சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு மீண்டும் பரபரப்பாகி இருக்கு!
இது பற்றிய முடிவை மத்திய அமைச்சரவை நவம்பர் 2011ல் முடிவெடுத்தபோதே, நான் ஒரு விரிவான
பதிவு எழுதி இருக்கேன் அப்போ அந்த முடிவை ஒத்திவெச்சிருந்த மத்திய அரசு, இப்போ மீண்டும்
அதை அமல் செய்ய அரசாணை வெளியிட்டிருக்கு.
இதன் காரணமா எதிர்கட்சிகள் எல்லாம் சேர்ந்து நாடாளுமன்றத்தை முடக்கி செயல்படாம
செஞ்சு, பெரிய போராட்டமே நடந்தது. விவரம் என்னன்னே தெரியாம, பல ஊர்களிலும் போராட்டங்கள்
நடந்துட்டு இருக்கு. மம்தா இன்னும் ஒரு படி மேலே போயி மத்திய அரசுக்கான ஆதரவையே வாபஸ்
வாங்கிட்டாரு! பிரதமர் நாட்டு மக்களுக்கு டிவி மூலமா விரிவா விளக்கம் கொடுத்ததோட, அந்நிய
நேரடி முதலீடு சம்மந்தமான ஒரு விளக்க விளம்பரத்தையும் வணிக அமைச்சகம் வெளியிட்டிருக்கு.
இந்த அளவுக்கு பயப்பட இதில் அப்படி என்ன இருக்கு? ஒவ்வொண்ணா அலசலாமா?
பயம் 1: அந்நிய நேரடி முதலீடு வர்றதன் மூலம் வெளிநாட்டு நிறுவனங்கள் வந்தா
இந்தியாவிலுள்ள சிறுவணிகர்களை மொத்தமா அழிச்சிரும்!
அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதியளிச்ச மத்திய அரசு, இது 10 லட்சம் மக்கள்தொகைக்கு
அதிகமா இருக்கிற நகரங்களுக்கு மட்டும் தான்னு ஒரு கண்டிசன் வெச்சிருக்காங்க. அது படி
பார்த்தா இந்தியாவில் 46 நகரங்களில் தான் இந்த திட்டம் செயல்படும்.
அடுத்ததா, அந்நிய
முதலீட்டு நிறுவனங்களை அனுமதிக்கறதும் அனுமதிக்காம இருக்கிறதும் அந்தந்த மாநிலங்களின்
முடிவுன்னு அறிவிச்சிருக்காங்க. அதனால் இந்த 46 நகரங்களை விட மிக குறைவான நகரங்களில்
தான் இந்த திட்டம் அமலாகும்.
நம்ம தமிழ்நாட்டை பொறுத்தவரை, நாம இதை அனுமதிக்கப்போறதில்லைன்னு
நம்ம முதல்வர் ஜெயலலிதா தெளிவா அறிவிச்சுட்டாங்க. அதனால் தமிழகத்துக்கு அந்நிய நேரடி
முதலீடு வர வாய்ப்பில்லை. (அப்புறம் எதுக்காக போராட்டம்னு கேக்குறீங்களா??? தெரியலையே??
எல்லாரும் போராடுறாங்க.. நாங்களும் போராடுறோம்ங்கற கதை தான்)
சரி, அப்படியே ஒரு வேளை தமிழக அரசு இந்த திட்டத்தின் நன்மைகளை கருத்தில்
கொண்டு, அனுமதிக்குதுன்னே வெச்சுக்குவோம், சென்னை, கோவை, மதுரை தவிர வேறு எந்த ஊரிலும்
வராது. ஏன்னா தமிழகத்தில் 10 லட்சத்துக்கு மேல் மக்கள்தொகை உள்ள நகரங்கள் இவை மட்டும்
தான்!
சிறு வணிகர்கள், தள்ளுவண்டிகள், மளிகைக்கடைகள் எல்லாம் எப்போதும் அழியாது.
அழிய வாய்ப்பில்லை. இந்தியா ஒரு வளரும் நாடு. இங்கே எல்லாருக்கும் உரிய வாழ்வாதாரம்
இருக்கு. அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். டிபார்ட்மெண்டல் ஸ்டோர்கள், சூப்பர் மார்க்கெட்டுகள்,
ஹைப்பர் மார்க்கெட்டுகள் எல்லாம் வந்தபோதும் அழியாம இருந்த மளிகைகடைகள், அந்நிய முதலீட்டால்
அழிஞ்சிரும்னு சொல்றதே காமெடி தான்!
இன்னொரு வகையில் சொல்லப்போனா, கமிஷன் ஏஜெண்டுகள்கிட்டேயும், இடைத்தரகர்கள்
கிட்டேயும், மொத்த வியாபாரிகள் கிட்டேயும் அதிக விலைக்கு வாங்கி மக்களுக்கு அதிக விலைக்கு
வித்திட்டு இருக்கிற சிறு வணிகர்கள், இனி இது போன்ற பெரும் வணிகர்கள் கிட்டேயிருந்து
நேரடியா வாங்கி, அவங்க பகுதியில் விற்பனை செய்யுறதன் மூலம், வணிகர்களுக்கும், நுகர்வோருக்கும்
விலைகுறைவா பொருட்கள் கிடைக்கவும் வாய்ப்பு இருக்கு!
பயம் 2: அந்நிய நேரடி முதலீடு வந்தால், உள்நாட்டு பொருட்கள் அழிஞ்சிரும்,
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செஞ்சு நம்ம விவசாயிகளை அழிச்சிருவாங்க!
இங்கே பலரும் சொல்ற உதாரணம் KFC, Pepsi மாதிரியான நிறுவனங்களின் வருகை.
முதலில் ஒரு விஷயத்தை தெளிவா தெரிஞ்சுக்கணும். வெளிநாட்டு பொருட்கள்ங்கறது வேறே, வெளிநாட்டு
முதலீடுங்கறது வேறே. இரண்டையும் போட்டு குழப்பீட்டு சிலர் எழுதியிருக்கிற பதிவுகள்
படிச்சா கொஞ்சநஞ்ச பொருளாதார அறிவும் மறந்து போயிரும் நமக்கு! நான் சுருக்கமாவே விளக்குறேன்!
இந்தியாவில் கடை வெச்சிருக்கிற ஒருவர், தனது கடையை விரிவு செய்யணும்னா வங்கியிலிருந்து
லோன் வாங்குவாருல்ல, அது மாதிரி தான் வெளிநாட்டிலிருந்து ஒரு பார்டனரை சேர்த்துக்கறதும்.
கிட்டத்தட்ட கூட்டு தொழில் மாதிரி. வெளிநாட்டுக்காரங்க இந்தியாவில் தொழில் தொடங்க விரும்பினாலும்,
இந்தியாவிலுள்ள ஒரு வணிகரை கூட்டு சேர்த்துக்கலாம். இது தான் இந்த திட்டம். இதில் கண்டிசன்
என்னன்னா, வெளிநாட்டு முதலீடு 51% மேல இருக்கக்கூடாது!
வங்கியிலிருந்து 25% லோன் வாங்கி தொழிலை விரிவாக்குற அதே டெக்னிக் தான்
வெளிநாட்டிலிருந்து 51% முதலீடு வாங்கி விரிவு செய்யுறதும். இதன்மூலம், யார் வேணும்னாலும்
சூப்பர் மார்க்கெட் ஆரம்பிச்சிரலாம். வட்டியில்லாத கடன். லாபத்தில் ரெண்டுபேரும்
51% & 49%.
இந்த மாதிரியான திட்டம் ஏற்கனவே உற்பத்தி துறை, வாகன துறை, தொலை தொடர்பு
துறைல எல்லாம் வெற்றிகரமா இயங்கிட்டு இருக்கு! சில்லறை விற்பனை துறை இந்தியாவில் வேகமா
வளர்ந்துட்டு இருக்கிற துறை. அதை ஒழுங்குபடுத்தி, முறையாக சிஸ்டமேட்டிக்காக செயல்படுத்த
தேவையான முதலீட்டுக்கு அந்நிய கூட்டாளியை சேர்த்துக்கலாம்னு அறிவிச்சிருக்காங்க. அவ்வளவு
தான்.
இவங்க பெரும்பாலும், உள்நாட்டில் இருந்து தான் கொள்முதல் செய்வாங்க. கொஞ்சம்
பொருட்களை இறக்குமதியும் செய்வாங்க. இது ஏற்கனவே இந்தியாவில் வழக்கத்தில் இருக்கிற
விஷயம் தான். ரிலையன்ஸ், பிக்பஜார், மோர் மாதிரியாக கடைகளில் இப்போ இருக்கிற அதே சிஸ்டம்
தான்.
விவசாய பொருட்களையும், தானியங்களையும் விவசாயிகளிடமிருந்தும், தானிய உற்பத்தியாளர்களிடமிருந்தும்
நேரடியா பல்க் பர்ச்சேஸ் பண்றதால, விலை குறைவா வாங்க முடியுது. மேலும், இடை தரகர்கள்,
ஏஜெண்டுகளுக்கான கமிஷன் இல்லாததால், அந்த லாபத்தை கடைகள் பாதியா பிரிச்சு, த்னக்கு
போக மிச்சத்தை நுகர்வோருக்கு பாஸ் பண்றாங்க. இதன் காரண்மா விலைவாசி குறையும். பணவீக்கம்
கட்டுக்குள் வரும், நல்ல தரமான பொருட்கள் குறைவான விலைக்கு மக்களுக்கு கிடைக்கும்.
இதில் பாதிக்கப்படப்போறது யாருன்னா, எந்த வித முதலீடும் இல்லாம பொருட்களை வாங்கி விற்று
கைமாற்றிட்டு இருக்கிற கமிஷன் ஏஜெண்டுகள் மட்டும் தான். இப்போ மறைமுகமா போராட்டம் நடத்துறதும்
அவங்க தான்!
பயம் 3: அந்நிய நேரடி முதலீடு வந்தா விவசாயம் அழிஞ்சிரும், விளைபொருட்களுக்கு
உரிய விலை கிடைக்காது, விற்பனை விலை கடுமையா கூடிரும்!
இது முற்றிலும் தவறு. விவசாயிகளிடம் நேரடியா காய்கறிகள் கொள்முதல் செய்வதால்,
விளைச்சல் வீணாவது தவிர்க்கப்படும். மொத்தமா கொள்முதல் செய்யப்படுறதால், விவசாயிகள்
நம்பிக்கையா விவசாயம் செய்ய முடியும். மாற்று பயிர் விவசாயம், காய்கனி விவசாயங்களுக்கு
டிமாண்ட் கூடும். அதிக எண்ணிக்கையிலான வணிக நிறுவனங்கள் வரும்போது, எல்லோரும் கொள்முதலுக்காக
நிற்கும்போது, இப்போது போலல்லாமல், விவசாயபொருட்களின் விலையை நிர்ணயம் செய்யும் உரிமை
விவசாயிக்கே வந்திரும். அந்நிய நேரடி முதலீட்டை எதிர்க்கிற மம்தா பானர்ஜி ஆளும் மேற்கு
வங்காளத்தில் பெப்சி கம்பெனி, தன்னுடைய லேஸ் (Lays) சிப்ஸுக்காக உருளைக்கிழங்கு கொள்முதல்
செய்யுறாங்க. இதனால் உருளைக்கிழங்கு விவசாயம் மட்டும் 30% உயர்ந்திருக்கு. விவசாயம்
அங்கே மறுமலர்ச்சி அடைஞ்சிருக்கு. இது மாதிரி ஒடிஷா, பஞ்சாப்னு நிறைய உதாரணங்கள் இருக்கு.
அவ்வளவு ஏன், நம்ம தமிழகத்திலேயே சென்னை அருகில் திருவள்ளூரில் ரிலையன்ஸ்
விவசாய கொள்முதல் செய்யுற இடத்தை யாராவது போயி பார்த்துட்டு வந்தீங்கன்னா விஷயம் ஓரளவுக்கு
புரியும். வறண்டுகிடந்த திருவள்ளூர் மாவட்டத்தில் இப்போ காய்கனி விவசாயம் சக்கை போடுபோட்டுட்டு
இருக்கிறதை ஊத்துக்கோட்டை தாலுக்கா வழியா பயணம் பண்றவங்களுக்கு தெரியும். சுருக்கமா
சொல்லப்போனா, விவசாயத்தை மீண்டும் உத்வேகப்படுத்தற திட்டமா தான் அந்நிய நேரடி முதலீடு
வருது! எல்லா வணிக நிறுவனங்களுக்கும் காய்கறி வேணும். 1 டன் வாங்குறவனை விட 100 டன்
வாங்குறவனுக்கு விலை கம்மியா கிடைக்கும். அதே சமயத்தில் 100 டன்னுக்கு தேவை இருக்குன்றதாலேயே
விவசாயி விளைச்சலை அதிகப்படுத்துவான். தரமான பொருட்கள் மட்டும் தான் வியாபார நிறுவனங்கள்
வாங்கும்ன்றதால், விவசாயிகளும் தரமான காய்கனிகளை அதிகமான எண்ணிக்கையில் பயிர் செய்வாங்க.
விக்காம போயிருமோன்ற கவலையும் விவசாயிக்கு இருக்காது.
விலை எப்படி குறையும்ங்கறீங்களா? சுருக்கமா ஒரு கணக்கை சொல்றேன்! (ஒரு விவசாய
நண்பர் சொன்ன அனுபவ கணக்கு தான்! பயப்படாதீங்க!)
விவசாயி ஒரு கிலோ தக்காளியை 2ரூபாய்க்கு விக்கிறாரு. அதை கமிஷன் ஏஜெண்டு
4ரூபாய்க்கு விக்கிறாரு. அவர்கிட்டேயிருந்து வாங்கி கைமாத்துற மொத்த வியாபாரி அதை
6 ரூபாய்க்கு விக்கிறாரு. அதை வாங்குற சில்லறை வியாபாரி நமக்கு 8 ரூபாய்க்கு விக்கிறாரு!
இது தான் இப்போதைய நடைமுறை. எல்லோருக்கும் 2 ரூபாய் லாபம் கிடைச்சிருது. விவசாயிக்கும்
சில்லறை வியாபாரிக்கும் இடையில் இருக்கிற நபர்கள் கூட கூட விலையும் கூடிகிட்டே இருக்கும்.
(எல்லோருக்கும் லாபம் வேணுமில்லே?) அதாவது பெங்களூர் தக்காளி, தூத்துக்குடியில் விக்கணும்னா
கிட்டத்தட்ட 6 பேர் கை மாறி வரும். அத்தனை பேருக்கான லாபத்தையும் சேர்த்து நாம அழுதுட்டு
இருக்கோம்.
இப்போ ரிலையன்ஸ் என்ன செய்யுறாங்கன்னா, அவங்களே நேரடியா விவசாயிக்கிட்டே
இருந்து மொத்தமா கொள்முதல் செய்யுறாங்க. கிலோ 3 ரூபாய்க்கு வாங்கி நேரடியா அவங்களே
நமக்கு கிலோ 7 ரூபாய்க்கு விக்கிறாங்க! இதன்படி, நமக்கு 1ரூ லாபம், விவசாயிக்கு 1 ரூ
லாபம். ரிலையன்சுக்கு 3 ரூ லாபம்! இதில் நஷ்டம் அடையுறது கைமாற்றி விட்டு காசு பார்த்தவங்க
மட்டும் தான்!
அதிகமான எண்ணிக்கையில் பெரிய வணிக நிறுவனங்கள் வந்தால், உற்பத்தி உயரும்,
விலை குறையும்ங்கறது பொதுவான பொருளாதார கணக்கு. உற்பத்தி துறை, நுகர்பொருள் துறை, தொலைதொடர்பு
துறை, வாகன துறைன்னு எல்லாத்திலேயும் இதை நாம அனுபவப்பூர்வமா பார்த்திருக்கோம். உள்ளூர்
பொருட்கள் மட்டுமே கோலோச்சிட்டு இருந்த காலத்தில் அதிக விலையுடையதா இருந்தவை, போட்டின்னு
வந்ததும் நியாயமான விலைக்கு இறங்கி வந்தாங்க. குறைந்த விலையில் நல்ல தரமான பொருட்களும்
கிடைக்கதொடங்கிச்சு.1991ல் உற்பத்தி துறையிலும், வாகன துறையிலும் அந்நிய முதலீட்டுக்கு
அனுமதி கொடுத்தபோதும் இப்படி தான் கிளம்புனாங்க. உள்ளூர் தொழில் அழிஞ்சிரும்னு. ஆனா
என்ன நடந்தது. உள்ளூர் உற்பத்தி திறன் தரமானதா மாறியதோடு, வேகவா வளரவும் ஆரம்பிச்சிச்சு.
இந்த 20 வருஷத்தில் இந்திய தொழில்துறை உலக அளவில் சிறப்பானதா ஆயிருச்சு. வாகன துறையும்
அப்படி தான்.
மத்திய அரசு வழிகாட்டுதல்படி பார்த்தா, அந்நிய நேரடி முதலீட்டில் பெரும்பங்கு,
வேர் ஹவுஸ், குளிர்பதன கிடங்கு, சப்ளை செயின் மேனேஜ்மெண்ட் மாதிரியான விஷயங்களில் தான்
வருது! இது விவசாய விளை பொருட்களை சேமிக்கவும், கெடாமல் பாதுகாக்கவும், அதிவிரிவா எல்லா
இடங்களுக்கும் அனுப்பவும் வழி செய்யும். சீசனல் விவசாய பொருட்கள், எல்ல சீசன்லயும்
கிடைக்க, குளிர்பதனகிடங்குகள் தேவை. பெரிய வணிக வளாகங்கள், வேர் ஹவுசிங், லாஜிஸ்டிக்ஸ்னு
நிறைய தொழில் வாய்ப்புக்களும், வேலை வாய்ப்புக்களும் உருவாகிட்டே இருக்கும்! இந்தியாவின்
அடுத்த 20 வருட வளர்ச்சியில் விவசாயமும், அதன் லாஜிஸ்டிக் சிஸ்டமும் தான் பெரும் பங்கு
வகிக்கப்போகுதுன்னு இப்பவே அடிச்சு சொல்லலாம். அழிஞ்சிட்டு இருக்கிற விவசாயத்தை தூக்கி
நிறுத்தி வளரவைக்கணும்னா விவசாய பொருட்களுக்கான டிமாண்டை உருவாக்கணும். அதை தான் இந்த
அந்நிய முதலீடு கொண்டுவர போகுது. அதுமட்டுமல்லாம, ரிலையன்ஸ், பிக்பஜார் மாதிரியான கடைகள்
மட்டுமே ஆண்டுட்டு இருக்கிற நாட்டில் எல்லோருமே ஒரு கூட்டாளியை சேர்த்துகிட்டு பெரிய
கடைகளை பெருநகரங்களில் அமைக்க முடியும். இந்தியாவின் அதிக மக்கள் தொகையும், அதிக சிறு
வணிகர்களும் 95% இருக்கிற சிறு நகரங்கள், கிராமங்கள் ஆகியவற்றை இந்த அந்நிய முதலீட்டு
முடிவு எந்த வகையிலும் பாதிக்காது!
மேலே சொன முக்கியமான மூன்று பயங்களுக்கான விளக்கங்களிலிருந்து, மக்களுக்கோ,
விவசாயிகளுக்கோ பாதிப்பில்லை, கமிஷன் ஏஜெண்டுகளுக்கும், இடைதரகரகளுக்கும் மட்டும் தான்
பாதிப்புன்னும், விலைவாசி கட்டுப்படும், பணவீக்கம் குறையும்னும் தெரிஞ்சிருக்கும்.
மற்ற சிறு பயங்களை பற்றி அடுத்த பதிவில் இன்னும் விரிவா பார்க்கலாம்!
Good analysis.
ReplyDeleteReally nice analysis... And I totally agree FDI...
ReplyDeleteஇப்போதான் கொஞசம் புரியிற மாதிரி இருக்குது!
ReplyDeleteபுரியிற மாதிரி இருக்குது!
ReplyDeleteசாதக பாதங்களை மிக தெளிவா அலசி விளக்கி இருக்கீங்க. நம்ம நாட்டுல ஏன் போராடறோம், எதுக்கு போராடரோம்னு தெரியாமத்தான எல்லாமே நடக்குது. எல்லாம் இந்த அரசியல்வாதிங்க போடற நாடகம். நல்ல திட்டமாகவே இருந்தாலும், ஆளும்கட்சி கொண்டுவந்தா, எல்லா எதிர்கட்ச்சியுமே எதிரியாகத்தானே பார்க்கறாங்க.
ReplyDeletefor the first fear, the detailed explanation is well documented by Avargal Unmaigal blogger
ReplyDeletehttp://avargal-unmaigal.blogspot.com/2012/09/blog-post_8006.html
வெறும் முப்பது சதவிகிதத்தை உள்நாட்டை சேர்ந்த சிறு நிறுவனங்களில் இருந்து வாங்க வேண்டும் என்று இருந்த ஒரு நிபந்தனையை இப்போது அரசு தளர்த்தியிருக்கிறது. இதனால், இந்த நிறுவனங்கள் உலகில் எங்கிருந்து வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம் என்றாகிறது. இப்போதிருக்கும் 'பெரிய' நிறுவனங்களான ரிலையன்ஸ், மோர், சுபிக்ஷா போன்றவை இப்போது வரப்போகும் வால்மார்ட், காஸ்ட்கோ போன்ற நிறுவனங்களை விட மிக மிக சிறியவை. வால்மார்ட் தன் கடைகளில் விற்க கொள்முதல் செய்யும் பொருட்களை மட்டுமே எடுத்துவர பதிமூன்று கால்பந்து மைதானங்கள் அளவு பெரிய கப்பல் வைத்திருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்! இவர்கள் ரிலையன்ஸ் ரிடையில், மோர், சுபிக்ஷா போன்ற நிறுவனங்களை விட ஆயிரம் மடங்கு பெரியவை. ஆபத்தின் அளவு மிகப்பெரியது!
http://www.moneycontrol.com/news/current-affairs/ikea-needs-to-submit-revised-application-for-opening-stores_759178.html