Monday, January 18, 2010

தேதிக்காக காத்திருக்கும் ரயில்வே!



தமிழகத்தில் பல பல ரயில் திட்டங்கள் ஒரு வழியாக நடைபெற்று வந்து கொண்டு இருக்கிறன.  அவை பயன்பாட்டுக்கு வரும்போது தான் மக்களுக்கு உபயோகமாக இருக்கும் என்பதால் பல திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன.  ஆனால் வித்தியாசமாக சில விஷயங்களையும் நான் அறிய நேர்ந்தது... அது உங்களுடன் பகிர்ந்துகொள்வதற்காக!

முழுமையாக பணிகள் முடிவடைந்தும் வி.ஐ.பிக்களின் தேதிக்காக காத்திருக்கும் இரண்டு திட்டங்கள் குறித்து பார்ப்போம்.

விழுப்புரம் - கடலூர் - சிதம்பரம் - மயிலாடுதுறை மார்க்கம் மீட்டர் கேஜ் பாதையில் இருந்து அகல ரயில்பாதையாக மாற்றும் பணிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று இப்போது முடிவும் பெற்று விட்டது.  மெயின் லைன் என்று சொல்லப்படும் அந்த வழி தடம் மிக மிக முக்கியமான நகரங்கள் வழியாக பயணித்து, சென்னைக்கும், தேன் மாவட்ட நகரங்களுக்கு நேரடி இணைப்பை தந்து கொண்டு இருக்கிறது. 

அகல ரயில் பாதை பணிகளுக்காக போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பேருந்துகளை மட்டுமே நம்பி இருக்கின்றன அந்த நான்கு மாவட்டங்களும்!  இந்நிலையில் பணிகள் முடிவடைந்தும் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்படாமாலேயே காத்து கிடக்கிறது புதிய ரயில் பாதை.  இப்போதைக்கு சரக்கு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன.  பயணிகள் ரயில் "முறையான" துவக்க விழாவுக்கு பின் பயணிக்கும்!

அதேபோல, விழுப்புரம் - திருச்சி பாதை மின் மாயம் ஆக்கப்பட்டு சரக்கு ரயில் போக்குவரத்து நடைபெற்று கொண்டு இருக்கிறது. எனினும், பயணிகள் ரயில் போக்குவரத்து வி.ஐ.பிக்களால் முறையாக துவக்கி வைக்கப்படும் என்று எதிர்பார்க்க படுகிறது!

தேதிக்காக ரயில்வே காத்திருப்பதால் மக்களுக்கு திட்டங்கள் காத்து கிடக்கிறது. 

1 comment:

  1. இன்றைய தினம், திருச்சியில் நடைபெற்ற விழாவில் "விழுப்புரம் - திருச்சி" இடையிலான மின்பாதை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. மத்திய ரயில்வே இணை அமைச்சர் திரு.ஈ.அஹமது அவர்கள் மின்வழித்தடத்தை துவக்கி வைத்து இருக்கிறார்.
    ****************
    அப்பா, தேதி கிடைச்சிருச்சு!

    ReplyDelete

Printfriendly