இன்றைய தினம் இந்திய நீதித்துறை வரலாற்றிலேயே மிக மிக முக்கியமான நாள். இதுகாறும் இருந்துவந்த வரலாற்றை எல்லாம் புரட்டி போட்டு புதிய வரலாறு படைத்த தினம்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கொடுத்து நீதித்துறையின் மீது நம்பிக்கை கொண்டிருந்த சாதாரணனுக்கு கனத்த அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.
விஷயத்தை சுருக்கமாக பார்ப்போம்.
1991 – 96 காலகட்டத்தில் முதலமைச்சராக பதவி வகித்தபோது வருமானத்துக்கு அதிகமான முறையில் சொத்துக்கள் சேர்த்து குவித்ததாக தான் வழக்கு. அதற்கான அனைத்து ஆதாரங்களும் ஆவணங்களும் முறையாக தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றை சந்தேகமற நிரூபித்தும் இருக்கிறது தமிழக காவல்துறையின் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு பிரிவு.இந்த வழக்கை எந்த அளவுக்கு தாமதப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு தாமதப்படுத்தி, பொருந்தா காரணங்களை எல்லாம் அடுக்கி, நீதிமன்றத்தை அலைக்கழித்து (சமயங்களில் அலட்சியப்படுத்தி) கடைசியில் உச்ச நீதிமன்றமே தலையிட்டு தனது நேரடி கண்காணிப்பில் இந்த வழக்கை கொண்டுவந்து விரைவு படுத்தியது. நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள் என பலரும் மிரட்டப்பட்டு, சிலர் தானாகவும் இந்த வழக்கிலிருந்து விலகி இருக்கிறார்கள். சாட்சிகள் மிரட்டப்பட்டு பிறழ் சாட்சிகளாக மாற்றப்பட்ட நிகழ்வுகளும் நடந்தது.
//அந்த கருணையே சட்டப்படி தவறு, முழு தண்டனையும் விதிக்கப்பட்டிருக்கவேண்டும் என்கிற ஒரு கருத்தும் பரவலாக இருக்கிறது.//
ReplyDeleteஎன்கருத்தும் இதே!
மிக ஆழமாக நீதித்துறை வல்லவற்கு வளையும் போக்கைச் சாடியுள்ளீர்கள்.
இது தான் நம் நாடுகளின் சாபக்கேடு.
18 வருடம் அடிச்ச கூத்துக்கு , 10 வருடம் சிறை, முழுச் சொத்தும் பறிமுதல், வாழ்வில் மீண்டும் பொதுவாழ்வில் ஈடுபடாமல் செய்திருக்க வேண்டும். தண்டனைகள் அனைவருக்கும் படிப்பினையாக இருக்கவேண்டும்.
ஐயா குடும்பத்தையும் கூண்டோடு உள்ளே தள்ளும் நன்நாளையும் எதிர்பார்க்கிறேன்.
நீதித் துறையை அவமதிக்கவேண்டாம். அப்படியென்றால் குன்காவும் சந்திரசேகராவும் பெரும் குற்றவாளிகள் என்று கூறவும் ஒரு கூட்டம் இருக்கு. மேலே இருக்கும் கோர்ட் கூறும் தீர்ப்பே எப்போதும் முடிவானது. கருணையின் அடிப்படையில்தான் தாயாளுவின் வீட்டிற்குச்சென்று விசாரிக்க கோர்ட் அனுமதி கொடுத்தது. கொலை குற்றம் சுமத்தப்பட்ட சங்கர மட அய்யரே ஜாமீனில் வந்தார். இதில் ஜெ வந்ததில் என்ன தப்பு? சங்கர மட அய்யரை எந்தக் கருணை அடிப்படையில் ஜாமீனில் விட்டார்கள்?
ReplyDeletetamilnaaddin saabam
ReplyDelete