நாகை மாவட்டத்தில் நடந்த கோர விபத்தில் பள்ளி குழந்தைகளுடன் போராடி மரித்த ஆசிரியை சுகந்தி பற்றி அறிந்திருப்பீர்கள்!
அந்த சம்பவம் பற்றி காண இங்கே சொடுக்கவும் . அந்த சின்ன பெண்ணின் வீரத்தை மெச்சி புளகாங்கிதம் அடைந்த தமிழகம்.. அவரது குடும்பத்தினருக்கு வீடும், நஷ்டஈடும், நினைவு சின்னமும் அறிவித்து பெருமை பெற்றது.
விபத்து நடைபெற்ற விஷயம் - சுகந்தி பற்றிய குறிப்புக்கள் - இணையத்தில் உலவ விட்ட மறு நாளே அரசு சார்பில் தொடர்பு கொண்ட ஓர் உயர் அதிகாரி, சுகந்திக்கு வீர தீர செயலுக்கான விருது வழங்கப்படும் என்று தனிப்பட்ட முறையில் என்னிடம் தெரிவித்து இருந்தார். இது குறித்தும் விபத்துக்கு பின் என்கிற எனது கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறேன்.
இப்போது வரும் குடியரசு தின விழாவை முன்னிட்டு அரசு நேற்றைய தினம் வெளியிட்ட ஒரு செய்தி குறிப்பில், சுகந்திக்கு அண்ணா விருது வழங்கப்படுவதாக அறிவித்து இருக்கிறது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு இப்போது வந்திருக்கிறது என்றாலும், அரசு அப்படி ஒரு விருதை கொடுத்து அவரை கவுரவிக்கும் என்கிற உத்திரவாதத்தை ஏற்கனவே நான் பெற்று இருந்தேன். சொன்னதை செய்தும் காட்டி இருக்கிறது அரசு.
தமிழகத்தின் வீரம் இன்னும் ஒருமோரை அங்கீகரிக்கப்பட்டு இருக்கிறது...
கண்ணீர் துளிகளோடு அஞ்சலி... அந்த ஆசிரியைக்கும்... அவருடன் மறைந்த குழந்தைகளுக்கும்!
No comments:
Post a Comment