Monday, December 14, 2009

சென்னை - வடக்கு தெற்கு!

டக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது!

இது ரொம்ப பிரபலமான டயலாக்... வட இந்தியாவுக்கு மட்டும் நிறைய நலத்திட்டங்களும், தென்னிந்தியா இரந்தும் கிடைக்காத இரவலனாக இருந்த பொது சொல்லப்பட்டது...

அது நம்ம சென்னையை பொறுத்தவரை அப்படியே உல்டா!

எனக்கு என்னமோ சென்னை மாநகர மேயரா வர்றவங்க, பெருநகர் வளர்ச்சி குழும தலைவர் போன்றோர் எல்லாம், சென்டிரல் ரயில் நிலையம் எதிரில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஸ்டாண்ட் அட் ஈசில் மேற்கு நோக்கி நின்றுகொண்டு, இடதுபக்கம் இருப்பதை எல்லாம் (தென் சென்னை) வளமாக்கவும்; வலது பக்கம் இருப்பதை எல்லாம் (வட சென்னை) கண்டுகொள்ளாமல் இருக்கவும் உத்தரவிடுவதாக ஒரு பிரமை...

பின்னே என்னங்க.. சென்னை பெருநகரம்னு சொல்றோம்...

அடையாறு, மயிலை, கிரீன்வேஸ் சாலை, ஆழ்வார்பேட், தி நகர், நுங்கம்பாக்கம், ராயபேட்டை, சைதை, எழும்பூர் போன்ற பகுதிகள் எவ்வளவு நேர்த்தியாக சுத்தமாக வசதியாக இருக்கிறது..???

வட சென்னை பக்கம் போயி பாருங்கள்.... குறுகலான சாலை, சுகாதாரம் இன்மை, அடிப்படை வசதிகள் கூட இல்லை, கல்வி போக்குவரத்து வசதிகளுக்கான ஏக்கம் என்று ஒரு வித்தியாசமான சூழலை காணலாம்... இத்தனைக்கும் அதுவும் சென்னை பெருநகரில் சேர்ந்தது தான்.. ராயபுரம், காசிமேடு, வண்ணாரபேட்டை, கொருக்குபெட்டை, மூலக்கடை, கண்ணதாசன் நகர், வியாசர்பாடி, வால்டாக்ஸ் ரோடு, தங்கசாலை... எல்லாமே அப்படி தான்...

புதிதாக துவக்கப்படும் பூங்காக்களில் தொண்ணூறு சதவீதம் தென் சென்னைக்கு... புதிதாக போடப்படும் சாலைகளில் 75% தென் சென்னைக்கு... புதிதாக விடப்படும் பேருந்துகளில் பத்துக்கு ஆறு தென் சென்னைக்கு..... அட வட சென்னை என்ன பாவம் செய்தது???

ஒரு மாநகரத்தையே சமமா நிர்வகிக்க தெரியாத மாநிலத்தில் இப்போ பிரிவினை கேக்குதாம்.... பிரிக்கிறதா இருந்தா முதலில் சென்னையை ரெண்டா பிரிச்சு வட சென்னையை தன்னாட்சி அமைப்பு எதுக்காவது கொடுத்துடுங்க...

தென்சென்னையில் இருக்கறவன் மட்டும் தான் மனுஷன்... வட சென்னையில் இருக்கிறவன் எல்லாம்????  இப்படியான பாரபட்சம் கொண்ட நகரம் இந்தியாவில் வேறு இருப்பதாக தோன்றவில்லை...

இதற்கு என்ன காரணமாக இருக்கும்??? யோசிச்சு.. யாருக்காவது பதில் தெரிஞ்சா சொல்லுங்க!

இந்த பதிவை யாராவது அரசு அதிகாரிகள் பார்த்தால், ஏதாவது ஒரு சின்ன நல்ல காரியம் வட சென்னைக்கு (அதுவும் சென்னையின் அங்கம் என்கிற அளவிலாவது) செஞ்சு கொடுங்க!

4 comments:

  1. வட சென்னையில் இருப்பவர்களில் பெரும்பாலேர் தொழிலாளர்கள்,கீழ்நடுத்தரவர்க்கத்தை சார்ந்தவர்கள்,மீனவர்கள்.அதிக படித்தவர்கள்,தொழிலதிபர்கள்,பிரபலமான அரசியல்வாதிகள் என்று யாரும் இந்தபக்கம் இல்லை.
    இதுமட்டுமால்லாமல் காவல்துறையும் இங்குதான் குற்றவாளிகள் அதிகம் இருப்பதாக கூறுகிறது. :(((

    ReplyDelete
  2. என் வீடும் வடசென்னையில்தான் உள்ளது!!!

    ReplyDelete
  3. காவல் துறை அரசு அதிகாரிகள் என்று எல்லோருமே வட சென்னையை வேண்டாதவர்கள் வசிக்கும் பகுதியாகவே பார்ப்பது தான் பிரச்சனையே!
    அதனை மாற்றி, அந்த பகுதிக்கும் முறையான மேம்பாட்டு வசதிகளை செய்து கொடுத்தால் அந்த மக்களும் பயன் பெறுவார்கள்!

    ReplyDelete
  4. Need to clean up chennai part by part by implementing City master plan.
    How to ask the low income ppl to move out unless proper resettlement plan drawn.Its very very difficult but possible.Free time?? read sinagapore storey.

    ReplyDelete

Printfriendly