Friday, July 6, 2012

கிரந்தம் தவிர்த்த தமிழ்!

மீப காலமா இணைய வெளிகளிலும் இதர வெளிகளிலும் திடீர்னு எல்லாருக்குமே ஒரு இன்ஸ்டண்ட் தமிழுணர்வு வந்து பாடா படுத்திட்டு இருக்கிறதை பார்த்திருப்பீங்க!

தமிழ்நாட்டில் பல பேருக்கு படிப்பறிவே இல்லை. இன்னைக்கு தேதிக்கு 76% தான் கல்வி அறிவு இருக்கு. அதில் 32% தான் பட்டதாரிகள். அந்த பட்டதாரிகளுக்கும் தெளிவா முழுமையா தமிழ் தெரிஞ்சவங்க சதவீதம்னு பார்த்தா 12% போல தான் இருக்காங்க.தமிழே முழுமையா இலக்கண சுத்தமா தெரியாத நிலையில் தனித்தமிழ் கோரிக்கை முழக்கம் ஏன்? முதலில் இந்த கிரந்தம் தவிர்த்த தனித்தமிழ் னா என்ன?

வடமொழி சொல்லை தான் கிரந்த எழுத்துக்கள்னு சொல்றோம். (ஜ..ஷ, ஹ, மாதிரியான எழுத்துக்கள்) தமிழ் மேலே பற்று இருக்கிறவங்க இந்த எழுத்துக்களை எல்லாம் பயன்படுத்தாம தவிர்க்கணும்ங்கறது இன்ஸ்டண்ட் தமிழுணர்வாளர்களின் முழக்கம். அப்போ அவங்களுக்கு அடிப்படையே தெரியலைன்னு தானே அர்த்தம்?

தமிழ் மொழி சொற்களில் கிரந்தம் வர வாய்ப்பே இல்லை. கிரந்த எழுத்துக்கள் வந்தாலே அது தமிழ் சொல் இல்லை. இது தான் அடிப்படை. ஆனா, இவங்க வாதம் என்னன்னா, நாங்க தமிழல்லாத வடமொழி சொற்களை உபயோகப்படுத்துவோம் ஆனா அதில் கிரந்த எழுத்துக்களை அனுமதிக்கமாட்டோம். நல்லா இருக்குல்ல? இப்படி தான், விசித்திரமான விதண்டாவாதம் நடத்துறதில நம்ம ஆளுங்களை அடிச்சிக்கவே முடியாது  இதுக்கு ஒரு உதாரணம் சொல்றேன். என் நண்பர் ஒருத்தர் இருக்காரு. அவர் பெயர் ஜெயராஜன். திடீர் தமிழ் உணர்வால தன் பெயரை செயராசன்னு எழுதுறாரு. ஜ என்கிற கிரந்த எழுத்தை தவிர்த்து ச என்கிற தமிழ் எழுத்தை உபயோகப்படுத்துறாராம். நல்லது. நான் முன்னேயே சொன்ன மாதிரி தமிழ் சொற்களில் கிரந்த எழுத்து வர வாய்ப்பில்லைங்கறதை கவனிச்சா, ஜெயராஜன் என்கிற பெயரே தமிழ் இல்லை. ராஜன் என்கிற பெயர் தமிழாக இருந்தால் ஜ வர நியாயமே இல்லை. ராஜ் என்பதன் மரூஉ தான் ராஜன் என்பது. அதே மாதிரி, ஜெய என்பதும் வட மொழி சொல். அடிப்படை சொல்லே தமிழ் இல்லை. ஆனால் கிரந்தத்தை தவிர்த்து தமிழுணர்வு நிலைநாட்டி இருக்காரு..இதே மாதிரி தான் பாக்கியராஜனை பாக்கியராசன், ரமேஷ்குமாரை ரமேசுகுமார்னெல்லாம் மாத்தி மாத்தி வெச்சிட்டு தன் தமிழுணர்வை காப்பாத்திக்கிறாங்க. அட, என் பேரையே பலரும், சதீசு குமாருன்னு தான் எழுதி இம்சை பண்றாங்க.

சரி, நாம இனி கொஞ்சம் அலசலுக்கு வருவோம்.


திருக்குறள் முழுமையா தமிழில் எழுதப்பட்டது. (தனித்தமிழ்னு ஒண்ணு இல்லைங்கறதால நாம அந்த வார்த்தையை புறக்கணிச்சிடலாம். தமிழ்னாலே தமிழ் மட்டும் தான்!) முதல் குறளை தவிர வேறே எந்த குறளிலும் பிறமொழி சொல் கலப்பு இருக்காது. பிறமொழி சொல் கலப்பு இல்லைன்னாலே கிரந்தம் வராது. முதல் குறளில் மட்டும் ஆதி பகவன் னு ரெண்டு வட மொழி சொற்கள் இருக்கு. வள்ளுவர் காலத்தில் வடமொழி இல்லை. அதனால் இது பிற்காலத்தில் திருத்தி நுழைக்கப்பட்டதா இருக்கும்னு எனக்கு ஒரு டவுட்டு ரொம்ப காலமா இருக்கு. அது தனி கதை. நாம மேட்டருக்கு வருவோம்!
திருவள்ளுவரால் கிரந்தம் தவிர்த்து எழுத முடிந்ததற்கு காரணம், அவர் தமிழ் மொழியை மட்டுமே பயன்படுத்தியது தான். இப்போதைய இன்ஸ்டண்ட் தமிழுணர்வாளர்களை மாதிரி, வடமொழியை பயன்படுத்துவேன், ஆனா அதில் கிரந்தம் வராமபார்த்துக்குவேன் என்கிற மாதிரியான விசித்திர கொள்கை எல்லாம் அவருக்கு கிடையாது!

அதே மாதிரி தான் அவ்வையாரும். அவரது செய்யுள்களிலும் தமிழ் மட்டுமே இருக்கும். ஆனா, தமிழ் வளர்த்ததா சொல்லப்படும் அகஸ்திய மாமுனியின் செய்யுள்களில் வடமொழி கலப்பு இருக்கு! காரணம் அவர் பிற்கால முனி, அவரது பெயரே அகஸ்தியன் என்கிற வடமொழி தான். (அவரு எப்படி தமிழை வளர்த்தாருன்னெல்லாம் குதர்க்கமா கேள்வி கேட்கப்படாது!)
சரி, அப்படின்னா, தமிழ் மொழியில் மட்டுமே எழுதுறது சாத்தியமா?

இதுக்கு நான் துணைக்கு அழைக்க வேண்டியது இரண்டு பேரை. முதலில் சுஜாதா.

சுஜாதா அழகா ஒரு புத்தகத்தில் சொல்லி இருப்பாரு. எல்லாத்தையும் தமிழ் படுத்த தேவையில்லை. தமிழ் என்பது மிக மிக சிறுபான்மையான மொழி. அதனால் தமிழ் மொழி மட்டுமேன்னா ரொம்ப கஷ்டம். உதாரணமா வேதியியல் படிக்கும்போது சல்ஃபூரிக் ஆசிடுன்னு படிக்கிறதில் தப்பில்லை. அதை மெனக்கெட்டு மொழிபெயர்த்து கந்தகிஜ அமிலம்னு படிக்க ஆரம்பிச்சா அவனால் பொது போட்டியில் ஈடுபடமுடியாது, புரியவும் புரியாதுன்னு சொல்லி இருக்காரு.

இன்னொருத்தர், கலைஞர்.

கோர்ட்டுகளில் தமிழில் வாதாட அனுமதி வேணும்னு வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திட்டு இருந்த போது, ஒரு நீதிமன்ற விழாவில் கலைஞர் பேசும்போது சொன்னார், எல்லாவற்றையும் தமிழ் படுத்தியே ஆகவேண்டும் என  பிடிவாதம் பிடிப்பது சரியல்ல. கோர்ட் நீதிமன்றம் ஆகலாம், ஜட்ஜ் நீதிபதி ஆகலாம்,ஜட்ஜ் தரும் ஜட்ஜ்மெண்ட் தீர்ப்பு ஆகலாம், ஜட்ஜ்மெண்ட் எழுத பயன்படும் பேனா, மையூற்று எழுதுகோல் ஆகவேண்டிய அவசியமில்லை, அது பேனாவாகவே இருந்துவிட்டு போகட்டும்னு அழகா சொன்னாரு.
அதாவது பெயர்கள், பெயர்ச்சொல்கள், பிறமொழி சொற்களை எல்லாத்தையும் வலுக்கட்டாயமா தமிழ்மொழியாக்கம் செய்ய தேவையில்லைங்கறது தான் பலருடைய கருத்து.

என்னை கேட்டால், முதலில் தமிழ் மொழியை முழுமையா படிக்க முயற்சி பண்ணுங்க. பல பேருக்கு தமிழ் இலக்கணமே தெரியாது. கலிவிருத்த ஆசிரியப்பான்னா என்னன்னு கேட்டாலே கதி கலங்கிடுறாங்க. முதலில் தமிழை வளர்க்கணும்னா, தமிழுணர்வாளரா இருக்கணும்னா, தமிழ் இலக்கணங்களையும், இலக்கியத்தையும் பத்தி முழுமையா தெரிஞ்சுக்கணும். தாய்மொழியே தெரியாத மனுசங்களா நாம தான் இருப்போம்னு நினைக்கிறேன். அடிப்படை இலக்கணமே தெரியாம எங்கத்த போயி நாம அடுத்த தலைமுறைக்கு அட்வைஸ் பண்றது. தமிழை சிந்தாம சிதறாம நாம காப்பாத்தி அடுத்த தலைமுறைக்கு கொண்டு போகணும்னா, தமிழிலக்கணத்தை எல்லாரும் தெரிஞ்சுகிட்டா தானே முடியும். முதலில் இலக்கண பயிற்சி, அப்புறம் கூடுமானவரைக்கும் எளிய தமிழ் சொற்களாலான உரையாடல்னு இருந்தாலே தமிழ் வளரும்.

அதை விட்டுட்டு நாங்க தமிழ் சொல் பயன்படுத்தமாட்டோம், வடமொழி சொற்களை பயன்படுத்துவோம், ஆனா அதில கிரந்தம் வராம தவிர்ப்போம், ஏன்னா நாங்க தமிழுணர்வாளர்கள் னு வசனம் விடுறவங்களை எல்லாம் உதாசீனப்படுத்துறது நல்லது!

5 comments:

  1. உங்கள் கருத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன், எனக்கும் இந்த தமிழ் உணர்வாளர்களைப்பற்றி இப்படியான தோற்றமே வருகிறது.

    ReplyDelete
  2. கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழன் செய்து கொண்டுவரும் ஒரே காரியம், தனித்தமிழ் என்று இம்சை கொடுப்பது தான்.

    ஒரு பொருளையோ, ஒரு அறிவியல் விஷயத்தையோ கண்டுபிடித்தால் அதற்கு தமிழில் பெயர் சூட்டி மகிழலாம்.

    எல்லாத்துக்கும் மேலை நாட்டவர்களை நம்பியே பழகிபோய்விட்டதால், தமிழ்ப் படுத்தி அழகு பார்க்க வேண்டியிருக்கிறது.

    கலைஞருக்கு அது அரசியல்.

    ReplyDelete
  3. தமிழ் தானாக வளர்ந்தாலும் இவங்க கீழ புடிச்சு இழுத்து விட்ருவாங்க போல... :) நல்ல கட்டுரை.

    ReplyDelete
  4. பிற மொழிச் சொற்களை ஏற்றுக் கொள்ளும் ஆங்கிலம் அதற்கேற்ப புதிய எழுத்துகளை உருவாக்கிக் கொள்கிறதா?

    சானகி, இலக்குவன், விபீடணன் என்றெல்லாம் எழுதிய கம்பனைப் படித்தது இல்லையா?

    ReplyDelete
  5. திருக்குறள் குரல் பற்றிய உங்களது கருத்திற்கு ...!

    எங்கேயோ படித்த ஞாபகம்... இப்போது அதற்கான link -ஐ தேடி பார்த்தேன், கிடைக்கவில்லை.. கிடைத்தால் கண்டிப்பாக இங்கே பகிறுகிறேன்..!

    இப்போ, உங்கள் கதைக்கு வருவோம்.

    நீங்கள் கூறி உள்ளது போல, திருக்குறள் கலப்படம் இல்லாத இலக்கியமே. உங்கள் ஐயம் முதல் குரலில் உள்ள பகவன் என்பதாகும் என்றே நான் கருதி என் கருத்தை பதிவு செய்கிறேன். அவ்வாறாக இல்லையெனில் dot . ;)

    முதல் குரலில் வரும் பகவன் என்பது பகலன் என்வாகவும் இருக்கலாம் என்பது சிலரது கருது. காரணம்: நமக்கு சொல்லி கொடுத்ததை போல, ஆதி அவருடைய அப்பா பெரும் அல்ல, பகவன் என்பது அவரது தாயார் பெரும் அல்ல. திருவள்ளுவர் வணங்க நினைத்தது இந்த உலகிற்கெல்லாம் power source ஆகா விளங்கும் கதிரவனையே.! நமது மொழி ஆராய்ச்சியாளர்கள் ஒரு வேலை ல்-கரத்தை வ-கரமாக படித்து இருக்கலாம். அல்லது, அந்த ஓலை சிறிது அழிந்து இருக்கலாம். அதனால் அது வ-கரமாக மாறி இருக்கலாம்.

    ஆகையால், திருக்குறளில் மொழி கலப்பு இல்லை என்பதை நீங்கள் நம்புவீர்களாக.. :-D

    by the way, a nicely well written article. I know its quite sometime to say this, but i happened to lay my eyes on this article only today.!

    ReplyDelete

Printfriendly