Thursday, December 24, 2009

கல் கண்ட கலைகள்!



தமிழகத்தில் கல் வேலைப்பாடுகள் மிக பிரசித்தமானவை.. அப்படியான கலை வடிவங்களில் நான் கண்டு வியந்தவைகளில் சிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்!

மேலே உள்ள படத்தில் இருக்கும் தூண், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் இருக்கிறது... விசேஷம் என்னவென்றால், ஒரே கல்லை பல தூண்களாக செதுக்கி இருக்கிறார்கள்...  கூடுதல் விசேஷம் என்ன வென்றால்,  ஒரே கல்லில் செதுக்கப்பட்டவை எனினும், ஒவ்வொரு தூணும் ஒவ்வொரு சப்தத்தை கொடுக்கிறது!




திருச்சி உச்சி பிள்ளையார் கோவிலுக்கு செல்லும் வழியில் தாயுமான சாமி கோவில் மண்டபத்தில் இந்த சங்கிலியை பார்த்தேன்... நீங்கள் நினைப்பது போல அது இரும்பு சங்கிலி அல்ல.. கல்லில் செதுக்கப்பட்ட சங்கிலி.. அதாவது ஒரு கல்லை சங்கிலி போல செதுக்கி எடுத்து இருக்கிறார்கள்!

இவற்றை கவனிக்க நீங்கள் தவறி இருந்தால், அடுத்தமுரைஎனும் கண்டு பிரமிப்பீர்களாக!

No comments:

Post a Comment

Printfriendly