குருகிராம் #GST முறைகேடு வழக்கு முழுசா படிச்சா தெரிவது.. GST யின் IT கட்டமைப்பு வீக்காக இருப்பது தான் காரணம் என்பது..
இதை சரி செய்ய போன வருஷம் ஒரு IT Task Force அமைத்தார்கள். அஜித் பவார் அவர்கள் தலைவர். உறுப்பினர்களில் ஒருவர் தமிழக நிதி அமைச்சர் திரு PTR அவர்கள்.
அந்த குழு இதுவரை ஒரு முறை கூட கூடவே இல்லை. ஒரு சின்ன பரிந்துரையும் வரவில்லை
குருகிராம் வழக்கு சுருக்கமா:
சில ஆடிட்டர்கள் சேர்ந்து இல்லாத நிறுவனங்கள் பெயரில் போலியாக பில்கள் தயாரித்து முறைகேடாக ITC எடுக்கிறார்கள்..
அந்த ITC ஐ refund கேட்கிறார்கள். சுமார் ₹15 கோடி
இதற்கு அதிகாரிகள் ₹7 லட்சம் லஞ்சம் கேட்கிறார்கள்
லஞ்சம் கொடுத்த பின், refund application தாக்கல் செய்து ஒன்றரை மணி நேரத்தில் ₹15 கோடி refund கொடுத்து விட்டார்கள்
இதை investigate செய்த மேல் அதிகாரிகள் சம்மந்தப்பட்ட ஆடிட்டர்கள் எல்லோரையும் விசாரித்து அதில் இருவரை கைது செய்து உள்ளார்கள்
Refund கொடுத்த அதிகாரிகள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது
இந்த மொத்த குழப்பமும் IT network இல் உள்ள குளறுபடியால் வந்தது
ITC முறைகேடான ஒன்று என்பதை realtime ல validate செய்யும் வசதி இல்லை.
Refund ஸ்டேட்மென்ட் விவரங்களை கூட return filing data உடன் reconconcile செய்ய முடியல
2B data வை 3B data வில் எளிதாக edit செய்ய முடிகிறது
3B data edit செய்ய (கூடுதல் தொகைக்கு) முடியாமல் ஒரு சின்ன validation lock இருந்து இருந்தா கூட இந்த முறைகேடு நடக்க வாய்ப்பு இருந்து இருக்காது
இனியாவது IT task force செயல்பட்டு network ஐ ஆராய்ந்து உரிய பரிந்துரைகள் கொடுத்து எல்லா ஓட்டைகளையும் அடைத்தால் தான் நல்லது