Friday, August 10, 2012

டெசோ மாநாடு முடக்கமா?


ரும் 12ம் தேதி சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருக்கும் ஈழ மக்கள் வாழ்வுரிமை மாநாடு நடைபெறுமா என்கிற சந்தேகம் இன்றைக்கு மெல்ல மெல்ல எல்லோருக்கும் வலுவாக வரத்தொடங்கிவிட்டது.

 
முதலில் விழுப்புரத்தில் நடைபெறுவதாக சொல்லப்பட்டு, பின்னர் உலகின் மிக முக்கிய பிரதிநிதிகள் எல்லோரும் வரவிருப்பதால் அவர்களது தங்குமிடம், பயணவசதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு, சென்னைக்கு மாநாடு மாற்றப்பட்டது. (இந்த மாநாட்டை பற்றி ஏற்கனவே ஒரு பதிவு எழுதியிருப்பதால் நான் அதை பற்றி விரிவாக எதையும் விவாதிக்க விரும்பவில்லை).

 
இடம் தேர்வு செய்யப்பட்டு மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. உலகின் முக்கிய பிரதிநிதிகள் பலர் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.அவர்களில் சுவீடன் நாட்டை சேர்ந்த H.E. Malik Nasim Ahmed, இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பை சேர்ந்த திரு.கெமால் யில்டிரிம், ஈழ தமிழர்களுக்கு ஆதரவான மலேசியாவின் பீப்பிள்ஸ் ஜஸ்டிஸ் பார்டியை சேர்ந்த திரு யுஸ்மாடி யூசுப், மொராக்கோ நாட்டின் மனித உரிமை ஆர்வலர் திரு. டாய்டா முகமது ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் தவிர, அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பின் பிரதிநிதி, ஐநா சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக வாக்களித்த நைஜீரியா நாட்டின் பிரதிநிதி, மத்திய அமைச்சர் சரத் பவார் போன்றோரும் இந்த மாநாட்டுக்கு வருகை தருகின்றனர்.



இப்படியான உலக பிரதிநிதிகளை ஒருங்கிணைக்கும் திறன், இன்றைய தேதியில் கலைஞர் அவர்களுக்கு மட்டுமே உள்ளது என்பது வைகோ போன்றோர் கூட ஒப்புக்கொள்ளும் உண்மை. ஈழ தமிழர்களை வைத்து அரசியல் செய்யும் வேறு எவருக்கும் அத்தகைய திறனும் இல்லை. அவர்களது வார்த்தைகளுக்கு அப்படியான எந்த செல்வாக்கும் இல்லை.

கலைஞர் இப்படியானவர்களை எல்லாம் அழைத்து, அவர்களது மேலான கருத்துக்களையெல்லாம் கேட்டு, அதன் அடிப்படையில், இலங்கையில் நம் சொந்தங்களுக்கு தனியாக நாடு வேண்டுமா, அல்லது ஒருங்கிணைந்த இலங்கையிலேயே வாழ முடியுமா? அப்படி ஒருங்கிணைந்து வாழ்வதென்றால், ஈழ தமிழர் நலனுக்காகவும், அவர்களது வாழ்வுரிமைக்காகவும் எந்தெந்த மாதிரியான சட்ட திருந்தங்கள் எல்லாம் தேவை என்றெல்லாம் விரிவாக விவாதித்து அறிந்து, அதன் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகளை தீர்மானமாக்கி இந்திய அரசை வலியுறுத்துவது என்பது தான் இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம்.

 
தனி ஈழம் வேண்டுமா வேண்டாமா என்பதை கூட, நாம் முடிவு செய்து அந்த முடிவை அவகள் மீது திணிக்கக்கூடாது என்பதற்காக தான் ஐ.நா மேற்பார்வையில் ஈழ தமிழர்களிடம் முறையான பொது வாக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் தனி ஈழம் வேண்டுமா வேண்டாமா என்பதை பற்றி முடிவு செய்யலாம் எனவும் சொல்லப்பட்டு இருக்கிறது. அப்படி ஈழ தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பை ஐ.நா நடத்துவது என்றாலே, அதற்கான அடிப்படை ஏற்பாடுகளாக நம் ஈழ தமிழர்களுக்கு உரிய வாழ்வாதாரத்தை இலங்கை அரசு செய்துகொடுத்தாக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுவிடும். அது தான் அந்த ஒற்றை வரி கோரிக்கையின் மறைபொருள் நோக்கம்.



கலைஞரை பற்றி முழுமையாக எதையும் தெரிந்து கொள்ளாமல், சிறுபிள்ளைத்தனமாக இணைய வெளிகளில் விமரிசித்துக்கொண்டிருக்கும் கத்துக்குட்டிகளை விட்டு தள்ளுங்கள். ஆனால், இலங்கை அரசு அப்படியான கத்துக்குட்டி அல்ல. அதனால் தான், கலைஞரின் இந்த மாநாடு கண்டு அஞ்சி அதை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அது எடுத்து வருகிறது.



இன்றைக்கு கூட மத்திய அரசு, இந்த மாநாட்டுக்கு கொடுத்திருக்கும் அனுமதியில், மாநாட்டை நடத்திக்கொள்ள அனுமதித்துவிட்டு, அந்த மாநாட்டில் ‘ஈழம்’ என்கிற வார்த்தையை பயன்படுத்த தடை விதித்து இருக்கிறது. ஈழத்தை ஈழம் என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்லுவதாம்? பண்டை தமிழ் இலக்கியமான குறவஞ்சியிலேயே ‘மலையாள மின்னல்; ஈழ மின்னல்; சூழ மின்னுதே’ என இலங்கையை ஈழம் என்று தானே குறிப்பிடப்பட்டு இருக்கிறது? மத்திய அரசுக்கு இப்போது இலங்கை ஒரு வணிக சந்தை. நாம் இப்போதைக்கு இலங்கையை நம்பி தான் நம் நிறுவனங்களை மேம்படுத்தியாகவேண்டி இருக்கிறது. (அது தனியாக விவரிக்கவேண்டிய பெரிய கதை.) என்வே இலங்கை அரசை சஞ்சலப்படுத்தும் எந்த நடவடிக்கையையும் இந்திய அரசு செய்ய வாய்ப்பில்லை. அதனால் தான் அப்படியொரு தடை விதித்து இருக்கிறார்கள் என நான் கருதுகிறேன்.



எனவே, இலங்கை இந்த மாநாட்டை கண்டு கொள்கின்ற அச்சம் தான் மாநாட்டின் / ஈழ மக்களின் முதல் வெற்றி.



இந்த மாநாட்டை முதலில் மிக சாதாரணமாக எடுத்துக்கொண்ட ஜெ.வும் கூட இப்போது இதன் வலிமையை புரிந்து கொண்டிருப்பதாகவே தெரிகிறது.


அதனால் தான் அவசரம் அவசரமாக மாநாட்டுக்கு இரண்டு நாளுக்கு முன்பாக இந்த மாநாட்டுக்கு அனுமதி மறுத்திருக்கிறார். இது தொடர்பாக இன்று உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், சென்னை நகர காவல்துறை ஆணையாளர் மாநாடு அனுமதி பற்றி முடிவெடுப்பார் என்று நீதிமன்றம் தன் பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டது.

சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 8,000 பேர் மட்டுமே வர முடியும் என்பதால், சென்னையில் இந்த மாநாடு நடத்த அனுமதியில்லை எனவும், சென்னையை தவிர தமிழகத்தில் வேறு எங்கே வேண்டுமானாலும் மாநாட்டை நடத்திக்கொள்ள எந்த தடையுமில்லை எனவும் தமிழக அரசு தெரிவித்து இருக்கிறது.

 
தமிழகத்தில் வேறு எங்குவேண்டுமானாலும் மாநாடு நடத்திக்கொள்ள நாங்கள் அனுமதிக்கிறோம் என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பதால், அதையே கூட சாதகமாக்கி, வேறொரு இடத்தில் ஒரே நாளில் மேடையை போட்டு மாநாட்டை நடத்தி விட முடியும். அது ஒன்றும் பெரிய காரியமேயல்ல. ஆனால், ஏன் இப்படி கடைசி நேரத்தில் ஒரு தடை?

ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தான் மாநாடு நடைபெறும் என்று பல நாட்களுக்கு முன்பே தெளிவாக எல்லா ஊடகங்களிலும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அப்போதே அதை மறுத்திருக்கலாமே? கடந்த வாரம் கலைஞர் அவர்கள விழா ஏற்பாடுகளை நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அவருடன் தமிழக போலீசும் தானே உடன் சென்றது? அப்போதே அந்த இடத்தில் மாநாடு நடத்தவேண்டாம் என மறுத்திருக்கலாமே? இலைமறை காய்மறையாக நடைபெறுகின்ற விஷயங்களை கூட கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் உளவுப்பிரிவுக்கு வெளிப்படையாக அறிவிக்கப்பட்ட இந்த மாநாடும் அது நடைபெறும் இடமும் தெரியவில்லை என்பதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்?

எனவே, இப்படி கடைசி நேரத்தில் இந்த மாநாட்டை முடக்கி வைப்பதற்கான நோக்கமும் அதன் நுண்ணரசியலும் வேறு!

டெசோ பற்றி ஜெ. குறைத்து மதிப்பிட்டுவிட்டாரோ என்று எனக்கொரு ஐயம். இப்போது டெசோ மாநாட்டுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை கருத்தில் கொண்டும், இன்னும் ஒரு வருடத்தில் பாராளுமன்ற தேர்தல் வருவதை கருத்தில் கொண்டும், கலைஞரின் இந்த மாநாட்டை தடை செய்துவிட்டு, விரைவில், தானே ஈழ தமிழர்களுக்கான ஒரு மாநாட்டை நடத்தி (வைகோ, சீமான் வகையறாக்களையும் சேர்த்துக்கொண்டு?) ஈழ தாய் என சீமான் கொடுத்த பட்டத்தை தக்கவைத்துக்கொள்வதற்கான ஒரு திட்டம் இருக்கிறதோ என்று கூட எனக்கு தோன்றுகிறது.

பார்ப்போம் என்ன தான் நடக்கிறதென்று!

5 comments:

  1. உணர்ச்சியில் பிழம்பாக இருக்கும் தமிழர்கள் புது டில்லியின் முழு சூழ்ச்சியையும் அறியும் காலம் வந்துள்ளது. தமிழரின் முதல் எதிரி புது டில்லி என்பதை உணரும் நாளே ஈழ விடுதலைக்கு அடிக்கல் நாட்டும் நாள் ஆகும்.
    தமிழ்நாட்டுத் தலைவர்கள் வெறும் பகடைக் காய்கள் என்பதை உணர்ந்து செயல் பட ஆரம்பிப்போம்.

    ReplyDelete
  2. பொறுப்புணர்வுடன் உங்கள் கருத்தை முன் வைத்ததற்கு பாராட்டுக்கள்.

    கலைஞரைப்பற்றி விமர்சனம் செய்ய அவரது அறிக்கைகள் மற்றும் அரசியல் செயல்பாடுகள்,குளறுபடிகள்,தடுமாற்றங்கள் என பல காரணங்கள் இருக்கின்றன.பாராட்டுவதற்கு அவரது அல்லக்கைகள் என்ற ஒரு தகுதி மட்டும் போதும்.

    விருப்புடனோ அல்லது வெறுப்புடனோ அல்லது இரண்டையும் கடந்த நிலையில் கருத்தை வெளிப்படுத்துவதற்கு இணைய ஊடகங்கள் மட்டுமே உதவுகின்றன.கலைஞர் மீதான விமர்சனம் என்றவுடனே ஏன் இணைய கற்றுக்குட்டிகள் என்ற மதிப்புரை வழங்கப்படுகிறது?

    தி.மு.க தன்னை மீள்பார்வை செய்து கொள்ள எதிர் விமர்சனங்களே உதவும்.

    ReplyDelete
  3. i was DMK member for 25 years[not kaththukutti]I left it because of kalaignar's selfish politcs killed 1.5 lakh thamizhans and thamizheelam.Now he is doing drama.He got the title'' thamazhina thurogi''.To change ,he is acting.Think twice and Realise mister.

    ReplyDelete
  4. Dear Natarajan, Santhilal and friends..thank you for your valuable feedback. I used the word 'Inaiya Kathukuttikal' because most of the young writers in internet are not fully aware of (or even not trying to know about) eelam history and the contributions of TN for it. They are all blindly believing what few sensational politicians of TN (who were totally neglected by TN people and who were not at all connected with eelam issue on any basis) . So, in simple, I just asked to ignore those unknowledgeable persons only and I have no regret on that. Sorry for replying in english as I am on mobile now. :)

    ReplyDelete
  5. Hello Author , why didn't your thalaivar did not do this when he was a chief ministers , justify this question alone ?

    ReplyDelete

Printfriendly