Friday, December 11, 2009

மிரட்டலுக்கு அடிபணிந்தால்.....

மிரட்டலுக்கு அடிபணிந்தால் என்ன நடக்கும் என்பதை நாடே இப்போது பார்த்து கொண்டு இருக்கிறது...

ஆந்திராவை இரண்டாக பிரித்து தெலுங்கானா வேண்டும் என்று நான்கு நாள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த சந்திரசேகர் ராவின் கோரிக்கை பரிசீலிக்கப்படுவதாக மத்திய அரசு முட்டாள் தனமாக அறிவித்து தொலைக்க... வந்தது வினை!

இதுவரை ஒன்பது மாநிலங்கள் புதிதாக அமைக்க கோரிக்கை விடப்பட்டு இருக்கிறது...

மராட்டிய மாநிலத்தை பிரித்து - விதர்பா தனி மாநிலம் அமைக்கவேண்டும்! - விலாஸ் முதம்வர் நேற்று பிரதமரிடம் கோரிக்கை.
மேற்கு வங்காளத்தை பிரித்து, டார்ஜீலிங், குர்சியோங், டியோர்ஸ், கல்ச்சினி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய கூர்க்காலாந்து தனி மாநிலம் அமைக்கவேண்டும்! - கூர்க்க ஜனமுக்தி மோர்ச்சா தலைவர் பீமல் குறுங். இதற்காக நான்கு நாட்கள் பந்த் அறிவிக்கப்பட்டு இருக்கிறது... இன்று முதல் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படுகிறது.உத்தரபிரதேசத்தில், பண்டா, சித்திரகூடம், ஜான்சி, லலித்பூர், சாகர் ஆகிய மாவட்டங்கள், மற்றும் மத்திய பிரதேசத்தில் உள்ள சில பகுதிகளை சேர்த்து பண்டல் காந்து தனி மாநிலம் கோரிக்கை - பண்டல் காந்து முக்தி மோர்ச்சா கட்சி!உத்திரபிரதேச மாநிலத்தின் மேற்கு பகுதிகளில் சில மாவட்டங்களை பிரித்து ஹரித் பிரதேசம் அல்லது கிசான் பிரதேசம் என்கிற மாநிலம் அமைக்க ராஷ்ட்ரிய லோக்தளம் கட்சி தலைவர் அஜித் சிங் வலியுறுத்தி உள்ளார்!பீஹார் மாநிலத்தை பிரித்து மிதிலாஞ்சல்...கர்நாடக மாநிலத்தை பிரித்து கூர்க்..குஜராத் மாநிலத்தை பிரித்து சவுராஷ்டிரா...கிழக்கு உத்திரபிரதேசம் மற்றும் பீகாரின் சில பகுதிகளை கொண்டு போஜ்பூர்.... போன்ற மாநிலங்களுக்கான கோரிக்கைகளும் நேற்று எழுந்துள்ளன!அஸ்ஸாம் மாநிலத்தை பிரித்து போடோலாந்து அமைக்க போடோலாந்து போராட்ட குழு எம்.பி பிச்வாஜித் தெரிவித்திருக்கிறார்!மேற்கு வங்காளத்தின் சில பகுதிகள் மற்றும் அசாமை பிரித்து கிரேட்டர் கூச் பெஹார் மாநிலம் உருவாக்கவும் கோரிக்கை வலுத்துள்ளது....

********
 
பிரச்சனை தொடங்கின போதே பேச்சுவார்த்தை நடத்தி மிரட்ட ஆரம்பித்ததுமே கடுமையான நடவடிக்கை எடுத்து இருந்தால் எல்லோருமே கொஞ்சம் அடங்கி இருந்திருப்பார்கள்!
 
காலிச்த்தான் கேட்டு பஞ்சாபில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோது இந்திரா எடுத்த கடுமையான நடவடிக்கை தான் இன்று வரை தனிமாநில கோரிக்கைகளை அடக்கி வைத்து இருந்தது...
 
இப்போது நாலு நாள் உண்ணாவிரதத்துக்கே அடிபணிந்து நாங்க ரொம்ப வீக்குன்னு வெளிச்சம் போட்டு காட்டியதன் பலா பலனை எல்லா மாநிலங்களிலும் காண்கிறோம்...
 
********
 
தமிழகத்தில் ரொம்ப நாளைக்கு முன்பு மாநில பிரிவினை வேணும்னு ஐயா ராமதாஸ் கோரிக்கை விடுத்து இருந்தார்!
 
அவரது கட்சி ஆட்சிக்கு வரணும்னா மொத்த மாநிலத்திலேயும் போட்டி இட்டு ஜெயிக்கறதுங்கறது ரொம்ப ரொம்ப பெரிய பேராசை... அதனால் காவிரியை எல்லையா வெச்சு தமிழகத்தை வடக்கு தெற்குன்னு பிரிச்சிட்டா.. வடக்கு தமிழகத்தில் கணிசமான அறிமுகம் இருக்கிற பாமக முதல்வர் பதவிக்கு வர வாய்ப்பு இருக்குன்னு அவர் நினைச்சார்... (அவர் நினைச்சா மட்டும் போதுமா????  சின்ன மாநிலம் பாண்டிச்சேரியிலேயே ஒன்னும் பண்ண முடியலைன்னு எல்லாம் கேள்விகள் கேட்கப்படாது!)
 
இப்போ அவருக்கு யோகம் தான்.....  சரிஞ்சு கிடக்கிற தன்னோட இமேஜை தூக்கி நிறுத்த ஒரு பந்தலை போட்டு உண்ணாவிரதத்தை தொடங்கிற வேண்டியது தான்.... பசங்க பாத்துப்பாங்க பஸ்ஸை உடைக்கிற வேலையை!
 
தென்னை மரத்தில் தேள் கொட்டினா பனை மரத்தில் நெறி கட்டுமாம்.... ஆந்திரா பிரச்சனை  யாரை எல்லாம் பயமுறுத்துது பாருங்க!
 
*******
 

No comments:

Post a Comment

Printfriendly