Wednesday, April 11, 2018

மோஹன் தாஸா? மோஹன் லாலா?

பிரதமரின் டங் ஸ்லிப்கள் பிரசித்தம். அதிலும் ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் 'டங் ஸ்லிப்'பாக சொல்வதில் அவர் கில்லி

எடப்பாடி ஸ்டாலின் எல்லாம் ஒரே விஷயத்தில் மீண்டும் மீண்டும் ஸ்லிப் ஆகும் அளவுக்கு இன்னும் தரம் தாழலை

மஹாத்மா காந்தியை 'மோஹந்தாஸ் கரம்சந்த் காந்தி' என சொல்வதற்கு பதிலாக ஒவ்வொரு தடவையும் "மோஹன்லால்" கரம்சந்த் காந்தி என்றே சொல்லி வருகிறார் நம் பிரதமர்.


அவர் சார்ந்த இயக்கத்தை பொறுத்தவரை காந்தி ஆகாதவராக இருந்தாலும், அவர் இப்போது பிரதமராக இருப்பதால் அவர் மரபுகளையும் மரியாதைகளையும் மீறாமல் இருக்கவேண்டும் என்பது தான் முறை.

ஒரு முறை தவறினாலே திருத்திக்கொள்ளும் நம் தலைவர்கள் மத்தியில் பலமுறையாக ஒரே தவறை செய்து வரும் பிரதமரின் செயல் எதேச்சையானதா தெளிவாக செய்ததா என்பது விவாதிக்கவேண்டிய விஷயம்

அல்லது அவரது இயல்பான ஆர்வமான சினிமா மீது கொண்ட தீராத காதலின் காரணமாக, சினிமா பிரபலங்கள் மீதான அதீத ஆர்வம் காரணமாகக்கூட மோஹந்தாஸ் என சொல்ல வருகையில் மோஹன்லால் என சொல்லி இருக்கலாம்.

எது எப்படியோ, பிரதமர் பதவிக்கு என உள்ள ஒரு மரியாதையை அவர் இனியாவது காப்பாற்றிக்கொள்ளவேண்டும் என்பது எல்லோருடைய ஆவல்

ஸ்டாலின் எடப்பாடி போன்றோருக்கு எதேச்சையாக டங் ஸ்லிப் ஆகி உடனே அடுத்த செகண்டே அதை திருத்தி சொன்னாலும் கூட எள்ளி நகையாடி கைகொட்டி சிரித்து கேலி செய்து பதிவுகள் இட்ட நடுநிலை நண்பர்கள் பிரதமரின் விஷயமாக மௌனம் காப்பது ஏன் என்பதை நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டும் என்றில்லை. அவர்களது மனநிலை என்ன என்பதை இங்குள்ளோரும், மக்களும், நன்கு அறிவார்கள்!

பிரதமர் பீஹாரில் பேசிய லேட்டஸ்ட் வீடியோ.. இதோ இந்த ட்வீட்டில்

https://twitter.com/GauravPandhi/status/983752677116010496

2 comments:

  1. ஸ்டாலினுக்கு ஒரு தடவையா டங் சிலிப் ஆகி இருக்கு ? எப்போ ஸ்டாலினுக்கு ஆகாம இருந்திருக்கு ?
    மாணவி சரிதா என்று ஒரு தடவை சொல்லிச்சு அதை அது திருத்தவேயில்லை
    அதுக்கு பழமொழி எல்லாம் தப்பு தப்பா சொல்லிச்சு ... திருத்த வேயில்லை
    .
    ஆனால் எட ப் பாடியை வாழைப்பாடி என்று சொல்லி அப்புறம் திருத்தி சரியாக சொல்லிச்சு

    .
    நாட்டின் சுதந்திர தினத்தையே தப்பாக சொன்ன ஒரே டலிவர் ஸ்டாலின் தான்

    ReplyDelete
    Replies
    1. ஒரு தடவை என்பது, ஒரு விஷயத்தில் ஒரு முறை ஸ்லிப் ஆனால், அதை உடனே திருத்தி கொள்கிறார். மீண்டும் அதே விஷயத்தில் ஸ்லிப் ஆனதில்லை.

      ஆனால் பிரதமர், காந்தியின் பெயரை இதுவரை நான்கு முறை அதே ஸ்லிப் ஆக்கி இருக்கிறார். அதனால் தான் அது ஸ்லிப்பா வன்மமா என்கிற கேள்வி எழுகிறது

      நன்றி!

      Delete

Printfriendly