Wednesday, December 30, 2009
தமிழக தொழில் துறை !
தமிழகத்தில் துறையின் அதீத வளர்ச்சி அனைவராலும் அண்ணாந்து பார்க்கப்படும் உயரத்தை உடையது. மிக மிக அபரிமிதமான தொழில் வளர்ச்சி இந்த குறுகிய காலத்திலேயே வந்து நிறைந்து இருக்கிறது!
சென்னை, கோவை, திருச்சி, மதுரை, ஹோசூர் ஆகியவை தான் தொழில் மையங்களாக இருந்தன. வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் மிக சமீபத்தில் தொழில் வளம் வரபெற்ற வரம் பெற்றன. இப்போது பின் தங்கிய பகுதிகளுக்கும் தொழில் வளத்தை மேம்படுத்துவதன் மூலம் அந்தந்த பகுதிகளின் வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்புக்கும் பெரிய வாய்ப்பு உள்ளதால், திருவண்ணாமலை, பெரம்பலூர், ராமநாதபுரம் மாவட்டங்களை தொழில்மயம் ஆக்க முனைந்து இருக்கிறது தமிழக அரசு! வரவேர்கப்படவேண்டிய முயற்சி தான் ஒரு வகையில்!
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக அரசு புதிதாக ஒரு இணைய தளத்தை உருவாக்கி இருக்கிறது. காண்க http://investingintamilnadu.com. இந்த தளத்தில் இருக்கும் பெரும்பான்மையான தகவல்கள் நான்கு ஆண்டுகளுக்கு முந்தைய பதிவுகள். இத்தனைக்கும் கடந்த வாரம் தான் இந்த இணைய தலமே துவக்கப்பட்டது. துவக்கும்போது சமீபத்திய தகவல்களை இணைத்து துவக்கி தொலைத்து இருந்தால் முதலீடு செய்ய வருவோருக்கு உதவியாக இருந்திருக்கும்.. இத்தனைக்கும் சென்னை தகவல் தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருப்பதாக பெருமை பேசிக்கொண்டு வேறு இருக்கிறோம்.
2004-05 ஆம் ஆண்டைய புள்ளி விவரங்களை அள்ளி தெளித்து உருவாக்கப்பட்டு இருக்கும் அந்த இணைய தளம் முதலீடு செய்வோரின் கொஞ்சநஞ்ச ஆர்வத்தையும் முடக்கி போட்டுவிடக்கூடும்.
அதுபோகட்டும், இதுவரை முதலீடு செய்திருப்போரின் நிலை என்ன??
அமைதியான மாநிலம், ஆக்கப்பூர்வமான தொழிலாளர்கள், கடின உழைப்புக்கும், தெளிந்த விசுவாசத்துக்கும் பேர் போன மக்கள், நிலையான பொருளாதார வளர்ச்சி, போக்குவரத்து வசதி என்று பல்வேறு நன்மைகளை கருத்தில் கொண்டு முதலீடு செய்தவர்களுக்கு இப்போது ஒட்டுமொத்த பேரிடியாக வந்து சேர்ந்தது மின்வெட்டு. சென்னையில் இரண்டு மணிநேரம், பிற பகுதிகளில் கிட்டத்தட்ட நான்குமணிநேரம் வரை. இதனால் ஏற்பட்ட உற்பத்தி குறைவு, நஷ்டம் போன்ற பலவற்றை பற்றி விரிவாக தனியே விரிவாக பேசவேண்டிய அளவுக்கு இருக்கிறது தற்போதைய முதலீட்டாளர்களின் நிலை.
வளர்ந்துவரும் பொருளாதார சூழலில் புதிய புதிய முதலீடுகளை ஈர்க்கின்ற மாநிலமாக தமிழகம் மிளிருவதர்கான ஏற்பாடுகளை அரசு முன்னெடுத்து செய்யவேண்டும்.
அதுவரை "புதிய" இணைய தளத்தை யாரேனும் திருத்த முனையுங்களேன்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment