சலங்கை ஒலிலருந்து ‘இது மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்..’ பாட்டு வந்ததும் என் நண்பருக்குள்ளே இருந்த விமர்சகர் திடீர்னு வெளியே வந்துட்டாரு.
‘இந்த பாட்டுல எஸ்.பி. ஒரு தப்பு பண்ணிருப்பாரு..தெரியுமா?’ன்னு என்னை கேட்டாரு. இல்லைன்னேன்.
இந்த பாட்டுல ஒரு வரி வரும். “பாதை தேடியே பாதம் போகுமோ..”ன்னு. லாஜிக்கா அது சரியா தானே வந்திருக்கு? ஆனா ஆக்சுவல்லா அந்த இடத்தில் வந்திருக்க வேண்டிய வரி “பாதம் தேடியே பாதை போகுமோ”வாம்.
“பாதத்தை தேடி பனி நடந்து போவது போல்...
சீதப்பூ நீ நடந்து போகிறாய்"னு வைரமுத்து ஒரு கவிதைல எழுதிருப்பாரு.
அதாவது, அவ பாதம் எவ்வளவு அழகுன்னா பாதையிலுள்ள புல்வெளி தாங்கிய பனியெல்லாம் அவள் பாதம் தான் மேல படாதாங்கற ஆசையில அவ பாதத்தை தேடி போக்குமாம். அவ்வளவு அழகான கவிதை அது.
அதையே தான் இந்த பாட்டுல, லைட்டா மாத்தி “பாதம் தேடியே பாதை போகுமோ”ன்னு கவி ரசம் சொட்ட சொட்ட எழுதிருந்தாராம்.
ஆனா அன்னைய தேதில வைரமுத்துவை விட எஸ்.பி.பி ரொம்ப செல்வாக்கான ஆளா இருந்ததால, வைரமுத்து ஏதோ தப்பா எழுட்டாப்டின்னு நினைச்சு அவராவே அதை ‘திருத்தி’ “பாதை தேடியே பாதம் போகுமோன்னு” பாடிட்டாருன்னு நண்பர் சொன்னாரு.
இன்னொரு விஷயமும் அவர் சொன்னார்.
மவுன ராகம்னு ஒரு படம். நம்ம மணி சார்து. சூப்பர் டூப்பர் ஹிட்டு. ராஜா சார் மீசிக்கு.
அதுல ஒரு பாட்டு. “நிலாவே வா.... செல்லாதே வா....” இன்னை வரைக்கும் அந்த பாட்டை அடிச்சிக்க வேற பாட்டு இல்லை. அந்த பாட்டை நல்லா கவனிச்சிருக்கீங்களா?
“ஒரே ஒரு பார்வை தந்தால் என்ன தேனே..
ஒரே ஒரு வார்த்தை சொன்னால் என்ன மானே…” ன்னு இருக்கும்.
அதென்ன பார்வைக்கு தேனே, வார்த்தைக்கு மானேன்னு நான் நிறைய தபா யோசிச்சிருக்கேன்.ஆனா அந்த பாட்டை எழுதின வாலி, லாஜிக்கா
“ஒரே ஒரு பார்வை தந்தால் என்ன மானே..
ஒரே ஒரு வார்த்தை சொன்னால் என்ன தேனே…” ன்னு தான் எழுதினாராம்.
தெரியாமலோ தெரிஞ்சேவோ எஸ்.பி.பி அப்படி மாத்தி பாடிட்டாருன்னு நண்பர் சொன்னாரு.
இன்னும் சில பாடல்கள் அவர் சின்ன சின்ன தவறுகள் செய்து பாடி, அந்த பாட்டு ஹிட்டானதாலேயே பெரிசா கண்டுக்கிடாம போனதுன்னாரு.
இதெல்லாம் உண்மையோ பொய்யோ.. யாரு கண்டா..
பாட்டை கேட்டோமா.. ரசிச்சோமான்னு போயிட்டே இருக்கணும். அதை விட்டுட்டு வரியையும் இசையையும் ஆராய்ச்சி பண்ணிட்டு இருந்தா நம்ம நிம்மதி போயிரும்.
என்ன நான் சொல்றது?
வைரமுத்துவின் பாதம் தேடிய பாதையில் ஒரு கவிதை இருந்தது. ஆனால் வாலியின் மானே தேனேவில் என்னத்தை கண்டீரோ? இந்த மானே தேனே ரவுசு மவுசு பூவு நோவு ராஜா ரோஜா கூஜா கவிதைதானே இளையராஜாவின் அந்திம காலங்களில் நம்மை இம்சை செய்தது.
ReplyDelete