இருக்கணும்னா நம்முடைய வளர்ச்சி விகிதம் சீரா இருக்கணும். வருஷத்துக்கு 2% வளர்ந்தா கூட போதும்.. ஆனா ஒவ்வொரு வருஷமும் மினிமம் 2% வளர்ச்சி இருக்கணும். அப்போ எல்லா நாடுகளும் நம்ம நாட்டின் வளர்ச்சி விகிதம் மேல நம்பிக்கை வெச்சு முதலீடு செய்வாங்க.

வெளிநாட்டிலிருந்து நமக்கு கிடைக்கிற முதலீடுகள் தான், வளரும் நாடான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான உந்துசக்தி. அந்த முதலீட்டை வெச்சு, நாம தொழிற்சாலைகள், விவசாயம் எல்லாத்தையும் வளர்ச்சியடைய செய்யுறோம். இதனால் வேலை வாய்ப்பு, உற்பத்தி செய்யப்படும் பொருட்களால் அரசாங்கத்துக்கு வரி வருவாய், தொழிற்சாலை அமைக்கப்படும் இடங்களில் உள்கட்டமைப்பு வசதி மாதிரி நிறைய மறைமுக நன்மைகள் நமக்கு கிடைக்கும்.

சுருக்கமா, இதையே ரிவர்ஸில் இருந்து பார்த்தா GDP வளர்ச்சி விகிதத்தின் முக்கியத்துவ்ம் புரியும். பின் தங்கிய ஒரு மாவட்டம் வளரணும்னா (உதாரணமா நம்ம விருதுநகர்) அங்கே தொழில்வளர்ச்சி வேணும். தொழிற்சாலைகள் வந்தா, அதை சுற்றி துணை தொழில்கள் வளரும். உள்கட்டமைப்பு உருவாகும். புதிய குடியிருப்பு பகுதிகள் உருவாகும், வேலை வாய்ப்பு பெருகும், வேலை காரணமாக இடபெயர்ச்சி ஏற்படுறது குறையும், வேலைதேடும் வாழ்வாதாரத்துக்கான இடப்பெயர்ச்சிகளால் நகரங்கள் நெருக்கடிக்குள்ளாவது குறையும், மாநிலம் எல்லா பகுதிகளிலும் சீராக வளர்ச்சி பெறும். (இப்போ, சென்னை, கோவை, மதுரை, திருச்சு, நெல்லை, ஹோசூர் மட்டும் தான் வளர்ந்திட்டு இருக்கு. இதை தடுக்க தான் கடந்த திமுக ஆட்சியில் கங்கைகொண்டான், பெரம்பலூர், செய்யாறு, நிலக்கோட்டை மாதிரியான பின் தங்கிய பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைக்க சலுகைகள் கொடுத்தாங்க. அதன் மூலமா அந்த பகுதிகள் வளர்ச்சி பெறும்ன்றது நோக்கம்! இதை பத்தி இன்னொரு பதிவு தனியா அப்புறமா போடுறேன்!)

பின் தங்கிய இடங்களில் பெரும் தொழிற்சாலைகள் தொடங்கணும்னா, முதலீடு அதிகமா தேவைப்படும். நம்ம நாட்டில் முதலீடும் தொழில்நுட்பமும் கிடைக்காதபோது நாம வெளிநாட்டில் இருந்து அதை எதிர்பார்க்கிறோம். வெளிநாட்டுக்காரன் நம்மளை நம்பி முதலீடு செய்யணும்னா, நாம வளர்ந்திட்டு இருக்கிறதை காட்டியாகணும். அதுவும் சீரான வளர்ச்சியை காட்டணும்.

உதாரணமா, வீடு கட்ட ஒரு இடத்தை நாம வாங்குறதா இருந்தா கூட அந்த இடத்தில் நாம போடுற முதலீடு பிற்காலத்தில வளருமான்னு யோசிக்கிறோமில்லே, அதே மாதிரி இந்தியாவில் செய்யப்படும் முதலீடு நல்லா வளருமான்னு வெளிநாட்டுக்காரன் யோசிச்சு முடிவு செய்ய இந்த GDP வளர்ச்சி விகிதம் தான் அடிப்படை.

நான் முதலிலேயே சொன்னமாதிரி 2% வளர்ச்சின்னா கூட பரவாயில்லை. சீரா இருந்தா நம்பி முதலீடு செய்வான். ஆனா, ஒரு வருஷம் 8% மறுவருஷம் 3% மாதிரி ஏற்றத்தாழ்வு இருந்தா முதலீடு செய்ய யோசிப்பான். ஷேர் டிரேடிங் செய்யுற நம்ம பசங்களுக்கு ஈசியா புரியும். ஒரு ஷேரை வாங்கறதுக்கு முன்னாடி அது கடந்த ஒரு வருஷத்தில் எப்படி விலை இருந்ததுன்னு பார்த்து தானே அதில் முதலீடு செய்யுறதா வேண்டாமான்னு யோசிப்போம். கிட்டத்தட்ட அதே டைப் தான்.

இப்போ, நம்ம இந்தியாவின் இப்போதைய நிலையை பார்க்கலாம்.



2009-10 & 2010-11 ஆண்டுகளில் GDP வளர்ச்சி விகிதம் சுமார் 8.4%. 2011-12ல் அது 6.5% னு குறைஞ்சுது. இந்த வருஷம் 5.5% தான் வரும்னு கணக்கிட்டிருக்காங்க. இந்த லட்சணத்தில் இருந்தால் எவன் நம்பி முதலீடு செய்வான்?

கடந்த 10 வருஷத்தில் இந்தியாவின் வளர்ச்சி நல்லா தான் இருக்கு. இப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் புண்ணியத்தில் 1990களில் கொண்டுவரப்பட்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளால நாம அபரிமிதமா வளர்ச்சி அடைஞ்சிருக்கொம்ன்றதை மறுக்க முடியாது. ஆனா வருஷா வருஷம் அந்த வளர்ச்சி சீரா இல்லாம, ஏற்ற தாழ்வோட இருக்கு! இது உலக பொருளாதார வரைபடத்தில் இந்தியாவை ஒரு நிச்சயமற்ற தன்மையில் தான் இப்பவும் வெச்சிருக்கு. கடந்த 2 வருஷமா, நமக்கு வர்ற முதலீடுகள் லேசா குறைய தொடங்கி இருக்கு.

சரி, ஏன் இப்படி குறையுது? உற்பத்தி குறைப்பு, ஏற்றுமதியை விட அதிகமா இறக்குமதி இருக்கிறது, பணவீக்கம், உலக பொருளாதாரத்தில் ஏற்படுற மந்த நிலை மாதிரியான ஸ்டாண்டார்டு காரணங்கள் பல இருக்கு. இது தவிர நீங்களும் நானும் உட்பட நாம ஒவ்வொருவரும் செய்யுற வரி ஏய்ப்பும் ஒரு காரணம்

சிறுதொழில்களில் செய்யப்படும் உற்பத்தி பொருட்கள் அத்தனையையும் அவங்க கணக்கு காட்டி அதுக்கு வரி கட்டுறதில்லை. பெரும் தொழிற்சாலைகளால் அப்படி கணக்கு காட்டாம உற்பத்தி செய்ய முடியாது. அதனால் இந்த சிறுதொழில்களில் செய்யப்படும் உற்பத்திகளில் சில, வரிகட்டறதை தவிர்க்கறதுக்காக கணக்கில் காட்டாம விடறதால, அது GDP கணக்கெடுப்புக்கு வர்றதில்லை. விற்பனை விலையை வெச்சு எடுக்கப்படுற GDP கணக்கெடுப்பில், முறைசாரா வியாபார நிறுவனங்களின் வணிகம் (நாட்டின் அதிகமான வணிகம் நடக்கும் சந்ததகள், மளிகை கடைகள் மாதிரியானவை) கணக்கில் வருவதில்லை. இதன் காரணமா GDP கணக்கில் குறைவு ஏற்படுறதுண்டு! அதாவது உற்பத்தி ஆகுது, வியாபாரமும் ஆகுது. ஆனா, அது கணக்கில் வராததால GDP அடி வாங்குது. இதில் நாம எங்கே வர்றோம்னு கேட்கிறீங்களா? வரியை தவிர்க்கறதுக்காக பில் இல்லாம பொருட்களை வாங்குறோமே.. பத்தாதா? பில் போடுறவனை கூட வேண்டாம்னு சொல்லி செங்கல் ஜல்லி மணல் கம்பின்னு லட்சக்கணக்கில் கணக்கில் வராம வரி கட்டாம செலவு செஞ்சு வீடு கட்டினவங்க கோடிக்கணக்கில இருக்காங்க நாட்டில!

GDP அடி வாங்குறதால தனி மனிதனுக்கு என்ன பிரச்சனை?

முதலீடு குறையும், அதனால் தொழில்வளர்ச்சி குறையும், உள்கட்டமைப்பு வசதி கிடைக்காது, தொழிலுக்காக இடம்மாறுதல், அதன் காரணமா நகரங்களில் நெருக்கடி, உற்பத்தி குறைவு/கணக்கில் காட்டாத வியாபாரங்களால் அரசுக்கு வரி வருவாய் இழப்பு, அதை சரிக்கட்டுவதற்காக ஏற்கனவே இருக்கிற வரிகளை அதிகப்படுத்தறது, அதன் காரணமா விலைவாசி உயர்வு, பணவீக்கம்னு எல்லா அடியும் நமக்கு தாங்க!

ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் இந்த தகவல் படி உலகிலேயே பொதுமக்களுக்கு குறைவான வரி சுமை உள்ள நாடு இந்தியா தான். உலக நகரங்களிலேயே வரி சுமை மிக குறைவா இருக்கிற நகரம்.. நம்புங்க.. நம்ம சென்னை தான்!

2007ம் வருஷம் அப்போதைய திமுக அரசு வாட் வரி விதிப்பு முறையை கொண்டுவந்தது. அதற்கு முந்தய அதிமுக அரசு வாட் வரி விதிப்பு முறைக்கு எதிர்ப்பு தெரிவிச்சதால் 2004ல் அமலாகவேண்டிய வாட், திமுக ஆட்சிக்கு வரும் வரை ககத்திருக்கவேண்டியததயிருச்சு. 2007ல் வாட் வரி கொண்டுவரப்பட்டபோதும், இப்போ FDI க்கு எதிரா போராடுற இதே வணிகர்கள் வாட் வரிவிதிப்பை எதிர்த்து பெரும் போராட்டங்கள் நடத்தினாங்க. அது ரொம்ப சிக்கலான விஷயம். எங்களை அழிச்சிரும்னு எல்லாம் பயப்பட்டாங்க. (ஆக்சுவல்லி, அவங்க கணக்கு காட்டி ஆகணுமேன்னு தான் போராடினாங்கன்றது வேறே விஷயம்!) ஆனா எல்லா எதிர்ப்பையும் மீறி, 2007ல் வாட் வரி அமலாக்கப்பட்டது. (உபரி தகவல்: இந்தியாவிலேயே வெச்சு, மிக மிக சுலபமான எளிமையான வரி விதிப்பு முறை அமலில் உள்ள மிக சில மாநிலங்களில் நம்ம தமிழகம் தான் முதலிடம்!) அதுக்கு அப்புறம் மிக பெரிய வளர்ச்சி, தமிழக தொழில்துறையிலும், வர்த்தகத்திலும் ஏற்பட்டது.



1990களில் மன்மோகன்சிங் கொண்டுவந்த பொருளாதார சீர்திருத்தங்களால் தான் இந்திய பொருளாதார்ம் உலக பொருளாதாரத்துக்கு இணையா வளர்ந்தது. தொழில் வளர்ச்சி பல மடங்கு பெருகிச்சு. கிராமங்களில் சின்ன சின்ன வேலை செஞ்சு கிடைச்ச காசை சம்பாதிச்சிட்டிருந்த பட்டதாரிகளின் வாழ்க்கை தரம் அடியோட மாறி, உயர்தரமா மேம்பட்டது. உலக சந்தைக்கு இந்தியாவை திறந்துவிட்டதில், பல நவீன வசதிகள், பொருட்கள், வாகனங்கள்னு மிக தரமான வாழ்க்கை வாழற வாய்ப்பு நமக்கு கிடைச்சது. சம்பள உயர்வு, பொருளாதார மேம்பாடு, தனிநபர் வாழ்க்கை தர உயர்வுன்னு எல்லாம் சாத்தியப்பட்டதே, அந்த பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளால் தான்.

3 வருஷம் முன்னாடி, அமெரிக்கா, ஐரோப்பான்னு உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளெல்லாம் ஆட்டம் கண்டு கிட்டத்தட்ட தகர்ந்து போனப்ப கூட, இந்திய பொருளாதாரம் மட்டும் சும்மா கன்மாதிரி தலை நிமிர்ந்து நின்னிட்டிருந்ததுக்கும் அந்த பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் தான் முக்கிய காரணம்.

இப்போ மீண்டும் ஒரு இக்கட்டான நிலையில் நாம இருக்கோம்! அதாவது வளர்ச்சி இருக்கு. ஆனா சீராக இல்லை. ஏறி இறங்கி மாறுபட்டுட்டே இருக்கு. அதை தடுக்கறதுக்காக, சில பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்திட்டு வர்றாங்க! வங்கிகளின் கையிருப்பான CRR கம்மி பண்ணி, பணப்புழக்கத்தை அதிகரிச்சிருக்காங்க. வட்டிவிகிதங்கள் குறைச்சிருக்காங்க. இன்னும் மறைமுகமா நிறைய சின்ன சின்ன நடவடிக்கைகளை ஒவ்வொருவாரமும் எடுத்துட்டே வர்றாங்க. பொருளாதார மந்தநிலைக்கு எதெல்லாம் காரணம்னு ஒவ்வொண்ணா கண்டு பிடிச்சு அதையெல்லாம் மெல்ல மெல்ல நீக்கிட்டு வர்றாங்க. இது தவிர, பெரிய அளவிலான சீர்திருத்தங்களும் அப்பப்போ அறிவிச்சிட்டு வர்றாங்க. அதில் சில விஷயங்களுக்கு மட்டும் கொஞ்சம் எதிர்ப்பு இருக்கு. எதிர்க்கணுமேங்கறதுக்காக மட்டுமே விஷயம் புரியாம எதிர்க்கறவங்களை எல்லாம் புறக்கணிச்சிட்டு எல்லா சீர்திருத்தங்களையும் அமல்ப்படுத்தி GDP வளர்ச்சியை சீராக்குவது தான் இப்போதைய மத்திய அரசின் நோக்கம். இது தொடர்பா மன்மோகன் சிங் கொடுத்திருக்கும் விளக்கத்தில் கூட, நாட்டு நலனுக்கான சீர்திருத்த நடவடிக்கைகளில் யாருடைய மிரட்டலுக்கும் பணியமாட்டோம்னு தெளிவா சொல்லியிருக்காரு! அது ஒண்ணு தான் இப்போதைக்கு நமக்கு கிடைச்சிருக்கிற ஒரே நிம்மதி!

எப்படியும், நாம வரி ஏய்ப்பை நிறுத்தப்போறதில்லை. மளிகை கடைகள், சிறு தொழில்கள் யாரும் ஒழுங்கா கணக்கு காட்ட போறதில்லை. இருக்கிற தகவல்களை மட்டும் வெச்சு, அதை எப்படி மேம்படுத்தி வளரவைக்கிறதுங்கறதுதான் உண்மையான சவால்.

நல்லவேளையா இப்படியான ஒரு இக்கட்டான சமயத்தில் மன்மோகன்சிங் பிரதமரா இருக்காரு! வேறே யாராவது இருந்திருந்தா… நினைச்சு பார்க்கவே முடியலை!

Tuesday, September 25, 2012

FDI அலசலாம் வாங்க – பார்ட் 2



FDI அலசலாம் வாங்க எனும் நேற்றைய பதிவின் தொடர்ச்சி தான் இந்த பதிவு. நேற்று முக்கியமான பயங்களை பற்றி பார்த்தோம். இது தவிரவும் இன்னும் சில யூகமான வதந்திகள் உலவிட்டு தான் இருக்குது. அதெல்லாம் என்னென்னு பார்க்கலாம்!

பயம்4 : அந்நிய முதலீடுங்கறது மீண்டும் காலனியாதிக்கத்துக்கு வாசலை திறந்துவிடுறமாதிரி. நம்ம நாட்டை நாமளே மீண்டும் அடகு வைக்கிறோம். இங்கே வந்து லாபம் சம்பாதிச்சு அவங்க நாட்டுக்கு மொத்தமா எல்லாத்தையும் அள்ளிகிட்டு போயிடுவாங்க.

நேற்றே சொன்னமாதிரி, இது ஒரு கூட்டு தொழில். எல்லா கூட்டாளிகளுக்கும் லாபத்திலும் நஷ்டத்திலும் பங்கு இருக்கு. உள்ளூர் கூட்டாளின்னா லாபபணம் உள்ளூரிலேயே இருக்கும். வெளிநாட்டு கூட்டாளி லாபத்தை அவங்க நாட்டுக்கு எடுத்துட்டு போறான். இதில் வருத்தப்பட என்ன இருக்கு? வெளிநாட்டுக்காரன், தனது பணத்தை இங்கே முதலீடு செய்யுறான். அதன் மூலமா வர்ற லாபத்தை எடுத்துக்கறான். நஷடமானாலும் அவன் தானே ஏத்துக்கணும்?

நஷ்டம் ஆகுமான்னு கேக்குறீங்களா? இந்தியாவில் சில்லறை வணிகம் செய்யுறது ரொம்ப கஷ்டம்ங்க. நிறைய செண்டிமெண்ட்ஸ் இருக்கிற விஷயம் இது! சென்னையிலேயே பிக்பஜார், ரிலையன்ஸ் மார்ட் எல்லாம் இருந்தாலும், ரெகுலரா வாங்குற மளிகைக்கடையை மாத்தாம இருக்கிறவங்க நிறையபேரு. அதனால் தான் இப்பவும் மளிகை, தள்ளுவண்டி வியாபாரம் சென்னையில் சரியாம இருக்கு. போட்டிகளை சமாளிக்க முடியாம, திரிநேத்ரா, சுபிக்ஷா, ஸ்பென்சர்ஸ், மோர் மாதிரியான கடைகள் தட்டு தடுமாறிட்டு இருக்கிறது தெரிஞ்ச விஷயம் தானே? இப்படியான சூழலில், இந்தியாவின் வெறும் 3% மக்களை மட்டுமே நம்பி 46 நகரங்களில் மட்டுமே ஆரம்பிக்கப்படுற அந்நியமுதலீட்டு வணிகவளாகங்களால் என்ன பெரிய லாபம் வந்திரும்னு நினைக்கிறீங்க? நேரடி கொள்முதலில் கிடைக்கிற விலை குறைவு மட்டும் தான் லாபத்துக்கான கேரண்டி.

இந்த வெளிநாட்டு முதலீட்டால வளர்ச்சி பெற்ற வாகன துறையை ஒரு உதாரணத்துக்காக எடுத்துக்கலாம்.

இந்தியாவில் ஹீரோ மோட்டார்ஸ் கம்பெனிக்காரங்க மொபெட் தயாரிச்சிட்டு இருந்தாங்க. ஹீரோ மெஜஸ்டிக், ஃபாந்தர் வண்டிகள் ரொம்ப பிரபலம். ஆனா அவங்ககிட்டே பைக் செய்யுற தொழில்நுட்பமோ, வசதியோ இல்லை. 1990களில் இந்த துறையில் அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டதும், ஹீரோ மோட்டார்ஸ் கம்பெனி, வெளிநாட்டு கூட்டாளியா ஜப்பானின் ஹோண்டா கம்பெனியுடன் சேர்ந்து ஹீரோஹோண்டா கம்பெனியா உருவெடுத்தது. அதுக்கப்புறம், விதம் விதமான வண்டிகள், விலை குறைவா தரமான பைக்குகள்ன்னு சக்கைபோடு போட்டு இந்தியாவில் நம்பர் ஒன் கம்பெனி ஆச்சு. அதுமட்டுமல்லாம, ஏற்றுமதியிலேயும் முன்னணியில் இருக்கு. இதிலிருந்து வர்ற லாபம் மட்டும் தான் வெளிநாட்டுக்காரனுக்கு. வளர்ச்சி எல்லாம் நம்மாளுங்களுக்கு தான். இதே கதை தான், தமிழகத்தின் டிவிஎஸ் மோட்டார்ஸ் சுசுகி கூட்டணிக்கும், இந்தியாவின் பஜாஜ்-கவாசாகி கூட்டணிக்கும், இந்தியாவின் எஸ்கார்ட்ஸ் யமஹா கூட்டணிக்கும், மற்றும் பல பல வாகன துறை கம்பெனிகளுக்கும்.
தொழில்நுட்ப உதவி மற்றும் விரிவாக்கத்துக்கான முதலீடு தான் அந்நிய முதலீட்டுக்கான நோக்கமே தவிர, இங்கே இருக்கிற வளங்களை கொள்ளை அடிக்கறதில்லை! இன்னும் சொல்லப்போனா, எப்படி வியாபாரம் பண்றதுன்னு தெரியாம இருக்கிற இந்திய தொழில்துறைக்கு நவீன உத்திகளை சொல்லிக்கொடுத்து வளர்ச்சிக்கு கொண்டு போற வசதி இந்த அந்நியமுத்லீட்டில் இருக்கு. உற்பத்தி துறை, வாகன துறையில் இது மாதிரி நிறைய உதாரணங்களை சொல்லிக்கிட்டே போகலாம்.


சில்லறை வணிகத்தை பொறுத்தவரை, குறைவான விலையில் எப்படி தரமான பொருட்களை கொள்முதல் செய்யுறது, உணவுப்பதப்படுத்தவும், இருப்பு வைக்கவும், லாஜிஸ்டிக்ஸ், வேர்ஹவுசிங், கோல்டு ஸ்டோரேஜ் வசதிகளிலும் என்னென்ன நவீன உத்திகள் கையாள்றது என்பது மாதிரியான தொழில்நுட்ப உதவிகளும், அதற்கு தேவையான பெரும் முதலீடும் நமக்கு கிடைக்கும்.

அந்நிய முதலீடுன்னா வெறும் வெளிநாட்டுக்காரன் மட்டுமில்லை. நாமளும் உண்டு. என்ன குழப்பமா இருக்கா? ஒரு குட்டி கதை சொல்றேன்!

என் நண்பர் ஒருவர் விருதுநகர்காரர். பரம்பரை பரம்பரையா மளிகைக்கடை நடத்திட்டு வர்ற குடும்பம். கொஞ்சம் நிதி நெருக்கடி காரணமா கடைசி சகோதரரான இவர் மட்டும் வெளிநாட்டில் வேலைக்கு போனாரு. 7 வருஷம் ஆச்சு  அவர் படிச்ச படிப்பு கைகொடுக்க, அங்கேயே செட்டில் ஆகி, நல்லபடியா சம்பாதிக்கவும் ஆரம்பிச்சாச்சு. இவங்க குடும்ப கடையை விரிவு செய்யற ஐடியா வந்தது. ஆனால், இவரால் அதில் இதுவரைக்கும் முதலீடு செய்ய முடியலை. காரணம் வெளிநாட்டிலிருந்து முதலீடு வாங்கறதுக்கு FERA, FEMA ன்னு நிறைய சட்டசிக்கல்கள் இருக்கு. RBI அப்ரூவல் வேறே வேணும். அப்படியும் அதை கடனா தான் வாங்கணும். அதுக்கான நிறைய ஃபார்ம் ஃபில் பண்ணி மாசா மாசம் RBI க்கு சமர்ப்பிக்கணும். ஆனா இந்த FDI அனுமதி மூலமா, அவரும் அவருடைய சகோதரகளும் சேர்ந்து குடும்ப வியாபாரமான மளிகைக்கடையை ரொம்ப பெரிசா இப்போ விரிவுபடுத்த முடியும்னு சந்தோஷப்பட்டாரு. எந்த சட்ட சிக்கலும் இல்லாம தானே தனது பங்கு தொகையை சகோதரர்கள் கிட்டே கொடுத்து சட்ட்ப்பூர்வமான முதலீட்டாளரா ஆகிக்க முடியும்! (ஆனா, அவருடைய ஊரில் இந்த திட்டம் செயல்படுத்தப்படாது. காரணம் தமிழகம் FDI க்கு எதிர்ப்பு. அவருடைய ஊரில் 10 லட்சம் ஜனத்தொகை இல்லை!தமிழ்நாட்டை விடுங்க. மத்த மாநிலங்களில் பலருக்கு இந்த வாய்ப்பு இப்போ இருக்குல்லே?)

இப்போ இந்த வெளிநாட்டுக்காரன் வந்து கொள்ளையடிச்சிட்டு போயிடுவான்ற பூச்சாண்டியின் உண்மை நிறம் ஓரளவுக்காவது உங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.

பயம் 5 : பெரிய வணிக நிறுவனங்கள் எல்லாரும் ஏமாத்துப்பேர்வழிங்க. வரி ஏய்ப்பு செய்வாங்க. அதனால் அரசுக்கு நஷ்டம். அது நம்ம தலையில தான் வந்து விடியும்.

முதலில் நம்ம வரி விதிப்பு முறையை சுருக்கமா பார்த்திரலாம்.

வாட் வரி விதிப்பு முறை கொண்டுவரப்பட்டபின், ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் வரைக்கும் வியாபாரம் செய்யுற வணிக நிறுவனங்கள் வரி கட்ட தேவையில்லை. ஆண்டுக்கு 10 முதல் 50 லட்சம் ரூபாய் வரை வியாபாரம் செய்யுறவங்க காம்பவுண்ட் டாக்ஸ் அல்லது முழுமையான டாக்ஸ் இதில் எது வேணுமோ அவங்களே தீர்மானிச்சு அதை கட்டிக்கலாம். அரசு அதை பத்தி எந்த கேள்வியும் கேட்காது. 50 லட்சம் ரூபாய்க்கு மேல் ஆண்டு மொத்த வியாபாரம் செய்யும் வணிக நிறுவனங்கள் கட்டாயமா முழுமையான வரி கட்டியே ஆகணும். இந்த வரியையும் வியாபாரி தன்னுடைய கையில் இருந்து கட்ட தேவையில்லை. விற்பனை செய்யும்போது, நுகர்வோர்கிட்டே இருந்து வசூலிச்சு, அதை அரசாங்கத்துக்கிட்டே கொடுத்திரணும். அதாவது வரி கட்டப்போறது உண்மையில் மக்கள் தானே தவிர வியாபாரிகள் இல்லை. இது தான் இப்போ இருக்கிற வரி விதிப்பு முறை.

நான் அடுத்து சொல்லப்போற விஷயம் உங்களுக்கு ஆச்சரியமா இருக்கும். சிலர் அதத ஒத்துக்கக்கூட மாட்டாங்க. ஆனாலும் சொல்றேன். கேட்டுக்கோங்க!

இன்றைய தேதியில் அரசுக்கு மிக பெரிய வரி வருவாய் இழப்பு மளிகை கடைகளால் தான் ஏற்படுது.

அவங்க ஒவ்வொருத்தரும் சராசரியா செய்யுற வியாபாரம் ஆண்டுக்கு 10-25 லட்சம். ஆனா எதுக்குமே பில் போடுறதில்லை. கணக்கு வெச்சுக்கறதில்லை. அதனால் ஒரு நயா பைசாகூட அரசுக்கு வரி வருமானம் வரலை.

அதேநேரத்தில் ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோரோ, சூப்பர்மார்க்கெட்டோ, ஹைப்பர்மார்க்கெட்டோ எதுவா இருந்தாலும் ஒவ்வொரு விற்பனைக்கும் முறையா பில்போட்டு வரிகட்டுறாங்க. அந்த வரியை அரசாங்கத்துக்கு முழுசா கட்டுறாங்களா, இல்லை ஏய்க்கிறாங்களாங்கறது வேறே விஷயம். ஆனா முறைப்படுத்தப்பட்ட விற்பனை நிலையங்கள் மூலமா அரசுக்கு பெரிய அளவில் நுகர்பொருள் வியாபாரம் மூலமான  வரி வருவாய் வருது. இன்னைய தேதியில் தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 3 லட்சம் மளிகைக்கடைகளுக்கு மேல இருக்கு. முறைப்படுத்தப்பட்ட ஸ்டோர்கள் 15,000 சொச்சம் தான் இருக்கு. அரசுக்கு எவ்வளவு பெரிய வரி இழப்பை அவங்க ஏற்படுத்திட்டு இருக்காங்கன்றதை நீங்களே குத்துமதிப்பா கணக்குப்போட்டுப்பார்த்துக்கலாம்.

சரி, ஏன் மளிகை கடைக்காரங்க வரி கட்ட மாட்டேங்குறாங்க? இதில் அவங்களுக்கு என்ன நஷ்டம்?. சட்டப்படி பார்த்தா, ஒரு பைசா கூட மளிகை கடைகள் தன்னோட கை காசிலிருந்து வரியா கட்ட தேவையில்லையே. பொருளுக்கான பில்லை போட்டு அதுக்கான வரியையும் மக்கள் கிட்டேயிருந்தே வசூலிச்சிக்கலாம். மக்கள்கிட்டேயிருந்து வசூலிச்ச வரியை அப்படியே சிந்தாம சிதறாம அரசாங்கத்துக்கிட்டே கட்டிரணும். இது தானே சட்டம்? ஆனா, இவங்க பில்லும் போடுறதில்லை, வரியும் வசூலிக்கறதில்லை, அதனால் அரசுக்கும் ஒரு பைசா கூட வருமானம் வரலை.

இப்படி பில் போடாம வியாபாரம் பண்றதுக்கான காரணிகள் ரெண்டே ரெண்டு விஷயம் தான். ஒண்ணு, முறையா கணக்கு வெச்சா, லாபம் எவ்வளவு வருதுன்னு  தெளிவா தெரிஞ்சிரும். (அந்த லாபத்துக்கு மட்டும் இவங்க கையிலிருந்து வருமான வரி கட்டியாகணும். நீங்களும் நானும் நம்முடைய சம்பாத்தியத்துக்கு 30% வருமான வரி கட்டிட்டு இருக்கோம். இவங்க வருமான வரின்னு ஒரு சல்லிக்காசு கூட அரசாங்கத்துக்கு கட்டுறது கிடையாது!)
ரெண்டாவது, இப்படி கணக்கு வழக்கெல்லாம் முறையா மெயிண்டெயின் பண்றதுக்காக சம்பளத்துக்கு ஒரு அக்கவுண்டண்டை வெக்கணும், அவர் எல்லா பில்லையும் பாதுகாக்கணும். அரசாங்கம் கேட்கும்போது கணக்குகளை கொடுக்கணும். இந்த ரெண்டுவிஷயத்துக்கும் சங்கடப்பட்டுட்டு தான் நாட்டின் மிகப்பெரிய வரி ஏய்ப்பை மளிகைக்கடைக்காரங்க நடத்திட்டு இருக்காங்க!

எங்க ஏரியாவில் 7 மளிகைக்கடை இருக்கு. இவங்க யாரும் பில்லே போடுறதில்லை. விற்பனை வரியும் கட்டுறதில்லை. அவங்க சொல்றது தான் காய்கறிக்கான அன்றைய விலை. அதை நாம சரிபார்க்க முடியாது. அதனால் கிடைக்கிற அபரிமிதமான லாபம் எங்கேயும் கணக்கு வைக்கப்படுறதில்லை. அதனால் அந்த லாபத்துக்கு வருமான வரியும் ஒரு பைசா கூட கட்டுறதில்லை. ஆனா தினசரி பரபரப்பா விற்பனையாயிட்டு தான் இருக்கு. இதில் வர்ற லாபம் முழுமையும் அவங்களுக்கு தான். இதே ஏரியாவில் ஒரு சூப்பர் மார்கெட் / ஸ்டோர் இருந்தா, இதே வியாபாரம் அவங்ககிட்டே ஆகும். ஆனா அந்த வியாபாரத்தின் மூலம் அரசுக்கு முறையான வரி வருவாய் வரும். அதை வெச்சு மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தமுடியும்.

ஒரு அரசாங்கம் மக்கள் நலதிட்டங்களை செயல்படுத்தணும்னா பணம் வேணும். அரசாங்கத்துக்கு நாலு வழிகளில் தான் பணம் வருது. வரி வருவாய், வட்டி வருவாய், கடன், மத்திய அரசு/உலகவங்கி மானியம். இந்த பணங்களை வெச்சு தான் நமக்கான திட்டங்களை செயல்படுத்துறாங்க.
மக்கள் தினசரி மளிகைபொருட்களை, காய்கனிகளை வாங்கிட்டு தான் இருக்காங்க. ஆனால், அதை மளிகை கடையில் வாங்குறதால் அரசுக்கு வரி வரமாட்டேங்குது. அதையே முறைப்படுத்தப்பட்ட கடைகளில் வாங்கினா, அரசுக்கு வரி வருவாய் வரும். நிதிபற்றாக்குறைய சமாளிக்கணும்னா, வரிவருவாயை உயர்த்தியாகணும். 

இப்போ அரசாங்கங்கள் நிதிப்பற்றாக்குறைன்னாலே யோசிக்காம வரிஉயர்வை அறிவிச்சிடுறாங்க. ஏற்கனவே வரி கட்டிட்டு இருக்கிறவங்களுக்கு இதனால் கூடுதல் வரி உயர்வு. வரியே கட்டாம இருக்கிற இந்த மளிகை கடை மாதிரியான செக்மெண்டுக்கு சலுகைகள்னு ஒரு ஏற்றத்தாழ்வான நிலையில் சமூக பொருளாதாரம் இருக்கு. இதை மாற்றணும்னா, முறைப்படுத்தப்பட்ட கடைகளை அதிகப்படுத்தி, மக்கள் தினசரி செய்யுற மளிகை செலவுக்கு உரிய நியாயமான வரிகளை வசூலிச்சு வருவாயை அதிகப்படுத்தவேண்டிய நிர்ப்பந்தத்தில் இப்போ எல்லா அரசாங்கங்களும் இருக்கு.

இப்போ உங்களுக்கு யார் வரி ஏய்ப்பு செய்யுறாங்கன்ற விஷயமும், எதுக்காக மளிகைக்கடைகள் இப்போ படபடக்கிறாங்கன்னு ஓரளவுக்கு உங்களால யூகிக்கமுடியும்னு நினைக்கிறேன்!

நமக்கான தேவைகளுக்காக அரசை கேள்வி கேட்கிற நாம, அரசின் நிதி நிலைமைக்காக நாம நியாயமா செய்யவேண்டிய கடமைகளை செஞ்சு தானே ஆகணும்?

சரி, இனி, இதே தொடர்ல, அந்நிய முதலீடு காரணமா ஏற்படக்கூடிய விவசாய டிமாண்டு, மாற்று விவசாயம், விவசாய வளர்ச்சி பற்றியெல்லாம் அடுத்த பதிவில் சுருக்கமா பார்க்கலாம்.

Printfriendly