தேவையில்லாத வேலைகளை செஞ்சிகிட்டு மக்கள் பணத்தை வீனடிக்கிரத்தில் தமிழக அரசும் ஒன்னும் குறைஞ்சது இல்லை..
ஏற்கனவே வீடு கட்டறதா சொல்லி என்ன நடக்குதுன்னு இங்கே பார்த்தோம்..
இப்போ ஒரு கம்பெனியை பத்தி பார்ப்போம்!
TANCEM - இது அரசின் சிமெண்ட்டு நிறுவனம்... ஆலங்குளம், அரியலூர் பகுதிகளில் தலா ஒரு சிமெண்ட்டு தொழிற்சாலைகளும், விருத்தாச்சலத்தில் பைப்பு தொழிற்சாலையும் உள்ளது... (இந்த நிறுவனத்தை பற்றி விரிவாக இங்கே தெரிந்து கொள்ளலாம்!)
இந்த நிறுவனத்தை முற்றிலுமாக மூட சொல்லி 2002 இலேயே ஆலோசனை வழங்கி இருக்கிறது... காண்க அறிக்கை.
அதற்கு பின்னர், அரசு தன தரப்பில் என்ன என்ன நடவடிக்கைகள் எடுக்க முடியுமோ அத்தனையும் எடுத்து, அந்த நிறுவனத்துக்கு எப்படியாவது உயிர்கொடுக்க முயற்ச்சிகள் மேற்கொண்டது!
சரி! இந்த நிறுவனம் என்ன தான் செய்கிறது என்று கேட்கிறீர்களா??
சிமெண்ட்டு, சிமெண்ட்டு குழாய்கள் உற்பத்தி செய்கிறது... ஆனால் முன்பெல்லாம் (இப்போது மட்டும்??) அரசே இந்த சிமென்ட்டை வாங்குவதில்லை! அரசாங்கம் செய்கிற கட்டுமானங்களுக்கோ, பிற கட்டுமானங்களுக்கோ, அரசு விடும் தெநடறுக்கோ கூட இந்த சிமெண்ட்டு வாங்கப்படவில்லை! ஆனால் மாதாமாதம் அங்கே இருக்கும் ஊழியர்களுக்கும் நிர்வாக அதிகார்களுக்கும் முறையாக ஒழுங்காக சம்பளம் மட்டும் சென்று சேர்ந்துவிடும்!
விற்பனையே அதிகம் இல்லாத ஒரு சிமேன்ட்டுகாக இத்தனை செலவு எதற்கு என்று தான் தணிக்கை துறை கேள்வி கேட்டது! வெட்டியாக இத்தனை நிறுவனங்களை நடத்தி அதற்காக மானியம், ஊதியம் கொடுத்துக்கொண்டிருப்பதை விட, அவற்றை முற்றிலுமாக மூடிவிட்டால் அரசுக்கு நல்லது என்று சொன்னது அந்த அறிக்கை!
ஒரு வழியாக அந்த நிறுவனங்களுக்கு புத்துணர்வு அளிக்கும் முயற்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன... அதற்காக ஆனா செலவு கணக்கெல்லாம் கேட்கப்படாது!
இப்போதைய நிலைமை என்ன??
இது தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட தொழில்துரைக்கான கொள்கை விளக்க உரை. அதில் கடந்த ஆண்டு டான்செம் நிறுவனத்தின் நிதி நிலைமை கொடுக்கப்பட்டு இருக்கிறது (பார்க்க பக்கம் 17).
அதன் படி ஆலங்குளம் சிமெண்ட்டு நிறுவனம் மூலம் மட்டும் 544.30 லட்சம் ரூபாய் நஷ்டம். மாயனூரில் உள்ள பைப்பு நிறுவனம் மூலம் 46.95 லட்சம் ரூபாய் நஷ்டம்.
நல்ல விஷயங்களும் உண்டு!
அரியலூர் தொழிற்சாலை மூலம் 1616.62 லட்சமும், ஆலங்குளம் சிமெண்ட்டு சீட்டு தொழிற்சாலை மூலம் 50.08 லட்சமும், விருதாச்சலம் பைப்பு தொழிற்சாலை மூலம் 6.10 லட்சமும், சென்னை தலைமை அலுவலகம் மூலம் (பொருட்கள் விற்பனை) 201.80 லட்சமும் லாபமும் கிடைத்து இருக்கிறது... அதாவது ஒட்டுமொத்த லாபம் 1,283.35 லட்சம்!
மேட்டர் என்னன்னா! வராக்கடன் அல்லது வரவே வராது என்று கணக்கிடப்பட்ட தொகை இந்த 1,283.35 லட்சத்தில் 1,022.84 லட்சம்... இதனால் நிறுவனத்தின் நிகர லாபம் 260.51 லட்சம் தான் இப்போது!
இந்த வாராக்கடன் என்பது வேறு ஒன்றும் இல்லை... இவர்கள் சிமென்ட்டை விற்கிறார்கள் அல்லவா... அதனை வாங்கியவர்கள் நிறுவனத்துக்கு கொடுக்கவேண்டிய தொகை... அதை அவர்கள் தரவில்லை... அதை வாங்க இவர்கள் என்ன முயற்ச்சிகள் எடுத்தார்கள் என்பதும் தெரியவில்லை... ஆனால் அந்த தொகையை அப்படியே கழித்து இனி வரவே வராது என்று முடிவு செய்துவிட்டார்கள்! அதாவது அந்த தொகைக்கான பொருட்களை 'அவர்களுக்கு' இலவசமாக கொடுத்துவிட்டார்கள்! இது எப்படி இருக்கு!
சுருக்கமாக சொன்னால் மொத்த லாபத்தில் 79.70% வீணாக போய்விட்டது! யார் பணம்?? வரிப்பணம்!
இதெல்லாம் ஒரு மேட்டரா என்று கேட்பவர்களும் இருக்கலாம்... தப்பில்லை.. ஏனெனில் அரசு நிறுவனம் என்றாலே நஷ்டம் தான் வரவேண்டும்... இது எவ்வளவோ பரவாயில்லை... லாபம் காட்டி இருக்கிறார்களே என்று சந்தோஷமும் படலாம்!
அரியலூர் தொழிற்சாலை தனது உற்பத்தியில் 72.05% தான் உற்பத்தி செய்திருக்கிறது! விருதாச்சலம் தொழிற்சாலை தனது உற்பத்தியில் 45.60% தான் உற்பத்தி செய்திருக்கிறது!
இனி.. வழக்கமான கேள்விகள்!
சம்பளம் கொடுத்து வைத்திருக்கும் அதிகாரிகள் அந்த வராக்கடனை வசூலிக்க என்ன செய்தார்கள்?
எத்தனையோ மானியமும், ஊக்கத்தொகையும் சலுகைகளும் கொடுத்தான் கூட தனது முழுமையான உற்பத்தி திறனை எட்டாமல் பாதிக்கும் குறைவாகவே இந்த நிறுவனங்கள் செயல்பட்டு இருக்கிறதே... இந்த உற்பத்தி இழப்புக்கான செலவை ஏற்பது யார்??
கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நஷ்டத்தில் இயங்கி, தொழிற்சாலைகளை மூடுமாறு தணிக்கை அதிகாரியே அறிக்கை கொடுக்கும் அளவுக்கு வந்ததற்கு காரணமான அதிகாரிகள் மீது என்ன வகையான நடவடிக்கைகள் எடுத்தது?
அரசே சிமெண்ட்டு உற்பத்தி செய்யும் நிலையில், அரசு திட்டங்கள் அரசு ஒப்பந்தங்கள் போன்றவற்றுக்கு கட்டாயமாக அரசு சிமேன்ட்டைத்தான் உபயோகிக்கவேண்டும் என்று உத்தரவிடாமல் இருப்பது ஏன்?
இந்த நிறுவனங்களை மூடுவதன் மூலம், அரசுக்கான இழப்பு கணிசமாக மிச்சம் ஆகும் என்கிற நிலையிலும், தொடர்ந்து இந்த நிறுவனங்களை அரசு நடத்தி வருவது மனிதாபிமான அடிப்படையில் தான்... எனினும் அதில் பணி புரிபவர்களுக்கு அந்த உணர்வு வராததன் காரணமாக மீண்டும் குறைவான உற்பத்தியும், வராக்கடன் தள்ளுபடியும் நிகழ்கிறது! இந்த நிலையிலும் இன்னமும் அவர்களுக்கு மனிதாபிமானம் காட்டத்தான் வேண்டுமா??
No comments:
Post a Comment