Monday, February 13, 2017

பதவிப்ரமாண இழுபறி - ஆளுநர் செய்வது சரியா?

தமிழக அரசியல் ஒரு வித்தியாச நிலையில் இருக்கிறது.

முழு விவரங்கள் பின்னர் விவாதிக்கலாம். இப்போதைக்கு பதவி பிரமாணம் குறித்த ஆளுநர் நடவடிக்கைகள் குறித்த மிகச்சில கேள்விகளுக்கு மட்டும் எனது கருத்துக்களை கேட்ட நண்பர்களுக்காக இப்பதிவு.


கே: ஆளுனர் செய்வது சரியா?

ப: தவறு. இப்போதைக்கு சசிகலாவை முதல்வராக்கிருக்கணும். அவரிடம் தான் மெஜாரிட்டி. கேஸ் தீர்ப்பு அல்லது கட்சியில் பிளவு எல்லாம் எதிர்காலத்தில் வரும் என எதிர்பார்க்கப்படும் ஊகம் தான். அதை அப்போது பார்த்துக்கலாம்.

இந்த நிமிஷம் 129 எம்.எல்.ஏக்கள் அவரிடம் இருக்கு. ஓ.பி.எஸ் தான் முதல்வரா வரணும்னு நமக்கு ஆசை இருந்தாலும் அவர் இதுவரை தன்னை ஆதரிக்கும் எம்.எல்.ஏக்கள்னு ஒரு 117 பேர் பட்டியலை கொடுக்கவேயில்லை. அப்போ ஆளுநருக்கு என்ன பிரச்சனை?

***
கே: ஆளுநர் ஃப்ளோர் டெஸ்ட் நடத்தணுமா?

ப: தேவையேயில்லை. ஓ.பி.எஸ் தனது தரப்பு எம்.எல்.ஏக்கள் என 30 பேருக்கு மேல் லிஸ்ட் தந்தா தான் அது அவசியம்.

யாரிடம் அதிக எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள் என்கிற குழப்பமாவது வந்திருக்கணும். அல்லது உல்லுலாயிக்காவது தனக்கு இத்தனை பேர் ஆதரவு இருக்குன்னு ஓ.பி.எஸ் பட்டியல் கொடுத்திருக்கணும். அந்த சோழல்களில் தான் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தணும்

***
கே: ஆளுநர் மீது இப்போ வழக்கு போடமுடியுமா?

ப: நிச்சயமா முடியாது. ஆறு மாதம் வரை அவருக்கு அவகாசம் இருக்கு. அவருக்குள்ள தனி அதிகாரத்தின்படி அவர் எப்போது வேணும்னாலும் முடிவு எடுக்கலாம்

***
கே: காபந்து முதல்வருக்கு மீடியாவை தாக்கியவர்களை தண்டிக்க அதிகாரம் இருக்கா?

ப: இருக்கு. அவர் தான் இப்போதும் முதல்வர்.
சட்டப்படி ஒரு மாநிலத்தை ஆள்வது ஆளுநர் மட்டுமே. அவரால் எல்லா துறைகளையும் பார்த்துக்க முடியாது என்பதால் தான் தனக்கு உதவி செய்வதற்காக ஒரு அமைச்சரவையை ஏற்படுத்துகிறார். அந்த அமைச்சரவை இல்லாமலும் ஆளுனர் செயல்பட முடியும். ஆனால் ஆளுனர் இல்லாமல் அமைச்சரவை செயல்பட முடியாது.

எனவே ஆளுனர் ஓ.பி.எஸ்சை தொடர்ந்து முதல்வராக பணியாற்ற உத்தரவிட்டிருப்பதால் முதல்வருக்கான அத்தனை அதிகாரங்களும் சிந்தாமல் சிதறாமல் அவருக்கு இருக்கிறது.

என்ன முன்பு தனது செயலுக்கு முதல்வர் சட்டமன்றத்துக்கு விளக்கம் சொல்லணும். இப்போ ஆளுனருக்கு சொன்னா போதும்.

போயஸ் அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வருவதோ, வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோ, அதிகாரிகளை மாற்றுவதோ..எதை வேணும்னாலும் செய்யலாம்

***

கே: ஓ.பி.எஸ் தனது ராஜினாமா கட்டாயப்படுத்தி வாங்கினது என்று சொல்லியிருப்பதால் அதி செல்லுமா?

ப: OPS ராஜினாமா செல்லுமா செல்லாதான்றது ரொம்ப சிம்பிளான விஷயம்.  இத்தனை நாள் ஆகியும் ஆளுனர் தனது உத்தரவை திரும்ப பெறலைன்றபோதே... ராஜினாமா செஞ்சது செஞ்சதுதான்னு புரியுது. அதனால் அது பிரச்சனையே இல்லை.

ஓ.பி.எஸ் ராஜினாமா செஞ்சாச்சு. புது சட்டமன்ற தலைவர் தேர்வாகி ஆட்சி அமைக்க கோரிக்கையும் கொடுத்தாச்சு. அதுக்கு மேல் இதை இழுத்தடிக்க எந்த முகாந்திரமும் இந்த நிமிஷம் வரை இல்லை.

ராஜினாமா ஏத்துக்கிட்டதை ரத்து செய்ய முடியாது சட்டப்படி. ஒரு வேளை அவர் மிரட்டப்பட்டிருந்தால் அதுக்கு ஆதாரம் வேணும். அப்படி எதுவும் இல்லை. அட்லீஸ்ட் அன்னைக்கு இரவே அவர் மற்றொரு ஃபேக்ஸ் அனுப்பி மத்தியானம் நான் கொடுத்த ராஜினாமா மிரட்டி வாங்கினது..அதை ஏத்துக்க வேண்டாம்னு சொல்லிருக்கணும்.

இப்போதைக்கு ராஜினாமா மீது எந்த சந்தேகமும் கவர்னருக்கு இல்லைன்றது தான் கவர்னரின் நடவடிக்கைகளிலிருந்து நமக்கு தெரிவது.

எல்லா எம்.எல்.ஏக்களையும் கட்டாயப்படுத்தி வெச்சிருக்கிறதா ஓ.பி.எஸ் சொன்னதையும் கவர்னர் நம்புனதா தெரியலை. நம்பிருந்தா டி.ஜி.பி மீட்டிங்கலேயே ரிசார்ட்லருந்து எல்லாரையும் மீட்டு ராஜ் பவன் கொண்டு வர உத்தரவிட்டிருப்பாரு.

ஆதனால் இவை எல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை.

***

ஓ.பி.எஸ் முதல்வர் ஆகணும்ங்கறது நம்முடைய விருப்பம்.

ஆனால் சசிகலாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்திருக்கணும்ங்கறது சட்டம்.

சசிகலா முதல்வராவதை நான் விரும்பவில்லை. அதே நேரம் சட்டம் மீறப்படுவதையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

13 நாள் வரை மட்டுமே செயல்பட்ட மத்திய அரசு இருக்கிறது. எனவே இப்போதைக்கு சசிகலாவுக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்திருக்கவேண்டும். சொ.கு.வழக்கில் சசிகலாவுக்கு எதிராக தீர்ப்பு வந்தாலோ, அல்லது ஓ.பி.எஸ் தனது ராஜினாமா குறித்த வழக்கு எதுவும் போட்டு அதில் வென்றாலோ தான் ஆளுனர் மற்றொரு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இன்றைய தினம்... இந்த நிமிஷம் .. ஆளுநர் சசிகலாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்காமல் இருப்பதற்கு எந்தவித சட்ட ரீதியான காரணங்களும் இருப்பதாக தெரியவில்லை


Printfriendly