நேத்து இந்த செய்தியை படிச்சதில் இருந்து மனசை பிசஞ்சிகிட்டே இருந்துச்சு... அதான் இங்கே இறக்கி வைக்கலாம்னு... தப்பா எடுத்துக்காதீங்க....
பஞ்சாப் மாநிலத்தில் நிறைய கோதுமை உபரியா கிடக்குதாம்.. அதெல்லாம் வயலில் கொட்டி வெச்சிருக்காங்க... நல்லா கவனிங் கொட்டி வெச்சிருக்காங்க... அதை மூடி வெக்க கூட அங்கத்த அதிகாரிகளுக்கு தோணலை....
சரி எவ்வாளவு கோதுமை தெரியுமா???18 லட்சம் டன்.... கிட்டத்தட்ட 15 லட்சம் குடும்பங்களுக்கு ஒரு ஆண்டுக்கான உணவு தேவையை தீத்து வெக்கிற அளவுக்கு இருக்கு....
அட... அவனுங்களுக்கு வேணாம்னா... ஒரு கூட்ஸ் வண்டியிலே ஏத்தி இந்தப்பக்கம்.. ஜார்க்கண்டு, ஒரிஸ்ஸா, பீதார் மாதிரி மாநிலத்துக்காவது அனுப்பி தொலைச்சிருக்கலாமில்லே??? அவங்களாவது பசி ஆறி இருப்பாங்க...
இந்த நாடு நல்லா ஆகும்னு ஏதாவது நம்பிக்கை இருக்கா உங்களுக்கு??
No comments:
Post a Comment