W.R வரதராஜன்... மார்க்சிஸ்ட் கம்மியூனிஸ்ட் கட்சியின் மிக மிக முக்கியமான தலைவர்.. தமிழகத்தில் மார்க்சிச்டின் முகம்.. கட்சியின் மத்திய குழுவின் பிரதான உறுப்பினர்.. தொழிற்சங்கமான CITU வின் தலைவர்...
அவரை ஒருவாரமாக காணோம்!
எங்கே போனார்.. என்ன ஆனார் எந்த தகவலும் இதுவரை இல்லை! இரண்டு கடிதங்கள் எழுதிவைத்து இருக்கிறார் வீட்டில்... ஒன்றில் கம்மியூநிச்ட்டு சாகமாட்டான் என்று எழுதி இருக்கிறார்... மற்றொன்றில் சாவு எல்லாவற்றையும் விட மேல் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.... இரண்டு கடிதங்களுக்குமான இடைவெளி ஐந்து நாட்கள்.
தமிழக காவல்துறை அவரை தேடிக்கொண்டு இருக்கிறது..
இப்படியான தலைமறைவுக்கு என்ன காரணம்... அவரே அவரது கடிதத்தில் எழுதி இருப்பதை போல, "கட்சியிலும் அரசியலிலும் எத்தனையோ பிரச்சனைகளை வெற்றிகரமாக சமாளித்து இருக்கிறேன்.. ஆனால் வீட்டில் இருக்கும் பிரச்னையை என்னால் சமாளிக்க முடியவில்லை!"
அப்படி என்ன வீட்டில் பிரச்சனி? அவரது மனைவி சரஸ்வதி, மார்க்சிஸ்ட் கட்சிக்கு கொடுத்து இருக்கும் ஒரு புகாரில் வரதாராஜனுக்கு இன்னொரு பெண்ணோடு தொடர்பு இருக்கிறது (கவனிக்க: அவருக்கு 64 வயது.. ஊரறிந்த தலைவர் வேறு!) என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
கல்கத்தாவில் கடந்த வாரம் நடைபெற்ற கட்சியின் கூட்டத்தில் இது தொடர்பாக, ஒழுக்கமீறல் என்று காரணம் கூறி வரதராஜன் மீது நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது... அதில் நொந்து போயி கடந்த 11 ஆம் தேதி சென்னை வந்த வரதராஜன் எங்கே என்று யாருக்கும் தெரியவில்லை... செல் போனை வீட்டிலேயே விட்டு சென்று இருக்கிறார்...
நேற்றைய தினம், வரதராசனை கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் நிலையில் இருந்தும் கட்சி நீக்கி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. அவமானத்தை விட மரணம் மேலானது என்கிற குறளை தனது இரண்டாவது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும் வரதராஜனின் மனோ நிலையை என்னால் உணர முடிகிறது.
குடும்பங்கள் சிதைந்து போவதற்கு அடிப்படை காரணமே சந்தேக நிழல் தான் என்பது காலம் காலமாக தெரிந்த விஷயம் தான்... சாதாரணனின் வாழ்க்கையிலும் அப்படியே... பெரும் தலைவர்களின் வாழ்விலும் அப்படியே!
ஆனால், தமிழகத்தின் மிக மிக முக்கியமான அரசியல் தலைவர்களுள் ஒருவரான வரதராஜன் இது போன்ற விஷயங்களுக்காக தலை மறைவு ஆகிறார் என்பது உண்மையில் வருத்தம் தரக்கூடிய விஷயம்... இதை எளிதாக அவரே கையாண்டு இருக்கலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து... அரசியல், சட்டம், காவல் போன்ற அனைத்து துறைகளிலும் அவரை மதிக்கும் எத்தனையோ அதிகாரிகள் இருக்க, நல்லபடியாகவே விஷயத்தை முடித்திருக்க முடியும் என்று தோன்றுகிறது...
அப்படி இருந்தும், அவர் தலை மறைவாக சென்று இருக்கிறார் என்றால் அவருக்கு எத்தகைய மன உளைச்சல், மன நெருக்கடி இருந்திருக்கவேண்டும் என்பதை சிந்தித்து பார்க்கவே முடியவில்லை.
குடும்பத்தில் அமைதி நிலவ செய்யும் கடமையில் இருந்து பலரும் விலகி செல்வதன் விளைவுகள் விபரீதமானவை என்பதை வரதராஜன் தலைமறைவு தெளிவாக காட்டுகிறது...
வரதராஜன் எங்கே இருந்தாலும் நலமுடன் இருக்கவேண்டும், தமிழக அரசியல் அரங்கம் அச்சப்படுவது மாதிரி, அவர் தவறான எந்த முடிவும் எடுத்திருக்கக்கூடாது என்று வேண்டுகிறேன்.
http://www.newsofap.com/newsofap-6313-25-cpm-veteran-wr-varadarajan-missing-newsofap.html
ReplyDeletehttp://expressbuzz.com/edition/story.aspx?Title=Veteran+communist+leader+missing&artid=EBMLtFwAWVY=&SectionID=lifojHIWDUU=&MainSectionID=lifojHIWDUU=&SectionName=rSY%7C6QYp3kQ=&SEO=CPI(M)%20leader,%20W%20R%20Varadarajan
விரைவில் வீடு திரும்பட்டும்!
ReplyDeleteஇதை எளிதாக அவரே கையாண்டு இருக்கலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து..//
ReplyDeleteஅவரது சூழ்நிலை எத்தகையது என்றறியாமல் நாம் கருத்துத் தெரிவிப்பதும் முறையாக இருக்காது..!!
மேலும் கம்யூனிஸ்ட் கட்சியிலும் அவர் மேல் நடவடிக்கை எடுத்திருக்கும் நிலையில், அவரது தலைமறைவு பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது..!!