நேற்றைய எனது பதிவை பார்த்தவர்களுக்கு முன்னுரை தேவையிராது! மற்றவர்கள் ஒரு நடை அதை படித்து விட்டு வருவது நலம்!
நேற்றைய தினம், மறைந்த மழலைகள் அடக்கம் செய்யப்பட்டனர்... கண்ணீர் அஞ்சலியோடு..
தீர செயல் புரிந்து உயிர்நீத்த ஆசிரியை சுகந்தியின் உடல் தகனம் செய்யப்பட்டது...
*********
மதிமுக தலைவர் திரு வைகோ அவர்கள் சுகந்தியின் செயல்கள் பற்றி பாராட்டி (வழக்கம் போல கொஞ்சம் லேட்டாக தான்) அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்... !
வேறு எந்த இயக்கமும் கண்டுகொள்ளாத நிலையில், மதிமுக சுகந்தியின் தீரத்தை அங்கீகரித்து இருப்பது ஆறுதல் அளிக்கிறது....
*********
அரசு தனது திடீர் நடவடிக்கையை தொடங்கி உள்ளது!
வேதாரன்னியம் விபத்து தொடர்பான பள்ளிக்கூடத்தை உடனடியாக மூடும்படி மாவட்ட கலெக்டர் உத்தரவு!
மறைந்த மழலைகளுக்கு உதவி தொகை வழங்கப்பட்டது...
தீர செயல் புரிந்து மறைந்த ஆசிரியை சுகந்தி குடும்பத்தாருக்கு அரசு சார்பில் வீடு அறிவிக்கப்பட்டு இருக்கிறது!
(நேற்று தனிப்பட்ட முறையில் என்னிடம் பேசிய அரசு உயர் அதிகாரி ஒருவர், வரும் குடியரசு தினத்தில் சுகந்திக்கு வீர தீரத்துக்கான விருது வழங்க ஆவன செய்யப்படும் என்று சொன்னார்.... முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரக்கூடும் என்று தகவல் தந்திருக்கிறார்.... அதுவரை... உஷ்!)
சென்னை மற்றும் தமிழகம் முழுதும் "பள்ளி வாகனங்கள்" (மட்டும்?) நேற்று அதிரடியாக சோதனை செய்யப்பட்டன...
முறையான ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன! 83 ஆட்டோக்கள் 20 வேன்கள் இவற்றில் அடக்கம்! ரூ.79,150 அபராதமாக வசூலிக்கப்பட்டது!முறையான லைசன்ஸ் இல்லாமல் டூ வீலரில் வந்த பள்ளி மாணவர்கள் 16 பெரும் சிக்கினர்.
*********
இன்னொரு துயர செய்தி.... இன்று காலை தினத்தந்தியில் வந்திருந்தது! (சென்னை பதிப்பு! பக்கம் 4)
காரைக்குடி அருகே திருமயத்தில் தனியார் பள்ளிக்கு சொந்தமான வேன் நேற்று கவிழ்ந்து 13 மாணவர்கள் காயம் அடைந்து இருக்கின்றனர்.
சோகமான செய்தி !!
ReplyDeleteமறைந்த குழந்தைகள் மற்றும் சுகந்தியின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்..
சீமாச்சு..
http://seemachu.blogspot.com