Sunday, December 13, 2009

நெடுஞ்சாலை சுங்கம் - சரியா??


மீபத்தில் தெரியாத்தனமா காரில் சென்னையில் இருந்து கோவை போயி தொலைச்சேன்...

வழக்கமான விழுப்புரம் வழி இல்லாம, நாலு வழி பாதையான வேலூர், கிருஷ்ணகிரி, தோப்பூர் வழி பயணம்..

அம்பது கிலோமீட்டருக்கு ஒரு இடத்தில் நெடுஞ்சாலை சுங்கம் வசூலிக்கிறாங்க... கிட்டத்தட்ட சென்னையில் இருந்து கோவை போரதுக்குள் ஒன்பது வரி வசூலிப்பு மையங்கள்.

இது கொஞ்சம் ஓவரா தெரியலை??

அரசாங்கங்கள் ரோடு போட்டு கொடுக்கனும்ங்க்றது ஒரு கடமை! 

ஒரு ரோடு போட்டு கொடுக்கறதுக்கு தேவையான பணம், பொது நிதி நிலை அறிக்கை மூலமா ஒதுக்கீடு செய்யப்படுது!  அதனால் பணம் கிடைச்சிருது!  இந்த பணத்தை நம்ம கிட்டே இருந்து பொது வரி, வாகன வரி, சாலை வரி மூலம் அரசாங்கம் வசூலிச்சுக்குது!  அது தவிர உலக வங்கி நிதி, பிற நாட்டு வங்கிகள் நிதி உதவி போன்றவற்றால் சாலை மேம்பாட்டு நிதி அரசாங்கத்துக்கு கிடைக்குது.. மத்திய அரசு சாலைக்கான மானியமும் கொடுக்குது!  அதனால் நிதி ஒரு பிரச்சனை அல்ல!

சாலை அமைக்கரதுக்குன்னு சில துறைகள் இருக்கு... தமிழகத்தை எடுத்துகிட்டீங்கன்னா... நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சி துறையின் சாலைகள் மேம்பாட்டு பிரிவு, கிராம சாலைகள் துறை, தமிழக அரசு கட்டுமான கழகம், பொதுப்பணி துறைன்னு நிறைய துறைகள் இருக்கு....

எல்லா மாவட்டத்துக்கும் இந்த துறைகளுக்கு தனி தனி அதிகாரிகள், அவர்களுக்கு உதவியாக பொறியாளர்கள், செயற் பொறியாளர்கள், மேற்பார்வையாளர்கள், கட்டுமான போரியாலர்கல்ன்னு நிறைய அதிகாரிகளும் தொழிலாளர்களும் ஊழியர்களும் இருக்கிறார்கள்!  இவங்களுக்கு சம்பளம், வீடு, வாகனம் இதர சலுகைகல்னு ஒரு பெரிய தொகையை அரசு நிதி நிலை அறிக்கை மூலமா செலவிடுத்து!  அதனால் அதிகாரிகளுக்கும் பஞ்சம் இல்லை!

இந்த துறைகளுக்கு தேவையான இயந்திரங்கள், கள பொறிகள், நவீன கருவிகள், சாலை போடும் இயந்திரம், பேவர் மெஷின் என்று பலவும் ஒவ்வொரு மாவட்டத்திலும், நெடுஞ்சாலை கோட்டம் மூலம் வாங்கி பயன்படுத்தப்படுகின்றன!
அதனால் கருவிகளுக்கும் பஞ்சம் இல்லை!

அரசாங்கம் இந்த செலவுகளை எல்லாம் பொது மக்கள் நிதியில் இருந்து பட்ஜெட் மூலமாக ஒதுக்கீடு செய்கிறது!   இப்போ விஷயத்துக்கு வருவோம்!

நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் சுங்க வரி எதற்காக தெரியுமா??  அந்த சாலையின் குறிப்பிட்ட பகுதியை தனியார் போட்டதற்காக, அந்த தொகையை அவர்கள் மீட்டெடுக்கும் விதமாக அவர்களுக்கு சுங்கம் வசூலிக்க அதிகாரம் அளிக்கப்பட்டு இருக்கிறது!

தனியார் எதற்காக அந்த சாலையை இட வேண்டும்??  அரசு துறைகள், கருவிகள் முழுமையாக உபயோகப்படுத்தப்பட்டு இருக்கும் நேரத்தில் அவசரம் கருதி தனியாருக்கு டெண்டர் மூலம் சாலை இட காண்டிராக்ட் தரப்படுகிறது!  இதற்கான தொகையை அரசு கொடுத்து விடுகிறது... சாலை இடுவது மட்டும் தனியார் வேலை.

ஆனால், இப்போது தனியார் இட்ட சாலைக்கு சுங்கம் வசூலித்தால் அது சரியா?? அப்படி என்றால் அரசு அதற்கு நிதி உதவி செய்யவில்லையா?? அரசால் அங்கே சாலை இட முடியாததால் அரசின் சார்பாக தனியார் செய்கிறார்கள் அவ்வளவு தானே??  இதற்கு பொதுமக்கள் (ஏற்கனவே அரசுக்கு வரி செலுத்தி விட்டு) தனியாக ஏன் கட்டணம் செலுத்த வேண்டும்???  எனக்கு கட்டணம் செலுத்தி தனியாரின் சாலையில் செல்ல விருப்பம் இல்லை என்று சொன்னால் எனக்கான அரசாங்க சாலை எங்கே???  இது போன்ற கேள்விகளின் எண்ணிக்கை மிக நீளம்....

சாலை வரி, வாகன வரி ஆகியவை செலுத்தும்போழுது அந்த வரி செலுத்தியதன் மூலம் நாம் நமது வாகனத்தை, அரசால் தடை செய்யப்பட / பாதுகாக்கப்பட்ட பகுதிகள் தவிர அனைத்து சாலைகளிலும் இயக்க நாம் அனுமதி பெறுகிறோம்!  ஆனால் இந்த சுங்க வரி செலுத்தினால் தான் அந்த குறிப்பிட்ட சாலையில் நாம் பயணிக்க முடியும் எனில், அந்த குறிப்பிட்ட சாலை இந்திய சட்டங்களுக்குள் கட்டுப்படாதா???  புரியவில்லை!

சரி... இன்னொரு கேள்வி...

சாலைகளை தனியார் தான் இடுகிறார்கள் எனில், இத்தனை செலவு செய்து அதிகாரிகளையும் கருவிகளையும் வைத்து இருக்கிறோம்.. அதன் பயன் தான் என்ன?? பேசாமல் அந்த துறைகளை கலைத்து விட்டு, கருவிகளை விற்றுவிட்டு, தனியாரை வைத்தே அனைத்து சாலைகளையும் போட்டு விடலாமே???  அரசுக்கு செலவு குறைவு... எப்படியும் பொதுமக்கள் சுங்கம் செலுத்தி விடுவார்கள்!!!

சாலை மேம்பாடு என்பது ஒரு சமூகத்தின் மிக மிக அத்தியாவசிய தேவைகளுள் ஒன்று!  நல்ல சாலைகள் மூலம் தான் போக்குவரத்து (பயணிகளும் சரி, சரக்கும் சரி) அதிகரித்து, சமூக கட்டமைப்பு மேம்படும், தொழில் வளம் சிறக்கும்!  எனவே தான் சாலை மேம்பாட்டை மாநில அரசின் கையில் கொடுத்து தாமதமின்றி முடிவுகள் எடுத்து தேவையான பகுதிகளில் தேவையான சாலைகளை அமைப்பதற்கான அதிகாரத்தை மாநிலங்களுக்கு கொடுத்து இருக்கிறது அரசியல் சாசனம்!

இன்றைக்கு சாலை வரியும் கட்டி, ஒவ்வொரு முறையும் சுங்க வரியும் கட்டி, பயணிக்கும் பொது மக்களின் கேள்வி விடைகள் இன்றியே கிடக்கிறது.... யார் விடையறுப்பது???

6 comments:

  1. dear sathees

    there are certain questions cannot be answerable, yes we are in a pretty much worsen state.
    other than asking question what else can we do????

    everything goes to the extreme and start the new begining.

    ReplyDelete
  2. ச‌தீஷ்
    சாலைகளை தனியாரும் அர‌சும் சேர்ந்துதான் போடுகிறார்க‌ள்.அத‌ன் பிற‌கு ஒரு குறிப்பிட்ட‌ கால‌த்துக்கு வ‌ரி வ‌சூல் செய்து கொள்ள‌லாம் என்ற‌ நிப‌ந்த‌னையுட‌ன்.ந‌ம்ம‌ ஆட்க‌ள் அதிகாரிக‌ளுட‌ன் கூட்டு சேர்ந்து கொழிக்கிறார்க‌ள்

    ReplyDelete
  3. Dhans...
    Asking Question is the first move always in any issue.... I wonder why this double taxation occurs in Highways... What will be the solution...??? What we could do???

    ReplyDelete
  4. கரிசல்காரன்,
    சாலைகளை அரசும் தனியாரும் சேர்ந்து போடுகிறார்கள் என்பது உண்மையே!

    நிலம் கையகப்படுத்துவது, நிதி ஒதுக்குவது, மேற்பார்வை இடுவது போன்றவை அரசின் சார்பாகவும்...

    சாலைகள் அமைப்பது பராமரிப்பது போன்றவை தனியாரின் சார்பாகவும்.... இருக்கிறது!

    பொது பட்ஜெட் மூலம் நிதி ஒதுக்கி தனியார்மூலம் அமைக்கப்பட்ட சாலைக்கு, மீண்டும் சுங்கம் வசூலிப்பது தவறு என்பது எனது பார்வை!

    ஒரு வகையில், நாம் அரசுக்கும் வரி செலுத்தி, தனியாருக்கும் சுங்கம் செலுத்துகிறோம்..

    அரசு நமது வரியை கொண்டு நெடுஞ்சாலை துறைக்காக வாங்கி வைத்திருக்கும் கருவிகள் என்ன ஆனது?? அதன் அதிகாரிகளுக்கான சம்பளம், சலுகைகள் எதற்காக??? அவற்றையாவது செமிக்கலாமே...

    ReplyDelete
  5. Did u ever work in PWD like govt bodies?If your heart is plain you will not/ can't take food.That much pressure u need to keep in.
    Don't ever ever give job to Govt bodies..waste of money.

    ReplyDelete
  6. but i prefer to travel with toll roads as roads are neat and good.

    my vehicle need less money to spend on maintanence compared to govt maintained roads.

    government suppoed to give such roads but where the money goes who knows

    ReplyDelete

Printfriendly