Thursday, December 17, 2009

SETC - அவசரப்பட்டுட்டேனோ??


போன வாரம் தான் நம்ம அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை பத்தி ஆஹா ஓஹோன்னு எழுதி வெச்சேன்!

கொஞ்சம் அவசரப்பட்டுடேனொன்னு தோணுது இப்போ!

தொடர்ந்து ரெண்டு நாளா ரெண்டு விபத்து..

முந்தாநாளு ராத்திரி சென்னையில் இருந்து பெங்களூர் போன வண்டி வாணியம்பாடி கிட்டே ஒரு லாரி பின்னாடி இடிச்சு.. ஸ்டீரிங் பெண்டு ஆயி மேற்கொண்டு போக முடியாம நின்னு போச்சு... ஆளுங்களை எல்லாம் இறக்கி விட்டுட்டு வேற பஸ்ஸில் ஏத்தி விட்டுட்டு இருந்திருக்காங்க டிரைவரும் கண்டக்டரும்... அந்த நேரம் பாத்து பஸ்சுக்கு பினாடி ஒரு வேன் வந்து டமார்னு இடிச்சதிலே அந்த பஸ்சு நகர்ந்து பஸ்சு முன்னாடி நிட்டுட்டிருந்த பயணிகள் மேலே மோதி அஞ்சு பேறு காலி, அதே இடத்திலேயே!

இது இப்படின்னா...

நேத்து ராத்திரி சேலத்தில் இருந்து ராமேசுவரம் போன பஸ்சு அரவாக்குறிச்சி கிட்டே பிரேக் டவுன் ஆகி நின்னுபோச்சு... அதே மாதிரி ஆளுங்களை இறக்கி வேற பஸ்ஸில் ஏத்தி விட்டுட்டு இருக்கிற நேரம் பாத்து ஒரு லாரி அந்த கூட்டத்துக்குள்ளே திடீர்ந்து புகுந்து இடிச்சு தள்ளினதுலே அஞ்சு பேறு மரணம்!

ரெண்டு நாளில் பத்து பேரு...

முதல் சம்பவத்தில், டிரைவரோட அஜாக்கிரதையால லாரி மேல மோதி இருக்காரு..
ரெண்டாவது சம்பவத்தில் வண்டியே பிராப்ளம்...

இப்போ, விரைவு போக்குவரத்து கழகத்திலே மெயிண்டனன்ஸ்  மேல சந்தேகமா இருக்கு!

பஸ்சு வாங்கி கொடுக்கறது அரசாங்கத்தோட வேலை! அதை சரியா செஞ்சிட்டாங்க!

ஆனா அதை பராமரிக்கிறது அந்த அந்த கொட்ட பணிமனை அதிகாரிங்களோட கடமை இல்லையா?? என்ன தான் பண்ணிக்கிட்டு இருக்காங்க அவங்க??

டிரைவருங்களுக்கு போதுமான பயிற்சியோ, ஓய்வோ, இல்லாததும் ஒரு சின்ன குறை... தொடர்ச்சியா வேலை பாக்கவேண்டி இருக்கிறதால ஏற்படுற வெறுப்பு, சலிப்பு, இதோட சேர்ந்து ஒய்வின்மையால் இருக்கிற அசதி... இதெல்லாம் விபத்துக்கு சின்ன சின்ன காரணியாய் அமைஞ்சிடுது...

இனி மேலாவது, பேருந்துகளை ஒழுங்கா பராமரிக்கிறது, நீண்ட பயணத்துக்காக பணிமனையில் இருந்து வண்டியை எடுக்கும்போதே, முழுமையா பரிசோதிச்சு அதுக்கான கிளியரன்ஸ் கிடைச்சபின்னாடி எடுக்கறது, டிரைவருக்கு போதுமான ஒய்வு கொடுக்கறது, யோகா மாதரியான கவனம் கூட்டும் பயிற்சி கொடுக்கறதுன்னு செய்யலைன்னா, ரொம்ப கஷ்டம்!

5 comments:

  1. do you think its the drivers mistake? the lorries are suppose to be parked in the parking bay or service road not in the road.

    the chennai-bangalore road is a highway and its the mistake of lorry driver not bus driver.

    if you ever happend to do regular driving in highway you understand the pain in driving when you see these lorries, vehicles coming in opposite side to save 2 km for u turn. etc.


    in the second accident also its not the bus driver fault, he found the vehicle broke down so he stopped the bus. we cannot simply say who is fault by reading news papers. the same news papers printed wrong information when my friend met with an accident.

    i would like to give you more details, so its better to write a new post.

    ReplyDelete
  2. Dear Dhans,
    In the first incident, the Lorry was not parked and not coming from opposite direction. Actually the lorry was on its onward journey and SETC hit the lorry behind. It is really the mistake of SETC Driver. The speed of the Lorry is very less than SETC Bus and hence SETC would have gone by the side of the Lorry. SETC Driver's mis-justification leads to this accident.

    In the second incident, I have not pointed the mistake to the driver. It is due to the lack of Maintenance.

    Please read the blog carefully and thoroughly before commenting.

    Thanks for understanding!

    ReplyDelete
  3. நம்ம ஊரில் இப்போது எல்லா இடத்திலும் அதிவேகச் சாலைகள் போடப்பட்டுள்ளதால் வேகமாக வரும் வாகன ஓட்டிகள் உடனடியாக நிறுத்த முடியாமல் விபத்துக்கள் ஏற்படுகின்றன. அமெரிக்காவில் எல்லாம் இது போன்ற விபத்துக்களைத் தடுப்பதற்காகவே சாலையோரத்தில் இப்படி நிற்க மாட்டார்கள். நமது மக்களுக்கும் இதனை அறிவுறுத்த வேண்டும்.

    ReplyDelete
  4. Shaan,

    சாலை ஓரம் நிற்பது என்பது அல்ல இங்கே பிரச்சனை..

    முதல் வண்டி நின்றதற்கு காரணம், அஜாக்கிரதையாக வண்டி ஒட்டிய டிரைவர்..

    இரண்டாம் வண்டி நின்றதற்கு காரணம், போதிய பராமரிப்பில்லாத வண்டி...

    இந்த இரண்டு விஷயங்களுக்கான தீர்வை நோக்கியே கேள்விக்குறியாய் நிற்கிறோம்!

    ReplyDelete
  5. //முந்தாநாளு ராத்திரி சென்னையில் இருந்து பெங்களூர் போன வண்டி வாணியம்பாடி கிட்டே ஒரு லாரி பின்னாடி இடிச்சு.. ஸ்டீரிங் பெண்டு ஆயி மேற்கொண்டு போக முடியாம நின்னு போச்சு//

    dear sateesh

    i think i have read the blog properly and throughly.

    its nowhere mentioned that the lorry was moving ahead, by seeing the statement above anyone can think about stationed lorry atleast some like me. i will not say that the buses are maintained properly but compared to private players goverment bus drivers are more experianced and cautious.

    i am telling this not because a son of SETC bus driver who worked with them for 26 years but i have been seeing my dad's friends and their colleagues for more than 15 years. they have been to most dangerous accidents and mostly the mistake would have been from lorry drivers.

    regarding the maintanence i am 100% sure that these buses are not maintained properly. but if the driver of the bus writen in log book that some repairs need to be carried out next day they were given a memo. these drivers taking huge risk when they take the buses.


    next time whenb you board SETC bus please have a visual inspection atleast, whether its maintained properly or new bus. also check the attidude of the driver as sometimes attitude shows his drivign habit.

    ReplyDelete

Printfriendly