Sunday, December 6, 2009

சென்னையின் வோல்வோ ஏசி!
வெளியூர் பஸ்ஸை பத்தி எழுதிட்டு நம்ம எம்.டி.சியை பத்தி எழுதலைன்னா எப்படி??


ஒரே ரத்த கலரில் செக்க செவேர்ன்னு நகரத்தில் வலம் வந்திட்டு இருந்தது.. பல்லவன்! அந்த கலரை பார்த்தாலே எல்லோருக்கும் அலர்ஜி ஆகி, கலரு மாறிப்போச்சு... பச்சை கலரு ஜிங்கு சான்!


நகர பேருந்துகளில் ஒரே ஒரு கோடாவது சிகப்பில் இருககவெனுமனு ஒரு (முட்டாள்த்தனமான) சட்டம் இருந்தும் அதை மீறி முதல் முதலில் சிகப்பு வண்ணமே இல்லாம ஒரு நகர பேருந்து சென்னையில் வலம் வர தொடங்கிச்சு.
திரும்பவும் வந்தது சிகப்பு கலரு...... "ஜி" சீரிஸ் வண்டிகளில் (1993)... அப்புறம் என்ன என்னமோ மாற்றங்கள் எல்லாம் செஞ்சு, வண்டியை கொஞ்சம் கலர் புல்லா மாத்தணும்னு நெனைச்சு... பறவை, மரம், பட்டாம்பூச்சின்னு ஆர்ட் பிலிம் எல்லாம் போட்டு நிறைய வண்டிக ஓடிச்சு...
நல்லவேளை... சென்னையில் தனியார் பேருந்துகளை டவுன் பஸ்ஸா ஓட்ட தடை இருக்கறதால், எல்லாமே அரசு பஸ்சு தான்... குழப்பமே வரலை!
அப்புறம்... மாடல் பத்தி யோசிச்சாங்க! எத்தனை நாளைக்கு தான் நம்ம குரோம் பெட்டையில் இருக்கிற டையை வெச்சே வண்டி டிசைன் பண்றது?? பொள்ளாச்சியில் சேரன், திருச்சியில் தீரன், ஈரோடு ஜீவா ன்னு மூணு கழகங்களுக்கு ஆர்டர் கொடுத்து அங்கத்தை டிசைனில் கொஞ்சம் காலம் வண்டிகள் வர ஆரம்பிச்சுது....
பொதுவா லைலாண்டு வண்டிக தான்.... ஆனா ஒரே ஒரு தடவை "பரீத்சார்த்த முறையில் (?)" டாட்டா வண்டிகளை வாங்கி பாத்துட்டு விட்டுட்டாங்க!
இப்போ என்னடானா.... யந்திரன் சிவாஜி மாதிரி ஓவர் நைட்டில் அல்ட்ரா மாடர்ன் ஆயிருச்சு எம்.டி.சி.
ஒரு பக்கம் பிரகாஷ், டி.வி.எஸ், சக்தி, டி.வி.ஆர் ன்னு தனியார் கிட்டே கொடுத்து மாடல் மாடலா, அழகழகா வண்டிகளை வாங்கி ஓட்டுறாங்க... அதிலேயும் தானியங்கி கதவுகள், குஷன் சீட்டு, தொங்கும் கைப்பிடின்னு ஓரளவுக்கு மாடர்னா ஓடுது.....
திடீர்ன்னு பாத்தா பெங்களூர்லே மட்டும் தான் வோல்வோ விடுவாங்களா? நாங்க விடமாட்டோமான்னு இங்கேயும் கொண்டு வந்துட்டாங்கல்லே???
பஸ்சு என்னவோ ஷோக்கா தான் இருக்கு! பெங்களூர் மாதிரி செகப்பு கலரு அடிக்காம இருக்கறதுக்கே கோவில் கட்டி கும்பிடலாம்!
ஏசி, கொஞ்சம் சுமாரான ஸ்பீடு, எப்.எம்.ரேடியோ (கோயம்பத்தூரில் டவுன் பஸ்சில் ரெண்டு கலர் டிவி வெச்சு டிவிடியில் பிலிமே காட்டுறாங்க தெரியுமா?) எல்லாம் இருந்தும்.... சீட்டிங் சிஸ்டம் தான் என்னவோ சரியாவே இல்லை.... கொஞ்சம் தான் சீட்டுக்கள்... அதுவும் ஒழுங்கான வரிசையில் இல்லை...
வண்டியில் வசதிகள் எல்லாம் டிரைவருக்கு தான்.... பின்னாடி எஞ்சின் (காலுக்கு சூடு வராது) தானியங்கி கதவுகள்... வண்டிக்கு பின்னாலையும், சைடிலேயும் வர்ற வண்டிகளை கண்காணிக்க எல்லா பக்கமும் வெப் கேம் வெச்சு டிரைவர் முன்னாடி மானிட்டர் வெச்சிருக்காங்க! (ஹலோ.... 'அந்த' மானிட்டர் இல்லை.... அதை அடிச்சுட்டு வண்டி ஓட்ட கூடாதுன்னு சட்டமே இருக்கு)...
ஜி.பி.எஸ் சிஸ்டம் வெச்சிருக்காங்க... ரோடு மேப்பு காட்டுது.... இந்த வண்டி வரும் நேரத்தை வழியில் இருக்கிற பஸ் ஸ்டாப்பில் ஆட்டோமேட்டிக்கா டிஸ்பிளே கொடுக்குது.... மிதந்துகிட்டே போகுது.... அப்படி இப்படின்னு நல்லா தான் இருக்கு!
ஆனா பெங்களூரை கம்பேர் பண்ணினா ஸ்பீடு ரொம்ப குறைவு... (மெட்ராசில் ரோடு இல்லை... இதிலே வண்டி ஓட்டறதே ஒரு கலை... அதை பத்தி பிறவு தனியா புலம்பலாம்!)
சென்னையில் அதிகமா யாரு இதை யூஸ் பண்றாங்கன்னா... ஆட்டோக்கும், டாக்சிக்கும் கொடுக்குற காசுக்கு இது பரவாயில்லைன்னு நினைக்கிறவங்க, ஐ.டி. கம்பெனிக்காரங்க, ஏர்போர்ட், சென்டிரல் போறவங்க, இந்த மாதிரி குறிப்பிட்ட சில செக்ஷன் தான்....
ஆனா, என்னை கேட்டா சென்னைக்கு வோல்வோ வாங்க வேண்டிய அவசியமே இல்லை... அவ்வளவு காசு கொடுக்கறதுக்கு அதில் ஒண்ணுமே இல்லை.... லைலான்டிலேயே ஏசி பஸ்சு வருது.. குறைஞ்ச காசுக்கு நிறைஞ்ச திருப்தி!
ஏது எப்படியோ... வட சென்னை நாறி கிடந்தாலும், அடிப்படை ரோடு வசதி தேட கிடந்தாலும், நத்தை ரேஞ்சுக்கு போக்குவரத்து இருந்தாலும், வெளிநாடு மாதிரி எங்க ஊரிலே வண்டி ஓடுதுன்னு பெருமை பேசிக்கலாம்!
பின்னே... பெருமை பேசுறது தானே நம்ம பொழப்பே??

3 comments:

 1. தலைவரே சும்ம அளந்து விடுறீங்க இந்தியாவிலேயே
  டிராபிக் கம்மியான சிட்டி சென்னைதான் டிராபிக் அதிகமான சிட்டி பெங்களூரு இதில அங்க பாஸ்ட்டா
  பொகுதோ நல்ல கொடுமைடா சாமி

  ReplyDelete
 2. நண்பா!

  பெங்களூரில் மெஜஸ்டிக்கில் இருந்து மார்த்தாஹல்லிக்கு சாதாரண பேருந்து ஒரு மணி நேரம் எடுத்து கொள்கிறது... வோல்வோ அரைமணி நேரத்துக்கும் குறைவாகவே எடுக்கிறது...

  சென்னையில் தாம்பரம் செல்ல... சாதாரண பேருந்தும், வோல்வோவும் ஒரே நேரத்தை தான் எடுத்து கொள்கின்றன...

  காரணம்... சென்னையில் மூச்சு திணறும் போக்குவரத்து நெரிசல்... பெங்களூர் அளவுக்கு அகலமான சாலைகள், ஒருவழிப்பாதை திட்டங்கள் சென்னையில் குறைவு என்பதையும் கவனத்தில் கொள்க!

  ReplyDelete
 3. bangalore is famous for its traffic, i have been there twice and experianced it.

  chennai is better compared to chennai. check how long it will take in the bangalore for the the same distance in chennai. it may take too much time.

  ReplyDelete

Printfriendly