Saturday, August 25, 2012

சிதம்பரம் விடுவிப்பு – சரியா?





ன்று காலை உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கி இருக்கிறது. சமீபகாலமாக வழங்கி வரும் விசித்திர தீர்ப்புகளை போல தான் இந்த தீர்ப்பும்!



2G வழக்கில் ப.சிதம்பரம் மீது  தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து இருக்கிறது உச்ச நீதி மன்றம்.
2G ஊழல் வழக்கில் ராஜா கைது செய்யப்பட்டது குறித்து ஏற்கனவே ஒரு பதிவில் விரிவாக சொல்லி இருக்கிறேன்! என்ன காரணத்தால் என்ன குற்றச்சாட்டின் பேரில் ராஜா கைது செய்யப்பட்டு இருக்கிறார் என்பது அதில் விவரிக்க முற்பட்டிருக்கிறேன். அந்த வழக்கின் தொடர்ச்சியாக, ஜனதா கட்சியின் தலைவர் திரு சுப்ரமணியம் சுவாமி அவர்கள், உச்சநீதிமன்றத்திலே ஒரு வழக்கு போட்டிருந்தார்.

அதாவது, அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியதற்கு காரணமாக இருந்ததாக கூறி, முன்னாள் தொலைதொடர்பு துறை அமைச்சராக இருந்த ராஜா மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் அவர் கைதும் செய்யப்பட்டிருக்கிறார். அதே போலவே அந்த வழக்கின் மற்றுமொரு குற்றவாளியாக திரு ப.சிதம்பரம் அவர்களையும் சேர்க்கவேண்டும், அவரையும் விசாரிக்கவேண்டும். காரணம் என்னவென்றால், அவர் தான் நிதி தொடர்பான முடிவுகளை எடுத்த அப்போதைய நிதி அமைச்சர்.

ராஜாவின் தொலை தொடர்பு துறை, லைசன்சை வழங்கிய வரைக்கும் தான் பொறுப்பு. அப்படி கிடைத்த லைசன்சின் அடிப்படையில் லைசன்ஸ் பெற்ற நிறுவனங்கள் தங்களுடன் வெளிநாட்டு நிறுவனங்களை பங்குதாரராக சேர்க்கவும், தங்கள் நிறுவன பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு விற்று லாபம் சம்பாதிக்கவும் நிதித்துறையின் அனுமதி தேவை. அந்த அனுமதியை அப்போதைய நிதி அமைச்சரான ப.சிதம்பரம் தான் வழங்கினார். எனவே அவரையும் இதில் விசாரிக்கவேண்டும் என்பது தான் சுபிரமணியம் சுவாமியின் மனுவின் சாரம்சம். இதில் பிரதமரையும் கூட அவர் இழுத்திருக்கிறார். அவர் தான் இப்படி ஏலமுறையில்லாமல் முதலில் வருபவருக்கு ஒதுக்கீடு முறைக்கு அனுமதி அளித்தவர். நியாயமாக பார்த்தால் அந்த இருவரது தரப்பையும் விசாரித்து அவர்களது கருத்தையும் அறிந்திருக்கவேண்டிய உச்சநீதிமன்றம், இன்று வழங்கிய தீர்ப்பில், சிதம்பரத்தை விடுவித்து இருக்கிறது.

விடுவித்ததில் தவறில்லை. ஏனெனில் 2G வழக்கே ஒரு யூகத்தின் அடிப்படையிலான வழக்கு தான். ஆனால் இப்போது சிதம்பரத்தை விடுவிப்பதற்கு சொல்லப்பட்ட காரணம் தான் விசித்திரமானது.




ஸ்பெக்டிரம் ஒதுக்கீடு செய்வதில் உள்ள கொள்கை முடிவுகள், குறைவான விலை நிர்ணயம், ஒதுக்கீட்டு முறை குறித்தான முடிவுகளெல்லாம் குற்றமுகாந்திரம் உடையதாக தோன்றவில்லை. அது ஒரு அரசின் கொள்கை முடிவு. என்வே, இதில் உள்நோக்கத்தோடு சிதம்பரம் குற்றம் இழைத்திருக்கிறார் என்பதை ஒப்புக்கொள்ள முடியாது. எனவே அவர் மீதான குற்றச்சாட்டை தள்ளுபடி செய்கிறோம் என்கிற ரீதியில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

சட்டப்படியும், நியாயப்படியும் இது சரியான தீர்ப்பு தான்! ஒரு அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடமுடியாது என்பது தான் மரபு! ஒரு தொலைநோக்குக்காக அரசு எடுக்கும் ஒரு முடிவை, வெறும் வருவாய் அடிப்படையில் கணிக்கக்கூடாது தான்.

ஆனால் என்னுடைய கேள்வியெல்லாம், இதே வழக்கில், இதே காரணத்துக்காக ஏன் ராஜா தண்டிக்கப்பட்டார் என்பது தான்? சட்டம் என்பது எல்லோருக்குமே சமம் எனில், ராஜாவுக்கும் சிதம்பரத்துக்கும் வெவ்வேறு அளவுகோலை ஏன் உச்சநீதிமன்றம் கடைப்டிக்கவேண்டும்?

அரசின் கொள்கை முடிவு அடிப்படையில் சிதம்பரம் எடுத்த முடிவுகள் குற்றமற்றது என்றால், அதே கொள்கை முடிவின் அடிப்படையில் ராஜா செய்தது மட்டும் எப்படி குற்றமாகும்?

1,76,000 கோடி இழப்பு என்று குத்துமதிப்பாக தணிக்கை துறை ஒரு அறிக்கை வெளியிட்டு கடைசியில் நீதிமன்றத்துக்கு கொடுத்த அறிக்கையில் 26,000 கோடி இழப்பு என்று சொல்லியிருப்பதன் மூலம், என்ன நோக்கத்துக்காக தணிக்கை துறை அவ்வளவு பெரிய அவதூறை உமிழ்ந்தது?

நீதிமன்றம் எல்லோருக்கும் பொதுவானது, சட்டம் எல்லோருக்கும் சமமானது, நீதிமன்றம் தன்னிச்சையாக செயல்படுகிறது என்கிற வசனங்களெல்லாம் உண்மையானால், ஏன் இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரே குற்றச்சாட்டுக்கு வெவ்வேறு நீதி?

இதையெல்லாம் யார் வந்து விளக்குவார்களோ?

3 comments:

  1. //ஸ்பெக்டிரம் ஒதுக்கீடு செய்வதில் உள்ள கொள்கை முடிவுகள், குறைவான விலை நிர்ணயம், ஒதுக்கீட்டு முறை குறித்தான முடிவுகளெல்லாம் குற்றமுகாந்திரம் உடையதாக தோன்றவில்லை. அது ஒரு அரசின் கொள்கை முடிவு. என்வே, இதில் உள்நோக்கத்தோடு சிதம்பரம் குற்றம் இழைத்திருக்கிறார் என்பதை ஒப்புக்கொள்ள முடியாது. எனவே அவர் மீதான குற்றச்சாட்டை தள்ளுபடி செய்கிறோம் என்கிற ரீதியில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.//
    இல்லை. அதற்கான ஆதாரங்கள் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை என்று வழக்கை தள்ளுபடி செய்திருக்கிறது என நினைக்கிறேன்.
    //1,76,000 கோடி இழப்பு என்று குத்துமதிப்பாக தணிக்கை துறை ஒரு அறிக்கை வெளியிட்டு கடைசியில் நீதிமன்றத்துக்கு கொடுத்த அறிக்கையில் 26,000 கோடி இழப்பு என்று சொல்லியிருப்பதன் மூலம், என்ன நோக்கத்துக்காக தணிக்கை துறை அவ்வளவு பெரிய அவதூறை உமிழ்ந்தது?//
    ஸ்வான் டெலிகாம் -ஐ எடுத்துக்கொள்வோம். இவர்கள் லைசென்ஸ் பெற கட்டணமாக செலுத்தியது 1750 கோடி . இந்த கம்பெனியின் 45% பங்குக்கு எடிஸ்லாட் கொடுத்த விலை 3500 கோடி. அதன் படி, கம்பெனியின் மொத்த மதிப்பு 8000 கோடி. அந்த நேரத்தில் ஸ்வான் கம்பெனிக்கு என்று வேறு எந்த அசெட்-உம் இல்லை. அதன் படி, லைசென்சின் நியாயமான விலை 8000 கோடி என்றாகிறது. 6250 கோடி வருமான இழப்பு அரசுக்கு என்றாகிறது. எவ்வளவு லஞ்சம் பெற்று இந்த சலுகை காட்டப்பட்டது என்பது தான் இதன் ஆணிவேர்.
    இது ஒரு லைசென்சிற்க்கானது.
    அதன்படி கணக்குப்போடும்போது 1,76,000 Crores என்பது குத்து மதிப்பானது தான். அதனால் இது ஊழல் இல்லை என்பதோ, அதிக தொகையை சொன்னதால் அவதூறு இறைப்பதாகவோ ஆகாது.
    இப்படி எளிதாக சொல்ல முடிந்தால், ஆப்பசைத்த குரங்காய் தி மு க இப்படி தவித்துக்கொண்டிருக்காது!

    ReplyDelete
    Replies
    1. Sorry for typing in Eng. As per your stmt, Swan got 'License' for Rs.1,750 Cr. But it sold its 'Company Share' for 3,500 Cr. Most of us confused on this two issues. A company's share value need not necessarily be the value of its license. License is a small thing which the company bought, and the value of the Company is much more. This is why the CAG is blammed for immatured calculation :)

      Delete
    2. You are correct on the language. But consider that, the License was the only Asset the company had. The company value = Total Assets - Liability. As the License was the only asset the company had, in this case, the Company Value = License Value!

      Delete

Printfriendly