Saturday, April 9, 2016

ஜெ. வழக்கு – இப்போதைய ஆப்ஷன்ஸ் – பாகம் 4

சுப்ரீம் கோர்ட் மேல்முறையீட்டு வழக்கில் கிட்டத்தட்ட முக்கிய வாதங்கள் எல்லாம் முடிஞ்சுபோச்சு. இனி தீர்ப்பு தான் பாக்கி. இப்போதைய நிலைமையில் யூகிக்க எம்புட்டு விஷயம் இருக்கும்?? ஒண்ணொண்ணா பாக்கலாமா?

முதலில் முக்கியமான ரெண்டு விஷயத்தை சொல்லிடுறேன். அப்பாலிகா ஜாலியானா ஜிம்கானானு யூக கற்பனைகள் செய்யலாம்.

விஷயம் நெம்பர் 1.

ஜெ.வை சிறையிலிருந்து வெளிக்கொண்டு வர அவசரம் அவசரமா களம் இறக்கப்பட்டு வெற்றிகரமா அவரை வெளியேவும் கொண்டுவந்த புகழ் பெற்ற வழக்கறிஞர் திரு ஃபாலி நாரிமன் அவர்கள், இந்த மேல் முறையீட்டு மனு விசாரணையில் ஜெ. சார்பாக வாதாடுவார்னு எல்லோரும் எதிர்பார்த்திருக்க, அவர் இதில் ஜெ. சார்பா வாதாடாமல் ஒதுங்கி நின்னதே சுப்ரீம் கோர்ட் வட்டாரத்தில் பல விவாதங்களை கிளப்பி விட்டிருக்கு.

நாரிமனின் இந்த நிலைப்பாடே இந்த வழக்கின் தன்மைக்கான ஆக பெரும் சான்றுன்னு எல்லாரும் சொல்றாங்க. அப்படி நாரிமன் தன் நடவடிக்கையால் மறைமுகமா முடிவு செஞ்ச இந்த வழக்கில் ஜெ. சார்பா வாதாட வேறு யாரும் முன் வராததாலயோ என்னவோ நாகேஸ்வரராவ் வாதாடிட்டு இருக்கார்.

இன்னொரு பக்கம், நீதி நிலைநாட்டப்படனும், தவறான தீர்ப்பு திருத்தப்படணும்னு பல வக்கீல்களும் கருத்து சொல்லிட்டு இருக்க, மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே கர்நாடகம் சார்பாகவும், அந்தி அர்ஜுனா திமுக சார்பாகவும் வாதாடுறாங்க.

இந்த விஷயமே இந்த வழக்கு குறித்த நிபுணர்களின் பார்வையை தெள்ள தெளிவா புரிய வெச்சிருக்கு.

விஷயம் நெம்பர் 2.

திமுக இந்த வழக்கில் தன்னை வாதாட அனுமதிக்கணும்னு கேட்டதுக்கு, அதெல்லாம் ஒண்ணும் வேணாம். சும்மா டைம் வேஸ்டு. வேணும்னா நீங்க சொல்ல வேண்டியதை மனுவா எழுதி கொடுத்துருங்க. நாங்க படிச்சிக்கறோனு நீதிபதிகள் சொன்னது, திமுகவுக்கு டோட்டல் டேமேஜ்.

ஒரு வகையில் இது நியாயமே கிடையாது. வழக்கை இவ்வளவு தீவிரமா நடத்துனதும், ஒரு கட்டத்தில் நீர்த்து போன வழக்கை உயிர்க்கொடுத்து இழுத்துட்டு வந்ததும் திமுக தான். ஆனா அவங்களுக்கு வாதாட வாய்ப்பு மறுக்க படுவது எதை எதையெல்லாமோ நினைக்க வைக்குது. அப்படி என்ன தான் அவசரம் நீதிமன்றத்துக்குனு தெரியலை.

டைம் வேஸ்டு தான் காரணம்னா எல்லாரையும் மனுவாவே எழுதி கொடுக்க சொல்லி இருக்கலாமே? வாதாடவே வேண்டாமே? மத்தவங்க எல்லாம் வாதாடலாம், பாயிண்ட்ஸ் சொல்லலாம், ஆனா திமுக சொல்ல கூடாதுன்னு சொல்றது சம் கைண்ட் ஆஃப் டிஸ்கிரிமினேஷன் யூ நோ?

திமுகவின் வாத உரிமையை மறுத்தது பல சந்தேகங்களை பலமா கெளப்புது.இனி வாதங்கள் முடிவடஞ்ச இப்போதைய நிலையில் இந்த வழக்கு என்ன ஆகும்?

சுப்ரமணியம் சுவாமியின் ஒரே ஒரு நாள் வாதத்தில் வந்த விஷயங்களிலேயே வாயடைச்சு போன நீதிபதிகள், குற்ற தன்மையை உணர்ந்து குன்காவின் தீர்ப்பை உறுதி செய்யலாம்

துஷ்யந்த் தவே விவரிச்ச விஷயங்களில் குன்ஃகா விட்டுப்போன குற்றங்களையும் சேர்த்து வெச்சு கூடுதல் தண்டனையை கொடுக்கலாம்

நாகேஸ்வரராவ் சொன்ன மாதிரி வருமான வரி கட்டப்பட்ட தொகை எல்லாம் நியாயமானவைதான்னு முடிவு செஞ்சு குமாரசாமி தீர்ப்பை உறுதி செஞ்சு ஜெ. விடுதலையை நியாயப்படுத்தலாம்.

பல பல விஷயங்கள் இன்னும் தெளிவடையாம இருப்பதால் மீண்டும் முதலில் இருந்தே வழக்கை விசாரிக்க உத்தரவிடலாம்.

சுப்பிரமணியம் சுவாமி வாதாடுகையில் 1991-96 கால கட்டம் மட்டும் அல்லாம 2001-06, 2011-16 ஆகிய பீரியடுகளிலும் ஜெ.வின் சொத்து மதிப்பு அபரிமிதமா உயர்ந்ததை சுட்டி காட்டியதால் அதையும் சேர்த்து விசாரிக்க சொல்லலாம்.

திமுகவை ஒதுக்கி வெச்சதை வெச்சு பார்த்தா தேர்தலுக்கு முன் ஜெ.வை சட்டப்படியா விடுதலை செய்து எந்த பிரச்சனையும் இல்லாம தேர்தலை சந்திக்க நீதிமன்றம் உதவலாம்.

இப்படி பல பல பல யூகங்கள்.

ஆனா, எனக்கு புரியாத ஒரே விஷயம். இந்தியா முழுக்க ஒரே சட்டம்னா, கீழ் கோர்ட், High கோர்ட், சுப்ரீம் கோர்ட்ல எல்லாம் ஒரே வழக்கு ஒரே ஆதாரம் ஒரே வாதங்களுக்கு எப்படிய்யா டிசைன் டிசைனா மாறி மாறி தீர்ப்புகள் வருது?

கேட்டா.. இது இந்தியா.. இங்கே எல்லாமே சாத்தியம் தான்பீங்க.


எல்லா தீர்ப்புகளும் நீதியை பொறுத்தது அல்ல, நீதிபதிகளை பொறுத்ததே! (நோட் பண்ணிக்குங்கப்பா.. இது என் சொந்த தத்துவம் தான்!)

இந்த வழக்கையும் அந்த லிஸ்ட்ல தான் பார்க்க வேண்டி இருக்கு. அதனால் என்ன வேணும்னாலும் (அடிக்கோடிட்டு இன்னொரு தபா வாசிச்சுக்காங்க) என்ன வேணும்னாலும் நடக்கலாம். எதையும் யூகிக்கவே முடியலை.

அதனால இப்படி விதம் விதமா யூகிக்கதை விட்டுட்டு போய் புள்ள குட்டிய பொழக்க வெக்கலாம்.


சம்மர் வெகேஷன் முடிஞ்சு எலக்சன் முடிஞ்சு தீர்ப்பு வரும் வரைக்கும் வெயிட் பண்ணுவோம். வாங்க.


*************


தொடர்புடைய பதிவுகள்:

1. ஜெ விடுதலை தீர்ப்பு - அலசல்

2 comments:

  1. Dear Satish
    I also thought the same - how can there be different judgements ? Anyway, good that you are giving your views at appropriate times.

    ReplyDelete
  2. நீதிபதிகள், வக்கீல்கள் மனிதர்கள். இருவரும் சட்டத்தை ஒரே மாதிரியாக புரிந்து கொள்ளவேண்டும். ஆனால் அது நடப்பதில்லை. பல நீதிபதிகள் நிதி பெற்று தீர்ப்பை தன் விருப்பபடி எழுதலாம்.(அவரவர் எடுத்து கொண்ட உறுதி மொழியை மீறி, இன்று பலரும் அவரவர் துறையில் மீறுகின்றனர். குடும்பம் உண்டு, இன்னோவா வேண்டும் என்று நினைக்கலாம்) தீர்ப்பை மாற்ற, நீதிபதியை மாற்ற பல வழிகள் உண்டு ஆனால் எல்லாமே கால விரயம், பண விரயம். ஜெ வழக்கும் அப்படியே. ஒரு தவறுக்கு நான்கு ஆண்டு தண்டனை என்றால் அதில் உள்ள குறுக்கு வழிகளை பயன் படுத்தி நீதிபதி இரண்டு ஆண்டாக குறைக்கிறார். வெளி நாடுகளில் நீதிபதிகள் அவ்வாறு செய்ய அஞ்சுவார்கள். சட்டத்தில் இடமில்லை என்பார்கள். தண்டனை அனுபவித்தே தீர வேண்டும் என்பார்கள். சமுக அக்கறை உண்டு. இங்கு பார்பான் என்ன தவறு செய்தாலும் தப்ப விடுவார்கள். கேதன் தேசாய் என்பவர் எவ்வளவோ ஊழல் செய்தும் இன்றும் சுகபோகமாக உள்ளார். மேலும். சட்டத்தில் ஒரு பரிட்சை 'iterpretation of statues' என்பது. இது மிக முக்கியமான ஒன்று. கடைசி ஆண்டில் வரும். இதில் சட்டத்தை எப்படி பொருள் கொள்ள வேண்டும் என்று சொல்லி தருவார்கள். இதில் பல சந்து பொந்துகள் உள்ளன. பெரும்பாலும் இதில் உள்ள அமசங்களை சுப்ரீம் கோர்ட் பெரிய வழக்கறிஞர் பயன்படுத்துவர். இதில் உள்ள வாதங்களை கீழ் கோர்டில் பார்க்க முடியாது. மூளை கொழுத்த வக்கில்கள் வாதாடினாலும் நேர்மையான நீதிபதியிடம்(குன்ஹா போல்) எதுவும் செல்லுபடியாகாது. அதே சமயம் சிறு வக்கீல் வாதாடினாலும், சிலர் தானாக முன் வந்து ஜாமீன் அளிப்பார்கள். எத்தனையோ அவசர வழக்கு இருந்தாலும் வழக்கை கடைசி நேரத்தில் கடும் அவசரம் காட்டி,வாதங்களை கேட்காமலேயே விடுவிப்பார்கள். இப்போதும் திமுக வாதத்தை ஏற்க முன் வாராதது மிக அவலம். இது போன்ற உரிமைகள் நீதிபதிக்கு உண்டு. அப்படி எனில் எதற்கு ஜெவின் வாதத்தையும் கேட்க வேண்டும்? அவர்கள் வாதமும் உள்ளதே. இதே போல் ஜெவிற்கு ஏற்படிருந்தால் உலகமே நின்று போகும் படி ஊடகங்களும் பார்ப்பானும் கூவி இருப்பார்கள். இவ்வளவு தவறு செய்து விட்டு இவ்வளவு காலம் இழுத்தடித்து விட்டு பிறகும் அவர்கள் செய்த ஊழல் குறைவானது என்று விடுதலை செய்தது மிக அரிய ஒன்று. இது போல் யாரையாவது செய்திருந்தால் ஊடகங்கள் மற்றும் பார்ப்பான் சும்மா இருந்திருப்பனா? இதே போல் ஒரு காமுகன் மட தலைவராக இருப்பதால் கொலை வழக்கில் அவர்கள் இன பெண் எழுத்தாளரே வாக்கு மூலம் தந்தும் விடுவிக்கக்பட்டார்.
    இப்போதும் பார்ப்பனீயம், ஊடகங்கள் தன்னால் இயன்றவரை இந்த வழக்கை நிர்மூலமாக்க எல்லாம் செய்யும். சூரியன் மேற்கே உதிக்கும் அதிசயம் நிகழுமா?? வாரன்ட் பாலா நாட்டில் உள்ள கோர்ட்,நீதி பற்றி எளிமையாக பல புத்தகம் எழுதி உள்ளார். அதில் பல இடங்களில் நிதிபதி என்றே குறிப்பிடுவார்.

    ReplyDelete

Printfriendly