ஏற்கனவே இந்த
தொடரின் முதல் பகுதியை இங்கே படிச்சவங்களுக்கு நான் இப்போ எங்கே போகப்போறேன்னு
நல்லாவே தெரியும். யெஸ். ராஜ்கோட்டிலிருக்கும் மகாத்மா காந்தியின் வீட்டுக்கு.
தங்கி இருந்த
நாட்களின் இடையில் ஒரு சண்டே வந்துச்சு. அன்னைக்கு ஆஃபிஷியல் வேலை எதுவும்
இல்லாததால் ஊர் சுத்த பிளான் போட்டேன். வாங்கனேர் ரயில்வே ஸ்டேஷன்லருந்து காலை
டிரெயின் பிடிச்சு நேரா ராஜ்கோட். ரயில்வே ஸ்டேஷன்ல சில பல ஃபோட்டோ எடுத்துட்டு
ஜெனெரல் கம்பார்ட்மெண்ட் கோச்சில் ஃபுட்போர்ட் பயணம்.
ராஜ்கோட் வந்து
இறங்கியதும் லைட்டா ஒரு டீயை சாப்ட்டுட்டு, ஆட்டோ பிடிச்சு காந்தி வீட்டுக்கு போக சொன்னா, திரு திருன்னு முழிக்கிறாங்க. யாருக்குமே தெரியலை. எனக்கே கொஞ்சம் டவுட்
ஆயிருச்சு. ராஜ்கோட்ல தானே வீடு, இல்லை போர்பந்தர்லையான்னு.
போர்பந்தர்ல பிறந்தாரு ஆனா வளர்ந்தது, கல்யாணம் பண்ணி
குழந்தை குட்டிகளோட வாழ்ந்ததெல்லாம் ராஜ்கோட்ல தான்னு என் சிற்றறிவு கண்பார்ம்
பண்ணினதால், என் ஃபோன்ல இருக்கும் ஹியர் மேப்பை கேட்டேன்.
அந்த வீட்டுக்கு பேரு ‘கபா காந்தி நோ டேலோ’. அது கடைவீதில ஒரு குறுகலான சந்துக்குள்ளே இருக்குனு மேப் சொல்லி அங்கே
போறதுக்கான ரூட்டையும் சொல்லிச்சு. ஆட்டோ அண்ணன்ட்ட லெஃப்ட் போங்க ரைட்டு போங்கன்னு
இன்ஸ்டிரக்ஷன் கொடுத்து கொடுத்து ஒரு வழியா வீட்டுக்கிட்டே போயிட்டேன். காந்தி
வீடு இருக்கிற ‘சந்து’க்குள்ளே ஆட்டோ
போக முடியாது. அதனால கார்னர்ல இறங்கி கொஞ்ச தூரம் நடந்தேன்.
வீட்டை பார்த்ததும்
கொஞ்சம் சங்கடமா இருந்துச்சு. ஒரு நாலடி அகல வீதியில் இருக்கு அந்த வீடு.
வீட்டுக்கு பக்கத்துலேயே ரொம்ப கேவலமான ஒரு பொது கழிப்பிடம். துர்நாற்றம் தூக்கலா
இருந்துச்சு. சுத்தி சின்ன சின்ன கடைங்க. எங்கே பார்த்தாலும் வெற்றிலை பீடா
துப்பல்கள். ஜனங்க பரபரப்பா போயிட்டும் வந்திட்டும் இருக்காங்க. ஆனா அந்த வீடு
வெறிச்சோடி கிடந்தது. வீட்டுக்குள்ளே நுழைஞ்சதும் ஒரு பழைய காலத்து தண்ணீர் பம்ப்.
விசாலமான முற்றம். நேர்த்தியாக பராமரிக்கப்பட்ட எளிமையான வீடு. ரொம்ப நீட்டா
மெயிண்டேயின் பண்ணி வெச்சிருக்காங்க.
ஒரே ஒரு கைடு இருக்கார். ரொம்ப வயசானவர். காந்தி பத்தி சொல்லும்போது அவ்வளவு பெருமிதம் அவருக்கு. ஒவ்வொரு அறையா பொறுமையா கூட்டிட்டு போனார். ஒவ்வொரு அறை, ஃபோட்டோ, கருவிகள் பத்தியெல்லாம் நிறைய சுவாரஸ்யமான வரலாறுகளை சொன்னார். கேக்க கேக்க ரொம்ப சிலிர்ப்பா இருந்துச்சு. காந்தியின் அறைக்குள் நுழைஞ்சப்ப, இந்த இடத்துல தானே மகாத்மா நடந்தாரு, இங்கே தானே உக்காந்திருப்பாரு, இங்கே தானே படிப்பாருன்னெல்லாம் நினைக்க நினைக்க உடம்பெல்லாம் ஒரு விதமான சிலிர்ப்பு. அதை அங்கே போயி அனுபவிச்சா தான் தெரியும். வார்த்தைகளில் எல்லாம் வடிக்க தெரியலை எனக்கு. அவரது புத்தக அலமாரியை அப்படியே வெச்சிருக்காங்க. அவர் படிச்ச புத்தகங்கள் இருக்கு. அவர் பயன்படுத்தின கை ராட்டை இருக்கு. நிறைய அபூர்வமான புகைபடங்கள் இருந்துச்சு. அதை எல்லாம் பார்த்து முடிச்சு வெளி வரும் பொது அங்கே நம்ம கருத்துக்களை சொல்ல ஒரு ரிஜிஸ்டர் வெச்சிருந்தாங்க. சும்மாவே நாம கருத்து சொல்றதுல கில்லி. கருத்து சொல்லுங்கன்னு கேட்டா சும்மா இருப்போமா என்ன? கருத்தை பதிவு செஞ்சிட்டு சில ஃபோட்டோ எல்லாம் எடுத்துட்டு கிளம்பினேன்.
ஒரே ஒரு கைடு இருக்கார். ரொம்ப வயசானவர். காந்தி பத்தி சொல்லும்போது அவ்வளவு பெருமிதம் அவருக்கு. ஒவ்வொரு அறையா பொறுமையா கூட்டிட்டு போனார். ஒவ்வொரு அறை, ஃபோட்டோ, கருவிகள் பத்தியெல்லாம் நிறைய சுவாரஸ்யமான வரலாறுகளை சொன்னார். கேக்க கேக்க ரொம்ப சிலிர்ப்பா இருந்துச்சு. காந்தியின் அறைக்குள் நுழைஞ்சப்ப, இந்த இடத்துல தானே மகாத்மா நடந்தாரு, இங்கே தானே உக்காந்திருப்பாரு, இங்கே தானே படிப்பாருன்னெல்லாம் நினைக்க நினைக்க உடம்பெல்லாம் ஒரு விதமான சிலிர்ப்பு. அதை அங்கே போயி அனுபவிச்சா தான் தெரியும். வார்த்தைகளில் எல்லாம் வடிக்க தெரியலை எனக்கு. அவரது புத்தக அலமாரியை அப்படியே வெச்சிருக்காங்க. அவர் படிச்ச புத்தகங்கள் இருக்கு. அவர் பயன்படுத்தின கை ராட்டை இருக்கு. நிறைய அபூர்வமான புகைபடங்கள் இருந்துச்சு. அதை எல்லாம் பார்த்து முடிச்சு வெளி வரும் பொது அங்கே நம்ம கருத்துக்களை சொல்ல ஒரு ரிஜிஸ்டர் வெச்சிருந்தாங்க. சும்மாவே நாம கருத்து சொல்றதுல கில்லி. கருத்து சொல்லுங்கன்னு கேட்டா சும்மா இருப்போமா என்ன? கருத்தை பதிவு செஞ்சிட்டு சில ஃபோட்டோ எல்லாம் எடுத்துட்டு கிளம்பினேன்.
குஜராத்துல இல்லாம
வேறே ஏதாவது மாநிலத்துல இருந்திருந்தா அந்த வீடும் இடமும் எவ்வளவு முக்கியத்துவம்
கொடுத்து பிரமாதமா பராமரிச்சிருப்பாங்கன்னு ஏக்கமா இருந்துந்துச்சு. ஏன்னே தெரியலை, குஜராத்காரங்களுக்கு காந்தின்னாலே ஒரு
கடுப்பு மாதிரி தோணுது. நான் சந்திச்சு காந்தி பத்தி காந்தி வீடு பத்தி விசாரிச்ச
யாருமே அதில் அவ்வளவா சுவாரஸ்யம் காட்டலை. அந்த வீட்டில் இருந்த கைடு கூட சொன்னாரு, யாரும் இங்கே அதிகமா வர்றதில்லைன்னு. அந்த அளவுக்கு அவர் ஏன் அங்கே இருட்டடிப்பு
செய்யப்படுறார்ன்னே தெரியலை.
வெளியே வந்து பஜார்ல ஒரு ரவுண்ட் அடிச்சேன். எல்லா கடையிலேயும் இப்ப ரொம்ப பரபரப்பா விற்பனை ஆகிட்டு இருக்கிறது மோடி கோட் தான். விதம் விதமா கோட்டுகள் தொங்கிட்டு இருக்கு, ஒவ்வொரு கடைலயும். பொதுவா நம்ம ஊர்ல கிடைக்கிற துணிகளை எதுக்கு அங்கே போயி வாங்கணும், அங்க மட்டுமே கிடைக்கிற துணிகளா வாங்கலாம்னு முடிவு பண்ணி பஜாரை அலச ஆரம்பிச்சேன். கடைசியில் மகளுக்கு சில சோளிகளையும், குழந்தைகளுக்கான குஜராத் பாரம்பரிய கலாச்சார உடைகளையும் வாங்கிட்டு கிளம்பினேன்.
மதிய சாப்பாட்டுக்கு
வழக்கம் போல ரோட்டோர கையேந்தி பவனில் ரொட்டியும் கறியும் சாப்பிட்டுட்டு
ராஜ்கோட்லருந்து வாங்கனேருக்கு மீண்டும் ஒரு ரயில் பயணம். அதே வறண்ட பூமி, காய்ந்த பருத்தி வயல்கள், தரிசு நிலம் வழியா அதே பயணம்.
இரண்டொரு நாளில் ஏன்
வேலை முடிஞ்சிருச்சு. இனி கிளம்ப வேண்டியதுதான்னு முடிவு பண்ணினது 23 ஆம் தேதி
சாயந்தாரம் ஏழு மணி. 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ்க்கு வீட்டுக்கு போயிரணும்னு பிளான்.
டிக்கெட்ஸ் பார்த்தா ராஜ்கோட் – சென்னை செம ரேட்டு. எல்லாமே ஹாலிடே சீசன் புக்கிங்
போல. வேற ஆல்டெர்நேட்டிவ் ஆப்ஷன்ஸ் பார்த்தேன். அகமதாபாத்லருந்து பெங்களூருக்கு 24
ஆம் தேதி காலைல 8:55 க்கு ஒரு இண்டிகோ இருந்துச்சு. இதுவரைக்கும் நான் இண்டிகோல
போனதில்லை. ரேட்டும் ரொம்ப நியாயமா இருந்துது (Rs.10,450). அதனால் புக் பண்ணிட்டேன். இப்ப நேரம் ராத்திரி
எட்டு மணி. காலைல 7 மணிக்கு நான் அகமதாபாத் ஏர்போர்ட்ல இருக்கணும். எப்படி போறது? இது தான் அடுத்த கேள்வி.
ரூமை செக் அவுட் பண்ணிட்டு
ஒரு ஆட்டோ பிடிச்சு நேரா வாங்கனர் ரயில்வே ஸ்டேஷன் போனேன். நடு ராத்திரி 12:18
க்கு சோம்நாத் எக்ஸ்பிரஸ் இருக்கு. அது ஒரு நாலு மணி சுமாருக்கு அகமதாபாத்
போயிரும். அதை தவிர வேறு வழி இல்லை. ஸ்டேஷன்லயே டேரா போட்டு உக்காந்தேன். செம
குளிரு. பத்து மணிக்கு அப்புறம் உடம்பெல்லாம் நடுங்க ஆரம்பிச்சிருச்சு. கால் மணி
நேரத்துக்கு ஒரு தரம் டீ சாப்பிட்டு சாப்பிட்டு உடம்பை மேனேஜ் பண்ணி
வெச்சிருந்தேன். ரயில் கரெக்டா 12:25க்கு வந்துச்சு. இந்த டிரெயின் சோம்நாத்
கோவிலிலிருந்து வர்றதால பக்த மகா ஜனங்கள் செம கூட்டம். கால் வெக்க கூட இடமில்லை.
அடிக்கிற குளிருக்கு ஃபுட் போர்டு கூட அடிக்க முடியாது. அப்படி இப்படி சமாளிச்சு
கிடைச்ச கேப்ல தரைல பேப்பர் விரிச்சு உக்காந்து பயணிச்சேன். மூனரை மணி நேர பயணம்.
நாலு மணிக்கெல்லாம் அகமதாபாத் வந்துச்சு. பரபரப்பான சிட்டி அகமதாபாத். அங்கே நிறைய
பார்க்க வேண்டி இருந்தாலும் எனக்கு டைம் இல்லை. ஒரு ஆட்டோ பிடிச்சு ஏர்போர்ட்
போனேன். முன்னூறு ரூபா ஆச்சு. ஜாஸ்தியா தெரியலை. அவ்வளவு தூரம் இருந்துச்சு
ரயில்வே ஸ்டேஷனுக்கும் ஏர்போர்ட்டுக்கும். ரொம்ப அருமையான சாலைகள். ரெண்டு
பக்கமும் கார்டன்ஸ். அழகான நகரம் அகமதாபாத். ஏர்போர்ட்டுக்கு உள்ளே போனா
ஆட்டோவுக்கு பார்க்கிங் டோக்கன் போடணும்னு வெளிலயே இறக்கி விட்டுட்டாரு.
பிரமாண்டமான அந்த ஏர்போர்ட்டை ரசிச்சபடி நடந்தே ஏர்போர்ட் நோக்கி போனேன்.
அன்னேரத்துலயும்
பரபரப்பா இருந்துச்சு ஏர்போர்ட். நிறைய டிபார்ச்சர்ஸ். எனக்கு 8:55 க்கு தான்
பிளைட்டு. மணி அஞ்சு தான் ஆவுது. இன்னும் நிறைய நேரம் இருக்கு. அதனால் ஏர்போர்ட்டை
முழுசா ஒரு ரவுண்ட் அடிச்சேன். பிரமாதமா கட்டி இருக்காங்க. எங்கே பார்த்தாலும்
அதானி அதானி அதானிதான். அதானியின் பெர்சனல் ஜெட்டும், மஹிந்திராவின் பெர்சனல் ஜெட்டும் அங்கே
தயாரா இருந்துச்சு. எங்கேயோ கிளம்பறாங்க போல.
ஏழு மணிக்கெல்லாம் பசிக்க
ஆரம்பிச்சிருச்சு. உள்ளேயே ஒரு ரெஸ்டாரண்ட். இண்டிகோவில் எப்படியும் டிபன்
தரமாட்டான். அதனால இங்கேயே சாப்பிட்டிரலாம்னு உள்ளே நுழைஞ்சேன். லைட்டா சாப்பிட்டு
ஹெவியா பே பண்ணிட்டு வெளியே வந்தேன். மணி 8:40 ஆச்சு ஆனா இன்னும் என் பிளைட் வர்ற
அறியோ குறியோ காணோம். மனசு திக்கு திக்குன்னு ஆயிருச்சு. ஸ்பைஸ் ஜெட் மாதிரி
இவனும் கேன்சல் பண்ணிருவானோ? அப்படி எதுனா பண்ணான்... நான் முடிஞ்சேன். அடுத்த டிக்கெட் புக் பண்ண கைல
காசு கிடையாது. வேணும்னா டிரெயின்ல தான் போகணும். டிரெயின் 34 மணிநேர பயணம்.
9:00 மணி ஆகியும்
பிளைட் வரலை. அதுக்குள்ளே இண்டிகோ கவுண்டர் முன்னாடி கூட்டம் சேர்ந்தாச்சு. நானும்
கூட்டத்தோடு கூட்டமா போயி நின்னு விசாரிச்சேன். அரை மணி நேரத்துல வந்திடும்னாங்க.
வெயிட்டிங் ஹாலில் போயி உக்காந்து என் ஃபோன்ல பிளைட் ராடார் வெப் சைட் ஓப்பன்
பண்ணி என் பிளைட் (6E-531)
531) எங்கே வந்துட்டு இருக்குனு பார்த்தேன். அகமதாபாதுக்கு கொஞ்சம் தூரத்துல
வந்துட்டு இருந்ததை பார்த்தப்பறம் தான் நிம்மதியாச்சு. ஆசுவாசப்படுத்திக்க (!) ஒரு
டீ சாப்பிட்டேன். அதில ஒரு 60 ரூபா காலி.
சரியா 9:25 க்கு
பிளைட் வந்துச்சு. போர்டிங்க் செக்மெண்ட் செக்மென்ட்டா அனுப்பினாங்க. 9:40 க்கு
கிளம்பி பெங்களூர் வந்து இறங்கினப்ப மணி 11:45. ஆக்சுவலா 11:05க்கு
வந்திருக்கணும்.
இந்த பிளைட் A320 வகையில் லேட்டஸ்ட்டா வெளியாகி இருக்கும் ஷார்க்லெட்ஸ் மாடல். இந்தியாவிலேயே ஷார்க்லெட்ஸ் விமானங்களை முதல் முதலா இண்டிகோ தான் வாங்க்கிச்சு. புத்தம் புது பிளைட். அருமையா இருந்துச்சு பயணம். வழக்கமா ஏர்பஸ்ஸில் இருக்கும் வைபிரேஷன் சுத்தமா இல்லை. கேப்டன் நாங்க போற ரூட்டை சொல்லிட்டே வந்தாரு. கொஞ்சம் ஜாலியான பேர்வழி போல. சுவாரசியமா இருந்துச்சு அவருடைய அறிவிப்புகள்.
பெங்களூர்
வந்திறங்கி அங்கிருந்து KaSRTC மூலமா ஷாந்திநகர் வந்து நம்ம SETC மூலமா வீடு வந்து
சேர்ந்ததெல்லாம் இந்த பதிவுக்கு சம்மந்தமில்லாத செய்திகள்.
குஜராத்.
நான் நினைச்ச மாதிரி, கற்பனை செஞ்சு வெச்ச மாதிரி, எனக்கு சொல்லப்பட்ட மாதிரி ஒரு வளர்ந்த மாநிலம் கிடையாது. ரொம்ப பின்
தங்கிய மாநிலம் தான்னு புரிஞ்சுது. தமிழகம், கேரளா, கர்நாடகா ஆந்திரா மாநிலங்களில் இருப்பவர்களுக்கு குஜராத் எந்த ஆச்சரியத்தையும்
தராது. ஆனா பீகார், ஒரிஸ்ஸா,
ஜார்க்கண்ட், சட்டீஸ்கார் போன்ற மாநிலத்திலிருந்து வந்து
பார்க்கிறவங்களுக்கு குஜராத் சொர்க்கலோகம் மாதிரி தெரிஞ்சிருக்கலாம். குஜராத்தை
ஆண்டவர்களும் அதிகமா தென் மாநிலங்களில் பயணம் செஞ்சதில்லைன்னு நினைக்கிறேன்.
அதனால் தான் இன்னமும் குஜராத் ரொம்ப பிரமாதமான மாநிலம்னு பிரச்சாரம் பண்ணிட்டு
இருக்காங்க.
மிக பெரிய தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்பு இருக்கிற மாநிலம். சுகாதாரம், கல்வி ரெண்டையும் மேம்படுத்தினா மாநிலம் உயரத்துக்கு போக வாய்ப்பு
Full Photos
உங்க ப்யண்ம் மூலம் நானும் குஜாராத் பற்றி அறிந்து கொண்டேன் எனக்கும் அங்கு போகும் ஆசை உண்டு சகோ!
ReplyDeleteஉங்கள் பயணத்தினால் காந்தியின் வீடு எமக்கு பார்க்க கிடைத்தது. குஜராத்பற்றியும் அறிந்துகொண்டோம். நன்றி.
ReplyDeleteஅருமையா இருக்கு உங்க பதிவு. இனிய பாராட்டுகள்.
ReplyDeleteநாங்க போர்பந்தர் கீர்த்திமந்திர்தான் போனோம். காந்தி பிறந்த வீட்டுக்கு!
ராஜ்கோட்லே ஒரு நாள் தங்கி இருந்தபோதும் அங்கே காந்தி வாழ்ந்த வீடு இருக்குன்னே தெரியாததால் போகலை:( அவர் படிச்ச பள்ளிக்கூடத்தைப் பார்த்துட்டு வந்தோம்.
உள்ளூர் சரக்கு விலை போகாது என்பது காந்திக்கும் பொருந்தும் போல. அருமையான பயணக் கட்டுரை. குஜராத் நிலைமையை அரசியல்வாதிகள் சொல்லும் போது கணிக்க முடியவில்லை. நீங்கள் கூறும் போதுதான் உண்மையை உணர முடிகிறது.
ReplyDeleteSUPER JI
ReplyDelete