Tuesday, August 28, 2012

கல்வி அறிவு ஏன் 100% இல்லை ?


ல்வி ஓன்றே அழியா செல்வம். 

பல்லாயிரம் வருஷத்துக்கும் முன்பே நம் தமிழ் ஆன்றோர்கள் இதை தெளிவா புரிஞ்சு வெச்சு சொல்லியிருக்காங்க. ஏன் அப்படி சொன்னாங்க? சொத்து சுகம், நிலம், புலம் நீச்சு, மச்சு பரம்பு எல்லாமே அழிஞ்சு ஒருவனை வாழவிடாம செஞ்சிர வாய்ப்பு இருக்கு. ஆனா படிச்ச படிப்பு எந்த காலத்திலும் அவனை கைவிடாது. ஒருவேளைன்னாலும் ஒருவேளை சோத்துக்கு அவனுக்கு அது வழிபண்ணும்னு தான் தெளிவா சுருக்கமா அதை சொல்லி வெச்சாங்க நம்ம முன்னோர்கள்.

சரி, நாம இப்போதைய கதைக்கு வருவோம்.

கேரளா & புதுவையில் கல்வி கற்றவர்களின் சதவிகிதம் 100% மற்ற மாநிலங்களில் எதிலும் 100% கல்வி அறிவு உள்ளவர்கள் இல்லை. தமிழ்நாட்டில் 80.3% (2011). இதிலிருந்து நமக்கு தெரியவர்ற விஷயம் என்னன்னா, படிக்காதவங்க, படிப்பறிவு இல்லாதவங்க நாட்டில் ஜாஸ்தி இருக்காங்க. ஒட்டு மொத்த இந்தியாவில் 70% தான் கல்வியறிவு. அதாவது 30% பேர் கிட்டத்தட்ட 33 கோடி பேருக்கு கல்வியறிவு இல்லை.
இந்தியா சுதந்திரம் கிடைச்சு, 65 வருஷம் ஆயிருச்சு. நம்மை நாமே ஆண்டுட்டு வர்றதா பெருமை பேசிட்டு இருக்கோம். ஆனா, நம்ம பிள்ளைகளுக்கு நம்மால் படிப்பு சொல்லி கொடுக்க முடியலை.

இந்திய அரசியல் அமைப்பு விதி 21A என்ன சொல்லுது?

The State shall provide free and compulsory education to all children of the age of six to fourteen years in a such manner as the State may, by law, determine

அதாவது, தங்கள் மாநிலத்திலுள்ள குழந்தைகளுக்கு 6 முதல் 14 வயதுவரையும் கட்டாய இலவச கல்வி அளிக்கவேண்டியது ஒவ்வொரு அரசின் கடமை.

இது படி பார்த்தா, ஒவ்வொரு மாநிலத்திலும் 14 வயசுக்கு மேல கல்வியறிவு இல்லாதவங்களே இருக்க கூடாது! அனா, அதே அரசுகள் தான் எங்கள் ஆட்சியில் இத்தனை சதவிதத்தில் இருந்து இத்தனை சதவிதமாக கல்வியறிவை மேம்படுத்தியிருக்கிறோம்னு பெருமையா சொல்லிக்கிறாங்க. நாமளும் சந்தோஷமா கைதட்டிட்டு வந்திடுறோம். ஆனா நாம கவனிக்க வேண்டிய விஷயம் என்னன்னா, நியாயமா பார்த்தா 100% ஆகியிருக்கணுமே, ஏன் ஆகலைன்னு யோசிக்கணும். நமக்கு தான் லாஜிக்கா யோசிக்கிற பழக்கமே கிடையாதே?

சரி, இப்படி கடமையை செய்யாத அரசுக்கு தண்டனை இல்லையா? இருக்கு. அதே அரசியல் சட்டம் என்ன சொல்லுதுன்னா, அரசியல் சட்டம் சொல்லும் கடமைகளை சட்டப்படி அமல்செய்வேன், அரசியல் சாசனத்துக்கு கட்டுப்பட்டு ஆட்சி செய்வேன்னு சொல்லி பதவி ஏற்கிற அரசுகள், அப்படி அரசியல் சட்ட கடமையை நிறைவேற்றலைன்னா அதை கலைச்சிரலாம்னு சொல்லுது. அப்படி பார்த்தா, கேரளா & புதுவை மாநிலங்களை தவிர வேறு எந்த மாநில அரசுக்கும் இன்னைய தேதிக்கு ஆட்சி செய்யும் உரிமை இல்லை, மத்திய அரசு உட்பட. ஏன்னா அவங்க ஒரு இந்திய குடிமகனின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான கல்வி உரிமையை மறுத்திருக்கறதோடு, அரசியல் சட்டம் விதிச்ச கடமையையும் மீறி இருக்காங்க. ஆனா இப்படி எல்லாம் சட்டப்படி நடவடிக்கை எடுக்க இப்போதைக்கு வாய்ப்பு இல்லை.

அதனால் நாம மத்த விஷயங்களை பத்தி அலசலாம்!

சட்டம் சொல்றபடி 6 14 வயசு வரைக்கும் உள்ளவங்களுக்கு இலவச கட்டாய கல்வி இப்போ கொடுக்கப்படுதா?

அந்த சட்டத்தை எந்த அரசுமே மதிக்கலை. மதிச்சிருந்தா, அந்த அரசியல் சட்டப்படி நடந்திருந்தா, நாட்டில் தனியாக் பள்ளிகளே இருந்திருக்காது. தனியார் பள்ளிகளை மேம்படுத்தறதுக்காக, அரசு பள்ளிகளை தரமில்லாததா ஆக்கியதோட, சட்டப்படியான கடமையையும் எந்த அரசாங்கமும் (கட்வி வேறுபாடு இல்லாம) கண்டுக்கவேயில்லை. கேரளாவில் மட்டும் தான் அரசு பள்ளிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கறாங்க.

நாம நம்ம தமிழ்நாட்டை பற்றி மட்டும் லைட்டா விவாதிக்கலாம்!

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள், எல்லா குழந்தைகளும் பள்ளிக்கூடம் வந்து படிக்கணும்னு முடிவு பண்ணினாரு. ஆனா அதில் நிறைய சிக்கல்கள் இருந்தது. முதல் சிக்கல், ஜாதி ரீதியா சில மானவர்கள் சில மாணவர்களுடன் சேர்ந்து படிக்க அவங்க பெற்றோர்கள் விரும்பலை. இதை தடுக்க இட ஒதுக்கீட்டு சட்டத்தை விரிவு படுத்தினாரு. அதுக்கு அப்புறம், புள்ளைங்களை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிட்டு நாங்க என்ன பண்றது? 

வேலைக்கனுப்பினாலாவது கால் காசு சம்பாதிக்கும்ன்ற புலம்பலை கேட்டு, ஏற்கனவே காமராஜர் கொண்டுவந்த மதிய உனவு திட்டத்தை எல்லா பள்ளிகளுக்கும் கட்டாயமாக்கி விரிவு படுத்தினாரு. யூனிசெஃப் அறிக்கையில் குழந்தைகளுக்கு உரிய ஊட்டச்சத்து கிடைக்கறதில்லைங்கறதை படிச்சிட்டு, மதிய உணவு திட்டத்தை சத்துணவு திட்டமா மாற்றி ஊட்டச்சத்துக்கும் வழி செஞ்சாரு. புஸ்தகம், நோட்டு, சீருடை கவலை எல்லாம் பெற்றவங்களுக்கு இருக்கக்கூடாதுன்றதுக்காக, எல்லாத்தையுமே அரசே இஅலவசமா செய்யும்னு அறிவிச்சாரு. ரொம்ப தூரத்தில் பள்ளிக்கூடம் இருக்கே எப்படி போறதுன்னு யோசிச்சவங்களுக்காக, எல்லா அரசு பஸ்களிலும் இலவசமா பயணிக்க பாஸ் கொடுத்தாரு. இத்தனையும் எதுக்காக செஞ்சாரு எம்.ஜி.ஆர்?
நம்ம புள்ளைங்க நல்லா படிக்கணும். படிப்புன்ற ஒரு விஷயம் அவங்களுக்கு இருந்தாலே போதும், அவங்க வாழ்க்கையை அவங்களே அழகா தீர்மானிச்சுப்பாங்க, எப்படியாவது வாழ்க்கையில் முன்னேறிடுவாங்கன்னு தீர்க்கதரிசனமா முடிவு செஞ்சு இத்தனையையும் செஞ்சாரு. இதன் காரணமா தமிழகத்தில் கல்வியறிவு விகிதம் 52% னு உயர்ந்தது.

எம்.ஜி.ஆருக்கு பிறகு ஆட்சிக்கு வந்தவங்க சின்ன சின்னதா சில முன்னேற்றங்களை கொடுத்தாங்க. ஜானகி எம்.ஜி.ஆர் இலவசமா செருப்பு கொடுத்தார். கருணாநிதி, சத்துணவுடன் முட்டையும் பழமும் கொடுத்தார். பஸ் வசதியில்லாத பகுதிகளிலிருந்து 10 வகுப்புக்கு மேல் யாரும் தொலை தூரம் பயணித்து படிப்பதில்லைன்றதை அறிஞ்ச ஜெயலலிதா இலவச சைக்கிள் கொடுத்தார். இப்படி எல்லாருமே நம் பிள்ளைகள் படிக்கணும்னு தான் எல்லா முயற்சியும் செஞ்சாங்க.பள்ளி குழந்தைகள் சரி. வயசானவங்க, வேலைக்கு போறவங்க எல்லாம்?
அதுக்காக தான் மத்திய அரசு,அனைவருக்கும் கல்வி (SSA Sarva Siksha Abhyan)னு ஒரு திட்டம் கொண்டுவந்தாங்க. முதியோர் கல்வி, வேலைக்கு போறவங்களுக்காக இரவு பாட சாலை ன்னு பல பல திட்டங்களை கொண்டுவந்து சமூகத்தின் அனைத்து தரப்பினரும் கல்வியறிவு பெற்று எல்லோரும் எழுத படிக்க தெரிந்திருக்கவேண்டும்னு முடிவு செஞ்சு நடந்துட்டு இருக்கு.

இதுக்காக மத்திய மாநில அரசுகள் பட்ஜெட்டில் கல்விக்காக அதிக நிதி ஒதுக்கி எல்லோருக்கும் கல்வி கொடுக்க முயற்சி செய்யுறாங்க.

மத்திய அரசு இன்னும் ஒரு படி மேலே போயி, மத்திய அரசுக்கு செலுத்தும் எல்லா நேரடி, மறைமுக வரிகளிலும் 2% கல்வி துணைவரியும் (Education CESS) 1% உயர்கல்வி துணைவரியும் (Secondary & Higher Education CESS) வசூலிக்கிறாங்க. 

இது எதுக்காக? 

மத்திய மாநில அரசுகள் எவ்வளவு நிதி ஒதுக்கியும், நாட்டில் எல்லோருக்கும் கல்வி கொடுக்க முடியலை. பள்ளிகள் கல்லூரிகளை தரமுயர்த்த முடியலை. அதனால் அதுக்கான செலவுக்கான தொகையை இப்படி வசூலிச்சு அதை முழுக்க முழுக்க கல்விக்கே செலவு செய்யணுமு 2007 ம் ஆண்டு முடிவு செஞ்சு அன்னையிலிருந்து வசூலிக்க ஆரம்பிச்சாங்க. முதல் வருஷம் 10,300 கோடி ரூபாய் வசூல் ஆச்சு. அதுக்கப்புறம் சேவை வரி விரிவாக்கம் காரணமா வருஷத்துக்கு சராசரியா 20,000 கோடி ரூபாய் கல்வி துணை வரி மட்டுமே வசூல் ஆச்சு. இது தவிர பட்ஜெட் நிதி ஒதுக்கீடு வேறே (2010-11 ம் ஆண்டுக்கான ஒதுக்கீடு 21,000 கோடி ரூபாய். ஆனால் அனில் போர்டியா குழு பரிந்துரை 35,659 கோடி. அரசு அதை விட குறைவா தான் ஒதுக்கிச்சு! அது தனி சப்ஜெக்டு)

இப்படி வசூலான கல்வி துணை வரியை கிட்டத்தட்ட 3 வருஷமா மத்திய அரசு உபயோகமே படுத்தாம வெச்சிருந்தாங்க. யாரோ ஒரு புண்ணியவான் போட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் கொடுத்த சுளீருக்கு பிறகு, இப்போ அதை செலவு செய்ய அரசு திட்டமிட்டிருக்கிறதா தகவல் வருது.

இன்னும் இதில் விரிவா பேச நிறைய இருந்தாலும், நான் முக்கியமான விஷயங்களை மட்டும் உங்ககிட்டே சொல்லி இருக்கேன். இதில் இருந்தே நீங்க சில விஷயங்களை யூகிச்சிக்கலாம்.

எத்தனையோ கோடி அரசு செலவு செய்யுறதா சொல்றாங்க, ஆனா அரசு பள்ளிகள், கல்லூரிகள் தரமுயரலை. தனியார் பள்ளிகளும், கல்லூரிகளும் கொள்ளை கொள்ளளயா சம்பாதிக்கிறாங்க. ஆனாலும் கல்வி தரம் உயரலை. (டிகிரி படிச்சிட்டேன்னு பெருமை சொல்றவங்களுக்கு பேங்குக்கு போயி அவ்ங்க ஃபீஸ் கட்டறதுக்கான ஒரு டி.டி கூட எடுக்க தெரியாத கல்வியை தான் நாம கொடுத்திருக்கிறோம்!) எல்லா பணத்தையும் கோடி கோடியா அரசு செலவு செய்ததா சொல்லுது. ஆனாலும் 100% கல்வி அறிவு முழுமையா கிடைக்கலை. அப்படி கடமையை செய்ய தவறிய அரசுகள் மேல இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் இல்லை.

இது தான் இந்த நாட்டின் கல்வி நிலைமை. பி.எஸ் வீரப்பாவின் வசனம் ஞாபகம் வருது இல்லே? இந்த நாடும்.. நாட்டு மக்களும்……”


Related Posts:

3 comments:

 1. கல்வி மீது அக்கறை கொண்டு பொறுப்புணர்வுடன் எழுதப்பட்ட பதிவு நன்று. நான் கல்வித் துறையில் தான். இருக்கிறேன்.அரசாங்கள் கல்விக்காக பல செயல் பாடுகளை செய்து கொண்டுதான் இருக்கிறது.பொதுவாக மக்கள் அரசு எதுவும் செய்வது இல்லை என்று நினைத்து விடுகிறார்கள்.எதாரனமாக மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு அரசு செய்வது வருவதை
  பெரும்பாலோர் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை இதைப் பற்றிய பதிவு இட இருக்கிறேன்.

  நன்று.தொடருங்கள்

  ReplyDelete
 2. அரசு நடத்த வேண்டிய கல்வித் துறை தனியார் வசத்தில் உள்ளது. தனியார் வசம் இருக்க வேண்டிய மதுபான வியாபாரம் அரசு செய்கிறது.

  என்னவென்று சொல்வது...

  ReplyDelete

 3. கல்வியின் அவசியத்தை நானும் எழுதி வருகிறேன். ஆனால் நம் நாட்டில் ஏற்ற தாழ்வுக்கான காரணம் மக்களின் அறிவுக் கண் திறக்காததால்தான் என்பது என் எண்ணம். கல்வியில் ஏற்ற தாழ்வு இருக்கிறது. அதைப் போக்க அனைவருக்கும் இலவசக் கல்வி, சமமான கல்வி என்று இருக்க வேண்டும். அப்படி இருக்குமானால் இன்னும் ஓரிருதலைமுறை கழிந்தாலாவது நம் சமூகம் சிறக்கும். நிறையவே எழுதி ஈருக்கிறேன். இன்னும் எழுதுவேன். உங்கள் பதிவுக்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete

Printfriendly