தமிழக அரசில் நிறைய துறைகள் இருக்கிறது... சிலது அவசியமாகவும் சிலது அநாவசியமாகவும்!
சமீபத்தில் சில துறைகள் பற்றி அறிய வந்த பொது, தலையில் அடித்து கொள்ள தோன்றியது.. உங்களுக்கும் சொல்கிறேன்.. நீங்களும் படித்துவிட்டு தலையில் அடித்து கொள்ளலாம்!
ஒரு வேலையை செய்வதற்காக தனியாக ஒரு துறையை அமைத்து அதை திறம்பட நிர்வகிக்க அமைச்சர், அதிகாரிகள், ஆள் அம்பு சேனை, படை, வண்டி வாகனம் சம்பளம் இத்யாதி இத்யாதி என்று அரசு செலவு செய்கிறது.... மக்கள் வரி பணத்தில்! இது ஓகே!
ஆனால், ஒரே வேலையை செய்ய பல்வேறு துறைகள் ஒவ்வொரு துறைக்கும் தனி தனியாக அதிகார செலவுகள் என்றால்....
வீட்டுவசதி துறை - வீடில்லாதவர்களுக்காக வீடு கட்டி நியாய விலையில் விற்பனை செய்வதற்காக தோற்றுவிக்கப்பட்டது!
குடிசைமாற்று வாரியம் - குடிசைகளில் வசிப்போருக்கு மாற்று இடம் கண்டு அங்கே வீடுகள் கட்டி அவர்களை குடியமர்த்துவதற்காக தோற்றுவிக்கப்பட்டது!
காவலர் வீட்டு வசதி கழகம் - காவல் துறை / தீயணைப்பு துறையினருக்கான வீடுகள் கட்டி தருவதற்காக தோற்றுவிக்கப்பட்டது!
ஒட்டுமொத்தமாக பார்த்தால் இவர்கள் எல்லாம் செய்வது ஒரே ஒரு வேலை... வீடு கட்டுவது... இதற்கு எதற்காக மூன்று துறைகள்?? மூன்று துறைகளுக்கும் மாவட்டம் தோறும் அலுவலகங்கள் அதிகாரிகள் சம்பளம் இத்தியாதி இத்தியாதி???
ஒவ்வொரு துறையும் வருடம் முழுவதும் பிசியாக வீடு கட்டி கொண்டே இருக்கிறதா, என்றால் அதுவும் இல்லை! அப்படி இருந்தாலாவது கூடுதல் துறை துவங்கப்பட்டதற்கு ஒரு நியாயம் இருக்கும்!
இன்னும் சொல்ல போனால், வீட்டு வசதி துறை கட்டி முடித்த பல ஆயிரக்கணக்கான வீடுகள் விற்பனை ஆகாமலேயே முடங்கி கிடக்கிறது.. காரணம், தேர்ந்தெடுத்த இடம் சரியில்லை.. அந்த வீடுகளுக்கான போதுமான உள்கட்டமைப்பு / போக்குவரத்து வசதிகள் எதுவும் இல்லை... அப்படி பாழாகி போன வீடுகளுக்காக அரசு முடக்கிய மக்கள் பணம் அத்தனையும் வீண்!
எதற்காக அங்கே வீடுகட்டினார்கள்?? இத்தனை செலவு செய்த வீடு விற்கப்படாமல் பாழாகி போகிறதே, அந்த செலவை என்ன செய்வது?? சும்மா கிடக்கும் வீடுகளை விற்பனை செய்ய ஏதேனும் நடவடிக்கை உண்டா?? இது வரை இது போன்ற கேள்விக்கு எந்த விடையும் இல்லை! ஆனால் அத்தனை அதிகாரிகளுக்கும் பஞ்சப்படி முதல் வாகன வசதி வரை தவறாமல் கிடைத்து விடுகிறது!
இப்படி இத்தனை துறைகளை வைத்து ஒரே ஒரு வேலையை அதுவும் உருப்படி இல்லாமல் செய்வதற்கு பதில், தமிழக வீட்டு வசதி துறையின் சார்பாக ஒரே ஒரு துறை மட்டும் வைத்து கொண்டு "தேவைப்படும் மக்களுக்கு, தேவைப்படும் இடத்தில், தேவையான அளவு" (இது தான் முக்கியம்!) வீடுகள் கட்டி கொடுத்தால் போதுமே! அரசின் நிர்வாக செலவுகள் கணிசமாக குறையுமே!
வீணாக கிடக்கும் வீடுகளை விலை குறைத்து விற்பனை செய்வது, அவற்றுக்கு போதுமான போக்குவரத்து வசதி செய்து கொடுப்பது, அந்த பகுதியை நகரமயமாக்குவது போன்றவற்றால், பயனற்ற வீடுகளை பயனுள்ளதாக ஆக்கலாம்!
வீடற்ற அனைவருக்கும் வீடு கட்ட துவங்கப்பட்ட வீட்டு வசதி கழகம் தனது இலக்கை எட்டாமல் போனதற்கு என்ன காரணம்?? குடிசை மாற்று வாரியம் ஆரம்பிக்கப்பட்டு பத்து வருடங்களுக்கு மேலும் ஆகியும் குடிசைகள் இருப்பதன் நியாயம் என்ன?? இப்படி பயனில்லாத துறைகள், அதன் அதிகாரிகள், அவற்றுக்கான செலவுகள்.. இவை எல்லாம் தேவையா??
இந்த கேள்விகளுடன் இன்றைக்கு தலையில் அடித்து கொள்ளலாம்... நாளை இன்னும் ஒரு துறையை பார்ப்போம்!
Forward to Mr Stalin.
ReplyDeleteநீங்கள் சொல்வது சரி தான்: ஒரு துறையே வீடு கட்டும் பணிகள் அனைத்தையும் கவனித்துக் கொள்ளலாம் .
ReplyDeleteஆனால், இந்த வெவ்வேறு துறைகள் ஏன் துவக்கப் படுகிறது தெரியுமா? எடுத்துக் காட்டாக 1982 batch ஐ எ எஸ் அதிகாரி என்றால் அனைத்து பேருக்கும் (நாலு கால் குதிரை _ நடக்க மட்டுமே முடிந்தது, ஓடவும் கூடியது, ஓட்டம் குறைவு ஆனால் உதைத்தல் அதிகம், ஓட்டம், உதைத்தல், கனைப்பு அதிகம், கழுதை, கோவேறு கழுதை, நொண்டி குதிரை) அனைவருக்கும் ( அவர்கள் எல்லோரும் 1982- ம ஆண்டில் கடிமான தேர்வு தேறி வந்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக , பதவியில் செய்தவை, செய்யதவறியவை குறித்து நோக்காமல் -) பதவி உயர்வு கொடுக்க வேண்டும். அவர்கள் எல்லோருமே துறை தலைவர்களாக வேண்டும்; போதுமான துறைகள் இல்லை; என்றால், புதிய துறைகளைத் தோற்றுவித்து போடுவார்கள். தவிர, சில அதிகாரிகள், ஓடும் குதிரைகளாக இருந்தாலும், தன்னிடம் அதிகம் முறைக்கிறார், அல்லது, தான் இழுத்த இழுப்புக்கு வருவதில்லை என்று அவை உப்பு-சோப்பு இல்லாத துறையில் வைத்து விட்டு, வளைந்து கொடுக்கும் (தம் இன, சாதி, ஊர், etc. etc.) நபர்களை தம் துறைகளில் வைத்துக்கொள்வது உண்டு என கேள்வி படுகிறேன். பதவி உயர்வு என்பது, batch மொத்தத்துக்கும் கூண்டோடு இல்லாமல், எவ்வளவு பதவிகள் காலி ஆகிறதோ, அவ்வளவு பேருக்கு மட்டுமே தகுதி அளவீடு செய்து பதவி உயர்வு கொடுத்தால் இந்த அனாவசிய செலவு மிக குறையும். I A S ராஜ்யத்தை அடக்கும் முதுகு எலும்பு உள்ள அரசு இது வரை பிறக்கவில்லை