Tuesday, August 7, 2012

லஞ்சம், ஊழல், கறுப்புப்பணம் – அலசல்!


ந்த அரசு அலுவலகத்தில் வேண்டுமானாலும்லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் குற்றம்' இப்படி ஒரு போர்டை நீங்க  பார்க்கலாம். கூடவே, 'ஊழல் கண்காணிப்பாளர்'னு ஒரு பதவியில் இருப்பவரின் போன் நம்பரும் அதில் இருக்கும்!

இந்த லஞ்சத்துக்கும் ஊழலுக்கும் என்ன வித்தியாசம்! நான் ரொம்ப நாளா ரெண்டுமே ஒண்ணுதான்னு தான் நினைச்சிட்டு இருந்தேன்! ஆனா ரெண்டுமே வேறு வேறு!

லஞ்சம்:

ஒரு காரியத்தை செய்யுறதுக்கான கைக்கூலி, கையூட்டு, அன்பளிப்பு மாதிரியான விஷயங்கள் தான் லஞ்சம். இந்த லஞ்சம்ன்றது நம்ம வீட்டிலிருந்தே துவங்கிருது. டேய்.. கடைக்கு போயி ஒரு சோப்பு வாங்கிட்டு வா.. அப்படியே மிச்ச காசில் நீ ஒரு ரூபாய்க்கு சாக்லேட் வாங்கிக்கோ; இந்த வருஷம் டென்த் எக்ஸாமில் 470க்கு மேல மார்க் வாங்கினா உனக்கு ஒரு கம்பியூட்டர் வாங்கி தர்றேன் மாதிரியான விஷயங்கள் ஊக்கத்தொகையா லஞ்சமான்னு தெளிவு படுத்த முடியாது தான். ஆனால் அதை இன்னும் எளிமைப்படுத்தலாம்!

நீ சோப்பு வாங்கிட்டு வந்தா உனக்கு மிச்ச காசில் ஒரு ரூபாய் சாக்லேட்ன்னு நீங்க உங்க மகன் கிட்டே சொன்னா அது ஊக்கத்தொகை. மிச்ச காசில் ஒரு ரூபாய்க்கு சாக்லேட் வாங்கிக்க நீ சம்மதிச்சா நான் சோப்பு வாங்கிட்டு வர்றேன்னு உங்க மகன் உங்களுக்கு கண்டிஷன் போட்டா அது லஞ்சம்.

இதே விஷயத்தை அரசு பணியில் செய்யும்போது வேறு வகையான விளக்கங்கள் எல்லாம் இருக்கும்!

சார், என் ஃபைலை சீக்கிரமா பாஸ் பண்ணுங்க, உங்களை கவனிக்க வேண்டிய விதத்தில் பாத்து பண்ணிடலாம்னுநாம பழக்கி வைத்த விஷயம் தான், நீங்க கவனிச்சா தான் ஃபைலை பாஸ்பண்ணுவேன்னு அவங்க டிமாண்ட் பண்ற அளவுக்கு கொண்டு விட்டிச்சு! இப்போ லஞ்சம் கொடுத்தா தான் நியாயமா நடக்கவேண்டிய வேலைகள் கூட நடக்கும்ன்றது வெட்டவெளிச்சமான ரகசியம்.

எல்லாருக்குமே, எங்கெங்கே எவ்வளவு லஞ்சம் கொடுக்கவேண்டி இருக்கும்னு ஓரளவுக்கு குத்துமதிப்பா தெரியும். ஒரு வீடு கட்டறதுக்கு பட்ஜெட் போடும்போதே, பேங்க், ரிஜிஸ்டர் ஆஃபீஸ், ஈ.பி ஆஃபீஸ், கார்ப்பொரேஷன், வாட்டர் சப்ளைஸ், டிரைனேஜ், அப்ரூவல் அதாரிட்டி மாதிரியான அத்தனை பேருக்கான லஞத்துக்கும் சேர்த்து பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி பழகியாச்சு நாம! ஆனாலும் லஞ்சத்தை ஒழிக்கணும்னு போராடிட்டு தான் இருக்கோம்!

பெரும்பாலும் நாம லஞசம் கொடுக்க நேர்வதே நம் சோம்பேறித்தனத்தால் தான்னு பலருக்கும் தெரியும். உதாரணமா ஒரு விஷயம் சொல்றேன்! நீங்க பைக்கில் போகும்போது சிக்னலை ஜம்ப் பண்ணிட்டீங்க. அடுத்த செகண்டே உங்களை சார்ஜெண்ட் நிறுத்தி, சார்ஜ் ஷீட் எழுதி, சட்டப்படி, இந்த அபராதத்தை போயி கோர்ட்டில் கட்டி, இந்த நோட்டீசை கேன்சல் பண்ணிட்டு வந்து உங்க வண்டியை எடுத்துட்டு போங்கன்னு சொல்றாரு. நீங்க என்ன  செய்வீங்க? சட்டப்படியாவா நடப்பீங்க? ஒரு 200 ரூபாயை மடிச்சு சார் கையில் கொடுத்துட்டு கிளம்பிரமாட்டீங்க?





கவர்மெண்ட் ஆபீசில் நம்ம வேலை சீக்கிரமா முடியணும்ன்றதுக்காக விதிகளை மீறி நம்ம ஃபைலுக்கு முன்னுரிமை கொடுக்க நாம கொடுத்து பழகின லஞ்சம் தான், இப்போ அவங்க அதிகாரமாவே நீங்க பணம் கொடுத்தா தான் ஃபைல் மூவ் ஆகும்னு சொல்ற அளவுக்கு வந்து நிக்குது.

இந்த அநியாயத்தை தண்டிக்கவேண்டிய பதவியில் இருந்த கலைஞர் தான் 1970களில் லஞ்சம்னு சொல்லி அதை கொச்சைப்படுத்தாதீங்க, அது ன்பளிப்பு'ன்னு ஒரு வியாக்கியான விளக்கத்தை கொடுத்து அதை ஆதரிச்சவரு!
ஆனா, ஊழல் வேறே மாதிரி.

ஊழல்:

ஒரு திட்டத்துக்கு ஒதுக்கப்படும் நிதியில் இருந்து கொஞ்சம் எடுத்துக்கிறது. அதுக்கு தக்கமாதிரி அதன் தரத்தை/அளவை குறைக்கிறது மாதிரியான விஷயங்கள் 'ஊழல்'ங்கற கேட்டகரியில் வரும்.

ஒரு பாலம் கட்ட 20 லட்சம் ரூபாய் மதிப்பீடுன்னா, அந்த பாலத்தை 18 லட்சத்துக்குள்ளே கட்டி முடிச்சிட்டு மீதியை ஆட்டையப்போடுற வித்தை தான் ஊழல். பல இடங்களில் திட்டமே செயல்படுத்தப்படாம பணத்தை சுருட்டிக்கிட்ட கதையும் நடந்திருக்கு. இதெல்லாம் ஊழல்.

இப்படியான ஊழலால நேரடியா பாதிக்கப்பட்டவங்களை விட, தரமற்ற வீடுகள், பாலங்கள், திட்டங்கள், பேருந்துகள்னு மறைமுகமா பாதிக்கப்பட்டவங்க தான் அதிகம். நீங்க நான் உட்பட!

இந்த ஊழலுக்கும் வியாக்கியானம் சொல்லிருக்காரு கலைஞர்! தேனை எடுப்பவன், புறங்கையை நக்கி சற்று தானும் உண்பது போலன்னு அதுக்கு உவமை வேறே சொல்லி அதை நியாயப்படுத்தினவரு அவரு.

இந்த ஊழலும் கூட நம்ம சின்னவயசில் நாம செஞ்சு பழகின விஷயம் தான். ஒரு கிலோ சக்கரை வாங்க சொல்லி அனுப்பினா, 900 கிராம் சர்க்கரை வாங்கிட்டு மிச்ச காசுக்கு மிட்டாய் வாங்கி சாப்பிட்ட அனுபவும் தான், பெரிய அளவில் நடந்திட்டு இருக்கு.

எல்லா தவறுக்குமே அடிப்படை நாம தான். ஆனா நாமளே தான் அதை எதிர்த்து போராடிட்டும் இருக்கோம்.

இப்போ சமீபகாலமா ஊழல், லஞ்சத்துக்கு எதிரா மக்கள் அதிருப்தி அடைஞ்சிருக்காங்கன்றது உண்மை. அதனால் ஏற்படும் செலவினம், தரக்குறைவு அதன் பாதிப்புக்களை நல்லா புரிஞ்சிருக்காங்க. ஆனா அதை அவ்வளவு சீக்கிரமா வேரறுத்திடமுடியாதுன்னும் எல்லாருக்கும் தெரியும்.
அரசாங்கம் லஞ்சம் & ஊழல் கண்காணிப்பு துறைன்னு ஒரு துறையை எல்லா டிபார்ட்மெண்டிலும் உருவாக்கி வெச்சிருக்கு. விஜிலன்ஸ் ஆஃபீசர் தான் அங்கே லஞ்சமும் ஊழலும் நடக்காம கண்காணிக்கிற அதிகாரி.

ஆனா, ஊழலும் லஞ்சமும் குறையலை. இதிலிருந்து அப்படி ஒரு பதவி வீணா கிடக்குன்னு புரிஞ்சுக்கலாம். அப்படி தன் கடமையை சரிவர அவர் செய்யலைன்னாலும் அவருக்கு சம்பளமும் இதர வசதிகளும் மக்கள் பணத்தில் இருந்து கொடுத்துகிட்டு தான் இருக்கோம்.

இதை விட சுவாரசியமானது லஞ்ச ஒழிப்பு போலீஸ் துறை.

லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் கண்காணிப்பு போலீஸ்:

இப்போதைக்கு, நாம நம்ம தமிழ்நாட்டை மட்டும் உதாரணமா எடுத்துக்கிடலாம். 

எங்கேல்லாம் லஞ்சம் ஊழல் நடக்க வாய்ப்பு இருக்கோ அதை கண்டறிஞ்சு அதை தடுத்து தவறு செய்யுறவங்கமேல நடவடிக்கை எடுக்கணும்ங்கற நோக்கத்துக்காக தான் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் கண்காணிப்பு காவல் பிரிவு தொடங்கப்பட்டது.

அதன் குறிக்கோளில் சொல்லியபடி பார்த்தா தவறு நடக்க வாய்ப்பிருக்கிற இடங்களை கண்டறிஞ்சு தடுக்கிறது தான் பணி. இதுக்காக ஒரு ஏ.டி.ஜி.பி, 32 மாவட்டத்திலும் எஸ்.பி, இன்ஸ்பெக்டர்கள், போலீஸ்காரங்கன்னு ஒரு பெரிய பட்டாளமே டூட்டியில் இருக்கு.

இவங்களுக்கு மக்கள் பணத்தில் இருந்து சம்பளம், வீடு, வாகனம், ஆள், பரிவாரம், அலுவலகம் இத்யாதி இத்யாதி வசதிகள் எல்லாம் செஞ்சுகொடுக்கப்பட்டு இருக்கு. எதுக்கு? உழல்/லஞ்சம் தவறுகள் நடக்க வாய்ப்பிருக்கிற இடங்களை கண்டுபிடிச்சுதடுக்க.

ஆனா, நிஜத்தில் என்ன நடக்குது?

ஒரு ஜாதி சர்டிபிகட் வாங்கபோனா, ஒரு பர்த் சர்டிபிகேட் வாங்கப்போனா, ஒரு புதுவீட்டுக்கு புது ஈ.பி கனெக்சன் எடுக்கப்போனான்னு ஒவ்வொரு மனுஷனின் தினசரி வாழ்க்கையில் அத்தியாவசிய பணிகள் எல்லாத்துக்குமே எங்கெங்கே எவ்வளவு லஞ்சம் கொடுக்கவேண்டி இருக்கும்னு எல்லாருக்குமே பகிரங்கமா தெரியும். 50ரூ மதிப்புள்ள டிரைவிங் லைசன்சை, 300 ரூபாய் செலவு செய்யாம வாங்க முடியாதுன்னு புதுசா மேஜரான பசங்க கூட தெரிஞ்சு வெச்சிருக்காங்க. இலவசமா கிடைக்கவேண்டிய பர்த் சர்டிபிக்கேட்டுக்கு காசை கொடுத்துட்டு காத்து நிக்கிற அப்பாவிகளை எல்லா தாசில்தார் அஃபீசிலும் பார்க்கலாம்.

இப்படி எல்லாருக்குமே தெரிஞ்ச இந்த சிம்பிள் விஷயம் கூட, இதை கண்டுபிடிச்சு தெரிஞ்சு தடுத்து நடவடிக்கை எடுக்கவேண்டிய லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு தெரியாதாம்! நாம இப்படி ஒரு தவறு நடக்குதுன்னு எழுத்துப்பூர்வமா அவங்ககிட்டே கம்பிளைண்டு கொடுத்தா அவங்க அதை விசாரிச்சு, ஒரு ஸ்டிங் ஆபரேஷன் நடத்தி அவங்க மேல நடவடிக்கை எடுப்பாங்களாம்! இதுக்கு எதுக்கு தனியா இவ்வளவு பெரிய டிபார்ட்மெண்டு? சாதாரண குற்றத்தடுப்பு போலீசே இதை செய்யுமே?

சுருக்கமா சொன்னா, எந்த வேலைகாக இவங்க சம்பளமும் அலவன்சும் வீடும் வசதிகளும் அரசாங்கத்துக்கிட்டேயிருந்து வாங்கிட்டு இருக்காங்களோ, அதை கூட இவங்களா 1% கூட செய்யுறதில்லை.

வேலையே செய்யாம சம்பளம் வாங்குற இவங்களுக்கும், திட்டத்தையே செயல்படுத்தாம அரசு பணத்தை அபகரிக்கிற ஊழல்வாதிகளுக்கும் பெரிய வித்தியாசமில்லை. இன்னும் சுருக்கமா சொல்லப்போனா, ஊழல் கண்காணிப்பு துறை தான் நாட்டின் மிக பெரிய ஊழல்வாதி.

நல்லாருக்கில்லே?

என்னை கேட்டா, பேசாம அந்த துறையை மொத்தமா கலைச்சிட்டு, குற்ற தடுப்பு பிரிவுக்கு அவங்களை தூக்கி போட்டுட்டா, அரசு பண்ற செலவுக்கு ஒரு அர்த்தமாவது கிடைக்கும், குற்றங்களும் கொஞ்சம் குறையும்.

ஆனா, எல்லா குற்றங்களுக்கும் அடிப்படை நாம தான்ற எண்ணம் வராத வரைக்கும் எதையும் தடுக்க முடியாதுன்றது வேறே விஷயம்!

அடுத்த பதிவில் நாம கறுப்பு பணத்தை பத்தி பேசலாம்!

1 comment:

Printfriendly